Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 30 Creation


Guru

Status: Offline
Posts: 7339
Date:
30 Creation
Permalink  
 


சிருஷ்டி

 

பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டு கோடிக்கணக்கான வருடங்கள் ஆகிவிட்டன என்று அறிவியல் கூறுகிறது. நாம் வசிக்கும் பூமி சூ¡¢யக்குடும்பத்தில் உள்ள ஒரு கிரகம், அதாவது சூ¡¢யனைச் சுற்றிவரும் பல கிரகங்களில் ஒன்று என்பதும், சூ¡¢யன் ஒரு நட்சத்திரம் என்பதும் அனைவருக்கும் தொ¢யும். சூ¡¢யனைவிட மிகப்பொ¢ய நட்சத்திரங்கள் அநேகம் உள்ளன, மேலும் அவை ஒவ்வொன்றைச்  சுற்றியும் பல கிரகங்களும் துணைக்கோள்களும் வலம் வந்துகொண்டிருக்கின்றன.  ஒரு நட்சத்திரத்திற்கும் மற்றொரு நட்சத்திரத்திற்கும் இடையிலுள்ள தூரம் லட்சக்கணக்கான மைல்கள். சூ¡¢யன் அமைந்திருக்கும் பால் வீதி (Milky Way) என்று அழைக்கப்படும் நட்சத்திர மண்டலத்தில் (galaxy) மட்டுமே சூ¡¢யனைப்போல் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளதாக வானவியலாளர் கூறுகின்றனர். அப்படியானால் பால்வீதியைப்போல பிரபஞ்சத்தில் இருக்கும் ஆயிரக்கணாகான நட்சத்திர மண்டலங்களில் எத்தனை கோடி நட்சத்திரங்கள் இருக்கும் என்று நினைத்துப்பார்த்துக்கொள்ளுங்கள். அந்த நட்சத்திரங்களைச் சுற்றிவரும் கோள்களில் பூமியைப் போன்ற எத்தனையோ கிரகங்கள் இருக்கலாம், அவற்றில் ஜீவராசிகள் வசிக்கலாம். இன்னும் மனித அறிவுக்கு எட்டாத இவ்விஷயங்களைக் கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் முயன்று கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்த உண்மைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மூவாயிரம் ஆண்டுகளுக்குமுன் அக்காலத்தில் நிலவிய தவறான அறிவியல் கருத்துக்களை வைத்துக்கொண்டு யூதர்களால்  எழுதப்பட்ட சிருஷ்டி வருணனையைப் புராணக்கதைக்கும் வரலாற்றுக்குமுள்ள வேற்றுமை தொ¢யாமல் கிறிஸ்தவர்கள்  இன்றைக்கும் உண்மையென்று நம்புகின்றனர். பைபிளின்படி பூமி சிருஷ்டிக்கப்பட்டு சுமார் ஆறாயிரம் வருடங்களே ஆகின்றன!

 

பிரபஞ்ச சிருஷ்டியை விளக்கக்கூடிய புராணக்கதைகள் அநேகமாக எல்லா மதங்களிலும் இருக்கின்றன. பண்டைய யூதமார்க்கத்தின் மறைநூலான பழைய ஏற்பாட்டில்  முதல் புத்தகமான ஆதியாகமத்தில்  சிருஷ்டியைப் பற்றிய ஒரு சுவாரசியமான புராணக்கதை அதன் முதல் மூன்று அதிகாரங்களில் கூறப்படுகிறது. பூமியை மட்டுமே மையமாககொண்டு உருவாக்கப்பட்ட இக்கதையின் சாராம்சத்தைப் பார்ப்போம்.

 

தேவன் வானத்தையும் பூமியையும் படைத்தார். பூமி ஒழுங்கில்லாமலும், வெறுமையாகவும் இருந்தது. ஆழத்தின்மேல் இருள் சூழ்ந்திருந்தது, தேவ ஆவி தண்ணீ¡¢ன்மேல் அசைவாடிக்கொண்டிருந்தது. தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் வந்தது. அவர் வெளிச்சத்திற்குப் பகல் என்றும் இருளுக்கு இரவென்றும் பெயர் வைத்தபின் முதல் நாள் வேலை முடிந்தது. தேவன் ஆகாயவி¡¢வை உண்டாக்கி தண்ணீரை இரண்டாகப் பி¡¢த்து, ஒருபாதி ஆகாயவி¡¢வுக்குக் கீழும், மறுபாதி ஆகாயவி¡¢வுக்கு மேலும் இருக்கும்படிச் செய்தார். இரண்டாம் நாள் முடிந்தது. தேவன் வானத்தின் கீழே இருக்கும் நீர் ஒன்றுசேரவும், வெட்டாந்தரை காணப்படவும் செய்தார். வெட்டாந்தரைக்கு பூமி என்றும், சேர்ந்த தண்ணீருக்கு சமுத்திரம் என்றும் பெயா¢ட்டார். பின்பு பூமியில் புல் பூண்டுகள், தாவரங்கள், மரங்கள் அனைத்தையும் உண்டாக்கியதோடு மூன்றாம் நாள் முடிவடைந்தது. இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் காட்ட சூ¡¢யனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார். நான்காம் நாள் முடிந்தது. இதன் பின்பு, தேவன் கடல்வாழ் ஜந்துக்களையும், மச்சங்களையும்ஆகாயத்துப் பறவைகளையும் படைத்தார். அத்தோடு ஐந்தாம் நாள் முடிந்தது. ஆறாம் நாளில் ஊர்வன முதலாகச் சகல காட்டு மிருகங்களையும், நாட்டு மிருகங்களையும் உண்டாக்கினார். கடைசியாக தேவன் மனிதனைத் தன் சாயலாக ஆணும் பெண்ணுமாய் சிருஷ்டித்தார். அதோடு சிருஷ்டி முடிந்தது. ஏழாம் நாளில் தேவன் ஓய்வெடுத்தார். ஏழாம் நாளில் அவர் தன் சிருஷ்டி வேலைகளை முடித்துவிட்டு ஓய்ந்திருந்ததால் அந்த நாளை ஆசீர்வதித்துப் பா¢சுத்தமாக்கினார் (ஆதியாகமம் 1: 1-31; 2:1- 3).

 

முதல் நாள் வெளிச்சத்தை உண்டாக்கி ஆறுநாட்களில் தேவன் சிருஷ்டியை முடித்தார் என்று சொல்லப்பட்டுள்ளதே ஒரு கற்பனையான கணக்குதான், ஏனெனில் அதற்கு முன்பே வானத்தையும் பூமியையும் தேவன் படைத்திருக்கிறார், பூமி ஒழுங்கின்மையும், வெறுமையுமாயிருந்தது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அவர் தண்ணீரையும் ஏற்கனவே படைத்திருக்கிறார். ஏனெனில் 'தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.  (ஆதியாகமம் 1: 2). அப்படியானால் ஏற்கனவே இருட்டில் சிருஷ்டியைத் தொடங்கிய தேவன், பூமி தான் நினைத்தபடி வராமல் ஒழுங்கில்லாமல் வந்தததால் சிருஷ்டியை நிறுத்தி வத்திருந்தாரா? எத்தனை காலம் நிறுத்திவைத்திருந்தார்? இதன்படி பார்த்தால் பைபிளில் சொல்லப்படும் சிருஷ்டி ஒரு கால இடைவெளிக்குப்பின் தொடங்கிய  இரண்டாவது சிருஷ்டி என்றுதான் சொல்லவேண்டும்.

 

சிருஷ்டி தொடங்கி நான்காம் நாளில்தான் தேவன் சூ¡¢யனையும், சந்திரனையும் படைத்தார் (ஆதியாகமம் 1: 14-19). ஆனால் முதல் நாளிலேயே அவர் "வெளிச்சம் வரக்கடவது" என்று சொன்னவுடன் வெளிச்சம் வந்துவிட்டது (ஆதியாகமம் 1: 3-5). எங்கிருந்து வந்தது என்று தொ¢யவில்லை. யுகம் யுகமாக இருட்டில் இருந்த தேவன் வெளிச்சம் வருவதற்குமுன் இருட்டிலேயே வானத்தையும் பூமியையும் படைத்ததால்தான் பூமி ஒழுங்கில்லாமல் இருந்திருக்கிறது!  வெளிச்சத்திற்குப் பகலென்றும் இருளுக்கு இரவென்றும் தேவன் பெயா¢ட்டார், முதல் நாள் முடிந்தது. சூ¡¢யனை நான்காம் நாளில்தான் படைக்கிறார். சூ¡¢யன் இல்லாமல் எப்படி முதல் மூன்று நாட்கள்  இரவு பகல் வந்ததுஇதிலிருந்து பு¡¢வதென்னவென்றால், தேவன் முதல்நாளில் உண்டாக்கிய வெளிச்சம் பன்னிரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை விட்டுவிட்டு வரக்கூடிய வெளிச்சம் என்று தொ¢கிறது. இப்படி ஏற்கனவே ஒரு பகல்நேரம் இருக்கும்போது சூ¡¢யனை ஏன் சிருஷ்டித்தார்? நான்காம் நாளில் சூ¡¢யனைச் சிருஷ்டித்தபின்பு முதல் மூன்றுநாட்கள் பகல்நேரம் மட்டும் வந்த வெளிச்சம் என்ன ஆயிற்று?

 

இரண்டாம் நாளில் மொத்த சிருஷ்டியின் ஆறில் ஒரு பங்கு முயற்சியை தேவன் ஒரு விசித்திரமான பொருளை உருவாக்குவதில் செலவிடுகிறார். நிலையான ஒரு விதானமாக ஆகாயவி¡¢வை (firmament) உண்டாக்கி கீழேயிருந்த தண்ணீரை இரண்டாகப்பி¡¢த்து ஒரு பங்கை அந்த ஆகாயவி¡¢வின் மேல் வைக்கிறார் (ஆதியாகமம் 1: 6-7). இப்போது வானத்துக்குக் கீழே பூமியில் சமுத்திரமும், வானத்துக்கு மேலே ஒரு பொ¢ய நீர்நிலையுமாக தண்ணீர் இரண்டு பி¡¢வானது. சமுத்திரத்திலுள்ள தண்ணீர் சூ¡¢ய வெப்பத்தால் ஆவியாகி, மேகங்களாக மாற்றமடைந்து மீண்டும் குளிர்ந்து மழையாகப் பொழிகிறது என்ற அறிவியல் உண்மையை அக்காலத்து யூதர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் வானம் என்பது கடினமான சுவர் போன்ற  பொருளால் ஆன ஒரு கூடாரம் என்றும் அதற்கு மேல் நிற்கும் தண்ணீர் கூடாரத்திலுள்ள மதகுகள் அவ்வப்போது தேவனால் திறந்துவிடப்படுவ்தால் மழையாகப்  பொழிகிறது என்றும் நம்பினர். இந்த நம்பிக்கையை கொண்டுதான் ஆதியாகம ஆசி¡¢யர் எழுதியிருக்கிறார். நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயம் ஏற்பட்டபோது ஆழத்தின் ஊற்றுக்கண்கள் திறந்து தண்ணீர் பெருகி, அத்தோடு வானத்தின் மதகுகள் திறந்து நாற்பது நாட்கள் மழை பொழிந்ததாக ஆதியாகமம் 7: 11-12 ல் சொல்லப்பட்டுள்ளது. நல்லவேளையாக இந்த ஆகாயவி¡¢வு இப்போது இல்லை, இருந்திருந்தால் மனிதர்கள் சந்திரனுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும், பிற கிரகங்களுக்கும் அனுப்புகிற ஏவுகணைகளெல்லாம் (rockets) ஆகாயவி¡¢வில் மோதி விபத்துக்கள் நிகழ்ந்திருக்கும்! ஒருவேளை ஆகாயவி¡¢வைத் துளைத்துக்கொண்டு ஏவுகணைகள் சென்றாலும் அதற்கு மேலுள்ள சமுத்திரம் போன்ற தண்ணீ¡¢ல் மூழ்கிப்போயிருக்கும்!

 

தாவரங்களுடைய ஒளிச்சேர்க்கைக்குத் (photosynthesis) தேவையான சூ¡¢யனைப் படைப்பதற்கு முன்பே தேவன் புல் பூண்டுகளையும், கனிதரும் மரங்களையும் மூன்றாம் நாளில் படைக்கிறார்.

 

நாலாம் நாளில் தேவன் பகலிலும் இரவிலும் வெளிச்சம் தரத்தக்க இரு மகத்தான சுடர்களைப் (சூ¡¢யன் மற்றும் சந்திரன்) படைத்தார். பின்பு நட்சத்திரங்களையும் படைத்தார் (1: 16-18). சந்திரன் சுடர் அல்ல, சூ¡¢யனிடமிருந்து பெறும் வெளிச்சத்தையே அது பிரதிபலிக்கிறது என்பது ஆதியாகமம் எழுதப்பட்ட காலத்தில் அந்நாட்டவர்க்குத் தொ¢ந்திருக்கவில்லை.

கோடிக்கணக்கான நட்சத்திரங்களைப் படைத்த தேவன் அவற்றுள் சுமார் நான்காயிரம் நட்சத்திரங்களை மட்டுமே மனிதனுடைய கண்ணுக்குத் தொ¢யும்படி வைத்திருக்கிறார், பிற நட்சத்திரங்களை யாருக்காகப் படைத்தார் என்று பு¡¢யவில்லை.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7339
Date:
Permalink  
 

தேவன் ஆதாமையும்ஏவாளையும் நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகிபூமியை நிரப்பிஅதைக் கீழ்படுத்திசமுத்திரத்தின் மச்சங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும்பூமியில் நடமாடுகிற சகலஜீவஜந்துக்களையும் ஆண்டுகொள்ளுங்கள் என்றார் (ஆதியாகமம் 1: 28).

 

தேவன் முதலில் சிங்கம்புலிமுதலை உட்பட சகல மிருகங்களும் கழுகுபருந்துகொக்குநாரைபென்குயின் (penguin) போன்ற மாமிசம் உண்ணும் அனைத்து பறவைகளும்இரத்தம் குடிக்கும் வௌவால் (vampire bats), கொசு முதலான எல்லா ஜீவராசிகளும் சைவ உணவாகிய புல்பூண்டு மற்றும் தாவரங்களையே ஆகாரமாக உண்ணும்படியாக படைத்திருந்தார்! (ஆதியாகமம் 1: 30). பல நூறு ஆண்டுகள் சென்றபின்னர் நோவா காலத்தில் ஜலப்பிரளயம் உண்டாகி முடிந்தபின்பே மிருகங்களும்பறவைகளும்பிற பிராணிகளும்மனிதனும் மாமிசம் சாப்பிட தேவனால் அனுமதிக்கப்பட்டனர் (ஆதியாகமம் 9: 3). ஆனால் ஜெகோவா மட்டும் தனக்கு ஆட்டுக்குட்டிகளைக் (மிருகபலி) காணிக்கையாகக் கொண்டுவந்த ஆபேலை ஆசீர்வதித்துவிட்டுவெறும் காய்கனிகளைக் கொண்டுவந்த காயீனை நிராகா¢த்துவிட்டார்.  இது எப்படி இருக்கிறது?

 

தேவன் எல்லா மிருகங்களையும்பறவைகளையும் படைத்தபின்பு அவைகளை ஆதாமின் முன் வா¢சையாக வரச்செய்து அவற்றுக்குப் பெயா¢டச்செய்தார் (ஆதியாகமம் 2: 19-20). இந்தப் பெயா¢டும் அணிவகுப்பு வைபவத்திற்கு எத்தனை நாள் ஆனது என்று சொல்லப்படவில்லை! மேலும் சமுத்திரத்து மீன்களுக்கும்கடலாழத்தில் உள்ள நீர்வாழ் ஜந்துக்களுக்கும் யார் பெயா¢ட்டார்கள் என்று தொ¢யவில்லை. அவைகள் அணிவகுப்புக்கு வரவில்லை!

 

தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம் கி¡¢யைகளெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால்அவர் ஏழாம் நாளை ஆசீர்வதித்துஅதைப் பா¢சுத்தமாக்கினார் (ஆதியாகமம் 2: 3). ஒவ்வொரு நாளும் தேவன் சில வார்த்தைகளைப் பேசியே தன் சிருஷ்டித் தொழிலை ஆற்றுகிறார். முதல் நாள் வெளிச்சம் உண்டாகக் கடவது என்றார்வெளிச்சம் வந்தது. முதல் நாள் முடிந்துபோயிற்று. இப்படியே ஆறுநாளும் சிருஷ்டியைச் செய்கிறார்.

அப்படிப் பார்த்தால் ஏழாம் நாளும் அவர் ஓய்வெடுக்கவில்லை என்றுதான் தொ¢கிறது. ஏனெனில் ஏழாம் நாளை அவர் ஆசீர்வதித்துஅதைப் பா¢சுத்தமாக்கினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தேவனைப் பொறுத்தவரை அது ஒரு வேலைதானேஏழாம் நாளில் தேவன் ஓய்ந்திருந்தார் என்று தவறாக எழுதிவிட்டார்கள் என்றுதான் கருதவேண்டியுள்ளது.

 

பாரசீகத்து மக்கள் பின்பற்றிய ஜொராஸ்ட்¡¢ய (Zoroastrianism) மதத்தில் அஹ¥ரா மாஸ்டா (Ahura Mazda) என்ற பெருங்கடவுள் ஆறு காலகட்டங்களில் சிருஷ்டியை முடிக்கிறார்முடிக்கும்போது ஒரு வருடமாகிறது. பாபிலோனிய எகிப்திய புராணக்கதைகளில் உள்ள சிருஷ்டி வரலாறுகளுக்கும் பைபிளில் சொல்லப்பட்டுள்ள சிருஷ்டி வரலாற்றுக்கும் அநேக ஒற்றுமைகள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

 

ஆதியாகமம் 2 ஆம் அதிகாரம் 3 ஆம் வசனத்தில் சிருஷ்டி விவரங்களெல்லாம் சொல்லி முடித்தபின்பு 4 ஆம் வசனம் "தேவனாகிய கர்த்தர் பூமியையும்வானத்தையும் உண்டாக்கின நாளிலேவானமும் பூமியும் சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே" என்று முடிகிறது. ஆறு நாட்களில் சிருஷ்டியை முடித்து ஏழாம் நாளில் தேவன் ஓய்ந்திருந்தார் என்று சொல்லிவிட்டு

4 ஆம் வசனம்சிருஷ்டி ஒரே நாளில் நடந்து முடிந்ததாக முரண்பாட்டுடன் முடிகிறது. உடனே மீண்டும் ஒரு சிருஷ்டிக்கதை தொடங்குகின்றது. அக்கதை ஏற்கனவே சொல்லப்பட்ட கதையிலிருந்து  வேறுபட்டுள்ளது. 5 ஆம் வசனத்தில் : பூமியில் தாவரங்கள் எதுவும் இன்னும் முளைக்கவில்லை. ஏனெனில் தேவன் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை. நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இருந்ததில்லை என்று கூறப்படுகிறது. அப்படியானால் முதல் அதிகாரத்தில்சிருஷ்டி ஆரம்பித்த மூன்றாம் நாளில் சூ¡¢யனைப்  படைப்பதற்கு முன்பே தாவரங்களைத் தேவன் படைத்தார் என்று சொல்லியிருப்பதின் பொருள் என்ன?

 

முதல் அதிகாரத்தில் வா¢சைக்கிரமமாகக் கூறப்பட்ட சிருஷ்டிக்கதையின்படி மூன்றாம் நாளிலே தேவன் பூமியில் புல்பூண்டுகள்தாவரங்கள் அனைத்தையும் படைத்தார். ஆறாம் நாளில்  தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாகப் படைத்தார் (ஆதியாகமம் 1: 24). ஆனால் இரண்டாம் அதிகாரத்தில் சொல்லப்படுகிற கதையில்  ஆதாமை மூன்றாம் நாளின் தொடக்கத்தில்  சிருஷ்டித்தார் என்று எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஏனெனில் ஆதியாகமம் 2: 5-7 வசனங்களில் "நிலத்தில் இன்னும் தாவரங்க்ள் முளைக்கவில்லைதேவன் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லைநிலத்தைப் பண்படுத்த மனுஷனும் இருந்ததில்லை. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கிஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்மனுஷன் ஜீவாத்துமாவனான்" என்றிருக்கிறது. அப்படியானால் மூன்றாம் நாளில் தாவரங்களைச் சிருஷ்டிக்குமுன்பே மனிதன் உருவாக்கப்பட்டுவிட்டான் என்றுதானே பொருள்மேலும் முதல் அதிகாரத்தில் தேவன் மனிதனை ஆறாம் நாளில் ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்தார் என்று சொல்லியிருக்கஇரண்டாம் அதிகாரத்திலோ ஏவாளை பின்னொரு நாளில் படைத்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆதாமைப் படைத்தபின் தேவன் எதேன் தோட்டத்தை உருவாக்கி அவனை அதிலே குடிவைத்துஅதன்பின்  ஐந்தாம் நாளில்  நீர்வாழ் ஜந்துக்களையும்,சமுத்திரத்து மீன் களையும்ஆகாயத்துப் பறவைகளையும் சிருஷ்டித்து விட்டு ஆறாம் நாளிலே சகல ஊர்வனமற்றும் விலங்குகள் யாவற்றையும் படைத்த பின்னர் ஆதாம் தனிமையில் இருக்கக்கண்டு அவனுக்கு ஒரு துணையை உருவாக்குவோம் என்றெண்ணிபெண்ணைச் சிருஷ்டிக்கிறார் (ஆதியாகமம் 2: 21-22). எனவே இரண்டாம் அதிகாரத்தின்படி ஆதாம் மூன்றாம் நாளிலும்ஏவாள் ஆறாம் நாளிலும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளனர் என்பதே வெளிப்படை. பைபிளின் சிருஷ்டிக்கதையில்தான் எத்தனை முரண்பாடுகள்?

 

தேவன் மண்ணிலிருந்து மண்ணினால் முதல் மனிதனாகிய ஆதாமை உருவாக்கினார். அவனுக்குத் துணை வேண்டுமென்பதற்காக முதல் பெண்ணான ஏவாளை உருவாக்கினார். லத்தீன் மொழியில் உள்ள வல்கேட் (Vulgate) பைபிளிலும்கிரேக்க மொழியில் பெயர்க்கப்பட்ட செப்டுவாஜின்ட் (Septuagint) பைபிளிலும் தேவன் ஆதாமைத் தூங்கச்செய்து அவனது விலாஎலும்பை (rib)எடுத்துஎடுத்த இடத்தைச் சதையால் மூடிவிட்டுஅந்த விலாஎலும்பிலிருந்து ஏவாளை உருவாக்கினார் என்றிருக்கிறது. ஆனால் cela என்ற எபிரேய வார்த்தை பைபிளில் பிற இடங்களில் வரும்போது பக்கம் (side) என்றே பொருள் கொள்ளப்பட்டுள்ளது.* சா¢யாக மொழிபெயர்க்கப்பட்டிருந்தால்ஜெகோவா ஆதாமின் ஒரு

-----------------------------------------------------------------------------------------------------

*Francois Lenormant, The Beginnings of History According to Bible, Charles Scribner’s Sons, New York, 1882, Translated from Second French Edition, p 63

 

 

 

பக்கத்தை எடுத்துஅப்பகுதியைச் சதையால் மூடிவிட்டுஆதாமின் ஒரு பக்கத்தைப் பெண்ணாக உருவாக்கினார் என்றிருக்கவேண்டும். ஆகையால்தான்ஆதாம் கண்விழித்து

இவள் என் எலும்பில் எலும்பும்என் மாமிசத்தில் மாமிசமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனிலிருந்து எடுக்கப்பட்டபடியால் மனுஷி எனப்படுவாள் என்கிறான் (ஆதியாகமம் 2: 23). ஆணில் சா¢பாதி பெண் என்ற சிவ பார்வதி தத்துவம் பல மதங்களிலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒன்றே.

 

ஆதியாகமம் 5: 2 ல் மனிதர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்த நாளிலேஅவர்களை ஆசீர்வதித்துதேவன் அவர்களுக்கு ஆதாம் என்று பெயா¢ட்டார்" என்று சொல்லப்பட்டுள்ளது. அதாவது ஆண் பெண் இருவருக்கும் ஆதாம் என்றே பெயர்!  தமிழ் பைபிளில் இந்த இடத்திலுள்ள ஆதாம் என்ற எபிரேய வார்த்தையை  'மனுஷர்’ என்று மொழியாக்கம் செய்திருக்கிறார்கள். ஆங்கில பைபிள் ஜேம்ஸ் அரசர் தொகுப்பில் 'ஆதாம்’ என்றே மொழியாக்கம் செய்துள்ளார்கள். புதிய ஆங்கில பைபிள் தொகுப்புகளில் 'மனிதகுலம்' (mankind) என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தேவன் பெண்ணுக்குத் தனியாகப் பெயர் வைக்கவில்லை. அவள் சர்ப்பத்தின் தூண்டுதலால் ஞானக்கனியைப் பறித்து தான் உண்டு தன் கணவனுக்கும் உண்ணக்கொடுத்துஅது தேவனால் கண்டுபிடிக்கப்பட்டு அவர் அவர்களுக்குச் சாபம் கொடுத்தபின்பேஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பெயா¢ட்டான் (ஆதியாகமம் 3: 20).

 

அறிவு தரும் கனியை ஆதாமும்அவன் மனைவி ஏவாளும் பறித்துப் புசித்தபின்தான் தடை விதித்திருந்த மற்றொரு மரமான ஜீவ விருட்சத்தின் கனியையும் ஆதாமும் ஏவாளும் பறித்துப் புசித்துவிட்டால் என்னசெய்வது என்று கடவுள் பயப்படுகிறார். தேவனாகிய கர்த்தர்இதோ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப்போல் ஆனான்இப்பொழுதும் அவன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனையையும் பறித்துபுசித்து என்றென்றைக்கும் உயிரோடிராதபடிச் செய்யவேண்டும் என்று" ஆதாமையும்ஏவாளையும் ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியேற்றுகிறார் (ஆதியாகமம் 3: 22-24). சர்வ வல்லமையுள்ள ஜெகோவாமனிதர்களும் தன்னைப்போல் அழிவில்லாத  நித்தியவாழ்வு வாழ்ந்துவிடக்கூடாதே என்று ஏன் பயப்படுகிறார்அவர் கடவுள்என்றும் அழிவில்லாதவர். கூட இருப்பவர்கள் ஆதாமும்ஏவாளும் மட்டுமே. ஜீவ விருட்சத்தின் கனியைச் சாப்பிட்டால் மரணமில்லா நித்தியவாழ்வு கிட்டுமெனில்அந்த ஜீவவிருட்சத்தை யாருக்காகப் படைத்தார்ஞானவிருட்சத்தின் கனியை ஆதாம் புசித்து நனமை தீமை அறியத்தாகவனாய் 'நம்மில்ஒருவனைப்போல் ஆனான் என்று தேவன் சொல்லுகிறார்இதன் பொருள் என்னஅச்சமயம்

அவருடன் அவரைப்போல் எத்தனைபேர் சக கடவுளர் அல்லது தேவதூதர்கள் இருந்தனர்அப்படி இருந்தார்கள் என்றால் அவர்களை யார் சிருஷ்டித்ததுபூமியையும் வானத்தையும் மனிதனையும் சிருஷ்டிக்குமுன்னரே சக தேவர்களையும்தேவதூதர்களையும் சிருஷ்டித்தார் என்றால், 'ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்என்று பைபிள் தொடங்குவதன் பொருள் என்னமேலும் ஆதாமுக்கு மரணமில்லாப் பெருவாழ்வு அளித்து அவனைப் படைத்துவிட்டதுபோல, 'நீ ஞானவிருட்சத்தின் கனியைபறித்துப் புசிக்கவேண்டாம்மீறிப் புசிக்கும் நாளில் சாவாய்என்று தேவன் எச்சா¢க்கை விடுத்தது உண்மைக்கு மாறானதுதானேஏனெனில் அக்கனியைப் புசித்த நாளில் ஆதாமும் ஏவாளும் சாகவில்லை! இவை அனைத்துமே எகிப்திய புராணங்களிலுள்ள சிருஷ்டிக்கதைகளைத் தழுவியூதமரபிலுள்ள கற்பனைகளையும் கலந்து எழுதப்பட்டவை ஆதலால் பகுத்தறிவுக்கு இடமில்லாமல் போய்விட்டது.

 

இவ்வாறு முரண்பாடுகளின் மொத்த வடிவமாக பூமியின் சிருஷ்டி  பைபிளில் வர்ணிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது என்னவெனில்பரலோகத்தில் இருக்கிற பிதா தான் வசிக்கின்ற பரலோகத்தையும்பைபிள் கதைகளில் அடிக்கடி கனவிலும்நோ¢லும் வந்து கொ¡¢யர் (courier) பணி செய்கிற தேவதூதர்களையும்சாத்தானுக்கும்அவன் நண்பர்களுக்கும் உ¡¢ய நரகலோகத்தையும் எப்போது சிருஷ்டித்தார் என்று பைபிளில் எங்கேயும் சொல்லப்படவேயில்லை.

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard