Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 26. Christmas கிறிஸ்துமஸ்


Guru

Status: Offline
Posts: 7339
Date:
26. Christmas கிறிஸ்துமஸ்
Permalink  
 


கிறிஸ்துமஸ்

இயேசு கிறிஸ்து அவதா¢த்த நாளாகிய டிசம்பர் 25 உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களால் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால் உண்மையாகவே டிசம்பர் 25 ஆம்  நாளில்தான் இயேசு பிறந்தாரா என்றால் கிறிஸ்தவ மறைநூற்களில் பதில் இல்லை. டிசம்பர் மாதம் பாலஸ்தீனம் போன்ற மேற்கு ஆசிய நாடுகளில் குளிர் மிகுந்த காலமாக இருக்கும். அதுவும் இரவு நேரங்களில் வெளியே வயல்வெளிகளில் தங்குவதென்பது சிரமமான கா¡¢யம். யூதர்களின் காலண்டா¢ல் நிசான் (Nissan) என்பது முதல் மாதம் ஆகும். அது மார்ச் மற்றும் ஏப்ரல் நடுவில் வருகிறது. ஒன்பதாம் மாதம் கிஸ்லெவ் (Kislev) எனப்படும் . அது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வருகிறது. அவர்கள் நாட்டில் இந்த ஒன்பதாம் மாதம், அதாவது நவம்பர்- டிசம்பர் மாதங்கள் குளிர் மிகுந்த மழைக்காலமாக இருக்கிறது. இரவில் வெட்டவெளியில் தங்கமுடியாது. பழைய ஏற்பாட்டில் எஸ்றா 10: 9 ஆம் வசனத்தில் அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது. ஜனங்கள் எல்லாரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அடைமழையினால் நடுங்கிக் கொண்டிருந்தார்கள்

என்று சொல்லபட்டிருக்கிறது. எனவே நிச்சயமாக இயேசு டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் மத்தேயு 2: 8-11 வசனங்களில், மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி இராத்தி¡¢யிலே தங்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வேளையில் தேவதூதன் அவர்களிடத்தில் வந்து நின்று: இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காகத் தாவீதின் ஊ¡¢லே பிறந்திருக்கிறார் என்று நற்செய்தியை அறிவிக்கிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இது எவ்வாறு சாத்தியம்? எந்த மேய்ப்பன் மழைக்கால இரவில் தன் ஆட்டு மந்தையை வயல்வெளியில் கிடை கட்டித் தானும் காவல் இருப்பான்?

கிறிஸ்தவ சகாப்தம் (Christian Era) முதல் ஆண்டில் (C.E. 1) டிசம்பர் 25 ஆம் நாள் இயேசு கிறிஸ்து பிறந்தார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் புதிய ஏற்பாட்டில் ஆதாமிலிருந்து தொடங்கி யோசேப்பு வரையுள்ள வம்சவரலாறு  கொடுக்கப்பட்டுள்ளதேயன்றி இயேசுவின் பிறந்தநாள், மாதம், வருடம் போன்றவை குறிப்பிடப்படவில்லை.

ரோமானிய மடாலயம் ஒன்றிற்குத் தலைவராயிருந்த டயோனிசியஸ் எக்சிகுவஸ் (Dionysius Exiguus) என்ற கிறிஸ்தவத் துறவி இயேசுவின் பிறப்பை உத்தேசமாகக் கணக்கிட்டிருக்கிறார். கிறிஸ்தவ சகாப்தம் தொடங்குவதற்கு முன், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன் மேற்கத்திய உலகில் வருடங்கள் ரோம்நகரம் நிர்மாணிக்கப்பட்ட ஆண்டிலிலிருந்து கணக்கிடப்பட்டன. அது 'அப் அர்பே காண்டிதா' (ab urbe condita) வருடம் என அழைக்கப்பட்டது. AUC 1 என்றால் முத்லாம் ரோமானிய வருடம் என்று ஆகும். ரோமானிய சக்கரவர்த்தி அகஸ்டஸ் சீசர் 43 வருடங்கள் ஆட்சி செய்தார். அவருக்குப் பின் திபீ¡¢யஸ் சீசர் (Tiberius Caesar) ஆட்சி செய்தார். இயேசுவுக்கு 30 வயது ஆனபோது திபீ¡¢யஸ் சீசர் ஆட்சிக்குவந்து 15 ஆண்டுகள் ஆயிற்று என்று லூக்கா 3: 1, 23 வசனங்களில் சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் அகஸ்டஸ் சீசா¢ன் ஆட்சி முடியும்போது இயேசுவுக்கு 15 வயது, அதாவது இயேசு பிறக்கும்போது அகஸ்டஸ் ஆட்சிக்குவந்து 28 ஆண்டுகள் ஆகியிருக்கும். அகஸ்டஸ் சீசர் ஆட்சிக்குவந்து முடி சூடியது AUC 727 ல். எனவே இயேசு பிறந்தது AUC 754 ஆம் ஆண்டில் என்று டயோனிசியஸ் முடிவு செய்தார்.

 

லூக்கா 1: 5 ல் இயேசு பிறந்த சமயம் ஏரோது யூதேயா தேசத்துக்கு இராஜாவாக இருந்தான் என்று கூறுகிறார். ஆனால் இயேசு பிறப்பதற்கு நான்கு வருடங்கள் முன்பே AUC 750 ல் ஏரோது காலமானான் என்று வரலாறு சொல்லுகிறது. இயேசு கிறிஸ்துவின் பிறந்த வருடத்தைச் சா¢யாகத் தீர்மானிக்கமுடியவில்லை எனினும் அவர் நிச்சயமாக கி.பி. 1 ல் பிறக்கவில்லை என்று அமொ¢க்க கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தில் (Catholic University of America) விவிலியநூற்கள் ஆய்வுத்துறையில் (Department of Bibilical Studies) பேராசி¡¢யராயிருந்த ஜோசப் ஏ. பிட்ஸ்மயெர் (Joseph A. Fitzmyer) கூறுகிறார்.

சற்றேறக்குறைய கி.பி.243 ல் எழுதப்பட்டதாகக் கருதப்படும், வட ஆப்¡¢க்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஆசி¡¢யர் பெயா¢டப்படாத 'தே பஸ்கா கம்ப்யுடஸ்' (de Pascha Computus) என்ற ஆவணத்தில் இயேசு மார்ச் 28 ல் பிறந்ததாகப் பதிவிடப்பட்டிருக்கிறது. அலெக்சாண்ட்¡¢யாவில் பேராயராக இருந்த கிலெமென்ட் (Clement) இயேசு நவம்பர் 18 ல் பிறந்ததாக எழுதிவைத்திருக்கிறார். வரலாற்று ஆவணங்களின்படி இயேசு கி.மு. 3 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ல் பிறந்திருக்கவேண்டும் என பிட்ஸ்மயெர் கூறுகிறார்.

கிறிஸ்தவமதம் தோன்றி வளர்ந்துவரும் காலத்தில் ரோமானிய சாம்ராஜ்யத்தில் ஏற்கனவே இருந்த பேகன் மதத்தைப் பின்பற்றியவர்கள் டிசம்பர் மாதப் பிற்பகுதியில் சனிபகவானுக்கு¡¢ய சார்ட்டனாலியா (Saturnalia) என்ற ஒருவாரப்பண்டிகையைக் கொண்டாடிவந்தனர். சனி அவர்களுக்குப் பயிர் பச்சைகளைப் போஷிக்கும் விவசாயத்துக்கான தெய்வமாக விளங்கியது. அது மட்டுமல்ல, சனியை அவர்கள் சூ¡¢யனின் அம்சமாகவே நம்பினார்கள். இந்துமதத்திலும் சனியைச் சூ¡¢யனின் புத்திரனாகவே வர்ணிக்கின்றனர். டிசம்பர் 17 முதல் 23 வரை இந்த கொண்டாட்டம் நிகழும். இந்தப் பண்டிகை காலத்தில் நீதிமன்றங்கள் மூடப்படும், ஏனெனில் குடியும், கும்மாளமும், கூத்துமாக இருக்கும் இந்த ஒரு வார காலத்தில் செய்யும் எந்த குற்றத்துக்கும் தண்டனை கிடையாது.

ரோம அதிகா¡¢கள் ராஜ்யவிரோதியான ஒருவனைத் தேர்ந்தெடுத்து பண்டிகை காலம் முழுதும் அவனுக்கு வேண்டியதெல்லாம் கொடுத்து மகிழ்வித்து பண்டிகை முடிவில் அவனை மக்கள் முன்னிலையில் கொலை செய்வார்கள். இது தேசத்தின் எல்லா நகரங்களிலும் நிகழும். சார்ட்டனாலியா பண்டிகையைத் தொடர்ந்து ரோமானியர் டிசம்பர் 25 ஆம் நாள் பேகன் மதத்தின் முக்கிய தெய்வமான சூ¡¢யக்கடவுள் மைத்ராவின் பிறந்தநாளைக் கொண்டாடுவர். இந்த விழாக்காலத்தில் மக்கள் ஆட்டமும், பாட்டுமாகக் குதூகலமாயிருப்பார்கள். இளம்வயதினர் குடித்துவிட்டு ஆடைகளில்லாமல் தெருக்களில் பாடித்தி¡¢வதும் உண்டு. இதுவே  தற்காலத்து கிறிஸ்துமஸ் கேரல் (Christmas Carol) பாட்டுக்கேளிக்கைக்கு முன்னோடியாக விளங்கியது. நான்காம் நூற்றாண்டில் கிறிஸ்தவப் பாதி¡¢கள்  ஏராளமான பேகன் மதத்தினரை அவர்கள் சார்ட்டனாலியா பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடலாம் என்ற வாக்குறுதியளித்துக் கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றினர். அத்தோடு டிசம்பர் 25 ல் சூ¡¢யக்கடவுளின் பிறந்தநாளில் கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிறந்தநாளைக் கொண்டாட ஆரம்பித்தனர்.

சார்ட்டனாலியா கொண்டாட்டங்கள் மற்றும் சூ¡¢யக்கடவுளின் பிறந்தநாளான டிசம்பர் 25 இவற்றுடன் கிறிஸ்தவ மதத்திற்கோ, கிறிஸ்துவுக்கோ எவ்வித சம்பந்தமும் இல்லையென்றாலும் நான்காம் நூற்றாண்டு பாதி¡¢களும் கிறிஸ்தவர்களும் பேகன் மதத்தவர்களுடன் சமரசம் செய்துகொண்டு காலப்போக்கில் அக்கொண்டாட்டங்களைக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களாக மாற்றிவிட்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகை பேகன் மதத்திலிருந்து வந்தது என்ற காரணத்துக்காக பியூ¡¢ட்டன்ஸ் (Puritans) என்ற புரோடஸ்டன்ட் பி¡¢வினர் தங்கள் பி¡¢வைச் சார்ந்த கிறிஸ்தவர்களைக் கிறிஸ்துமஸ் கொண்டாடக்கூடாது என்று அமொ¢க்காவில் மாசாஷ¤செட்ஸ் (Masaachusetts) என்ற மாகாணத்தில் 1659 முதல் 1681 வரை தடை செய்திருந்தனர்.

இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்தவ மதத்தலைவர்கள் பலரும் இயேசுவின் பிறந்ததினத்தைக் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தொ¢வித்தனர். 'பரோவா, ஏரோது போன்ற மன்னர்களுக்கும், பேகன் கடவுளருக்கும் பிறந்ததினம் கொண்டாடுவதுபோல் இயேசுவுக்குப் பிறந்தநாள் கொண்டாடுவது தகாது. மேலும் பேகன் மதத்தினா¢ன் சூ¡¢யக்கடவுளின் நிலைக்கு இயேசுவைத் தாழ்த்தி சூ¡¢யனின் பிறந்ததினமாகிய அதே டிசம்பர் 25 ஆம் நாள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது கிறிஸ்துவுக்குச் செய்யும் இழுக்கு' என்று மூன்றாம் நூற்றண்டில் வாழ்ந்த கிற்ஸ்தவ மறையியல் ஞானி ஓ¡¢கென் (Origen) எழுதியிருக்கிறார்.

'வெல்லமுடியாத சூ¡¢யனின் பிறந்தநாள்' (Natalis Solis Invicti) என்று ரோமானிய சாம்ராஜ்யத்தில் கொண்டாடப்பட்டுவந்த டிசம்பர் 25 ஆம் நாளை  கிறிஸ்துவின்  பிறப்பாகக் கொண்டாடலாம் என்று சக்கரவர்த்தி கான்ஸ்டான்டின் அறிவித்தபின்  கி.பி.336 டிசம்பர் 25 ஆம் நாளில் மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை முதன் முதலில்  கொண்டாடினார்கள். அதன் பின்பும் கிழக்கு ஆசியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் ஜனவா¢ 26 ஆம் நாளில்தான் கிறிஸ்துமஸ் கொண்டாடிவந்தனர். கி.பி. 350 ல் கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 ஆம் நாள் கொண்டாடப்படவேண்டும் என்ற கிறிஸ்தவ திருச்சபையின் அதிகாரபூர்வ அறிவிப்பை போப் ஜூலியஸ் வெளியிட்டார்.

பழைய ஏற்பாட்டுக்காலத்தில் பிறமதத்தினர் வழிபட்ட அஷேரா (Ashera) என்ற பெண்தெய்வத்தையும் யூதர்கள் வணங்கிவந்தனர். பச்சை மரங்களின் அடியில் அஷேராவின் விக்கிரகத்தை ஸ்தாபித்து வழிபடுவது வழக்கம். இதனாலேயே தமிழ் பைபிளில் அஷேரா என்ற பெயர் வரும் இடங்களில் அந்த பெயரைத் தவிர்த்துவிட்டுத் தோப்புவிக்கிரகம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்கள். இந்த வழக்கத்திலிருந்துதான் கிறிஸ்துமஸ் விழாக்காலத்தில் 'கிறிஸ்துமஸ் மரங்களை' (Christmas trees) வைத்துக் கொண்டாடும் பழக்கம் ஏற்பட்டது. ஆக கிறிஸ்துமஸ் மரமும் பிறமதத்திலிருந்து வந்ததுதான்.

கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது மிசில்ட்டோ (mistletoe) என்னும் கொடியைத் தோரணமாகத் தொங்கவிடும் வழக்கமும் பிறமதத்திலிருந்து தோன்றியதுதான். மிசில்ட்டோ என்பது ஐரோப்பியநாடுகளில் ஆப்பிள், ஓக் மற்றும் வில்லோ மரங்களின்மேல் படர்ந்து ஒட்டுண்ணியாக வளரும் ஒரு கொடி. பச்சைநிற இலைகளையும், மஞ்சள் பூக்களையும், வெண்மைநிறத்தில் சிறு கனிகளையும் உடைய தாவரம். மேற்கு ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த செல்டிக் (celtic) மக்களும் ட்ரூய்டுகளும் (druids) இக்கொடிகளைக்கொண்டு அலங்காரம் செய்வதனால் வீட்டுக்கு அதிர்ஷ்டம் வருவதோடு தீயசக்திகள் விலகும் என்றும் நம்பினார்கள். மேலும் இக்கொடியின் கீழ்நின்று ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக்கொள்வதால் நட்பும், காதலும் மலரும் என்றும் நம்பினர். கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலத்தில் மிசில்ட்டோ கொடியின் கீழ்நின்று முத்தமிட்டுக்கொள்ளும் வழக்கமும் சார்ட்டனாலியா கொண்டாட்டங்களையும், செல்டிக் மக்களின் விழாக்கால வழ்க்கங்களையும் ஒட்டியே கிறிஸ்தவமதத்தில் நுழைந்திருக்கிறது.

கிறிஸ்தவமதம் தோன்றும் முன்னர் ரோமானிய சக்கரவர்த்திகள் தங்கள் கீழ்நிலை ஆளுநர்களையும், அதிகா¡¢களையும், படிந்துவராத குடிமக்களையும் சார்ட்டனாலியா (Saturnaliya) மற்றும் புத்தாண்டு (Kalends) விழாக்காலத்தில், அதாவது டிசம்பர் பிற்பகுதி தொடங்கி பின் ஜனவா¢ முதல்வாரம் வரையுள்ள காலத்தில் தங்களுக்கு விலைஉயர்ந்த பா¢சுப்பொருட்களை கொண்டுவந்து தரவேண்டும் என உத்தரவிட்டிருந்தனர். இது பிற்காலத்தில் ரோமசாம்ராஜ்யத்தில் பொதுமக்கள் தங்களுக்குள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும்  பா¢சுப்பொருட்களை கொடுத்து வாங்கும் வழக்கமாக மாறிவிட்டது. இந்த வழக்கம் அதே காலகட்டத்தில் நிகழும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின்போதும் தொடர்ந்தது.

மைராவில் (Myra) பேராயராக இருந்த நிகோலாஸ் (Nicholas) கி. பி. 325 ல் புதிய ஏற்பாட்டை உருவாக்கம் செய்த நைசியா ஆலோசனை மன்றத்தில் (Council of Nicea) பங்கெடுத்த மூத்த பேராயர்களுள் ஒருவர். அவர் துருக்கியில் கி.பி.270 ல் பிறந்து 345 வரை வாழ்ந்தவர். அவருக்குப் புனிதர் (Saint) பட்டம் 19 ஆம் நூற்றாண்டில் வழங்கப்பட்டது. கி.பி.1087 ல் சில மாலுமிகள் நிகோலாசின் எலும்புகளை துருக்கியிலிருந்து எடுத்துக்கொண்டுபோய் இத்தாலியில் பா¡¢ (Bari) என்னுமிடத்தில் அவருக்கு ஓர் நினைவாலயம் அமைத்தனர். அங்கே அவரை ஒரு முதாட்டியாக உருவாக்கம் செய்து பஸ்குவா எப்பிபானியா' (Pasqua Epiphania) என்று பெயா¢ட்டு வணங்கிவந்தனர். கொஞ்சநாளில் பஸ்குவா மூதாட்டியை மாற்றிவிட்டு நிகோலாஸ் பெயா¢லேயே அந்த நினைவாலயத்தை நடத்திவந்தனர். வருடம்தோறும் நிகோலாஸ் இறந்த நாளான டிசம்பர் 6 ஆம் தேதியை அவரது நினைவாகக்கொண்டாடினார்கள். அப்பொழுது குழந்தைகளின் காலுறைகளில் (socks) பா¢சுப்பொருட்களை வைத்து செயின்ட் நிகோலாஸ்  கொடுத்ததாகக் குழந்தைகளுக்கு அளித்தனர். நிகோலாஸ் மாலுமிகளுக்கும், வணிகர்களுக்கும், யாத்¡£கர்களுக்கும், குழந்தைகளுக்குமான தெய்வமானார்.

நிகோலாசை வணங்கும் கலச்சாரம் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கே பிற மதத்தவராகிய ஜெர்மனி மற்றும் செல்டிக் மக்களிடையே பரவியது. அவர்களுடைய முக்கிய தெய்வமான ஓடென் (Woden) நீளமான தாடியை உடையவர். ஒவ்வொரு ஆண்டும் வசந்தகாலத்தில் ஒரு மாலைநேரத்தில் குதிரைமேல் ஏறி வலம்வருவார் என்பது அவர்கள் நம்பிக்கை. நிகோலாசை அவர்கள் தங்கள் மதத்தில் ஏற்றுக்கொண்டதும் அவரும் தாடி வைத்துக்கொண்டு குளிர்கால உடைகளை அணிந்துகொண்டு குதிரை மேல் டிசம்பர் மாதம் வலம்வரத் தொடங்கினார்! வடக்கு ஐரோப்பியநாடுகளிலுள்ள பேகன் மதத்தவர் கிறிஸ்தவமதத்தை ஏற்றுக்கொள்ளத் தொடங்கியதும் கத்தோலிக்கத் திருச்சபை அவர்களுடைய நிகோலாஸ் கலாச்சாரத்தை ஏற்றுக்கொண்டது. ஒரே ஒரு வேற்றுமை, இதுவரை டிசம்பர் 6 ஆம் தேதி வலம் வந்துகொண்டிருந்த செயின்ட் நிகோலாஸ் இனி டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று பா¢சுப்பொருட்களோடு வலம் வருவார் என்று ஒப்பந்தம் செய்தனர்.

1809 ல் ¡¢ப் வான் விங்கில் (Rip Van Winkle) என்ற பிரபலமான நாவலை எழுதிய ஆங்கில எழுத்தாளர் வாஷிங்டன் இர்விங் (Washington Irving) டச்சு கலாச்சாரத்தைப் பற்றி 'நிக்கெர்போக்கெர் வரலாறு' (Knickerbocker History) என்ற தலைப்பில் ஒரு நையாண்டி நூல் எழுதினார். அதில் குதிரை மேல் பா¢சுப்பொருட்களுடன் ஊர்வலம் வரும் செயின்ட் நிகோலாசை டச்சுமொழியில் சான்டாகிலாஸ் (Santa Claus) என்று பெயா¢ட்டு பலமுறை குறிப்பிட்டுள்ளார். பவோ¢யநாட்டு கார்ட்டூனிஸ்ட் தாமஸ் நாஸ்ட் (Thomas Nast) என்பவர் சான்டாகிலாஸின் உருவத்தை, ஹார்ப்பர்ஸ் வீக்லி (Harper’s Weekly) என்ற பத்தி¡¢கைக்காக 1862 லிருந்து  1886 வரை சுமார் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட கார்ட்டூன்களில் வரைந்திருக்கிறார். அவருடைய உடைக்கு மட்டும் சிகப்புவண்ணம்  கொடுக்கவில்லை.

1931 ல் கோக்கோ கோலா கம்பெனி தன் குளிர்பான விளம்பரத்திற்காக கோக் குடிக்கும் சான்டாகிலாஸ் சித்திரத்தை வரைந்து தரும்படி ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஓவியர் ஹேடன் சன்ப்லோம் (Haddon Sundblom) என்பவா¢டம் கேட்டுக்கொண்டது. அவர் லோ ப்ரென்டிஸ் (Lou Prentice) என்னும் தன் நண்பரை மாதி¡¢யாக வைத்து அவரைப் போலவே சான்டாகிலாசின் உருவத்தை வரைந்து கொடுத்தார். லோ ப்ரென்டிஸ் உப்பிய கன்னங்களுடன் பருமனான குண்டுமனிதராக இருந்தார். கோக்கோ கோலா விளம்பரங்கள் அனைத்தும் சிகப்பு நிறத்திலேயே இருப்பதால் ஒவியர் தான் வரைந்த சான்டாகிலாசுக்கு வெண்தாடி மீசைகளுடன், வெண்மைநிற உரோமவிளிம்புகளுடன் கூடிய சிகப்புவண்ண குளிர்கால உடையையும், அதே நிறத்தில் கோமாளிக்குல்லாவையும் அணிவித்திருந்தார். தற்காலத்தில் நாம் பார்க்கின்ற சான்டா கிலாஸ் இவரே. ஆக  கிறிஸ்தவமதப் பேராயர், பேகன்மதத்துத் தெய்வம், விளம்பரத் தூதுவர் ஆகிய எல்லாம் சேர்ந்த ஒரு கலவையாக சான்டா கிலாஸ் உருவெடுத்திருக்கிறார்!

 

மொத்தத்தில் பார்த்தொமென்றால் கிறிஸ்து பிறப்பிற்குச் சம்பந்தமில்லாத ஒரு நாளில், தங்கள் மறைநூற்களில் இல்லாத, பேகன் மதங்களிலுள்ள பழக்கவழக்கங்களைப் பின்பற்றி கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமசைக் கொண்டாடிவருகின்றனர் என்பதுதான் உண்மை.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard