Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பராந்தக நெடுஞ்சடையன் (768 - 815) 3. சின்னமனூர் சிறிய செப்பேடு


Guru

Status: Offline
Posts: 7389
Date:
பராந்தக நெடுஞ்சடையன் (768 - 815) 3. சின்னமனூர் சிறிய செப்பேடு
Permalink  
 


பராந்தக நெடுஞ்சடையன் (768 - 815)
3. சின்னமனூர் சிறிய செப்பேட்டுப் பகுதி

1.1.3 (03)

ஸ்வஸ்திஸரீ
அமிர்தகிரணன் அன்வயத்தில் ஆகண்டலனது அழிவகல
சமர்முகத் தசுரகணந் தலையழியச் சிலைகுனித்து
வடவரையது வலாரசூளிகை மணிக்கெண்டைப் பொறிசூட்டியுந்
தென்வரைமிசைக் கும்போத்வனது தீந்தமிழிற் செவிகழுவியும்
ஹரிஹயன தாரம்பூண்டும் அர்தாசன மாவனோடேறியும்
5
சுரிவளையவன் றிருமுடிமிசைத் தூணிபலபடத் தோளேச்சியும்
ஓதமீள வேலெறிந்து மோராயிரங் கிரதுச்செய்தும்
பூதகணம் பணியாணடும் புவனதலம் பொதுநீக்கியும்
யானையாயிர மையமிட்டும் அபரிமிதமதி செயங்கள்செய்து
ஊனமில்புகழ் பாண்டியவம்சத் துலோகநாதர் பலர்கழிந்தபின்-
10
ஜகத்கீத யசோராசீர்ஜயந்தவர்மன் மகனாகிப்
பகைப்பூபர் தலைபணிப்பப் பரமேசுரன் வௌிப்பட்டு
அரிகேசரி அசமசமன் அலங்கிய விக்ரமன் அகாலகாலலெனத்
தனக்குரியன பலகுணநாம முலகுமுழு துகந்தேத்தப்
பராவனிப குலமிறைஞ்சப் பாரகலம் பொதுநீக்கி
15
தராசுரரது இடரகலத் தனவருஷம் பொழிதற்கு
வலாஹகத்தின் விரதம்பூண்டு துலாபாரம் மினிதேறிச்
சரணிபனா யுலகளித் திரணியகர்ப்ப மிருகால்புக்கு
கோசகசிரத் தொடக்கத்துக் குருதானம் பலசெய்து
வாசவன்போல் வீற்றிருந்தனன் வசுதாபதி மாறவர்மன்
20
மற்றவர்கு மகனாகி மதிபுரையும் குடைநீழல்

அற்றமின்றி அவனிமண்டலமுடனோம்பி அருள்பயந்த
கற்பகத்தின் விரதம் கொண்டு கலிகலுஷ மறநீக்கி
அற்பமல்லாத் திரவியங்கொடுத் தவனிசுர ரிடர்நீக்கி
கருதாது வந்தெதிர்த்த கழல்வேந்த ருடனவிய
25
மருதூரொடு குவளைமலையு மத்தவேழஞ் செலவுந்தி. . 


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard