Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 19. Revealtion - வெளிப்பாடு


Guru

Status: Offline
Posts: 7339
Date:
19. Revealtion - வெளிப்பாடு
Permalink  
 


வெளிப்பாடு

வெளிப்பாடு (Revelation) அல்லது வெளிப்படுத்தின விசேஷம் எனபது பைபிளின் இறுதியில் அமைந்திருக்கும் புத்தகமாகும். வெளிப்பாட்டினைக் கவனமாக வாசித்தால் புதிய ஏற்பாட்டில் இதற்கு முந்தைய இருபத்தியாறு புத்தகங்களில் கூறப்பட்டுள்ள தகவல்களுக்கும் வெளிப்பாட்டில் சொல்லப்பட்டுள்ள தகவல்களுக்குமுள்ள முரண்பாடுகளை அறியலாம். இயேசுவின் சீடரான யோவானின் பெயரால் ஒரு சுவிசேஷமும் இரண்டு கடிதங்களும் புதிய ஏற்பாட்டில் உள்ளன. வெளிப்பாடும் அவராலே எழுதப்பட்டதுதான் என்று அநேக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். ஆனால் மூன்றாம் நூற்றாண்டைச் சார்ந்த அலெக்சாண்ட் ¡¢யாவின் பேராயராக  இருந்த டயோனிசியஸ் (Dionysius) என்பவர் தன் நூலில் இயேசுவின் சீடரான யோவானுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். மறையியல் அறிஞரும் வரலாற்று ஆசி¡¢யருமான யூசிபியஸ் (Eusebius) ' கிறிஸ்தவ திருச்சபையின் வரலாறு'  (History of the Church, 7.25) என்ற த்ன்னுடைய நூலில் இதே கருத்தையே எழுதியிருக்கிறார். டோமிட்டன் (Domitan) என்ற ரோமானியப் பேரரசன் யூதரும், கிறிஸ்தவருமான மூத்த யோவான் (John the Elder) என்பவரை அவருடைய ரோம எதிர்ப்புப் போராட்டங்களுக்காகக் கைது செய்து நாடுகடத்தி  கிரேக்கநாட்டின் அருகிலுள்ள பத்மோசு (Patmos) என்ற தீவில் சிறைவைத்திருந்தான். பத்மோசிலிருந்த யோவானால் வெளிப்பாடு எழுதப்பட்டது என்பது வரலாற்று ஆசி¡¢யர்களின் முடிவு. வெளிப்பாட்டை எழுதிய யோவானும் 'யோவானாகிய நான் தேவ வசனத்தினிமித்தமும், இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சாட்சியினிமித்தமும், பத்மு என்னும் தீவிலே இருந்தேன்' என்று ஒப்புதல் வாக்கு அளிக்கிறார் (வெளிப்பாடு 1: 9).

 

வெளிப்பாடு 1 ஆம் அதிகாரம் 17 ஆம் வசனத்தில், ' இயேசுவைக் கண்டவுடன் நான் செத்தவனைப் போல் விழுந்தேன்' என்று யோவான் கூறுகிறார். இயேசுவோடு வாழ்ந்து, அவர் மா¢த்து உயிர்த்தெழுந்த பின்னரும் பலமுறை அவரது தா¢சனத்தைப் பெற்ற சீடராகிய யோவானாக இருந்தால், ஏன் இயேசுவைக் கண்டவுடன் மயக்கமடைந்து விழவேண்டும்? நிச்சயமாக இது வேறொரு யோவானாகத்தான் (பத்மோசு சிறையில் இருந்தவர்) இருக்கவேண்டும்.

 

பத்மோசிலிருந்த யோவான் ஒருவித மயக்கநிலையில் இருந்தபோது அவருக்கு உண்டான பிரமையில் உதித்தக் கற்பனைக் காட்சிகளைத் தொகுத்து எழுதிய புத்தகமே வெளிப்பாடு ஆகும். வெளிப்பாட்டில் அவர் எழுதியதை நாம் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், விமா¢சித்து ஏதொரு வார்த்தையைக் கூட்டவோ அல்லது குறைக்கவோ செய்தால் தேவன் முடிவில்லாத கொடுந்தண்டனையை நமக்குத் தருவார் என்று அவரே பயமுறுத்தியிருக்கிறார்! (வெளிப்பாடு 22: 18,19).

 

வெளிப்பாடு இயேசு கிறிஸ்துவின் கொள்கைகளுக்கு எதிரானது என்று ஆரம்பகால கிறிஸ்தவர்களிடையே சந்தேகம் இருந்தது. ஆகையால் 'யோவானின் வெளிப்பாடு' கி. பி. 508 வரை புதிய ஏற்பாட்டில் சேர்க்கப்படவில்லை. ஆரம்பகாலத்தில் பி¡¢ந்துசென்ற சில கிறிஸ்தவமதப் பி¡¢வுகள் இன்னும்கூட தங்கள் பைபிளில் வெளிப்பாட்டைச் சேர்க்கவில்லை.

 

ரோமானிய ஏகாதிபத்தியத்தால் துன்புறுத்தப்பட்ட யூதர் ஒருவர் தனக்கு எதிரானவர்களைப், பழைய ஏற்பாட்டின் கொடுந்தணடனைகளை வழங்கும் கடவுளையும், கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக்கொண்ட யூதரானதால் இயேசு கிறிஸ்துவையும் துணைக்கு அழைத்துக்கொண்டுத் தன் பழிவாங்கும் எண்ணங்களைத் தொகுத்து வழங்கிய கோர்வையே வெளிப்பாடு ஆகும். பழைய

ஏற்பாட்டில் மோசேயின் மூலம் ஜெகோவா எகிப்தியர் மேல் ஏவிவிட்ட வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டம், கொள்ளை நோய், இரத்த ஆறு, தவளைகளின் பெருங்கூட்டம், சினாய் மலையிலிருந்து புறப்படும் இடியும் மின்னலும் ஆகிய  இவைகள் எல்லாவற்றையும் மறுபடியும் கடவுள் தன் எதி¡¢களின்மேல் ஏவிவிடுவதாக யோவான் கூறுகிறார். உலகத்து மனிதா¢ல் மூன்றிலொரு பங்கைக் கொல்லும்படிக்கு நான்கு தளபதிகளின்(!) தலைமையில் இருபது கோடி குதிரைவீரர்கள் கொண்ட சைனியத்தைக் கடவுள் ஏவிவிடுவதாக எழுதுகிறார்.

 

இயேசுவின் சிங்காசனத்தின் முன்பாக ஏழு ஆவிகள் நிற்பதாக யோவான் எழுதியிருக்கிறார் (வெளிப்பாடு 1: 4). தேவ ஆட்டுக்குட்டிக்கு (இயேசு கிறிஸ்து) ஏழு கொம்புகளும், ஏழு கண்களும் உள்ளதாகக் குறிப்பிடுகிற யோவான், அந்த கண்கள் தேவனுடைய ஏழு ஆவிகளேயாம் என்றும் சொல்லுகிறார் (வெளிப்பாடு 5: 6). புதிய ஏற்பாட்டின் பிற புத்தகங்களில்  பா¢சுத்த ஆவி ஒன்றைப் பற்றிதான் குறிப்புகள் உள்ளன. ஏழு ஆவிகளைப் பற்றி பைபிளில் வேறு எங்குமே சொல்லப்படவில்லை.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7339
Date:
Permalink  
 

பைபிளிலுள்ள எல்லா புத்தகங்களிலும் வெளிப்பாடு மிகுந்த குழப்பங்கள் நிறைந்ததாகக் காணப்படுகிறது. அதில் குறிப்பிடப்படும் பல விஷயங்களும் ஏசாயாஎஸ்றாஎசேக்கியேல்முக்கியமாக தானியேல் போன்ற பழைய ஏற்பாட்டு புத்தகங்களில் ஏற்கனவே சொல்லப்பட்ட விஷயங்களை எடுத்தாளப்பட்டவைகளாகவே இருக்கின்றன. நேரடியாகக் கூறப்படவில்லையென்றாலும் வெளிப்பாட்டில் மொத்தமுள்ள சுமார் நானூறு வசனங்களில் ஐநூற்று ஐம்பது மேற்கோள்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டு வேறு வடிவத்தில் சொல்லப்பட்டுள்ளதாக வெஸ்ட்காட் மற்றும் ஹார்ட் ஆகிய மறையியல் அறிஞர்கள் கூறுகின்றனர் (Greek New Testament by B.F.Westcott and F.J.A.Hort, 184 ff). சுருக்கமாகச் சொன்னால் வெளிப்பாடு யூதர்களின் மறைநூற்களில் ஒரு பகுதியாகவே விளங்கினாலும் மேற்கு ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கு எழுதப்பட்டுள்ள கடுமையான கடிதங்களின் மூலம் வெளிப்பாடு கிறிஸ்தவ முகத்திரையை அணிந்துகொள்கிறது.

 

பத்மோசு யோவான் தான் கண்ட கனவுக்காட்சிகளின் மூலம்  ஆசியாவிலுள்ள ஏழு சபைகளுக்கும் (churches) 'சீக்கிரமாய்நிகழவிருக்கும் நிகழ்ச்சிகளைப்பற்றி முன்னறிவிப்புகள் செய்கிறாரேயன்றி மொத்தமுள்ள கிறிஸ்தவ சபைகளுக்கும் அல்ல

(வெளிப்பாடு 1: 1-4). சீக்கிரமாய் சம்பவிக்கப் போகும் அந்த நிகழ்ச்சிகள் அவர் எழுதி ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகள் சென்றபின்னரும் அந்த ஏழு சபைகளுக்கும்  நிகழவில்லை என்பதே உண்மை!

 

தியத்தீரா சபைக்கு தேவகுமாரனாகிய இயேசு கூறுவது என்னவென்றால்,' யேசபெல் (Josebel) என்னும் வேசியுடன் விபச்சாரம் செய்கின்றீர்கள்வேசித்தனத்திலிருந்து மீள அவளுக்குத் தவணை கொடுத்தேன்தன் வேசிமார்க்கத்ததை விட்டு மனம்திருந்த அவளுக்கு விருப்பமில்லை. நான் அவளைக் கட்டில்கிடையாக்கிஅவளுடனே விபச்சாரம் செய்தவர்களைத் தண்டித்து,அவளுடைய பிள்ளைகளைக் கொல்லுவேன் என்று சொல்லுகிறார் என்று பத்மோசு யோவான் வெளிப்பாடு 2: 18-23 ல் அறிவிக்கிறார். சிறு பிள்ளைகளை என்னிடத்தில்வரவிடுங்கள்தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது என்று சொன்ன இயேசுதாயும் தகப்பனும் விபச்சாரம் செய்ததற்காக அவர்களுடைய களங்கமில்லாத குழந்தைகளைக் கொலை செய்வாரா என்னவெளிப்பாட்டு யோவான் அறிமுகப்படுத்தும் இயேசுவும்சுவிசேஷ யோவான் அறிமுகப்படுத்திய இயேசுவும் வெவ்வேறானவர்களா?

 

வெளிப்பாடு 1: 5 ல் மோசேயின் பாட்டையும்ஆட்டுக்குட்டியானவா¢ன் பாட்டையும் தேவலோகவாசிகள் பாடுவதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதனால்  கிறிஸ்து மற்றும் மோசே இருவரையும் ஒரே ஸ்தானத்தில் வைத்து வெளிப்பாட்டின் ஆசி¡¢யர் பார்ப்பதாகக் கொள்ளவேண்டியிருக்கிறது. 1 ஆம் அதிகாரம் 5 ஆம் வசனத்தில் இயேசு உலகத்து இராஜாக்களின் இளவரசனாக வர்ணிக்கப்படுகிறார். (KJV ஆங்கில பைபிளில் இளவரசன் [prince] என்றும் தமிழ் பைபிளில் 'அதிபதிஎன்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.) பின்னர்தான் அவருக்கு இராஜாதி ராஜாவாகப் பதவிஉயர்வு கொடுக்கப்படுகிறது. வெளிப்பாட்டில் நடுநாயகமாக சிங்காசனத்தில் அமர்ந்து நியாயத்தீர்ப்பு வழங்குகிறவர் இயேசு அல்லதேவனே நியாயத்தீர்ப்பு வழங்குவதாகச் சொல்லப்படுகிறது (வெளிப்பாடு 4: 2).  தேவனுடைய புத்தகத்தின் முத்திரைகளை உடைக்கும் வேலை மட்டுமே இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது (வெளிப்பாடு 5: 5-7). இந்த கூற்று புதிய ஏற்பாட்டின் மற்ற புத்தகங்களில் கூறப்பட்டுள்ள கருத்துக்கு முற்றிலும் மாறுபட்டிருக்கிறது.

 

சீடராகிய யோவான் இயேசுவிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு என்று இயேசுவே சொல்லுவதாகச் சொல்லுகிறார் (யோவான் 6: 47). ஆனால் பத்மோசு யோவான் அவனவன் தன் கி¡¢யைகளுக்குத் தக்க நியாயத்தீர்ப்பைப் பெறுவான் (விசுவாசத்திற்கு அங்கு இடமில்லை) என்று வெளிப்பாடு 20: 12,13 ல் கூறுகிறார். ஒருவன் எவ்வளவு பாவங்களைச் செய்தாலும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் அவர் சிலுவையில் சிந்திய இரத்தம் அவனுடைய பாவங்களைக் கழுவி அவனைத் தேவனுடைய ராஜ்யத்தில் கொண்டுசேர்க்கும் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கையும் வெளிப்பாடு 1: 6 ல் சொல்லப்பட்டு வாசிப்பவர்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும் இந்த உத்தரவாதமும்நம்பிக்கையும் பொய்க்கும் வண்ணம் வெளிப்பாட்டில் 20: 12, 13 ல் கூறப்படும் நியாயத்தீர்ப்பு விளக்கம் இருக்கிறது. ஞானஸ்நானம் பெற்று இயேசுவை ஏற்றுக்கொண்டுவிட்டால் இரட்சிப்பு கிடைக்கும் என்பது பொதுவான நம்பிக்கை. ஆனால் தங்கள் கி¡¢யைகளுக்கேற்றவாறு ஒவ்வொருவருக்கும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும் என்ற வெளிப்பாட்டின் கொள்கையால் கிறிஸ்தவர்கள் நியாயத்தீர்ப்பு நாளில் மா¢தோ¡¢லிருந்து உயிர்த்தெழுந்து தங்கள் பெயர் படிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்வரை தங்கள் நிலை என்னவென்று தொ¢யாமல் நிற்கவேண்டும்! ‘'கர்த்தருக்குள் மா¢க்கிறவர்கள் ஆனாலும்அவர்களுடைய கி¡¢யைகளும் அவர்களுடனே கூடப்போகும். ஆவியானவரும் ஆம் என்று திருவுளம் பற்றுகிறார்'’ என்று யோவான் மேலும் கூறுகிறார் (வெளிப்பாடு 14: 13). உண்மை அப்படி இருக்குமானால் இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து கிறிஸ்தவனாய் வாழ்ந்து மடிவதில் என்ன பொருள் இருக்கமுடியும்இதில் என்ன வேடிக்கை என்றால் அவனவன் தன் கி¡¢யைகளுக்கேற்ப நியாயத்தீர்ப்பைப் பெறுவான் என்ற கருத்தை இயேசுவே தன் வாயால் சொல்லியிருப்பதுதான்! (மத்தேயு 25: 31-46).

 

வெளிப்பாட்டில் தொடக்ககால கிறிஸ்தவ கருத்தியல்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருவான வரலாற்றைப் பார்க்கிறோம். தி¡¢த்துவக் கொள்கை (Trinity) வடிவமைக்கப்படுவதற்கு முன்பே வெளிப்பாடு எழுதப்பட்டதால் இதில் தி¡¢த்துவத்தைப் பற்றிய எவ்வித தடயமும் இல்லை. 'முதல் பாவத்தைப்' (original sin) பற்றியும் எதுவும் கூறப்படவில்லை. மேலும் ஞானஸ்நானம்திருப்பலி  (eucharist) ஆகியவை பற்றியும் தகவல் இல்லை. யூதரல்லாத இனத்தா¡¢டையே நிலவிவந்த விக்கிரக ஆராதனைக்கு எதிரான கருத்துக்களே மிகவும் அதிகமாகக் கூறப்பட்டுள்ளது. வெளிப்பாட்டின் ஆசி¡¢யர்  அன்பைப் போதிக்கின்ற கிறிஸ்தவ மதத்தை வெளிப்படுத்தாமல் அந்நியர் மேல் வெறுப்பையும்அவர்களைப் பழிவாங்கும் குணத்தையுமே வெளிப்படுத்துகிறார். பாபிலோன் என்ற போர்வையில் ரோமானியப் பேரரசு வீழ்வதையும்மனம் திருந்தாத எதி¡¢கள் கோடிக்கணக்கானோர் சித்திரவதைகள் அனுபவித்து மாள்வதை ரசிக்கின்ற கொடூரமான ஒரு நூலாசி¡¢யரையே பார்க்கிறோம்.

 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7339
Date:
Permalink  
 

வெளிப்பாட்டின்படி இயேசு பூமியில் கன்னி மா¢யாளுக்குப் பிறக்கவில்லை.  வானமண்டலத்தில் (பரலோகத்தில்) அவருடைய தாயாகிய ஸ்தி¡£ சூ¡¢யனை ஆடையாக அணிந்திருந்தாள்அவள் பாதங்களின் கீழ் சந்திரனும்அவள் சிரசின் மேல் பன்னிரண்டு நட்ச்சத்திரங்களுள்ள கி¡£டமும் இருந்தன (வெளிப்பாடு 12: 1). இது எகிப்தியர்களின் ஐசிஸ் (Isis) என்ற பெண்தெய்வத்தின் வர்ணனையை ஒத்திருக்கிறது.(பின்னர் கிறிஸ்தவர்கள் இந்த தெய்வீகத்தாயின் வர்ணனைகளை இயேசுவின் மானிடத்தாயான கன்னி மா¢யாளுக்கு உ¡¢யதாக்கிக்கொண்டனர். தற்காலத்திலும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மாதாகோவில்களில் கன்னி மா¢யாளின் விக்கிரகத்தைப் பார்த்தோமானால்மாதா சிலையின் சிரசில் பன்னிரண்டு நட்சத்திரங்களுடைய கி¡£டமும்பாதங்களின் கீழ் பிறைச்சந்திரனும்பின்புலத்திலிருந்து சூ¡¢யக்கதிர்களும் வருவதுபோல் அமைத்திருக்கும் காட்சியைக் காணலாம். உ-ம்: வேளாங்கண்ணி மாதா.) தேவலோகத்துத் தாய் கர்ப்பவதியாகிபிரசவ வேதனையுற்றுசகல ஜாதிகளையும் இருப்புக்கோலால் ஆளுகை செய்யும் ஆண்பிள்ளையைப் பெற்றாள். தந்தை யார் என்று சொல்லப்படவில்லை. அவளுடைய பிள்ளை தேவனிடத்திற்கும்அவருடைய சிங்காசனத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது (வெளிப்பாடு 12: 5). ஆகவே புதிய ஏற்பாட்டிலுள்ள மற்ற புத்தகங்களில் சொல்லப்பட்டிருப்பதற்கு மாறாககிறிஸ்து பூமியிலே பிறந்து பரலோகத்திலே ஆட்சி செய்கிறவராகக் காண்பிக்கப்படாமல்பரலோகத்திலே பிறந்து பூமியை ஆளுகிறவராக காண்பிக்கப்படுகிறார்! கிறிஸ்து பூமியில் மாமிசத்தில் பிறந்த சாதாரண மனுஷகுமாரனாக இல்லாமல் தேவலோகத்தில் பிறந்த தேவபுத்திரனாக விசித்திரமான உறுப்புகளுடன் வர்ணிக்கப்பட்டிருக்கிறார். 'அவர் தமது வலது கரத்தில் ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்அவர் வாயிலிருந்து இருபுறமும் கூர்மையான வாள் புறப்பட்டது' (வெளிப்பாடு 1:16). 'மா¢த்தோ¡¢லிருந்து பிழைத்தவருமானவர்என்ற ஒரு குறிப்பைத் (வெளிப்பாடு 2: 8) தவிர இயேசு பூமியில் அவதா¢த்துவாழ்ந்துஉபதேசித்து எக்காரணங்களால் சிலுவையில் அறையப்பட்டார்எவ்விதம் உயிர்த்தெழுந்தார் போன்ற எந்த விவரமும் வெளிப்பாட்டில் கிடையாது.

 

வெளிப்பாட்டில் இயேசு ஒரு போர்ப்படைத் தளபதியாகச் சித்தா¢க்கப்படுகிறார். நாசரேத்தூ¡¢லிருந்து புறப்பட்ட தச்சனின் மகனாகிய எளிய போதகரான இயேசுவுக்கும் வெளிப்பாட்டில் சித்தா¢க்கப்படும் இயேசுவுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. 'அவர் இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையைத் தா¢த்திருந்தார். அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள படைவீரர்கள் வெண்மையான மெல்லிய ஆடை அணிந்தவராய் வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி அவருக்குப்பின் சென்றார்கள்.புறஜாதிகளை (யூதரல்லதோர்) வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்துகூர்மையான வாள் புறப்படுகிறதுஅவர் இருப்புக்கோலால் அரசாள்வார்என்று யோவான் எழுதுகிறார் (வெளிப்பாடு 19: 13-15).

 

பரலோகத்திலிருந்து பூமிக்கு இறங்கிவருகின்றமோட்சத்திற்கு இணையான ஒரு புதிய எருசலேம் நகரத்தைப் பற்றி வெளிப்பாட்டில் விவா¢க்கப்பட்டுள்ளது. நாற்புறமும் சுவர்கள் அமைந்த சதுரவடிவான பளிங்குபோல் பிரகாசிக்கின்ற பசும்பொன்னால் ஆன நகரம் அது.நகரத்தின் மதில்களும்அடித்தளமும் இரத்தினக்கற்களால் அலங்கா¢க்கப்பட்டிருந்தன. இஸ்ரேலின் பன்னிரண்டு கோத்திரத்தார் பெயா¢லும் முத்துக்களால் ஆன பன்னிரண்டு வாயிலகள் அதற்கு இருந்தன. அந்நகரத்தின் நீளமும் அகலமும் பன்னிரண்டாயிரம் பர்லாங்குகள் இருந்தன (வெளிப்பாடு 21: 1-27; KJV ஆங்கில பைபிள்). அதாவது சுமார் 1500 மைல்கள். ஏறக்குறைய இந்திய நாட்டின் அளவு. பரலோக ராஜ்யத்தைப் பற்றிய தொடக்க காலக் கிறிஸ்தவர்களின் கற்பனை இந்த அதிகாரத்தில் முழுவதுமாக வெளிப்படுகிறது.

 

ஒருமுறை தேவலோகத்தில் சாத்தானை எதிர்த்து பயங்கர யுத்தம் நிகழ்ந்தது. சாத்தான் வலுசர்ப்பம் (dragon) என்று சித்தா¢க்கப்படுகிறான். அவனையும் அவனை ஆதா¢க்கும் தேவதூதர்களையும் யுத்தத்தில் வெல்வது பைபிளின் மற்ற பகுதிகளில் சொல்லப்படுவதுபோல

இயேசு கிறிஸ்துவோ அல்லது கர்த்தரோ அல்லமாறாக யூதர்களின் கடவுளாகிய ஜெகோவாவின் பிரதம தேவதூதனான மிகாவேல் (Michael) என்பவனே! (வெளிப்பாடு 12: 7,8). இந்த யுத்தத்திலும் சாத்தான் அழிக்கப்படவில்லை. சாத்தானும் அவனைச் சார்ந்தவர்களும் ஆயிரம் வருடங்கள் காவலில் வைக்கப்பட்டனர். ஆயிரம் வருடங்கள் முடியும்போது சாத்தான் காவலிலிருந்து விடுதலையாகிபூமியின் நான்கு திசைகளிலுமுள்ள தன் ஆதரவாளர்களைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் யுத்ததிற்குப் புறப்படுவான். அவர்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணல் போலிருக்கும் என்று புராணக்கதை போல் கற்பனை வி¡¢ந்துகொண்டே போகிறது (வெளிப்பாடு 20: 7,8). மிகாவேல் என்ற பிரதம தேவதூதனும் இயேசுகிறிஸ்துவும் ஒருவரேஇயேசு பூமியில் மா¢யாளின் மகனாய் அவதா¢க்கும் முன்பு தேவலோகத்தில் மிகாவேலாக இருந்தாரென்று வாதிடும் கிறிஸ்துவ மறையியலாளாரும் உள்ளனர்.

 

பைபிளின் பிற புத்தகங்களுக்கும் வெளிபாட்டுக்கும் உள்ள முரண்பாடுகள் சொல்லச் சொல்ல நீண்டு கொண்டே போகும். மத்தேயு 25 ஆம் அதிகாரத்தில் மா¢த்தோரெல்லாம் ஒரேநாளில் உயிர்த்தெழுந்து நியாயத்தீர்ப்பு பெறுவர் என்று கூறப்பட்டிருக்கும் கோட்பாட்டிலிருந்து வெளிப்பாடு மாறுபடுகிறது. வெளிப்பாட்டில் ஒரு இரண்டடுக்கு உயிர்த்தெழுதல் விவா¢க்கப்படுகிறது. இயேசுவுக்கு வேண்டப்பட்டவர்களும்தேவனுக்கும்இயேசுவுக்கும் முன்பாக ஆசா¡¢யர்களாகயிருந்தவர்களும்  உயிர்த்தெழுந்து இயேசுவுடனேகூட ஆயிரம் வருடம் அரசாளுவார்கள். இதுவே முதலாம் உயிர்த்தெழுதல். மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருடம் முடியுமளவும் உயிர்த்தெழுவதில்லை (வெளிப்பாடு 20: 4-6). முதலாம் உயிர்த்தெழும் வைபவத்தில் மீட்டுக்கொள்ளப்பட்டவர்கள் ஒரு லட்சத்து நாற்பத்துநாலாயிரம் யூதர்கள் மட்டுமே. அதாவது ஒரு கோத்திரத்துக்கு 12000 பேர் என்ற கணக்கில் பன்னிரண்டு கோத்திரங்களைச் சார்ந்த யூத ஆண்கள் மட்டுமே முதலாம் உயிர்த்தெழுதலுக்கு தகுதியானவர்கள். பெண்கள் கிடையாது. இவர்கள் ஸ்தி¡£களால் தங்களைக் கறைபடுத்தாதவர்கள்கற்புள்ளவர்கள்! (வெளிப்பாடு 14: 3,4). பெண்களே இல்லாத இந்த ஆண்கள் சமூகம் மட்டும்தான் ஆயிரம் ஆண்டுகளுக்கு இயேசு கிறிஸ்துவின் ஆளுகையின் கீழ் மோட்சராஜ்யத்துக்கு நிகரான பொன்னகரமான புதிய எருசலேம் நகரத்தில் அதாவது மோட்சராஜ்யத்தில் இயேசு கிறிஸ்துவின் ஆட்சியில் வாழப்போகிறவர்கள் என்றால் நம்ப முடிகிறதாஅதுவும் பன்னிரண்டு கோத்திரத்தார் ஆகிய யூதர்கள் மட்டுமே. அதிலும் ஆண்கள் மட்டுமே! மற்ற இனத்தாருக்குஅதாவது கிறிஸ்தவர்களுக்கு அங்கே இடமில்லை!

 

வெளிப்படுத்தின விசேஷம் என்ற புத்தகம் இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றியது அல்ல. அது இயேசு கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கைக்கு விரோதமான எதி¡¢களின்அதாவது இஸ்ரேலின் அழிவைப்பற்றியதாகும். வெளிப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள 'வருகைஎன்ற சொல் இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிப்பதாகாது. வழிதவறிய இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட நியாயத்தீர்ப்பின் தீர்க்கத்தா¢சனமே இந்த வெளிப்பாடு. அதற்கு அப்பாலுள்ள வர்ணனைகள்கிறிஸ்துவின் ராஜ்யத்துக்கெதிரான செயல்பாடுகள் நிலைப்பதில்லை என்பதைக் காட்டுவதற்கான பொதிந்துகொடுக்கும் (wrap up) முயற்சியே” என்று டேவிட் ஷில்ட்டன் (David Chilton) என்னும் மறையியலாளர் கூறுகிறார். ஏழு தலைகளும் பத்து கொம்புகளுமுடைய மிருகம் என்று குறிப்பிடப்பட்டிருப்பது ரோமசாம்ராஜ்யம்முக்கியமாக நீரோ மன்னனைக் குறித்தாகும். அதுபோல மகா வேசி குறிப்பிடப்பட்டிருப்பது எருசலேம் நகரம்.

 

ஏசாயா தீர்க்கத்தா¢சி சாத்தானை "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே" என்று அழைக்கிறார் (ஏசாயா 14:12). வெளிப்பாடு 22: 16 ல் இயேசு,"நான் தாவீதின் வேரும்சந்ததியும்பிரகாசமுள்ள விடிவெள்ளியுமாயிருக்கிறேன்" என்கிறார். இதில் எது உண்மைசாத்தானா அல்லது கிறிஸ்துவாஇவர்களில் உண்மையான விடிவெள்ளி (Morning Star) யார்இப்படி எந்த பகுதியைப் புரட்டினாலும் பைபிளில் காணப்படும் முரண்பாடுகளுக்கு கணக்கே இல்லை.

 

மற்றொருவருக்கும் வெளிப்படுத்தப்படாமல் ஒருவருக்கு மட்டுமே வெளிப்படுத்தப்பட்ட விஷயமே வெளிப்பாடு (Revelation) எனப்படும் என்று தாமஸ் பெய்ன் (Thomas Paine) என்ற மறையியலாளர் கூறுகிறார். அச்செய்தி முதல் நபா¢டமிருந்து இரண்டாம் நபருக்கும்இரண்டாம் நபா¢டமிருந்து மூன்றாம்  நபருக்கும் மூன்றாம் நபா¢டமிருந்து நான்காம் நபருக்கும் கடத்தப்படுமேயாகில் அதற்கு வெளிப்பாடு என்ற அந்தஸ்து போய்விடும் என்று மேலும் சொல்லுகிறார். முதல் முதலாக அச்செய்தியைப் பெறுகின்றவருக்கே அது வெளிப்பாடு. மற்றவர்க்கு அது வெறும் காதுவழிச் செய்தியே. அச்செய்தியைச் சொல்லுகின்றவா¢ன் தகுதியின்மேலுள்ள நம்பிக்கையினாலும்அச்செய்தியின் மேலுள்ள நம்பிக்கையினாலும் பிறர் அதை வெளிப்பாடு என்று நம்பவைக்கப்படுகின்றனரே தவிர அதில் உண்மை அடங்கியிருக்கிறது என்பதினால் அல்ல.

 

 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard