Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 22. Circumcision


Guru

Status: Offline
Posts: 7339
Date:
22. Circumcision
Permalink  
 


 விருத்தசேதனமும் பா¢சுத்த வேதாகமமும்

 

ஆண்குழந்தையின் அல்லது வயதுவந்த ஆண்மகனின் ஜனன உறுப்பின் நுனித்தோலை கத்தியால் வெட்டி அகற்றுவது பைபிளில் விருத்த சேதனம் எனப்படுகிறது.. பண்டைக்காலம் தொட்டே யூதர்களும்அவர்களைப் பின்பற்றி அரேபியரும், இஸ்லாமியரும் தங்கள் குழந்தைகளுக்கு விருத்த சேதனம் செய்துவருகின்றனர். இது கிரேக்கமொழியில் 'பொ¢ட்டோம்' (peritome) என்று கூறப்பட்டது. peri என்றால் வட்டம், tome என்றால் வெட்டுதல்; அதாவது 'வட்டமாக வெட்டுதல்' என்று பொருள். இதே பொருள் கொண்ட circumcision என்ற வார்த்தை ஆங்கிலத்தில் வழங்கப்படுகிறது. (circum அல்லது circle என்றால் வட்டம், incision என்றால் வெட்டுதல்)  தமிழ் பைபிளில் வழங்குகிற விருத்தசேதனம் என்ற வார்த்தையும் இதே பொருள் கொண்டதுதான். விருத்தம் என்றால் 'வட்டம்' என்ற பொருள் உண்டு. சேதனம் என்றால் 'சேதப்படுத்துதல்' அல்லது 'அகற்றுதல்' என்று பொருள்.

 

ஆணின் ஜனன உறுப்பின் நுனிமொட்டைப் (glans) பொதிந்திருக்கும் தோல் நுனித்தோல் (foreskin) என்று அழைக்கப்படும். நுனித்தோலை நுனிமொட்டின் அடிப்பகுதியில் வட்டவடிவமாக அறுத்து தொப்பியைக் கழற்றுவதுபோல அகற்றிவிடுவர். பண்டைக்காலத்தில் மயக்கமருந்து எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை ஆகையால் குழந்தைகள் வலியால்  துடித்துக் கதறுவார்கள். விருத்தசேதனம் செய்கின்ற மதகுரு (Mohel) வெட்டிய இடத்தில்  தன் வாயைப்பொருத்தி வடியும் இரத்தத்தை உறிஞ்சிஎடுத்துத் துப்புவார். பின்பு எண்ணெய் அல்லது மூலிகைச்சாறு பூசி கட்டிவிடுவார் என்று யூதர் வரலாறு கூறுகிறது. மதகுரு வாயால் உறிஞ்சுவதாலும் மற்றும் சுகாதாரக்குறைவான சூழ்நிலையாலும் நோய்த்தொற்று ஏற்பட்டுக் குழந்தைகள் பல நாட்கள் அவதிப்படுவர். மேலும் இந்த நோய்த்தொற்றினால் பல குழந்தைகள் சுகவீனமுற்று இறந்துவிடுவார்கள் என்றும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

 

நுனித்தோலுக்கும் நுனிமொட்டுக்குமுள்ள மெல்லிய இடைவெளியில் சுரக்கும் திரவத்தினாலும், உதிரும் செல் கழிவுகளாலும் உண்டாகும் அழுக்கு (smegma)  சேருவதால் நோய்களுக்கு வழிவகுக்கும். மேலும் நுனித்தோல் துவாரம் சிலருக்கு வி¡¢வடையாமல், சுருங்கியிருக்கும் (Phimosis) காரணத்தாலும், தினமும் நுனிமொட்டைச் சுத்தம் செய்யும் பழக்கமில்லாதவர்களுக்கும் வாழ்க்கையின் பிற்பகுதியில் ஜனன உறுப்பில் புற்றுநோய் உண்டாகச் சாத்தியக்கூறு உள்ளதாகவும், விருத்தசேதனம் செய்துகொள்வதால் ஹெச்.ஐ.வி. போன்ற கொடிய பாலியல் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது என்றும் தற்கால மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். எனவே மருத்துவர்களில் ஒரு சாரார் ஆரோக்கியப் பாதுகாப்பு கருதி விருத்த சேதனம் செய்துகொள்வது நன்மையே பயக்கும் என்கிறார்கள். மருத்துவர்களுள் மற்றொரு சாரார் நுனித்தோலை அகற்றுவது தேவையற்ற செயல், ஏனெனில் உணர்ச்சிநரம்புகள் மிகுந்த நுனிமொட்டின் மென்மையை நுனித்தோல் பாதுகாக்கிறது, அதை அகற்றிவிட்டால் நுனிமொட்டின் மெல்லிய தோல் மென்மையை இழந்து கடினப்படுவதோடு, மணவாழ்க்கையில் பல ஆண்களுக்கும், பெண்களுக்கும் கூட உடலுறவில் திருப்தியில்லாமைக்கு ஒரு காரணமாகிறது என்றும் கூறுகிறார்கள். மனித உ¡¢மையியலாளர் வேறுவிதமான கருத்து கொண்டிருக்கின்றனர். நலமாக இருக்கும் ஒரு குழந்தையை (அது குழந்தையாக இருப்பதனால் அதன் சம்மதமில்லாமல்) பலவந்தமாகக்  காயப்படுத்தி அதன் உடலில் ஒரு பகுதியை வெட்டியெறிவது என்பது சகிக்கமுடியாதாக இருக்கிறது என்கிறார்கள்.

 

யூதர்கள் வனாந்தரங்களிலும், பாலைவனங்களிலும் நாடோடிகளாகத் தி¡¢ந்த காலத்தில் ஆண்கள் தினமும் குளிக்க இயலாமலும் தங்கள் ஜனன உறுப்பைத் தினமும் நீரால் சுத்தம் செய்வதும் முடியாமலிருந்திருக்கலாம். அசசமயம் அவர்களுள் அறிவு மிகுந்தவர் விருத்தசேதனத்தினால் கிடைக்கும் ஆரோக்கியப் பாதுகாப்பு கருதி அதை மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கலாம். சாதாரண அறிவுறுத்தல்களுக்கு எப்போதும் மக்கள் செவிசாய்ப்பதில்லை, ஆகையால் அதற்கு மதச்சாயம் பூசி இறைவனுடைய கட்டளை என்று மக்களை வற்புறுத்தி கைக்கொள்ளவைத்திருக்கலாம் என்று வரலாற்று அறிஞர்களில் சிலர் கருதுகிறார்கள்.

 

கிறிஸ்தவ மறையியல் வரலாற்றில் விருத்தசேதனம் அவர்களுடைய இரட்சிப்பை ஒட்டிய கருத்துக்கள், மத அடையாளம், சமயப்பணி மற்றும் ஞானஸ்நானம் (திருமுழுக்கு) பற்றிய இறையியல் கற்பனைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் மோசேயின் சட்டதிட்டங்களினால் விருத்தசேதனம் யூதர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டது. மோசேயினால் எழுதப்பட்டதாகக் கருதப்படும் ஆதியாகமத்தில் 17 ஆம் அதிகாரத்தில் விருத்த சேதனம் ஏன் செய்யப்படவேண்டும் என்று விவா¢க்கப்பட்டுள்ளது. தேவனாகிய ஜெகோவா யூதர்களின் வம்சத்தலைவரான ஆபிரகாமுடன் ஒரு உடன்படிக்கை செய்துகொள்ளுகிறார். 'உங்கள் நுனித்தோலின் மாமிசத்தை விருத்த சேதனம் பண்ணகடவீர்கள்; அது எனக்கும் உங்களுக்குமுள்ள உடன்படிக்கைக்கு அடையாளமாயிருக்கும்' என்று ஜெகோவா ஆபிரகாமிடம் கூறுகிறார். மேலும் 'தலைமுறை தலைமுறையாகப் பிறக்கும் யூதர்களின் ஆண்குழந்தைகளுக்கு எட்டாம் நாளிலே விருத்த சேதனம் செய்யப்படவேண்டும்; மட்டுமல்ல யூதர்களின் ஆண் அடிமைகளுக்கும் அவ்வாறே செய்யவேண்டும்' என்று ஜெகோவா கட்டளையிடுகிறார். விருத்தசேதனம் செய்யாத ஆண்மகன் எவனாவது இருந்தால் அவன் என் உடன்படிக்கையை மீறினபடியால் கொலைப்படுத்தப்படுவான் என்றும் எச்சா¢க்கிறார். (ஆதியாகமம் 17: 11,12 மற்றும் 14). லேவியராகமம் 12: 2, 3 ல் ஜெகோவா மோசேயை நோக்கி இஸ்ரேல் மக்கள் விருத்தசேதனம் செய்யவேண்டும் எனக் கட்டளையிடுவது கூறப்பட்டுள்ளது.

 

யூத அறிஞர்கள் குழந்தைகளுக்கு விருத்தசேதனம் செய்வதில் சில விதிகளைத் தளர்த்தியிருந்தார்கள். விருத்தசேதனம் செய்யப்படவேண்டிய எட்டாவது நாளில் குழந்தை சுகவீனமுற்றிருந்தால் குணமாகும்வரை அக்குழந்தைக்கு விருத்தசேதனம் செய்யப்படலாகாது. மேலும் ஒரு யூதப்பெண்ணின் மூன்று ஆண்குழந்தைகள்  விருத்தசேதனம் செய்யப்பட்டு அதனால் ஏற்பட்ட சுகவீனத்தால் இறந்துபோயிருந்தால் நான்காவது குழந்தைக்கு விருத்தசேதனம்  செய்யப்படவேண்டியதில்லை.*

 

கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து கி. மு. மூன்றாம் நூற்றண்டு வரை விருத்த சேதனம் யூதர்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டு நடைமுறையில் இருந்தது. அதன் பின்னர் கிரேக்க எகிப்திய மற்றும் கிரேக்க சி¡¢யா ஆதிக்கம் யூதர்மேல் வந்தபோது விருத்தசேதனத்தை ஒளிவுமறைவாகச் செய்யவேண்டிவந்தது. ஏனெனில் கிரேக்கரும், ரோமானியரும் விருத்த சேதனம் செய்வதை வெறுத்தனர். கிரேக்கம் மற்றும் சி¡¢யாவின் மன்னன் அந்தியோக்கு எப்பிபான் (Aniochus IV Epiphans) கி.மு. 167 ல் எகிப்தை வென்றுவிட்டு அடுத்ததாக இஸ்ரேலையும் கைப்பற்றி  அங்கே தன் ஆட்சியை நிலைநாட்டிய பின் யூதர்களின் வழிபாட்டுமுறைகளைக் கட்டுப்படுத்தி, விருத்தசேதனம் செய்வதையும் தவிர்க்கவேண்டும் என்று கட்டளையிட்டான். யூதர்கள் பலரும் விருத்தசேதனம் செய்வதைக் கைவிட்டு, கிரேக்க தெய்வங்களை வழிபடவும், கிரேக்கக் கலாச்சாரத்தைக் கடைப்பிடிக்கவும்  தொடங்கினர். தங்கள் பிள்ளைகளுக்கு விருத்தசேதனம் செய்வித்த யூதப்பெண்களை மன்னனின் கட்டளைப்ப்டிக் கொன்றார்கள். குழந்தைகளை அவர்கள் தாய்மார்கள் கழுத்தில் கட்டித் தொங்கவிட்டார்கள்.அவர்கள் குடும்பத்தையும், விருத்தசேதனம் செய்த குருமார்களையும் கொலைசெய்தார்கள். இந்த அடக்குமுறையை எதிர்த்து இஸ்ரேலில் புரட்சி வெடித்தது. மத்தத்தியா என்ற யூதத்தலைவர் புரட்சிக்குத் தலைமை வகித்தார். புரட்சிக்காரர்ர்கள் சிலைவழிபாட்டுக்கான பீடங்களை இடித்துத் தள்ளினார்கள். இஸ்ரேல் எல்லைக்குள் விருத்தசேதனமின்றி வாழ்ந்துவந்த சிறுவர்களைப்பிடித்து அவர்களுக்கு வலுக்கட்டாயமாக

 

* Michael, The New Testament and Circumcision, Glass-Online publication, p 7

விருத்தசேதனம் செய்வித்தனர். மத்தத்தியாவின் காலத்துக்குப் பின் அவரது மகன் யூதா

மக்கபே புரட்சிக்குத் தலைமை தாங்கி நடத்தினார். இந்த விவரங்களெல்லாம் (புரொட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களின் பைபிளில் புறந்தள்ளப்பட்ட) கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் பைபிளில் உள்ள 1 மக்கபேயர் (1 Maccabees) என்ற புத்தகத்தில் 1 மற்றும் 2 ஆம் அதிகாரங்களில் சொல்லப்பட்டுள்ளன.

 

இயேசு பிறப்பதற்கு சுமார் 63 ஆண்டுகள் முன்பு யூதேயாவை ரோமானியர் கைப்பற்றினர். ரோமானிய ஆட்சியிலும் விருத்தசேதனம் கட்டுப்படுத்தப்பட்டது. யூதேயாவிலுள்ள யூதர் அல்லாதார் விருத்தசேதனம் செய்யலாகாது என்று ரோமானிய அரசு சட்டமியற்றியது. அந்த சட்டத்தில் விருத்தசேதனம் ஆண்மையை அழிக்குமாகையால் அது சட்டவிரோதமானது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் ஹாத்¡¢யன் (Hadrian) என்ற ரோமப்பேரரசன் விருத்தசேதனத்தை மொத்தமாகத் தடை செய்தான். ரோமானியப்பேரரசுக்கு எதிரான இரணடாம் புரட்சிக்கு விருத்தசேதனத் தடை முக்கிய காரணமாக அமைந்தது. பார் கோக்பா (Bar Kokhba) என்பவர் புரட்சிக்குத் தலைமை வகித்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் விருத்தசேதனத்தைக் கைவிடுவதற்கு இந்த நிகழ்வுகளும் காரணம். 

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7339
Date:
Permalink  
 

கிரேக்கக் கலாச்சாரத்தில் ஊறிய பவுல் அப்போஸ்தலர் விருத்தசேதனத்திற்கு எதிரான கருத்துக்களை யூதர்களல்லாத சமூகத்தினா¢டமே பெரும்பாலும்  பரப்பிவந்தார். கலாத்தியர்கொ¡¢ந்தியர்பிலிப்பியர் மற்றும் ரோமர் ஆகிய யூதரல்லாத சமூகத்தினருக்கு அவர் எழுதிய கடிதங்களில் விருத்தசேதனத்துக்கு எதிரான அவருடைய கருத்துக்கள் பிரதிபலிக்கின்றன.

 

யூதர்கள் தங்களுடைய உடல் சம்பந்தமான விருத்தசேதனத்திற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் குறைக்கும் நோக்கில்கிறிஸ்தவ போதகர்கள் விருத்தசேதனம் என்பது உடல் சம்பந்தமானது அல்லஅது ஆத்மா சம்பந்தமானதுபழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட விருத்தசேதனம் ஒரு உருவகமே தவிர உடல் சம்பந்தப்பட்டதில்லை. உடலில் ஒரு சிறுபகுதியை வெட்டி எறிவதால் இரட்சிப்பு கிட்டாதுஇதயத்தில் செய்யப்படுகின்ற விருத்தசேதனமே (மனமாற்றமே) இரட்சிப்பைக் கொடுக்கும் என்று போதிக்கத் தொடங்கினர். அதனால் விருத்தசேதனம் செய்த யூதர்கள்  விருத்தசேதனம் செய்யாத கிறிஸ்தவர்களைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் கிறிஸ்தவர்கள் மத்தியில் விதைக்கப்பட்டது. 'நீங்கள் விருத்தசேதனம் செய்துகொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இராதுஎன்று பவுல் சொல்லுகிறார் (கலாத்தியர் 5: 2). 'நாய்களுக்கு எச்சா¢க்கையாயிருங்கள்சுன்னத்துக்காரருக்கு (விருத்தசேதனம் செய்கின்ற யூதர்கள்) எச்சா¢க்கையாயிருங்கள்,. மாமிசத்தின்மேல் நம்பிக்கையாயிராமல்அன்பினாலே தேவனுக்கு ஆராதனை செய்துகிறிஸ்து இயேசுவுக்குள் மேன்மை பாராட்டுகிற நாமே விருத்த்சேதனமுள்ளவர்கள்என்று பவுல் விருத்தசேதனம் செய்கின்ற யூதர்களை மிகவும் கேவலமாகத் திட்டுகிறார் (பிலிப்பியர் 3: 2,3).

 

விருத்தசேதனத்திற்குப் பதிலாக மற்றொன்றை அடையாளபூர்வமாக அதன் இடத்தில் கொண்டுவரவேண்டும் என்ற நோக்கத்தில் கிறிஸ்தவர்கள் குழந்தைகளுக்கும்புதிதாக கிறிஸ்தவமதத்தைத் தழுவியவர்களுக்கும் ஞானஸ்நானம் (Baptism) வழங்குவதைக் கட்டாயமாக்கினார்கள். இயேசுவின் காலத்தில் ஞானஸ்நானம் யூதர்களுக்குக் கட்டாயமில்லை. அறிவுநிலைக்கு வந்த ஒரு மனிதன் மனம்திருந்தி தன் பாவங்களை மதகுரு ஒருவர்முன் அறிக்கையிட்டு நதியில் நீராடி தீட்சை பெறுவதே ஞானஸ்நானம் எனப்பட்டது. இயேசுவும் இவ்விதமே  தமது முப்பதாம் வயதில் யோவான் ஸ்நானகன் என்ற போதகா¢டம் யோர்தான் நதிக்கரையில் ஞானஸ்நானம் பெற்றார். ஆனால் கிறிஸ்தவர்கள் இதை மாற்றி பால்குடி மாறாத பிஞ்சுக்குழந்தையைத்  தேவாலயத்தில் கொண்டுவந்து பாதி¡¢யைக்கொண்டு அக்குழந்தைமேல் தண்ணீர் தெளிக்கவைத்து ஞானஸ்நானம் கொடுக்கும் வழக்கத்தை ஒரு கட்டாயச் சடங்காகவே தங்கள் மதத்தில் திணித்துவிட்டனர். குழந்தைகளுக்கு ஞானஸ்நானம் (Infant Baptism) வழங்குவது பற்றி பைபிளில் எந்த குறிப்பும் கிடையாது.

 

இயேசுவுக்கு அவர் பிறந்த எட்டாவது நாள் விருத்தசேதனம் செய்யப்பட்டுப் பெயர் சூட்டப்பட்டது. (லூக்கா 2: 21). ஆரம்பகால கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் பிறந்தநாளை டிசம்பர் 25 ஆம் தேதியைக்  கிறிஸ்துமஸ் என்று பெயா¢ட்டுக் கொண்டாடத் தொடங்கியபின் அவருக்கு விருத்தசேதனம் செய்யப்பட்டு பெயர் சூட்டப்பட்ட எட்டாவது நாளாகிய ஜனவா¢ 1 ஆம் தேதியையும் கொண்டாட ஆரம்பித்தனர். பின்னர் கிறிஸ்தவர்கள் அதைப் புத்தாண்டுக் கொண்டாட்டமாக மாற்றிவிட்டனர்.  சார்லிமான் (Charlemagne) என்ற ரோமப் பேரரசன் தன்னை 'பா¢சுத்தப் பேரரசன்' (Holy Emperor) என்று பெயா¢ட்டுக் கொண்டு ஆட்சி பு¡¢ந்த காலத்தில்தனக்குத் தெய்வீக அருளினால் கிட்டியது என ஏதோ ஒன்றை இயேசுவின் நுனித்தோல் என்று தேவாலயத்தில் வைத்தான். மன்னனை நம்பிய கிறிஸ்தவ மக்கள் சில ஆண்டுகள் அதை வழிபட்டனர். ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி ஐரோப்பியநாடுகளின் கலாச்சார மறுமலர்ச்சியின் ஆரம்பகாலம் (14 ஆம் நூற்றாண்டு) வரை கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் இயேசுவின் விருத்தசேதனம் செய்யப்பட்ட நுனித்தோலை (?) தேவாலயத்தில் பாதுகாத்துவைத்துப் போற்றி விழாஎடுத்தனர்!  பின்னர் மறுமலர்ச்சியின் இறுதிக்காலத்தில் (16, 17 ஆம் நூற்றாண்டுகள்) நிலைமைத்  தலைகீழானது. யூதர்கள் மேல் கிறிஸ்தவர்கள் அதீத வெறுப்பைக் காட்டத் தொடங்கினர். எனவே விருத்தசேதனம் செய்வது கீழ்மையானது என்ற கருத்து வலுப்பெற்றுசித்திரங்களிலும்சிற்பங்களிலும் கன்னிமா¢யாள் கையில் இருக்கும் குழந்தை இயேசுவின் ஜனன உறுப்பு விருத்தசேதனம் செய்யப்பட்டதாகக் காட்டக்கூடாது என்று கலைஞர்களுக்குக் கட்டளையிட்டனர். இயேசுவைச் சிலுவையில் அறையும்முன் அவரது ஆடைகளைப் போர்ச்சேவகர் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டதால் அவரை நிர்வாணமாகவே சிலுவையில் அறைந்தனர் என்று கிறிஸ்தவர்களில் ஒரு சாரார் நம்பியதால் இக்காலத்தில் இயேசு நிர்வாணமாக சிலுவையில் தொங்கும் சித்திரங்களும்சிற்பங்களும் உருவாக்கப்பட்டன. அவற்றிலெல்லாம் இயேசுவின் ஜனன உறுப்பு விருத்தசேதனம் செய்யப்படாதாகவே காட்டப்பட்டது. குழந்தை இயேசுவுக்கு விருத்தசேதனம் நடைபெறும் காட்சியை விளக்கும் பழைய ஓவியங்களை இயேசுவை சிலுவையில் அறைந்து கொல்லும் காட்சிக்கு ஒப்பிட்டு குழந்தைப் பருவத்திலேயே யூதர்கள் இயேசுவைச் சித்திரவதை செய்தார்கள் என்று யூதர்கள்மேல் பழியைச்சுமத்தினார்கள்.

 

1311 ல் கிறிஸ்தவ மதகுருக்கள் கூட்டிய வியன்னா ஆலோசனை மன்றம்’ (Council of Vienna) யூதர்களின் கொள்கைகளால் கவரப்பட்டு அல்லது வேறு எக்காரணத்தாலும் விருத்தசேதனம் செய்யவே கூடாது என்று கிறிஸ்தவர்களை எச்சா¢த்தது. அதன் பின்னர் 14 ஆம் நூற்றாண்டு இறுதியில்  ‘•ப்ளாரன்ஸ் ஆலோசனை மன்றம்’ (Council of Florence) கிறிஸ்தவன் என்ற பெயரால் பெருமையடைகிறவன் எவனும் ஞானஸ்நானம் பெறுவதற்கு முன்போ அல்லது பிறகோ விருத்தசேதனம் செய்தல் கூடாது என்றும் அதைச் செய்வதால் நித்திய இரட்சிப்பை இழக்கநோ¢டும் என்றும் எச்சா¢த்தது.

 

ஆனால் விருத்தசேதனத்தை வெறுத்துவந்த கிறிஸ்தவர்களின் நிலைப்பாட்டில் 19 ஆம் நூற்றாண்டில் ஒரு பொ¢ய மாற்றம் உண்டாயிற்று. இங்கிலாந்து மற்றும் அமொ¢க்கா ஆகிய இரு மேற்கத்திய கிறிஸ்தவ நாடுகள் விருத்தசேதனம் செய்வதை ஆதா¢க்கத் தொடங்கின. இன்றைக்கும் அமொ¢க்காவில் மருத்துவமனையில் பிறக்கின்ற எல்லா கிறிஸ்தவ ஆண்குழந்தைகளுக்கும் மூன்றாவது நாள் விருத்தசேதனம் செய்யப்படுகிறது.

 

ஒருமுறை இயேசு ஓய்வுநாளில் ஒருவனைக் குணமாக்கியதற்காகத்  தன்னிடம் குற்றம் கண்டுபிடித்த யூதர்களை நோக்கி: விருத்தசேதனம் மோசேயினால் உண்டாகாமல்பிதாக்களால் உண்டாயிற்றுபின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்நீங்கள் ஓய்வுநாளிலும் மனுஷனை விருத்தசேதனம் பண்ணுகிறீர்கள். மோசேயின் நியாயப்பிரமாணம் மீறப்படாதபடிக்கு ஓய்வுநாளில் மனுஷன் விருத்தசேதனம் பெறலாமென்றால்நான் ஓய்வுநாளில் ஒரு மனுஷனை முழுமையாகக் குணமாக்கினதாலே என்மேல் எ¡¢ச்சலாயிருக்கலாமா?’ என்று கேட்டார் ( யோவான் 7: 22, 23). இந்த பதிலில் இயேசு விருத்தசேதனத்தைப் பற்றி எத்தகைய கருத்து வைத்திருந்தார் என்பது பிரதிபலிக்கிறது. நீங்கள் ஓய்வுநாளில் விருத்தசேதனம் செய்து ஒரு  மனிதனின் உடலில் ஒரு பகுதியைச்

சேதப்படுத்துகிறீர்கள்நானோ ஒரு  மனிதனின் உடலில் செயலற்ற ஒரு பகுதியைக் குணமாக்கி அவனை முழுமையாக்குகிறேன் என்று சொல்லுகிறார். ஆங்கில பைபிளின் ஜேம்ஸ் அரசர் தொகுப்பில் (King James Version) மேற்கூறிய யோவான் 7: 23 ஆம் வசனத்திலுள்ள இயேசுவின் பதில் பின்வருமாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது: 'ஓய்வுநாளில் நான் ஒரு மனிதனின் ஒவ்வொரு அணுவையும் முழுமையாக்கினேன் என்பதற்காக என்மேல் கோபப்படுகிறீர்களா?' (...are ye angry at me, because I have made a man every whit whole on the Sabbath day?). இதில் whit என்பது 'மிகச் சிறியத் துகள்'  அல்லது 'அணுஎன்று பொருள்படும். இந்த நுணுக்கமான வார்த்தைகளைக் கொண்ட இயேசுவின் பதில் அவருக்கு விருத்தசேதனத்தின் மீதும் அதைச் செயல்படுத்துகிறவர்கள் மீதும் உள்ள வெறுப்பையே காட்டுகிறது. மேலும் கவனிக்கவேண்டிய ஒன்று என்னவென்றால்யோவான் 7: 22 ல் இயேசு "விருத்தசேதனம் பிதாக்களால் உண்டாயிற்றுபின்பு மோசே அதை உங்களுக்கு நியமித்தான்" என்று சொல்லுகிறாரேயன்றி 'விருத்தசேதனம் கர்த்தரால் உண்டாயிற்றுதேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்த உடன்படிக்கையின் அடையாளமாக இருக்கிறதுஎன்று சொல்லவில்லை. இதிலிருந்து இஸ்ரேல் இனத்தார் யாவரும் விருத்தசேதனம் செய்யவேண்டுமென்று  தேவன் ஆபிரகாமுக்குக் கட்டளையிட்டதாக ஆதியாகமத்தில் சொல்லப்பட்ட கதை கற்பனையே என்பது புலனாகிறது.

மிகவும் ஆச்சா¢யமான விஷயம்லேவியராகமம் 19: 23-25 வசனங்களில்  மரங்கள் கொடுக்கும் கனிகளுக்குள்ளும் எவை விருத்தசேதனமுள்ளவைஎவை விருத்தசேதனமில்லாதவை என்பது பற்றி கர்த்தர் (Yahweh) விவா¢க்கிறார்! "புசிக்கத்தக்க கனிகளைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்புஅவைகளின் கனிகளை விருத்தசேதனமில்லாதவைகளென்று எண்ணுவீர்களாகமூன்று வருஷம் அவை புசிக்கப்படாமல் விருத்தசேதனமில்லாததாய் உங்களுக்கு எண்ணப்படவேண்டும். பின்பு நாலாம் வருஷத்திலே அவைகளின் கனிகளெல்லாம் கர்த்தருக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பா¢சுத்தமாயிருக்கும். ஐந்தாம் வருஷத்தில் (நீங்கள்) அவைகளின் கனிகளைப் புசிக்கலாம்இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்" என்று கர்த்தர் சொல்லுகிறார்.. காயீன் அவன் பயி¡¢ட்ட  மரங்கள் கனிதரத் தொடங்கி மூன்று வருடங்கள் நிறைவுபெறுமுன் விருத்தசேதனமில்லாத அக்கனிகளைப் பறித்துக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான் என்பதாலேயே அவர் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்று வாதிடும் மறையியலாளருமுளர். ஆனால் கனிகளின் விருத்தசேதனத்தைப் ப்ற்றி மோசேயிடம் சொன்ன கர்த்தர் மோசேயின் முப்பாட்டனான காயீனிடம் சொன்னாரா என்று தொ¢யவில்லை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard