Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சவேரியாரின் கோவா புனித கிறிஸ்துவ மத விசாரணை


Guru

Status: Offline
Posts: 7337
Date:
சவேரியாரின் கோவா புனித கிறிஸ்துவ மத விசாரணை
Permalink  
 


 சவேரியாரின் கோவா புனித கிறிஸ்துவ மத விசாரணை

 

கோவாவில் பிரான்ஸிஸ் சேவியர் நிறுவப்பட்ட புனித விசாரணை எனும் Goa Inquisition

                                               அரவிந்தன் நீலகண்டன் 
(தமிழில் முழு நூல்)  http://www.mediafire.com/file/lgarac12s3p26px/Goa_Inquisition_in_Tamil.pdf/file
வரலாற்று ஆசிரியர்  ஏ.கே.பிரோல்கர் எழுத்திய நூல் -இங்கே
சிக்கி இருந்த ஒரு ப்ரான்சு நாட்டு டாக்டர் எழுதிய வரலாற்று நூல்-இங்கே 
5.jpgIMG_20180814_132059.jpg francis-xavier-1.jpg 1322897433_goa-iquisition%2B%25281%2529.
 
கோவா இன்க்விசிசன் என்கிற புனித விசாரணை கிபி 1560 இல் கோவாவில் நிறுவப்பட்டது. பின்னர் கிபி 1774 இல் அது நீக்கப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் கிபி 1778 இல்  அது கிறிஸ்தவப் பிடிப்புள்ள போர்த்துகீசிய அரசி மூன்றாம் மரியாவால் மீண்டும் கோவாவில் நிறுவப்பட்டது. இறுதியாக 1812 இல் ஆங்கிலேய அழுத்தத்தால் (ஐரோப்பிய  புரோட்டஸ்டண்ட்     கிறிஸ்தவர்கள் சிலரும் இதனால் பாதிக்கப்பட்டது ஆங்கிலேய அழுத்தத்துக்கு காரணமாக இருக்கலாம்) இதனை அவர்கள் கைவிட வேண்டி வந்தது. ஆக, 252 ஆண்டுகள் இந்த 'புனித விசாரணை' நிறுவனம் இந்தியாவில் நீடித்தது.
 
2_03_40_06_Millenniaofonslaughts1_1_H%25

 
ஏசு சபையின் நிறுவனர் லயாலோவுடன் பிரான்ஸிஸ் சேவியர். ஏசு சபை இனத்'தூய்மை'யை வலியுறுத்துவதில் ஹிட்லரின் முன்னோடியாக திகழ்ந்தது. நாசி அமைப்புகளில் சேர ஒருவன் தனது மூன்று தலைமுறைகளுக்கு யூதக் கலப்பில்லை என நிரூபிக்க வேண்டும். ஏசு சபையிலோ ஒருவன் தனக்கு யூத கலப்பில்லை என்பதனை ஐந்து தலைமுறைகளுக்கு நிரூபிக்க வேண்டும். இந்த ஏசுசபை சட்டம் நாசிகளால் தம் நிலைப்பாட்டை நியாயப்படுத்த சுட்டிக்காட்டப்பட்டது. இது 1940களில்தான் நீக்கப்பட்டது. proxy?url=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-drMxyaxefBg%2FVSqKaYIzZOI%2FAAAAAAAABmQ%2FRPr4Dav29oc%2Fs1600%2FGoa%252B7.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*proxy?url=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-azcCTLTnRrQ%2FVSqKaldBKrI%2FAAAAAAAABmc%2F1ShCbuGa__U%2Fs1600%2FGoa%252B8.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*
1543 முதல் 1549 வரை பரிசுத்தவான்களில் ஒருவராக விளங்கும் கேட்டவரம் தரும் கோட்டாறு சவேரியார் என்கிற பிரான்ஸிஸ் சேவியர், போர்த்துகீசிய மன்னனுக்கும் தமது 
தலைவரான லயோலாவுக்கும், ஏசுசபையினருக்கும் எழுதிய கடிதங்களில் கோவாவில் இன்க்விசிசனை நிறுவ வேண்டிய அவசியத்தை, தாம் மதம் மாற்றியவர்கள் மீண்டும் நழுவிவிடாமல் இருக்க போர்த்துகீசிய அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கைகளை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 
"சிறுகுழந்தைகளை மதமாற்றுவதிலும் அவர்களுக்கு மதப்பிரச்சாரம் செய்வதிலும் உள்ள நன்மை அபாரமானது. இந்த குழந்தைகள் மீது, அவர்கள் அவர்களது அப்பன்களை விட நல்லவர்களாக வருவார்கள் என எனக்கு நம்பிக்கை இருக்கிறது. இவர்களுக்கு புனித சட்டத்தின் மீது அதீத அன்பு உள்ளது. நமது புனித மதத்தினை ஏற்று அதனை பரப்புவதில் அதீத ஆர்வம் உள்ளது. விக்கிர ஆராதனையின் மீது அவர்களுக்கு உள்ள வெறுப்பு அற்புதமானது. அவிசுவாசிகளிடம் அவர்கள் இது குறித்து சண்டை பிடிப்பார்கள். அவர்களுடைய பெற்றோர்கள் விக்கிர ஆராதனை செய்தால் உடனே என்னிடம் வந்து அதனைத் தெரிவிப்பார்கள். விக்கிர ஆராதனை நடக்கிறதைத் தெரிந்து கொண்டவுடன் நான் உடனே அங்கே இந்த மதமாற்றபட்ட  சிறுவர்களை ஒரு பட்டாளமாக அழைத்துக்கொண்டு சென்றுவிடுவேன். அங்கு சென்று அந்த ஆராதனை செய்யப்படும் பிசாசினை, அங்கு நடத்தப்படும் ஆராதனையைக் காட்டிலும் அதிகமாக, அக்குழந்தைகளின் பெற்றோர் சுற்றத்தாரிடமிருந்து அந்த பிசாசுக்கு கிடைத்த ஆராதனைகள் அனைத்தையும் விட அதிகமாக, அவமரியாதையாகவும் அசிங்கமாகவும் திட்டுவோம். மதமாற்றபட்ட  சிறுவர்கள் அந்த விக்கிரகத்திடம் ஓடிச்செல்வார்கள் அதனை கீழே தட்டி விழவைப்பார்கள். அதன் மீது துப்பி தூசியில் புரட்டுவார்கள்தனை மிதிப்பார்கள். அதன் மீது அனைத்துவித அத்துமீறல்களையும் செய்வார்கள்....இந்தியர்கள் கறுப்பாக இருப்பதால் தமது நிறமே உயர்ந்ததென நினைக்கின்றனர். அத்துடன் தமது கடவுளரும் கறுப்பாக இருப்பதாக நம்புகின்றனர். இதனால் பெரும்பாலான அவர்களது சிலைகள் கறுப்பு எத்தனை கறுப்பாக இருக்குமோ அந்த அளவு கறுப்பாக இருக்கின்றன. இதற்கும் மேல் அவர்கள் அதன் மீது ஒரு எண்ணெயைத் தடவுகின்றனர். அதனால் அச்சிலைகள் நாற்றமடிக்கின்றன. அழுக்காகவும் பார்ப்பதற்கு அருவெறுப்பானதாகவும் இருக்கின்றன." (St. Francis Xavier's Letter from India, to the Society of Jesus at Rome, 1543)
proxy?url=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-xE863X-3Qpc%2FVSqKaucVelI%2FAAAAAAAABmU%2F3qMS0YOTvIA%2Fs1600%2FGoa%252B9.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F* proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-RxJ-A2OF-cQ%2FVSqKXffI3vI%2FAAAAAAAABlg%2FPzi81r4fmrA%2Fs1600%2FGoa%252B10.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*
பிரான்ஸிஸ் சேவியர் இக்கடிதத்தில் முழு கிராமங்களையே மதமாற்றினேன். ஞானஸ்நானம் கொடுத்து எனக்கு கையெல்லாம் வலிக்கிறது என்றெல்லாம் (1543 இல்) எழுதினாலும்
பின்னாளில் அவரது கடிதங்கள் தமது மதமாற்ற முயற்சிகளில் அவர் விரக்தி அடைந்த நிலையை பிரதிபலிக்கிறது.1545 இல் போர்த்துகீசிய அரசன் மூன்றாம் ஜானுக்கு எழுதிய
கடிதத்தில் அவர் புனித விசாரணை எனும் இன்க்விசிஷனை கோவாவில் நிறுவக்கோரினார். 1549 இல் அவர் ஏசுசபை நிறுவனரான இக்னேசியஸ் லயோலாவுக்கு எழுதிய கடிதத்தில்
அவரது தொனி முழுமையாக மாறிவிட்டது:
"முதல் விஷயம், இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும்,  காட்டு மிராண்டித்தனமானது.  அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான  விஷயங்களுடன் ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான் கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ  விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது.பெரும்பாலான இந்தியர்கள் மோசமான நாட்டத்தைக் கொண்டவர்கள் என்பதுடன்  நல்லவற்றில் வெறுப்பு உடையவர்கள். அவர்கள் ஸ்திரத்தன்மை, மென்மை மற்றும் மனதிடம் இல்லாதவர்கள். அவர்களுக்கு நேர்மை என்பதே கிடையாது. அவர்களிடம் நிரம்பிக்கிடக்கும் குணம் பாவ காரியங்களும் ஏமாற்றுத்தனமும்தான்.  இங்கு நாம் மதமாற்றியவர்களை தரத்தில் வைத்துக்கொள்ளவும், அவிசுவாசிகளை மதம் மாற்றவும் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது....  இந்த தேசவாசிகள் கயமைத்தன்மை வாய்ந்தவர்கள் என்பதால் கிறிஸ்தவ மதத்தினை ஏற்றுக்கொள்கிற மனப்பாங்கு அவர்களுக்கு இல்லை. எனவே அவர்கள் அதனை வெறுக்கின்றனர். ஆகவே நமக்கு அவர்களை நாம் பிரசிங்கிக்கிற விசயங்களை கேட்க வைப்பதே ரொம்ப கடினமாக உள்ளது. அவர்கள் கிறிஸ்தவர்கள் ஆவதென்பதை ஏதோ சாவது போல பார்க்கின்றனர். எனவே இப்போதைக்கு நாம் கிடைத்த மதம்மாறிகளை நழுவாமல் வைத்துக்கொள்வதில்தான் முழு கவனம் செலுத்த வேண்டும்." (St.Francis Xavier's Letter on the Missions, to St. Ignatius de Loyola, 1549)
proxy?url=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F--rColbRfqQg%2FVSqKbjrQ0II%2FAAAAAAAABms%2FAmG9B349a-I%2Fs1600%2FGoa.jpg&container=blogger&gadget=a&rewriteMime=image%2F*
"இந்திய இனமே, நான் பார்த்த வரைக்கும், காட்டுமிராண்டித்தனமானது. அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், தங்கள் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு புறம்பான  விஷயங்களுடன்       ஒத்துப்போவதில்லை.அவர்களுடைய நடவடிக்கைகளும், பாரம்பரியமுமோ நான்  கூறியது போல காட்டுமிராண்டித்தனமானது. இந்த பாரம்பரியமானது, தேவ
விசயங்களைக் குறித்தோ மீட்பு குறித்தோ அறிந்து கொள்ள எவ்வித ஆர்வமும் காட்டாதது."--'புனித' சேவியர்
1543 இல் எழுதிய கடிதத்தில் அந்தணர்கள் தாம் தமது மதமாற்றத்திற்கு பெரிய தடை எனவும் அவர்கள் இங்குள்ள மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும், னால் அவர்களுக்கு என்று ஒரு இரகசிய கல்விச்சாலை இருப்பதாகவும் அங்கு அவர்கள் மட்டும் கடவுள் ஒருவனே என படித்துக்கொள்வதாகவும் அதனை ஒரு அந்தணரே இவரிடம் ஒத்துக் கொண்டதாகவும்   அந்தணர்களின் அறிவு என்பது ஒரு சிறிய துளிதான் என்றும் எழுதிய மிசிநரி சவேரியார், 1549 இல் ஒட்டுமொத்தமாக இந்தியர்களின் குணக்கேடுதான் அவர்கள் கிறிஸ்தவத்தை ஏற்க  தடையாக இருப்பதாக பிரகடனம் செய்துவிட்டார். (மிசிநரி சேவியரின் கடிதங்கள் எடுக்கப்பட்ட நூல்: ஆக்ஸ்போர்டு யூனிவர்ஸிட்டி பிரஸ் வெளியிட்ட "Modern Asia and Africa, Readings in World History" பாகம் 9 பக். 4-13 தொகுப்பாசிரியர்கள் வில்லியம் மெக்நெயில் மற்றும் மிட்ஸுகோ இரியி, 1971. அந்தணர்களைக் குறித்து சேவியர் கூறியதற்கு ஒப்ப மத்திய கால ஐரோப்பாவில் யூதர்கள் குறித்தும் கட்டுக்கதைகள் இருந்தன என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது உண்மையில் யூதர்கள் ஏசுவே வாக்களிக்கப்பட்ட மெசையா என அறிவார்கள் என்றும் ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே மறைத்துவிடுவதாகவும் கூறப்பட்டுவந்தது,)
கோவாவில் இன்க்விசிசன் சேவியர் கேட்டுகொண்ட காலத்திலேயே கோவாவில் நிறுவப்பட முடியாமல் போனது. என்ற போதிலும், சேவியர் கோவா வந்து சேர்ந்த காலகட்டத்திலேயே 
ஹிந்துக்களுக்கு எதிரான வன்முறை ஆரம்பித்துவிட்டது. "குறைந்த பட்சம் 1540 முதல், கோவாவில் அனைத்து இந்து விக்கிரகங்களும் உடைக்கப்படலாயின. கோவில்கள் 
உடைக்கப்பட்டு அந்த கட்டுமான பொருட்களால் சர்ச்சுகள் கட்டப்பட்டன. இந்து ஆராதனைகள் தடைப்படுத்தப்பட்டன. இந்து பூசாரிகள் போர்த்துகீசிய பிரதேசங்களிலிருந்து 
துரத்தப்பட்டனர்." என்கிறார் முனைவர் டிஸோஸா. (Western Colonialism in Asia and Christianity, பக். 85, தொகுப்பாசிரியர் எம்.டி.டேவிட், Himalaya Publishing House,Bombay,1988.) 

300px-Inquisicao.jpg

1322893723_vigilpainting.jpg

 

An_auto-da-f%25C3%25A9_of_the_Spanish_In

at-goa-portuguese-india-the-inquisition-

DSyCQocU8AEZulK.jpg

francis-xavier%2B%2B%2B%2Blobomoarco.fil

goa1.jpg

history-cooling_off_period-cooling_off_p

i3-844x700.jpg

images%2B%25281%2529.jpg

images%2B%25282%2529.jpg

images%2B%25283%2529.jpg

Images-Depicting-Horrible-Inhuman-Cathol

Images-Depicting-Horrible-Inhuman-Cathol

Images-Depicting-Horrible-Inhuman-Cathol

images.jpg

Inquisition%2B%2Bwikipedia%2B%2BorgWitch

inquisition.jpg

joseph-vaz-priest-goa-inquisition.jpg

M004_BurningHeretics.jpg

Massacre_Christian_Indians.jpg

unnamed4.jpg

wp6fa4a7a4_06.png


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard