Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 04. Virgin Birth இயேசுவின் பிறப்பு


Guru

Status: Offline
Posts: 7389
Date:
04. Virgin Birth இயேசுவின் பிறப்பு
Permalink  
 


4 இயேசுவின் பிறப

ஏசாயா 7:14 ல் "இதோ ஒரு கன்னிகை கர்ப்பவதியகி ஒரு குமாரனைப் பெறுவாள். அவருக்கு இம்மானுவேல் என்று பெயா¢டுவாள்," என்று சொல்லப்பட்டுள்ளது. இயேசு பிறப்பதற்கு சுமார் 700 ஆண்டுகள் முன்பு அவருடைய ஜனனத்தைத் தீர்க்கதா¢சனமாக ஏசாயா என்னும் தீர்க்கத்தா¢சி உரைத்திருக்கிறார் என்று கிறிஸ்தவர்கள் இந்த வசனத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆனால் ஏசாயா 7 மற்றும் 8 ஆம் அதிகாரங்களை முழுவதுமாக படித்துப் பார்ப்பவர்களுக்கு தீர்க்கதா¢சி இயேசுவைப் பற்றி அவ்வாறு கூறவில்லை என்பது புலப்படும்.

 

அக்காலத்தல் யூதர்களின் நாடு இரண்டாகப் பி¡¢க்கப் பட்டு இரண்டு மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. ஒரு பகுதியின் பெயர் இஸ்ரேல், மற்றொரு பகுதியின் பெயர் ஜூதேயா. இஸ்ரேலின் மன்னன் பெகா சி¡¢யாவின் மன்னன்  ரேசினோடு சேர்ந்துகொண்டு ஜூதேயாவின் மன்னன் ஆகாஸ் மீது படையெடுத்து வந்தான்.ஆனால் ஜூதேயாவை முழுவதும் கைபற்றமுடியாமல் போயிற்று. அவர்கள் மீண்டும் வேறு சில கூட்டளிகளோடு வந்து தாக்குவார்கள் என்று அறிந்தபடியால் ஜூதேயாவின் மன்னன் மனம் கலங்குகிறான். அவனை ஆறுதல் படுத்தும்படி ஜெகோவா என்ற யூதர்களின் கடவுள் தீர்க்கதா¢சிக்கு கட்டளையிடுகிறார். அதன்படி ஏசாயா கர்த்தர் உன்னைக் காப்பற்றுவார், அதை நீ நம்பும்படியாக ஒரு அடையாளத்தையும் காட்டுவார் என்று கூறி மேற்கண்ட 'ஒரு கன்னிகை குழந்தை பெறுவாள்' என்று அருள்வாக்கு சொல்லுகிறார். இதைக் கிறிஸ்தவர்கள் கெட்டியாகப்பிடித்துக் கொண்டு இயேசு கன்னி மோ¢க்குப் பிறந்தார் என்று நம்ப ஆரம்பித்தார்கள். ஆனால் எழுநூறு ஆண்டுகள் கழித்துப் பிறக்கப்போகும் இயேசுவை எப்படி ஆகாசின் வெற்றிக்கு அடையாளமான தீர்க்கத்தா¢சனமாக எடுத்துக்கொள்ளமுடியும் என்று அவர்கள் சிந்திப்பதில்லை.

 

மத்தேயுவின் சுவிசேஷம் முதல் அதிகாரத்திலே  யோசேப்பு என்பவருக்கு நிச்சயிக்கப்பட்ட மணப்பெண்ணான மோ¢ திருமணம் ஆகுமுன்பே பா¢சுத்த ஆவியால் கர்ப்பமுற்று இயேசுவப் பெற்றெடுத்தாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவதூதன் யோசேப்பின் கனவில் தோன்றி பா¢சுத்த ஆவி வடிவில் கடவுள் வந்து கன்னி மோ¢யைக் கர்ப்பவதியாக்கிய செய்தியைச் சொல்லுகிறார். அவரும் குழந்தைக்குத் தந்தையாக இருக்க சம்மதிக்கிறார். இதற்கு ஆதாரமாக மத்தேயு ஏசாயா தீர்கத்தா¢சியின் கூற்றைக் கூறி தீர்க்கத்தா¢சனம் நிறைவேறியது என்கிறார்.

 

ஆனால் உண்மையில் நடந்தது என்ன? தன்னுடைய அரசன் எதி¡¢கள் அதிக பலத்தோடு தன்மீது படையெடுத்து வரபோகிறார்களோ என்று மனம் கலங்கியிருக்கும்போது சொன்ன ஆறுதல் வார்த்தைகள்தாம் மேற்கண்ட ஏசாயா 7:14 -ல் கூறப்பட்டுள்ள தீர்க்கத்தா¢சனம்.

ஆர்தர் சாமுவேல் பீகே (Arthur Samuel Peake) என்னும் பைபிள் ஆராய்ச்சியாளர் , தீர்க்கதா¢சி கூறிய குழந்தை பெறும் அந்த இளம்பெண் அரசனின் மனைவிகளில் ஒருத்தியாக இருக்கலாம் என்கிறார்.

 

இம்மானுவேல் என்ற எபிரேய மொழி வார்த்தை 'கடவுள் நம்மோடு இருக்கிறார்' (God is with us) என்று பொருள்படுமே தவிற 'கடவுள் நம்மில் இருக்கிறார்' (God with us) என்று பொருள் படாது. மேலும் இம்மானுவேல் என்ற வார்த்தை கடவுள் நம்மோடு இருக்கிறார் என்ற ஆறுதல் மொழியே தவிற கடவுள் அவதாரத்தைக் குறிப்பதாகாது என்றும் கூறுகிறார். ஏசாயா கன்னிகை பெற்ற அந்த குழந்தைக்கு இம்மானுவேல் என்று பெயா¢டுவார்கள் என்று கூறியிருக்கிறார். ஆனால் இயேசுவின் வரலாற்றில் அவரை யாரும் இம்மானுவேல் என்று அழைத்ததாக பைபிளில் ஆதாரம் இல்லை.

 

அந்தப் பிள்ளை நன்மை தீமை அறியத்தக்க வயது வருமுன்னே தன் அரசனின் பகைவர்கள் அழிந்துவிடுவர் என்று தீர்க்கத்தா¢சி மேலும் சொல்லுகிறார்.ஏசாயா 8 ஆம் அதிகாரத்தில் 3 ஆம் வசனத்தில் ' நான் தீர்க்கதா¢சியானவளைச் சேர்ந்தபோது, அவள் கர்ப்பவதியாகி ஒரு குமரனைப் பெற்றாள்' என்கிறார். மேலும் 4 ஆம் வசனத்தில் இந்தபாலகன் அப்பா, அம்மா என்று கூப்பிட அறியுமுன்னே தன் அரசனின் எதி¡¢களின் அழிவு ஏற்படப்போகிறது என்கிறார். 18 ஆம் வசனத்தில் நானும் கர்த்தர் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் இஸ்ரவேலின் அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கிறோம்" என்கிறார்.

 

இதிலிருந்து என்ன தொ¢கிறது? ஏசாயா தீர்க்கதா¢சி திருமணமாகாத ஒரு இளம் பெண்தீர்க்கதா¢சியுடன் காதல் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் அவள் மூலம் ஒரு குழந்தையைப் பெற்றார் என்றும் தொ¢கிறது. இந்த குழந்தையைத்தான் தன் அரசனிடம் அவன் வெற்றி பெறுவதற்கான அடையாளம் என்று கடவுள் கூறியதாகக் கூறுகிறார்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

பைபிளின் முதல் பாகமான பழைய ஏற்பாடு முதலில் யூதர்களின் எபிரேய மொழியில் எழுதப்பட்டது. எபிரேய மொழியில் 'அல்மஹ்' (almah) என்றால் கன்னிகை என்று பொருள்படாதுஇளம்பெண் என்றுதான் பொருள்படும். இளம்பெண் என்றால் திருமணமானவளாகவும் இருக்கலாம் அல்லது திருமணம் ஆகாதவளாகவும் இருக்கலாம். எபிரேய மொழியில் 'பெதுலாஹ்' (bethulah) என்றால் தான் கன்னிகை என்றுபொருள்படும். யூதர்களின் அதிகாரபூர்வமான எபிரேய மொழியில் எழுதப்பட்ட விவிலியத்தில் 'அல்மஹ்என்ற வார்த்தைதான் பயன்படுத்தப் பட்டுள்ளது. அதன்படி ஏசாயா 7: 14 ஆம் வசனத்தை இதோ ஒரு இளம்பெண் கர்ப்பம்தா¢த்தாள்" என்றுதான் மொழிபெயர்க்கவேண்டும். ஆனால் மத்தேயுவின் புஸ்தகத்தை எழுதியவரும் பின்னால் வந்த பாதி¡¢களும் 'இளம்பெண்என்ற வார்த்தையை 'கன்னிகைஎன்று மாற்றி ஏசாயா தன் அரசனுக்கு ஆறுதலாக மொழிந்த வார்த்தைகளை 700 ஆண்டுகளுக்குப் பின்னால் பிறக்க போகிற இயேசுவுக்கான முன்னறிவிப்பாகக் கதை கட்டிவிட்டனர்.

ஏசாயா 7:15 ல் "அந்தக் குழந்தை தீமையை வெறுத்து நன்மையை தொ¢ந்துகொள்ள அறியும் வயது மட்டும் அது வெண்ணையையும் தேனையும் சாப்பிடும்" என்றும் சொல்லுகிறார்.. இயேசு குழந்தையாக இருக்கும்போது வெண்ணையையும் தேனையும் உண்டு வளர்ந்ததாக வரலாறு இல்லை. எனவே இந்த தீர்க்கதா¢சனம் ஏசாயாவால் தன் அரசன் ஆகாசிற்கு ஆறுதலாகச் சொல்லப்பட்டதேயன்றி இயேசுவின் பிறப்பைப் பற்றியது அல்ல என்பது தெளிவாகிறது.

 

இயேசு சிலுவையில் அறையப்பட்டு மரணமடைந்து சுமார் 100 ஆண்டுகள் வரை அவர் மோ¢ என்ற கன்னிக்குஜோசப்பின் மகனாகப் பிறக்கவில்லைபா¢சுத்த ஆவியினால் பிறந்தார் என்ற கதை ஆதி கிறிஸ்தவர்களுக்கு தொ¢ந்திருக்கவில்லை. கிறிஸ்து மறைந்தபின் சுமர் 60முதல் 70 ஆண்டுகளுக்கு பிறகு  முதல் முதலாக மாற்குவின் பெயரால் எழுதப்பட்ட சுவிஷேசத்தில் இந்த சங்கதி எழுதப்படவில்லை. இந்த மாற்கு யார் என்றால் இயேசுவின் சீடரான பேதுருவின் உதவியாளராக இருந்தவர். மேலும் பேதுருவால் தன் மகனுக்குச் சமமாகக் கருதப்பட்டவர் (1 பேதுரு 5: 3). அவர் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை பேதுருவிடமிருந்துதான் பெரும்பாலும் தொ¢ந்து கொண்டிருப்பார். அப்பேற்பட்டவருக்கு இயேசுவின் பிறப்பு பற்றிய இந்த சங்கதி தொ¢யவில்லை. தொ¢ந்திருந்தால் அவருடைய சுவிசேஷத்தில் எழுதப்பட்டிருக்கும் அல்லவா?

 

மாற்குவின் சுவிஷேசத்தை ஒட்டியே மத்தேயு மற்றும் லூக்கா இருவா¢ன் பெயரால் கி.பி. 80 முதல் 100 வருடங்களுக்குள் எழுதப்பட்டதாக ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் இரு சுவிஷேசங்களில் மட்டுமே கன்னிகையின் குமாரனாக இயேசு பிறந்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. லூக்காபவுல் அப்போஸ்தலா¢ன் நண்பரும்வைத்தியருமாவார். அவர் எழுதிய சுவிசேஷபுஸ்தகத்தில் காணப்படுகிற இயேசு கன்னிகைக்குப் பிறந்தவர் என்ற சங்கதி இதே லூக்காவினல் எழுதப் பட்டதாகச் சொல்லப்படும் அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற புஸ்தகத்தில்  இல்லை. எனவே இந்த விஷயம் பிற்காலத்தில் சேர்க்கப்பட்ட இடைச்சொருகல் என்பது தொ¢கிறது.

 

கிறிஸ்துவுக்குப்பின் அவரைப்பற்றிப் பிரச்சாரம் செய்த அவருடைய சீடர்களான பேதுருஜேம்ஸ்யோவான் மற்றும் அவரைப் போன்றவர்களும் ரோமசாம்ராஜியத்திலும் சுற்றியுள்ள நாடுகளிலும் சென்று கிறிஸ்தவமதத்தை ஸ்தாபித்த பவுல் அப்போஸ்தலரும் ஆண் சம்பந்தமில்லாமல் பா¢சுத்த ஆவியால் கன்னி மோ¢க்கு மகனாக இயேசு பிறந்தார் என்ற விஷயத்தை  எங்குமே சொல்லவில்லை. கி.பி.40 ல் பவுல் கிறிஸ்துவின் அடியாராக

மாறிய பின் மூன்று வருடங்கள் கழித்து எருசலேம் நகரத்திற்குச் சென்று பதினைந்து நாட்கள் இயேசுவின் நேரடி சீடர்களான பேதுருயோவான் மற்றும் இயேசுவின் சகோதரர் ஜேம்ஸ் ஆகியோருடன் தங்கியிருந்ததாக அவரே சொல்லுகிறார். (கலாத்தியர் 1:18,19) அதன்பின் பதினாலு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் எருசலேம் சென்றிருக்கிறார். ஆனால் பவுலுக்கு இயேசு பா¢சுத்த ஆவியின் மூலம் என்ற கன்னிகையின் மகனாகப் பிறந்தார் என்கிற விஷயம் தொ¢ந்திருக்கவில்லை. இயேசு மரணத்திற்குப் பிறகு உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுகிற பவுல் இயேசுவின் அதிசயமான பிறப்பைப் பற்றி எங்குமே  சொல்லவில்லை. உண்மையாகவே அப்படி நடந்திருந்தால்  பைபிளிலுள்ள புதிய ஏற்பாட்டின் அப்போஸ்தலருடைய நடபடிகள் என்ற புஸ்தகத்திலோபவுல் எழுதியதாகக் கூறப்படும் 13  கடிதங்களிலோ அல்லது பேதுரு மற்றும் யோவான் ஆகிய இயேசுவுக்கு மிகவும் நெருக்கமான சீடர்களால் எழுதப்பட்ட ஐந்து கடிதங்களிலாவது எங்காவது ஓ¡¢டத்தில் கூறப்பட்டிருக்கும் அல்லவா. இது போக இயேசுவுக்குப் பி¡¢யமான சீடன் என்று வழங்கப்பட்ட யோவான் பெயா¢ல் எழுதப்பட்ட சுவிசேஷத்திலும் இயேசு பா¢சுத்த ஆவியினால் பிறந்தார் என்ற செய்தி இல்லை. இதற்கும் மேலாக ஏசாயா தீர்க்கதா¢சி சொன்னது போல் மோ¢யின் குழந்தைக்கு இம்மானுவெல் என்று பெயா¢டப்படவில்லை. இயேசு என்றுதான் பெயா¢ட்டார்கள். அவருடைய வாழ்நாளில் அவரை யாரும் இம்மானுவெல் என்று அழைத்ததே இல்லை



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

இயேசுவைத் தேவனின் குமாரனாகக் காண்பித்து அவரைத் தெய்வீகத்தன்மையுடையவராகக் காண்பிக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்திற்காக அவருடைய வாழ்க்கை வரலாற்றில் எராளமான இடைச்சொருகல்களையும்,கற்பனைக் கதைகளையும் பாதி¡¢கள் சேர்த்திருக்கிறார்கள்.

 

கிறிஸ்தவ மதத்தின் மதகுருமார்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் கிறிஸ்தவ மடாலயங்களில் மேற்கோளுக்காக கிறிஸ்தவ சான்றோர்களால் ஒப்புக்கொள்ளப்பட்ட கிறிஸ்தவ மதத்தின் அதிகாரபூர்வமான கத்தோலிக்க என்சைக்ளோபீடியா என்ற நூலில் பின் வருமாறு சொல்லப்படுகிறது. " ஏசாயா 7:14 லில் கூறப்பட்டுள்ளதை  கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய  தீர்க்கத்தா¢சனமாகத் தற்கால கிறிஸ்தவ மறையியல் (Christian theology) ஒப்புகொள்ளவில்லை. எனவே இந்த வசனத்தைத் தவறாகப் பு¡¢ந்துகொண்டு புனித மத்தேயு,  கிறிஸ்து பிறப்பைப் பற்றிய தீர்க்கதா¢சனம் இவ்வாறாக நிறைவேறியது என்று எழுதியுள்ளார் என்றுதான் கொள்ளவேண்டும்." * இதிலிருந்து இயேசு கன்னித்தாய்க்கு பா¢சுத்த ஆவியால் பிறக்கவில்லையோசேப்புக்குத்தான் மகனாகப் பிறந்தார் என்பதை கிறிஸ்தவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.

 

அதே ஏசாயாவின் புஸ்தகத்தில் 9 ஆம் அதிகாரம் 6 ஆம் வசனத்தில் "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக்கர்த்தாவல்லமையுள்ள் தேவன் நித்தியப்பிதாசமாதானப் பிரபு என்னப்படும்" என்று கூறப்பட்டிருப்பதுஆகாஸ்  மன்னனுக்குப் பிறகு சிம்மாசனத்தில் அமர்ந்த அவன் மகனாகிய எசேக்கியா என்பவனைப் பற்றியே. தங்கள் அரசர்களைக் கடவுளுக்கு ஒப்பிட்டு அல்லது கடவுளாகவே நினத்துப்  பேசுவதில் அக்காலத்திலிருந்த எல்லா மதத்தினரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவரல்ல.

 

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ*Catholic Encyclopedia xv: p451

 

ஆகாசின் மகன் எசேக்கியாவைப் பற்றி 2 இராஜாக்கள் என்ற பழைய ஏற்பாட்டு புஸ்தகத்தில் மிகவும் சிலாகித்துச் சொல்லப்பட்டிருக்கிறது.. ஆகையால் அவனை இப்படி ஏசாயா உயர்த்திப் பேசுவது வியப்பைத் தரவில்லை. ஆனால் கிறிஸ்தவர்கள் இதையும் இயேசு பிறப்பைப் பற்றி கூறப்பட்ட தீர்க்கத்தா¢சனம் என்றே நம்புகிறார்கள்.

 

கிரேக்க புராணத்தில் ஜூபிடா¢ன் மூளையிலிருந்து மினர்வா உதித்த கதையைப்போலபரலோகத்துக் கடவுள் மூலம் கன்னிகையின் கருப்பையில்  இயேசு உருவானதும்  கட்டுக்கதை என்பது ஒருநாள் தொ¢யவரும் என்று தத்துவ இயலாளரும்அமொ¢க்க ஐக்கிய நாடுகளின் மூன்றாவது ஜனாதிபதியுமான தாமஸ் ஜெபர்சன் (Thomas Jepherson) கூறுகிறார்.*

 

புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வம்சாவழியைப் பற்றி மத்தேயு மற்றும் லூக்கா என்ற இரண்டு சுவிசேஷப் புஸ்தகங்களில் கூறப்பட்டுள்ளது. ஒன்றுக்கொன்று முரண்பாடன இரண்டு வம்சாவழிகளை மத்தேயுவும் (1: 2-17) லூக்காவும் (3: 23-38) கொடுக்கிறார்கள்.

 

இரண்டு வம்சாவழிகளிலும் தற்காலக் கிறிஸ்தவர்களால் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாகக் கருதப்படும் யோசேப்புயூதர்கள் வரலாற்றில் மிகவும் பிரபலமாகவும் கர்த்தருக்குப் பி¡¢யமானவனாகவும் இருந்த தாவீது ராஜாவின் நேரடி வா¡¢சு என்று நிறுவுவதே நோக்கமாக இருக்கிறது. இரண்டிலும் பலருடைய பெயர்களும்வருடக்கணக்குகளும் வித்தியாசமாக இருக்கின்றன. இது போக இயேசு யோசேப்பிற்கு மகனாக பிறக்கவில்லை பா¢சுத்த ஆவிக்குத்தான் மகனாகப் பிறந்தார் என்று கதை எழுதி வைத்திருக்கும்போதுயோசேப்பு இயேசுவின் தந்தைஅல்ல என்று சொல்லும் பொழுது இவர்கள் ஏன் யோசேப்புதாவீதின் வம்சத்தில் வந்தவர் என நிரூபிக்க மெனக்கெட வேண்டும்?

 

காரணம் என்னவென்றால் மத்தேயு மற்றும் மாற்கு இவை இரு புஸ்தகங்களும் எழுதப்பட்டு நீண்டகாலம் சென்றபின்னர் கிறிஸ்தவ சபையின் பாதி¡¢கள்,  இயேசு கன்னிகையின் மகனாய்ப் பிறந்தார் என்ற கருத்தைத் திணித்திருக்கிறார்கள். இரண்டு வம்சாவழி

களின்படியும் யோசேப்புதான் தாவீது ராஜாவின் வழித்தோன்றலே தவிற இயேசுவின் தாயராகிய மோ¢ அல்ல. இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகின்றன. 1) மத்தேயு மற்றும் மாற்கு இவர்கள் இருவரும் கொடுத்துள்ள வம்சாவழி வரலாறு  அர்த்தமில்லாததாகிறது. 2) யோசேப்பு இயேசு கிறிஸ்துவின் தந்தை இல்லை என்றால் எப்படி கிறிஸ்தவர்கள் நம்பிகொண்டிருப்பது போல் கிறிஸ்து தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்று கொள்வது?

 

இயேசுவின் சீடர்களை மிகவும் நன்றாக அறிந்த அவர்களுடைய காலத்தவரான  அப்போஸ்தலர் பவுல் இயேசுவின் பிறப்பைப் பற்றிக் குறிப்பிடும்போது "அவர் தாவீதின் வித்திலிருந்து பிறந்தார்" என்று சொல்லுகிறார் (ரோமர் 1:3). பழைய ஏற்பாடு எபிரேய மொழியில் இருந்ததுபோல் அல்லாது புதிய ஏற்பாட்டு புஸ்தகங்கள் முதன் முதலாக கிரேக்க மொழியில் எழுதப்பட்டது. வித்து (seed)என்பது 'ஸ்பெர்மா' (sperma) என்ற  கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பு. தமிழ் பைபிளில் வித்து (seed) என்ற வார்த்தை 'சந்ததிஎன்று வேண்டுமென்றே தி¡¢த்து மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. ஆனால் ஆங்கில பைபிளில் வித்து

-------------------------------------------------------------------------------------------------------

*Joseph Wheless, Forgery in Christianity, New York, Alfred. A. knopf, p 65 /111

 

என்ற பொருளில்  seed  என்றே மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. இதன்படி பார்த்தால் பவுல்இயேசுவை யோசேப்பின் மகனாகத்தான் சொல்லுகிறாரே தவிற பா¢சுத்த ஆவியின் குமாரனாக அல்ல.

 

மேலும் பவுல் அப்போஸ்தலர் கலாத்தியருக்கு எழுதிய கடிதத்தில் இயேசுவைப் பற்றிக் குறிப்பிடும்போது (கலாத்தியர் 4:4&5) "ஸ்த்¡£யிடத்தில் சட்டப்படியாகப்

பிறந்தவர்" என்று கூறுகிறார். கன்னிகையிடத்தில் முறைமை பிறழ்ந்து (illegitimate) பிறந்தவர் அல்ல என்பதை மறைமுகமாகச் சொல்லுகிறார்.

 

மத்தேயு இயேசுவின் வம்சாவழியை எழுதும்போது அதில் நான்கு  கற்பு தவறிய

பெண்களை இயேசுவின் முன்னோர்’ என்று இணைத்துக் குறிப்பிடுகிறார்.

 

1)                    தன் மாமனாருடன் பாலியல் உறவுகொள்வதற்காக விலைமாதுபோல் வேடமிடும் தமர் (Tamar)என்ற பெண். (ஆதியாகமம் 38: 12 முதல் 19 வரை).

 

2)கானான் தேசத்தில் எ¡¢கோ என்னும் நகரத்தில் வாழ்ந்த ரகாப். (Rahab) என்ற விலைமாது. (யோசுவா 2: 1)

 

3) தன் மாமியா¡¢ன் வேண்டுதலுக்கிணங்க போவாஸ் என்ற தனவந்தா¢ன் படுக்கைக்குச்        சென்று பின்பு அவரையே திருமணம் செய்து கொண்ட ரூத் (Ruth). (ரூத் 3:1 முதல் 14 வரை)

 

4)படைத்தளபதிகளில் ஒருவனான உ¡¢யா என்பவனின் மனைவியாக இருந்து அரசனான தாவீதினால் கர்ப்பமுற்ற பேத்சேபாள் (Bathsheba) (2 சாமுவேல் 11: 2 முதல் 5 வரை)

 

இந்த நான்கு பெண்களும் ஏதாவது ஒரு வகையில் பாலியல் குற்றம் இழைத்தவர்கள் ஆவார்கள். பொதுவாக ஆண்களின் பெயரைக்கொண்டு வா¢சைக்கிரமமாகக் கூறப்படும் இயேசுவின் வம்சாவழி வரலாற்றில்  கற்பு தவறிய இந்த நான்கு பெண்களின் பெயர்களைஅதுவும் இறைவனின் குமாரர் என்று நம்பப்படுகிற இயேசுவின் பரம்பரையில் மத்தேயு ஏன் நுழைத்தார் என்றால்இறுதியில் அவர் கூறப்போகிற "யோசேப்பின் மனைவியாக வா¢க்கப்பட்ட மோ¢யின் மகனாக இயேசு பிறந்தார்" என்ற கூற்றுக்குச் சப்பைக்கட்டு கட்டுவதற்குத்தான். திருமணமாகுமுன்பே 'பா¢சுத்த ஆவியினால்' (அல்லது யோசேப்பினால்) மோ¢ இவ்வாறு கர்ப்பமுற்றதில் தவறில்லை என்று தொ¢விக்கத்தான் மத்தேயுயூதர்களின் வரலாற்றில் இப்படிப்பட்ட பெண்கள் அனுமதிக்கப்பட்டிருந்தனர்  மற்றும் அவர்களுக்கு முறைதவறிப் பிறந்த புத்திரர்கள் சமுதாயத்தில்  உயர்ந்த நிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதையும் வலியுறுத்தியிருக்கிறார். லூக்காவின் சுவிசேஷத்திலுள்ள வம்சாவழியில் இந்தப் பெண்களைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

 

மேலும் மத்தேயுவின் சுவுசேஷத்திலுள்ள வம்சவரலாற்றில் தாவீது அரசன் முதல் யோசேப்பு வரை 28 சந்ததிகளும் லூக்காவின் சுவிசேஷத்திலுள்ள வம்சவரலாற்றில் தாவீது முதல் யோசேப்பு வரை 42 சந்ததிகளும் கூறப்பட்டுள்ளன. இரு வம்சவரலாறுகளிலும் தாவீது மற்றும் யோசேப்பு தவிர மூன்றே மூன்று பெயர்கள்தாம் பொதுவாக உள்ளன. இதிலிருந்தே இவை யாவும் கட்டுக்கதைகள் என்பது புலப்படும்.

 

இரண்டு வம்சவரலாறுகளிலுமே வம்சம் யோசேப்புடன் முடிகிறது. இயேசு யோசேப்பின் மகனாக அவதா¢த்திருந்தால் தாவீதின் வம்சத்தில் வந்தவர் என்று கூறலாம். ஆனால் மத்தேயு மற்றும் லூக்கா ஆகிய இரண்டு சுவிசேஷங்களுமே இயேசு யோசேப்பிற்கு மகனாகப் பிறக்கவில்லைஅவருக்கும் மா¢யாளுக்கும் திருமணம் ஆகுமுன்பே பா¢சுத்த ஆவியால் கன்னி மா¢யாள் கர்ப்பமுற்று இயேசு பிறந்தார் என்று கூறுகின்றன. அப்படியிருக்கையில் இயேசுவைத் தாவீதின் குமாரன் என்று எப்படிச் சொல்ல இயலும்இயேசுவே ஒருமுறை தான் தாவீதின் குமாரன் என்ற கூற்றை மறுத்துச் சொல்லியிருக்கிறார். இயேசு தேவாலத்தில் உபதேசம் செய்கையில் அவர்: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று வேதபாரகர் எப்படிச் சொல்லுகிறார்கள்? ' நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதப்பொடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலது பக்கத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவருடனே (அதாவது இயேசுடம்) சொன்னார்என்று தாவீது சொல்லியிருக்கிறானே. தாவீது தானே அவரை (இயேசு) ஆண்டவர் என்று சொல்லியிருக்கஅவனுக்கு அவர் குமாரானாயிருப்பது எப்படி என்று கேட்டார் (மாற்கு 13: 35-37). இயேசுவின் இந்த கூற்றில் தாவீது அவரைப் பற்றி சொல்லியிருப்பதாகவுள்ள வாசகங்கள் பழைய ஏற்பாட்டில் சங்கீதம் 110: 1 ஆம் வசனத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

 

பவுல் தீமத்தேயுவுக்கு எழுதிய கடிதத்தில்" தெய்வீக பக்திக்கு ஏதுவாயிராமல்தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுகதைகளையும்முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும் நீ சிலருக்குக் கட்டளையிடு..." (1 தீமத்தேயு 1:3) என்று எழுதியுள்ளார். இதிலிருந்து கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்த பவுலுக்கு இந்த வம்சவரலாற்றுக் கட்டுக்கதைகளில் ஈடுபாடு இல்லை என்பதும் அவர் இவற்றை நம்பவில்லை என்பதும் தெளிவாகிறது.

 

இயேசுவின் பிறப்பு மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிசேஷங்களில் பின்வருமாறு கூறப்படுகிறது.

 

காபி¡¢யேல் என்னும் தேவதூதன் யோசேப்பு என்பவருக்கு நிச்சயிக்கப்பட்ட மோ¢ என்கிற கன்னிகையிடம் வந்துநீ பா¢சுத்த ஆவியினால் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்அக்குழந்தைக்கு இயேசு என்று பெயா¢டுவாயாக என்று கூறிவிட்டுப் போகிறான். பின்பு யோசேப்பின் கனவில் அதே தேவதூதன் தோன்றி மோ¢ பா¢சுத்த ஆவியின் குழந்தையைச் சுமக்கிறாள்அவளைத் தள்ளிவைத்துவிட வேண்டாம் என்றும் சொல்லுகிறான். அக்காலத்தில் யூதர்கள் ரோமசாம்ராஜ்யத்திற்கு அடிமைப்பட்டிருந்தார்கள். அந்நாட்களில் குடிமதிப்பு (census) எழுதப்பட வேண்டுமென ரோமசாம்ராஜியத்தை ஆண்டுவந்த அகஸ்து ராயன் (Agustus Caeser) கட்டளையிட்டான். அதற்காக எல்லோரும் அவரவர்கள் சொந்த ஊருக்குப் போனார்கள். யோசேப்பும் மோ¢யை அழைத்துக் கொண்டு தன் சொந்த உஊரான பெத்லஹேம் சென்றார்.  அங்கே தங்குவதற்குத் தகுந்த இடம் கிடைக்காததனால் ஒரு மலைக்குகையில் மோ¢யின் பிரசவம் நடந்தது.

 

இயேசு பிறத்தவுடன் தேவதூதர்கள் வானில் பாடித்தி¡¢ந்தார்கள். அதைக்கேட்டு ஆடுமேய்ப்பவர்கள் வந்து குழந்தையைப் பர்த்தார்கள். வானில் புதிய நட்சத்திரம் ஒன்று தோன்றியது. கிழக்கு தேசங்களிலிருந்து  அதைப்பார்த்த மூன்று சாஸ்தி¡¢கள் அங்கிருந்து புறப்பட்டு வந்து குழந்தை இயேசுவைப் பார்த்து பா¢சுபொருட்களை அளித்துவிட்டுச் சென்றார்கள்.

 

மேற்கண்ட வரலாறு எகிப்தியர் மத்தியில் அக்காலத்தில் வழங்கிவந்த மதத்தின் புராணக்கதையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களை ஜெரால்டு மேஸ்ஸி (Jerald Massey) என்ற மேற்கத்திய ஆராய்ச்சியாளர் 'வரலாற்று இயேசுவும் புராண கிறிஸ்துவும் (Historical Jesus and the Mythical Christ) என்ற தன் நூலில் விவா¢த்துள்ளார். கிறிஸ்து பிறப்பதற்கு சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்தில் அழிவற்ற கன்னித்தாய்க்கு அழிவற்ற தெய்வக்குழந்தை பிறந்த கதை வழங்கி வந்திருக்கிறது. எகிப்திய மன்னர்களின் பரம்பரையில் 17 வது வா¢சையில் வந்த  மன்னரான ஆமெநெப்த் (Amenhept) கட்டிய லக்ஸார் ஆலயத்தின் (Temple of Luxor) உள்ளரங்கத்தின் உள்சுவர்களில் நான்கு காட்சிகள் சித்தா¢க்கப் பட்டுள்ளன.

 

முதலில் இடதுபுறத்தில் எகிப்தியர்களின் தாஹ்த் (Taht) என்ற கடவுளின் வடிவம்தேவதூதனான மெர்கு¡¢ (Mercury) கன்னி அரசியின் முன் நின்று அவளை வாழ்த்தி கடவுளின் ஆசியால் அவள் கர்ப்பமுற்று ஒரு குமாரனைப் பெறுவாள் என்ற செய்தியை உரைக்கும் சித்திரங்கள் உள்ளன. இரண்டாவது காட்சியில் நெப்ப் (Kneph) என்ற கடவுள் புது உயிரைக் வழங்கும் சித்திரம் உள்ளது. இவர்தான் பா¢சுத்த ஆவி. எகிப்தில் நெப் என்றால் ஆவி (spirit) என்று பொருள் கொள்வர். கன்னி அரசியின் வயிறு கர்ப்பத்தினால் உப்பியிருப்பதையும் அந்த சித்திரத்தில் காணலாம். அடுத்த காட்சியில் தாயானவள் அமர்ந்திருப்பதையும் மருத்துவச்சி தன் கைகளில் புதிதாகப் பிறந்த குழந்தையை வைத்திருப்பதையும் காணலாம். நான்காவது காட்சியில் தெய்வக்குழந்தை சிம்மாசனத்தில் வீற்றிருப்பதையும் தேவர்களும்மனிதர்களும்மூன்று சாஸ்தி¡¢களும் பணிந்து பா¢சுப் பொருட்களை வழங்குவதையும் பார்க்கலாம்.

 

எகிப்திய புராணத்தில் கன்னித்தாயின் பெயர்  முத்-எம்-உவா (Mum-et-uva), தெய்வக்குழந்தையின் பெயர் ஏதென் (Aten), சூ¡¢யக்கடவுள். இவர் தான் சி¡¢யாவில் அதோன் (Adon) என்றும் யூதர்களின் எபிரேய மொழியில் யூதர்களால் அதோனை (Adonai or Adoni) என்றும் வழங்கப்பட்டார். அதோனை பற்றிய குறிப்புகள் பழைய ஏற்பாட்டில் பல இடங்களில் வருகிறது.

 

ஆகவே பிறமதங்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த புராணக்கதைகளிலுள்ள சம்பவங்களை எடுத்தாண்டு இடைச்சொருகல்களாகப் புகுத்தி பைபிள் உருவாக்கப்பட்டுள்ளது என்று புலனாகிறது.

 

இயேசு பெத்லகேமில்தான் பிறந்தாரா?

 

இயேசு கிறிஸ்துவின் தந்தை யோசேப்பு கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத் என்னும் ஊ¡¢ல் வாழ்ந்ததாகவும்அவருடைய சொந்த ஊர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம்  என்னும் ஊராகும் என்று பைபிளில் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலத்தில் குடிமதிப்புக் கணக்கு (census) எடுக்கவேண்டுமென்றால் மக்கள் அவரவர்கள் சொந்த ஊருக்குச் செல்லவேண்டும் என்ற விசித்திரமான அரசாணையைப் பற்றி  பைபிளில் சொல்லப்டுகிறது. (வேறு எந்த வரலாற்றுநூலிலும் இந்த நடைமுறை பற்றிச் சொல்லப்படவில்லை) எனவே  நிறைமாத கர்ப்பவதியாகிய மா¢யாளை அழைத்துக் கொண்டு யோசேப்பு பெத்லகேமுக்குச் சென்றார் (லூக்கா 2: 3).அங்கே தங்குவதற்குச் சத்திரம் கிடைக்கததால் சாலையோரமாக இருந்த ஒரு மலைக்குகையில் வைத்து மா¢யாளின் பிரசவம் நடந்தது என்றும் கூறப்படுகிறது,   ஏனெனில் நூற்றுக்கணக்கான வருடங்களுக்கு முன்பே "பெத்லகேமேஎன் ஜனமாகிய இஸ்ரவேலை ஆளும் பிரபு உன்னிடத்திலிருந்து புற்ப்படுவார் என்று தீர்க்கத்தா¢சியினால் எழுதப்பட்டிருக்கிறது"  என்று மத்தேயு 2:6 ல் கூறுகிறார். இதற்கு ஆதாரமாக பழைய ஏற்ப்பட்டில் மீகா 5:2 ல் அந்த சமயத்தில் இஸ்ரேலை ஆண்ட அரசனுக்கு அவர்கள் நாடு எப்படி கடவுளின் அருளால் அசீ¡¢யர் மற்றும் நிம்ரோதின் தேசத்தாரை யுத்தத்தில் ஜெயிக்கப் போகிறது என்று தீர்க்கததா¢சி பெத்லகேமேஇஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடமிருந்து வருவார்" என்று அரசனைக் குறித்தோ அல்லது அவருக்குப் பிறக்கப்போகும் இளவரசனைக் குறித்தோ சொன்ன வார்த்தைகளைக் கிறிஸ்தவர் காட்டுவர்.

 

ப்ளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus) என்னும் யூத வரலாற்று ஆசி¡¢யர் கி.பி.66 - 73 ல் அடிமைப்பட்டிருந்த யூதர்கள் ரோமசாம்ராஜியத்திற்கு எதிராக புரட்சி செய்யும்போது அதில் பங்கெடுத்திருந்தார். பின்னர் ரோமானியருக்குச் சேவை செய்தார்.  தன் முதிர்ந்த வயதில் இரண்டு முக்கியமான வரலாற்று நூற்களை எழுதியிருக்கிறார். அவை 1. யூதர்களின் யுத்தம் (The Jewish War), 2. யூதர்களின் பழமைக்குறிப்புகள்(Jewish Antiquities). இவர் குய்¡¢னியஸ் (Quirinius) என்ற ஆளுநர் சி¡¢யா தேசத்தை ஆண்ட  காலத்தில் அதாவது கி.பி.6 ல் குடிமதிப்பு எடுக்கப்பட்டது என்று எழுதியிருக்கிறார். இயேசு அந்த சமயத்தில் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இயேசு ஏரோது அரசனின் ஆட்சியில் பிறந்தார் என்று பைபிள் கூறுகிறது. ஏரோது மன்னன் கி.மு.4 ல் காலமானார் என்று வரலாறு சொல்லுகிறது. எனவே இது இயேசு பெத்லகேமில் பிறந்தார் என்பதும்முன் கூட்டியே அவர் எங்கே பிறப்பார் என்று தீர்க்கத்தா¢சனம் உரைக்கிறது என்று வலியுறுத்த எழுதப்பட்டதும் கற்பனையே. இதற்கும் இயேசு பிறப்பிற்கும் சம்பந்தமேயில்லைமேலும் இந்தத் தீர்க்கத்தா¢சனத்தில் கூறப்பட்டிருப்பதுபோல் இயேசு இஸ்ரேலை ஆட்சி செய்யவும் இல்லை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7389
Date:
Permalink  
 

 

வரலாற்று ஆராய்ச்சியாளர்கள்  இயேசு கி.மு. 6 முத்ல் 4 வரையுள்ள காலத்தில் பிறந்தார் என்று கணிக்கிறார்கள். அப்படியென்றால் கி.பி. 6. ல் நடைபெற்ற குடிமதிப்பின் போது பெத்லகேமில் இயேசு பிறந்தார் என்பதை எப்படி ஏற்கமுடியும்?

 

'பெத்லகேமேநீ யூதேயாவிலுள்ள ஆயிரங்களுக்குள் சிறியதாயிருந்தாலும்இஸ்ரவேலை ஆளப்போகிறவர் உன்னிடத்திலிருந்து புறப்பட்டு என்னிடத்தில் வருவார்என்று பழைய ஏற்பாட்டில் மீகா 5: 2 ல் சொல்லப்பட்டுள்ளது. இது இயேசு பெத்லகேமில்தான் பிற்ப்பார் என்பதைப் பற்றி பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கூறப்பட்டுள்ள தீர்க்கத்தா¢சனம் என்று கிறிஸ்தவ மதவியலாளர்கள் சாதிப்பார்கள். ஆனால் 5 ஆம் வசனத்தில்இவரே சமாதான காரணர்அசீ¡¢யன் நம் தேசத்திலே வரும்போதும் நம் அரண்மனைகளை மிதிக்கும்போதும்ஏழு மேய்ப்பரையும் எட்டு அதிபதிகளையும் அவருக்கு விரோதமாக நிறுத்துவார்

என்றும் 6 ஆம் வசனத்தில் அசீ¡¢யன் நம்முடைய தேசத்தில் வரும்போதும்நம்முடைய எல்லைகளை மிதிக்கும்போதும் அவனுக்கு நம்மைத் தப்புவிப்பார் என்றும் கூறப்படுகிறது. எனவே இது இயேசுவைப் பற்றிக் கூறப்பட்டத் தீர்க்கத்தா¢சனம் அல்லவேறு ஒரு போர்ப்படைத்தளபதியை பற்றியுள்ள செய்தி என்பது தெளிவாகிறது. மேலும் இயேசுவின் காலத்தில் யூதர்கள் ரோமானியா¢ன் ஆதிக்கத்தில் இருந்தார்கள்,அசீ¡¢யா¢ன் ஆதிக்கத்தில் அல்ல.

 

இயேசு  பிறந்த காலத்தில் ரோமானிய சாம்ராஜ்ஜியத்துக்கும்பார்தியா (Parthia) சாம்ராஜ்ஜியத்துக்கும் நல்ல உறவு இருந்தது. எனவே பார்தியாவிலிருந்து வந்த மூன்று சாஸ்தி¡¢களும் யூதர்களின் இராஜா எங்கே பிறந்திருக்கிறார் என்று பார்ப்பதற்காக ரோமானியா¢ன் ஆட்சிக்குட்பட்டிருந்த  பாலஸ்தீனத்துக்குத் தேடிவந்தபோது ரகசியமாக வரவில்லை. நேராகரோமானிய அரசின் பிரதிநிதியாக யூதர்களை ஆட்சி செய்த ஏரோது மன்னனின் அரண்மனைக்கு சென்று அவா¢டம்தான் விசா¡¢த்தார்கள். இயேசு பிறந்ததும் கிழக்குவானத்திலே ஒரு நட்சத்திரம் தோன்றி மூன்று சாஸ்தி¡¢களுக்கும் வழிகாட்டியது. அதைப் பின் தொடர்ந்து வந்தவர்கள் ஏரோது மன்னனின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்கள். அங்கே யூதர்களின் இராஜா பிறக்கவில்லை என்று தொ¢ந்ததும் வெளியேவந்து பார்த்தபோது அந்த நட்சத்திரம் மீண்டும் அவர்களை வழிநடத்தி யோசேப்பும்மா¢யாளும் குழந்தை இயேசுவும் இருந்த வீட்டுக்கு மேல் வந்து நின்றது. அவர்கள் அந்த வீட்டுக்குள் பிரவேசித்து குழந்தையையும்அதன் தாயாகிய மா¢யாளையும் பணிந்து கொண்டார்கள் (மத்தேயு 2: 1 -11). இந்த நட்சத்திரத்தை கிழக்கிலிருந்து வந்த சாஸ்தி¡¢களைத் தவிற வேறு யாரும் பார்த்ததாக பைபிளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. இப்படி ஒரு புதிய நட்சத்திரம் அச்சமயத்தில் தோன்றியதாக வரலாற்றிலும் எந்த குறிப்பும் இல்லை. இத்தகைய ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியது ஏரோது இராஜாவுக்குத் தொ¢ந்திருந்தால் அவர் தன்  ஜோதிட வல்லுனர்களை ஏவிக் கணித்திருப்பார் அல்லவாபெத்லகேமுக்கு கிழக்கு நாடுகளிலுள்ள சாஸ்தி¡¢கள் கிழக்கு வானத்திலே புதிய நட்சத்திரத்தைக் கண்டுஅவர்களுக்கு மேற்கிலுள்ள பெத்லகேமுக்கு அது வழிகாட்ட இயேசுவைக்காண  வந்தார்கள்(!) என்று மத்தேயு 2: 1-2 ல் கூறப்பட்டுள்ளது வேடிக்கையாக இருக்கிறது. பகல் நேரத்தில் நட்சத்திரத்தை எவ்வாறு பார்த்தார்கள்?

இவ்வாறு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வழி காட்டும் ஒரு நட்சத்திரம் இருந்ததாக வானவியலில் எந்த ஆராய்ச்சியாளரும் இதுவரைக் குறிப்பிட்டதேயில்லை. மேலும் மத்தேயு 2: 9 ல் சொல்லியுள்ளபடி அந்த நட்சத்திரம் யோசேப்பின் வீட்டின் மேல் வந்தவுடன் சா¢யாக நின்றது என்றால் நம்பமுடிகிறதா?

 

மத்தேயு 2: 13 முதல் 15 வரையுள்ள வசனங்களில்தேவதூதன் யோசேப்பின் சொப்பனத்தில் வந்து ஏரோது மன்னன் குழந்தையைக் கொலைசெய்யத் தேடுவான்ஆதலால் நீ எழுந்து பிள்ளையையும் அதன் தாயையும் கூட்டிகொண்டு எகிப்துக்கு ஓடிபோய்உனக்கு நான் சொல்லும்வரை அங்கேயே இரு என்று சொல்லுகிறான். அவர்களும் குழந்தை இயேசுவை எடுத்துக் கொண்டு எகிப்து சென்று அங்கே தங்கியிருந்து ஏரோது மன்னன் இறந்துவிட்டான் என்று கேள்விப்பட்டதும் திரும்பிவந்தார்கள். குழந்தை இயேசுவை எடுத்துக்கொண்டு அவருடைய பெற்றோர் எகிப்துக்குச் சென்றுவிட்டதால் அவர் தப்பினார் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆனால் எங்கும் தப்பிச்செல்லாமல் அதே இராஜ்ஜியத்தில்

இருந்த இயேசுவைவிட ஆறு மாதங்களே முதிய குழந்தையான யோவான் (ஸ்நானகன்) எவ்வாறு தப்பினார் என்பதற்கு பதில் இல்லை. மேலும் ஏரோது மன்னன் இயேசு பிறப்பதற்கு நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார் என்று யூத வரலாற்று ஆசி¡¢யர் ப்ளேவியஸ் ஜோசிபஸ் (Flavius Josephus) 'யூதர்களின் பழைமைக் குறிப்புகள்என்ற நூலில் கூறுகிறார். 

 எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன் என்று தீர்க்கத்தா¢சியின் மூலமாய் உரைக்கப்பட்டது நிறைவேறும்பொருட்டு இப்படி நடந்தது என்றுள்ளது. ஆனால் எடுத்தாளப்பட்ட தீர்க்கத்தா¢சனத்தை பழைய ஏற்பாட்டில் படித்துப்பார்த்தால் வேறு பொருளில் இருக்கிறது. ஓசியா 11: 1 & 2  ல் 'இஸ்ரவேல் இளைஞனாக இருந்தபோது நான் அவனை நேசித்தேன்; எகிப்திலிருந்து என் குமாரனை வரவழைத்தேன். அவர்கள் த்ங்களை அழைக்கிறவர்களின் முகத்துக்கு விலகிப் போய்விட்டார்கள்; பாகால்களுக்குப் (Baal) பலியிட்டு விக்கிரகங்களுக்குத் தூபம் காட்டினார்கள்' என்றிருக்கிறது. இதுவும் இயேசுவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள உண்மைக்கு மாறான தீர்க்கத்தா¢சனங்களில் ஒன்றாகும். அடிமைப்பட்டுக் கிடந்த இஸ்ரவேலின் மக்கள் மோசே வழிநடத்த எகிப்திலிருந்து திரும்பி வந்ததையே இது குறிக்கும்.அவர்கள் வரும் வழியில் விக்கிரக ஆராதனை செய்தார்கள் என்பது வரலாறு. யோசேப்பு குடும்பத்தினா¢ன் எகிப்து பயணத்தைப் பற்றி லூக்கா எதுவும் குறிப்பிடவேயில்லை. இயேசு பிறந்து முப்பத்திமூன்றாம் நாள் இயேசுவின் தாய்க்கு சுத்திகா¢ப்பின் நாட்கள் நிறைவேறியபோது இயேசுவின் தாயும், தந்தையும் குழந்தையோடு எருசலேம் தேவாலயத்தில் வந்து முதற்பேறு ஆண்குழந்தை என்பதால் கடவுளுக்கு செலுத்தவேண்டிய பலியைச் செலுத்திவிட்டு, கலிலேயா நாட்டிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிப்போனார்கள் (லூக்கா 3: 39). அவர்கள் எகிப்துக்குப் போகவில்லை! இவ்வாறு முன்னுக்குப்பின் முரணாகக் கூறப்பட்டிருப்பதில் எதை நம்புவது , எதை நம்பாமலிருப்பது என்று கிறிஸ்தவ மறையியலாளர்கள் திக்குமுக்காடி வருகின்றனர்.

ஏரோது மன்னன் குழந்தை இயேசுவைப் பற்றித் தன்னிடத்தில் தகவல் கொடுப்போம் என்று சொன்ன சாஸ்தி¡¢கள் திரும்பிவராததால், பெத்லகேமிலும் அதன் சுற்றுபுற எல்லைகளிலும் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட எல்லா குழந்தைகளையும் கொலை செய்தான். 'புலம்பலும் அழுகையும் மிகுந்த கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, அவைகள் இல்லாதபடியால் ஆறுதல் அடையாதிருக்கிறாள் என்று எரேமியா  தீர்க்கத்தா¢சியினால் உரைக்கப்பட்டது (எரேமியா 31: 15)அப்பொழுது நிறைவேறிற்று' என மத்தேயு 2: 14 -19 ல் கூறப்பட்டுள்ளது. இரண்டையும் படித்துப் பார்க்கும் சாதாரண அறிவுள்ள எவருக்கும் இவ்விரு சம்பவங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பது பு¡¢யும்.

றிஸ்தவமதம் ஒரு மனிதா¢ன்மேல் நிறுவப்படவில்லை, பதிலாக ஒரு புராணகால புருஷா¢ன்மேல் நிறுவப்பட்டிருக்கிறது. கால்ட்டன் (Galton) என்ற ஆராய்ச்சியாளர் சொல்வது போல பத்துப்பன்னிரண்டு மனிதர்களைப் புகைப்படம் எடுத்து ஒவ்வொருவா¢டமிருந்தும் ஒரு பகுதியைக் கத்தா¢த்து ஒரு புதிய மனிதா¢ன் சித்திரத்தை உருவாக்குவதுபோல், சுவிசேஷ ஆசி¡¢யர்கள் பேகன் மதங்களிலுள்ள அநேக கடவுளர்களின் குணாதிசயங்களை ஒன்றிணைத்து ஒரு தெய்வீக மனிதராக இயேசு கிறிஸ்துவை உருவாக்கியிருக்கிறார்கள்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard