Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 28. Eucharist - திருப்பலி


Guru

Status: Offline
Posts: 7339
Date:
28. Eucharist - திருப்பலி
Permalink  
 


திருப்பலி

 

கிறிஸ்தவர்களில் ஒரு பகுதியினர் முக்கியமாக கத்தோலிக்கர்களும், வேறு சில பி¡¢வினரும் தங்கள் தேவாலயங்களில் பிரார்த்தனை முடிவில் நிகழ்த்துகிற முக்கியமான ஒரு சடங்கு (sacrament) திருப்பலி (Eucharist) )அல்லது புனிதக் கூட்டுத்தொழுகை (Holy Communion என்று வழங்கப்படுகிறது.

 

இயேசுவும் அவருடைய சீடர்களும் கலந்துகொண்ட கடைசிவிருந்தில், இயேசு அப்பத்தை எடுத்து, இறைவனுக்கு நன்றி கூறி அதைப் பிட்டு, சீடர்களுக்குக் கொடுத்து: இது உங்களுக்காகக் கொடுக்கப்படுகிற என்னுடைய சா£ரமாயிருக்கிறது, என்னை நினைவு கூறும்படி இதைச் செய்யுங்கள் என்றார். போஜனம் செய்தபின்பு அவர் திராட்சைமது நிரம்பிய கோப்பையையும் கொடுத்து: இந்தக் கோப்பை உங்களுக்காகச் சிந்தபடுகிற என்னுடைய இரத்தத்தினாலாகிய புதிய உடன்படிக்கையாக இருக்கிறது என்றார் (லூக்கா 22: 19-20). 'என்னை நினைவு கூரும்படி இதைச் செய்யுங்கள்' என்று இயேசு தன் சீடர்களிடம் சொன்னதால் முதல் இரு நூற்றாண்டுகளில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் அப்பத்தையும், திராட்சைமதுவையும் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டு, பஸ்கா பண்டிகையில் பாவநிவாரண பலியாக்கிப் புசிக்கின்ற ஆட்டுக்குட்டியாக அடுத்தநாள் சிலுவையில் பலியாகப்போகும் இயேசுவை நினைவு கூர்ந்து இதை ஒரு சடங்காகக் கொண்டாடிவந்தனர்.

 

கிறிஸ்தவர்கள் இயேசு தங்களுடைய பாவங்களுக்காக சிலுவையில் இரத்தம் சிந்திப் பலியானதின் சங்கேதமாக இந்த சடங்கை தொடர்ந்து நிகழ்த்தத் தொடங்கினர். யோவானின் சுவிசேஷம் 6 ஆம் அதிகாரத்தில் இயேசு சொன்னதாகக் பின்வரும் வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன: ''ஜீவ அப்பம் நானே (6: 48). என் மாமிசத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம் பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு, நான் அவனைக் கடைசி நாளில் எழுப்புவேன் (6: 54), என் மாமிசம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது (6: 55). இப்படியெல்லாம் சொல்லிவிட்டு, இதுவரை கூறியதற்கு நேர் எதிர்மறையாக "ஆவியே (ஆன்மாவே) உயிர்ப்பிக்கிறது, மாமிசமானது ஒன்றுக்கும் உதவாது" என்று இயேசுவே கூறுகிறார்! (யோவான் 6: 63). இது எவ்வளவு முரண்பாடாய் இருக்கிறது?

 

திருப்பலியின்போது ரொட்டியைச் சிறு துண்டுகளாகவும், திராட்சைமதுவை சிறு கரண்டியிலும் எடுத்து அல்லது ரொட்டித்துண்டினை மதுவில் நனைத்து பாதி¡¢கள் பிரார்த்தனைக்கு வந்திருப்போருக்குப் பகிர்ந்தளிப்பர். பகிர்ந்தளிக்கும் முன் பாதி¡¢கள் பிரார்த்தனை (offertory) செய்வர். அவ்வமயம்  ரொட்டியும், திராட்சைமதுவும் தங்கள் பௌதீக இரசாயன குணங்களை இழக்காமல் மனிதஅறிவுக்கு எட்டாத வகையில் இயேசுவின் சா£ரமாகவும், இரத்தமாகவும் மாறிவிடுகிறது என்று ரோமன் கத்தோலிக்க மற்றும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவரகளும் நம்புகின்றனர். இதைப் 'பொருள்மாற்றம்' (transubstantiation) என்று அழைக்கின்றனர். அது மட்டுமல்ல, திருப்பலி நிகழும்போது இயேசு கிறிஸ்து அவ்விடத்தில் பிரசன்னமாயிருப்பார் என்றும் நம்புகின்றனர். இதை 'நிச்சயப் பிரசன்னம்' (Real Presence) என்று அழைக்கின்றனர். பதினொன்றாம் நூற்றாண்டில் ட்ரென்ட் நகர ஆலோசனை மன்றத்தில் (Council of Trent) பேராயர்களும், பாதி¡¢களும் கலந்துரையாடி எடுத்த முடிவாக  கத்தோலிக்கத் திருச்சபையின் வினாவிடை நூலில் (Catechism of Catholic Church) 1376 வது பத்தியில் இது கூறப்பட்டுள்ளது.

 

லூதரன் கிறிஸ்தவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின்  பொருள்மாற்றக் கோட்பாட்டை சற்றே மாற்றி தங்களுக்கென்று ஒரு கோட்பாட்டை உருவாக்கினர். அதாவது, திருப்பலியின்போது, அப்பமும், மதுவும் இயேசுவின் சா£ரமாக்வும் இரத்தமாகவும் மாறாமல் அப்படியே இருக்கும், ஆனால் இயேசுவின் சா£ரமும், இரத்தமும் அவற்றோடு கலந்திருக்கும், அவ்வளவே. இதைப் பொருள் கலப்பு (consubstantiation) என்று அழைக்கின்றனர்.

 

இயேசு மனிதராகப் பிறந்திருந்தாலும் அவருள் ஒரு தெய்வீகத் தன்மை இருந்தது போல திருப்பலியின் அப்பமும், மதுவும் பௌதீகப் பொருள்களாய்க் காட்சியளித்தாலும் அவற்றுள் இயேசுவின் பிரசன்னம் ஊடுருவி நிற்கிறது என்று ரோமன் கத்தோலிக்க மறையியலாளர் கூறுகின்றனர். ஆனால் கடைசி விருந்தின்போது இயேசு அப்பத்தைப் பிட்டு இது என்னுடைய சா£ரம், திராட்சைமதுவைக் காண்பித்து இது என்னுடைய இரத்தம் என்று சொன்னபோது அங்கிருந்த அவருடைய சீடர்கள் அப்பத்தையும், திராட்சைமதுவையும் இயேசுவின் உண்மையான உடலாகவும், இரத்தமாகவும் கருதினார்களா என்றால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. திருப்பலியின்போது மிகவும் தூய்மையான இறைபக்தியுடன் (latria) அப்பத்தையும், திராட்சைமதுவையும் உண்ணவேண்டும் என்று கத்தோலிக்கத் திருச்சபை கூறுகிறது. ஆனால் இயேசுவின் சீடர்கள் அவர் அளித்த அப்பத்தையும், திராட்சைமதுவையும் அதீதபக்தியுடன் பெற்று அருந்தினார்களா என்றால், இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில் அப்பத்தையும் திராட்சைமதுவையும் இயேசுவிடமிருந்து பெற்று அருந்திய அடுத்தநிமிடமே தங்களில் எவன் பொ¢யவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று (லூக்கா 22: 24).

 

திருப்பலி என்பது இயேசு தன்னச் சிலுவையில் ஒப்புக்கொடுத்துத் தியாகம் செய்ததை நினைவு கூர்ந்து செய்யப்படுகிற ஒரு சடங்கு என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். ஆனால் இயேசு அப்பத்தைத் துணிக்கைகளாக்கி இது என் சா£ரம், அதாவது சிலுவையில் அறையப்பட்டுப் பலியான உடல் என்று சீடர்களுக்குக் கொடுத்தது அவர் சிலுவையில் அறையப்படுவதற்கு ஒருநாள் முன்னதாக. அவர் கோப்பையில் தன் இரத்தம் என்று கொடுத்த திராட்சைமதுவும் அவ்வாறே. கடைசிவிருந்து மேசையில் இன்னும் பலியிடப்படாத தன் சா£த்தையும், இன்னும் சிந்தப்படாத தன் இரத்தத்தையும், அப்பம், திராட்சைமது இவைகளைக்  குறியீடுகளாகக் கொண்டு தன் சீடர்களுக்குக் கொடுத்தார் என்று கொள்ளலாமா? எப்போது அவர் அப்பத்தை எடுத்து பிட்டாரோ அப்பொழுதே அது பலியிடப்பட்ட அவருடைய உடல் என்றாகிறது. அதுபோல  எப்போது அவர் கோப்பையில் திராட்சைமதுவை எடுத்து இது என் இரத்தம் என்று சொன்னாரோ அப்போதே அது அவர் சிலுவையில் சிந்திய இரத்தமாகிறது. இத்தனை முரண்பாடுகள் உள்ள இந்த சம்பவம் பகுத்தறிவுக்கு உகந்ததாக இல்லை.

 

முதல் மூன்று ஒத்தமைந்த சுவிசேஷங்களைப் போலில்லாமல் மறையியல் தத்துவங்களோடு சற்று உயர்ந்த நிலையில் எழுதப்பட்டுள்ள யோவானின் சுவிசேஷத்தின் ஆசி¡¢யர் சிலுவையில் பலியாகும் இயேசுவின் சா£ரம், சிந்தப்படுகிற இரத்தம் என்ற இரண்டையும் இவ்வளவு குழப்பங்கள் நிறைந்தகடைசிவிருந்தில் பறிமாறப்பட்ட அப்பம், திராட்சைமது இவற்றை

குறியீடுகளாகக் கூறும் விளக்கங்களைத் தவிர்த்துவிட்டு, இயேசு தன் சா£ரத்தைப் புசித்து, இரத்தத்தை அருந்துங்கள் என்று சொல்லுகிற பகுதியைப் பொதுவான அவருடைய உபதேசங்களில் தனியாக ஒருபகுதியாக வைத்துவிட்டார் (யோவான் 6: 35 -58). இவ்வாறு முதல் மூன்று சுவிசேஷங்களுக்கும் முரண்பாடாய் கிறிஸ்தவப் பாதி¡¢களாலும், போதகர்களாலும் மிக முக்கியமாகக் கூறப்படும் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய இரவில் நிகழ்ந்த அவரது கடைசி விருந்து யோவானின் சுவிசேஷத்தில் தவிர்க்கப்பட்டுள்ளது.

 

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் கருத்தியல்படி திருப்பலியில் உண்ணும் அப்பமும் அருந்தும் திராட்சைமதுவும் இயேசுவின் சா£ரமும் இரத்தமுமாக மாற்றம் அடைகிறது என்பதால், இது மனிதமாமிசமும் மனித இரத்தமும் உண்ணுவதற்குச் சமமாகிறது.ஆனால் பைபிள் என்ன சொல்லுகிறது? எந்த பிராணியாக இருந்தாலும் சா¢, இரத்தத்தோடு கூடிய மாமிசத்தையோ, இரத்தத்தையோ உண்ணக்கூடாது என்று யூதர்களுக்கு அவர்கள் மறைநூற்கள் தடைவிதித்துள்ளன. 'மாமிசத்தை அதன் இரத்தத்தோடே புசிக்கவேண்டாம்'(ஆதியாகமம் 9: 5).”உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரேல் புத்திரருக்குச் சொன்னேன். இரத்தத்தைப் புசிக்கிற எவனும் கொல்லப்படுவான்

(லேவியராகமம் 17: 12-14) என்று கர்த்தர் தடை விதித்துத் தண்டனையையும் சொல்லிப் பயமுறுத்துகிறார். 'இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதனால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள்' (1 சாமுவேல் 14: 33). மேலும் புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலருடைய நடபடிகள் 15: 20 ல் 'இரத்தத்திற்கு விலகியிருக்கவேண்டும்' என்று இயேசுவின் சீடர்களுள் ஒருவரான யாக்கோபு கூறுகிறார். ரோமன் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் பைபிளில் தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு விஷயத்தை தங்கள் மதத்தின் மிகமுக்கியமான சடங்காக வைத்திருக்கிறார்கள். புரொடஸ்டன்ட் கிறிஸ்தவர்கள் இந்த சடங்கை உதாசீனப்படுத்திவிட்டனர்.

 

பைபிளில் பழைய ஏற்பாட்டில் நரமாமிசம் சாப்பிடுவதைப் பற்றி பல குறிப்புகள் உள்ளன. 'உன் சத்துருக்கள் உன் வாசல்களிலெங்கும் உன்னை முற்றுகையிட்டு உன்னை நெருக்கும்  காலத்தில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த உன் கர்ப்பக்கனியான உன் புத்திர புத்தி¡¢களின் மாமிசத்தைத் தின்பாய்' (உபாகமம் 28: 53). 'உங்கள் குமாரா¢ன் மாமிசத்தையும் உங்கள் குமாரத்திகளின் மாமிசத்தையும் புசிப்பீர்கள்' (லேவியராகமம் 26:29). 'கர்த்தாவே, யாருக்கு இந்தப்பிரகாரமாகச் செய்தீரென்று நோக்கிப்பாரும், ஸ்தி¡£கள் கைக்குழந்தைகளாகிய தங்கள் கர்ப்பக்கனியைத் தின்னவேண்டுமோ?' (புலம்பல் 2: 20). 'ஆதலால் உன் நடுவிலே பிதாக்கள் பிள்ளைகளத் தின்பார்கள், பிள்ளைகள் பிதாக்களைத் தின்பார்கள், நான் உன்னில் நீதி செலுத்தி உன்னில் மீதியாயிருப்பவர்களெல்லாம் சகல திசைகளிலும் சிதறிப்போகப்பண்ணுவேன் என்று கர்த்தராகிய ஆண்டவர் (Jehova) சொல்லுகிறார்' (எசேக்கியேல் 5: 10).                                                                                                                  

                                                                                   

யூதர்கள் ஜெகோவாவிற்கு நரபலி கொடுத்து வந்தனர் என்பதற்கும் பைபிளில் சான்றுகள் உள்ளன. அவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கு ஈடாக பறவைகளையும், மிருகங்களையும், மனிதர்களையும் பலியிட்டார்கள். நரபலியாகத் தங்கள் வசமுள்ள வேறு இனத்தைச் சார்ந்த அடிமைகளையே பலியிட்டார்கள். அப்படி ஒரு மனிதனை ஜெகோவாவிற்குப் பலியிட நேர்ச்சை செய்திருந்தால்அவனை யாரும் இரக்கம் கொண்டு மீட்கக்கூடாது என்றும் அவனைப் பலியிட்டே தீரவேண்டும் என்றும் லேவியராகமம் 27: 28,29 ல் சொல்லப்படுகிறது. ஆகவே கிறிஸ்தவர்கள் சொல்வது போல இயேசு கிறிஸ்து ஜெகோவாவிற்குக் கொடுக்கப்பட்ட முதல் நரபலி அல்ல, ஏற்கனவே நரபலி வாங்கும் பழக்கம் அவருக்கு இருந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

 

நாகா¢ககாலத்துக்கு முன்பு வாழ்ந்த ஆதிமனிதர்களில் பல பழங்குடிக் கூட்டத்தினர் நரமாமிசம் உண்பவராக (cannibals) இருந்தனர் என்று வரலாற்றில் அறிகிறோம். அவருள் சில கூட்டத்தினர் தங்கள் குழுத்தலைவர் அல்லது குடும்பத்தலைவர் இறந்துவிட்டால் அவர் உடலை அக்குழுவினர் அல்லது குடும்பத்தினர் அனைவரும் அமர்ந்து உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதன் மூலம் இறந்துபோனவா¢ன் ஆவி தங்களுடனே இருக்கும் என்றும் அவருடைய அறிவும், சக்தியும், தலைமைக்குணமும் தங்களுக்கு வரும் என்றும் நம்பினார்கள். என் மாமிசத்தைப் புசித்து, என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவன் என்னிலே நிலைத்திருக்கிறான, நானும் அவனிலே நிலைத்திருக்கிறேன்" (யோவான் 6: 56) என்று இயேசுவும் இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார். இயேசுவின் கடைசிவிருந்தில் அவர் தன் சீடர்களிடம் அப்பம் மற்றும் திராட்சைமதுவை தன்னுடைய சா£ரம் என்றும் , இரத்தம் என்றும் குறியீடுகளாகக் கொடுத்துப் புசிக்கச் சொன்னாலும் அது பழங்குடி மனிதர்களின் நரமாமிசம் உண்ணும் வழக்கத்தையே நினைவுபடுத்துகிறது.

 

 

மத்தேயு 5: 17 ல் 'நியாயப்பிரமாணத்தையாகிலும், தீர்க்கத்தா¢சனங்களையானாலும் அழிப்பதற்கு வந்தேன் என்று எண்ணாதீர்கள், அழிப்பதற்கு அல்ல, நிறைவேற்றவே வந்தேன்' என்று சொன்ன இயேசு, நியாயப்பிரமாணத்தில் யூதர்களுக்குத் தடைசெய்யப்பட்டிருந்த 'இரத்தம் அருந்துதலை' எப்படி தன்னுடைய சீடர்களிடம் வலியுறுத்தினார் என்பது புதிராகவே இருக்கிறது.      



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard