Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: 1. அகர முதல எழுத்தெல்லாம்


Guru

Status: Offline
Posts: 7337
Date:
1. அகர முதல எழுத்தெல்லாம்
Permalink  
 


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

(அதிகாரம்:கடவுள் வாழ்த்து குறள் எண்:1)

பொழிப்பு (மு வரதராசன்): எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.



மணக்குடவர் உரை: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன. அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.

பரிமேலழகர் உரை: எழுத்து எல்லாம் அகரம் முதல - எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
(இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார். ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: எழுத்துக்களுக்கெல்லாம் அகரம் முதலாக இருப்பதுபோல உலகத்திலுள்ள எல்லாவற்றிற்கும் இறைவன் முதலாக இருக்கிறான். உலகத்தைக்கொண்டு அதை உண்டாக்கினவரை எண்ண வேண்டும்.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

பதவுரை:
அகர -‘ அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல-முதலாகயுடையன; எழுத்து-எழுதப்படுவது; எல்லாம்-அனைத்தும்; ஆதி-முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன்-கடவுள்; முதற்றே-முதலேயுடையது; உலகு-உலகம்.


அகர முதல எழுத்து எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன;
பரிப்பெருமாள்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன;
பரிப்பெருமாள் குறிப்புரை: என்பது என்ன சொன்னவாறோ எனின், சொல்லும் பொருளும் என்னும் இரண்டனுள்ளும் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தைத் தனக்கு முதலாக உடையவாறு போல;
பரிதி: உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்தாதல் முறைமைபோல;
காலிங்கர்: அகரமாகிய எழுத்தின்கண் விரிந்தன ஏனையெழுத்துக்களும், அவற்றானாகிய சொற்களும், மற்றைச் சொற்றொடர்புடைய ஏனைத்துக் கலைகளும் மற்றும் யாவையுமாகிய அது மற்றியா தொருபடி அப்படியே;
பரிமேலழகர்: 'எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல;
பரிமேலழகர் குறிப்புரை: இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார்.

மணக்குடவரும் பரிமேலழகரும் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன போல என்றும் பரிப்பெருமாள் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தை முதலாக உடையனபோல என்றும் பரிதி உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்து ஆதல் போல என்றும் காலிங்கர் எழுத்து, சொல், சொல் தொடர்புடைய கலைகள் எல்லாம் அகர எழுத்தின் விரிந்தன போல என்றும் இப்பகுதிக்கு உரை தருகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்', 'எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் எழுத்தை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்னும் ஒலி வடிவை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் அகர ஒலியை முதன்மையாகக் கொண்டவை' என்ற பொருளில் உரை தந்தனர்

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதலாக உடையன என்பது இப்பகுதியின் பொருள்.

பதவுரை:
அகர -‘ அ’ என்னும் எழுத்தில் தொடங்கும் அகர வரிசை; முதல-முதலாகயுடையன; எழுத்து-எழுதப்படுவது; எல்லாம்-அனைத்தும்; ஆதி-முதல், மூலம், பழமை, முற்பட்டுள்ள; பகவன்-கடவுள்; முதற்றே-முதலேயுடையது; உலகு-உலகம்.


அகர முதல எழுத்து எல்லாம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன;
பரிப்பெருமாள்: எழுத்துக்களெல்லாம் அகரமாகிய வெழுத்தைத் தமக்கு முதலாக வுடையன;
பரிப்பெருமாள் குறிப்புரை: என்பது என்ன சொன்னவாறோ எனின், சொல்லும் பொருளும் என்னும் இரண்டனுள்ளும் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தைத் தனக்கு முதலாக உடையவாறு போல;
பரிதி: உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்தாதல் முறைமைபோல;
காலிங்கர்: அகரமாகிய எழுத்தின்கண் விரிந்தன ஏனையெழுத்துக்களும், அவற்றானாகிய சொற்களும், மற்றைச் சொற்றொடர்புடைய ஏனைத்துக் கலைகளும் மற்றும் யாவையுமாகிய அது மற்றியா தொருபடி அப்படியே;
பரிமேலழகர்: 'எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல;
பரிமேலழகர் குறிப்புரை: இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தான் அன்றி நாதமாத்திரை ஆகிய இயல்பாற் பிறத்தலானும், ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கே அன்றி வட எழுத்திற்கும் முதலாதல் நோக்கி, 'எழுத்து' எல்லாம் என்றார்.

மணக்குடவரும் பரிமேலழகரும் எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன போல என்றும் பரிப்பெருமாள் சொல்லிற்குக் காரணமாகிய எழுத்தும் சொல்லும் பொருளும் அகரத்தை முதலாக உடையனபோல என்றும் பரிதி உயிரெழுத்துப் பன்னிரண்டுக்கும் அகரம் முதலெழுத்து ஆதல் போல என்றும் காலிங்கர் எழுத்து, சொல், சொல் தொடர்புடைய கலைகள் எல்லாம் அகர எழுத்தின் விரிந்தன போல என்றும் இப்பகுதிக்கு உரை தருகின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அகரஒலி எல்லா எழுத்துக்கும் முதலாகும்', 'எழுத்துகள் எல்லாம் 'அ' என்னும் எழுத்தை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்னும் ஒலி வடிவை முதலாக உடையன', 'எழுத்துக்கள் எல்லாம் அகர ஒலியை முதன்மையாகக் கொண்டவை' என்ற பொருளில் உரை தந்தனர்

எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதலாக உடையன என்பது இப்பகுதியின் பொருள்.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 ஞா. தேவநேயப் பாவாணர்

எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.

பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக்
குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்."


என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று.

 

அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

[அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206)

மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989).

'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் -
செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான்
தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன.

ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம்
குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.]

 
  


__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 

திருக்குறள்
(மூலமும் உரையும்)
அறத்துப் பால்
பாயிரவியல்

அதிகாரம் 1. முதற்பகவன் வழுத்து

அஃதாவது, ஆசிரியன் தான் இயற்றும் நூல் இடையூறின்றி இனிது முடிதற்பொருட்டும், தன் நூலிற்கு வேண்டிய தெள்ளிய அறிவை அறிவிற்குப் பிறப்பிடமாகிய இறைவனிடத்தினின்று பெறற்பொருட்டும், இறைவனருள் உலக நடப்பிற்கு இன்றியமையாத முதற்கரணமாதலின் அதைத் தேடுதற்கு எல்லா மாந்தரும் எவ்வினையையும் இறைவனைத் தொழுதே தொடங்கல் வேண்டும் என்னும் நெறிமுறையை உலகிற்கு உணர்த்தற் பொருட்டும், இறைவனை வழுத்துதல். வழுத்துதல் - போற்றுதல். துதித்தல் என்பது வடசொல்.

சிறுதெய்வ வணக்கம், பெருந்தேவ வணக்கம், கடவுள் வணக்கம் என முறையே ஒன்றினொன்றுயர்ந்த மூவகை வணக்கங்களுள், இது கடவுள் வணக்கம். கடவுள் என்னும் சொல் இம் முதலதிகாரப் பத்துக் குறள்களுள் ஒன்றிலேனும் வாராமையானும் , முதற்குறளில் ஆதிபகவன் என்னும் பெயரே குறிக்கப் பெற்றிருத்தலானும், கடவுள் வாழ்த்து இங்கு முதற்பகவன் வழுத்து எனப் பெற்றது.

வாழ்த்து என்னும் சொல் மக்களை வாழ்வித்தலும் இறைவனைப் போற்றுதலும் ஆகிய இருபொருள் தந்து மயங்கற்கிடனாக நிற்றலால், வழுத்து என்னும் சொல்லை அதனின்று திரித்தனர் முன்னை யறிஞர்.

அதிகரித்தது அதிகாரம். இது இலக்கண நூல்களிற் பெரும் பகுதியைக் குறிக்குமேனும், இங்கு உட்சிறுபகுதியைக் குறிக்குமாறு ஆளப்பட்டது.

 

l2100tn1.gif
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.

 

எழுத்து எல்லாம் அகர முதல - நெடுங்கணக்கில் (அல்லது குறுங்கணக்கில்) உள்ள எழுத்துக்களெல்லாம் அகரத்தை முதலாக வுடையன; உலகு ஆதிபகவன் முதற்று - அது போல உலகம் முதற்பகவனை முதலாகவுடையது.

இது உவமத்தையும் பொருளையும் இணைக்கும் உவமையுருபின்மையால் முதன்மை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குரிய அங்காப்பின்றியும் மகரமெய் ஒலிக்கப் பெறுதலால் 'நெடுங்கணக்கிலுள்ள எழுத்துக்களெல்லாம்' என்று உரைக்கப்பட்டது. பெரும்பான்மை பற்றியென்க.

பகவன் என்பது பகுத்துக்காப்பவன் அல்லது எல்லாவுயிர்கட்கும் படியளப்பவன் (Dispenser) என்று பொருள்படும் தென் சொல். பகு - பகவு - பகவன். பகு என்னும் வினைமுதல் வடமொழியில் பஜ் (bhaj) என்று திரியும். ஒ. நோ; புகு - புஜ் (bhuj), உகு - யுஜ்.

பகவன் என்னும் சொல் முதற்காலத்திற் கடவுளையே குறித்தது. ஆயின், பிற்காலத்தார் அதைப் பிரமன் விட்டுணு உருத்திரன் என்னும் ஆரிய மத முத்திருமேனியர்க்கும் அருகன் புத்தன் என்னும் பிற மதத் தலைவர்க்கும் வழங்கிவிட்டமையால், கடவுளைக்
குறிக்க முதல் என்னும் அடை கொடுக்க வேண்டியதாயிற்று. கடவுள் என்னும் சொல்லும் இங்ஙனமே இழிபடைந்துவிட்டமையால், முதற்கடவுள் என்றும் முழுமுதற்கடவுள் என்றும் அடைகொடுத்துச் சொல்லும் வழக்கை நோக்குக. பகம் (ஆறு) என்னுஞ் சொல்லை மூலமாகக் கொண்டு, பகவன் என்பதற்குச் செல்வம், மறம், புகழ், திரு, ஓதி (ஞானம்), அவாவின்மை என்னும் அறுகுணங்களையுடையவன் என்று பொருள் கூறுவது பொருந்தாது.

இறைவன் கடவுள் தேவன் என்னும் பிற சொற்கள் இருக்கவும் பகவன் என்னுஞ் சொல்லை யாண்டது, அகரம் என்னும் சொற்கு எதுகையாயிருத்தல் நோக்கியே.

ஆதி என்பது வடசொல்; அதாவது வடநாட்டுச்சொல். இதன் விளக்கத்தை என் 'வடமொழி வரலாறு' என்னும் நூலுட் காண்க.

ஆதிபகவன் என்னுந் தொடர்ச்சொல் தமிழியல்பிற் கேற்ப ஆதிப்பகவன் என்று வலிமிக்கும் இருக்கலாம்.

ஏகாரம் தேற்றம்; ஆதலால் இன்றியமையாததே. இவ்வேகாரத்தை ஈற்றசையாகக் கொண்டு,

"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்."


என்னும் இடைக்காடர் பாராட்டு எங்ஙனம் பொருந்தும் என்று புலவர் ஒருவர் வினவ, அதற்கு இராமலிங்க அடிகள் "முதல் தே" எனப் பிரித்தாற் குற்றமென்ன? என்று எதிர் வினவியதாகச் சொல்லப்படுகின்றது. ஏகாரம் ஈற்றசையுமன்று; அடிகள் விடை மிகைப்படக்கூறலாகவும் உவமச் சொல்லிய (வாக்கிய) அமைப்பொடு ஒவ்வாததாகவும் இருத்தலாற் பொருந்துவது மன்று.

 

அகரம் எல்லா எழுத்துக்கட்கும் முதலாகவும், ஏனையுயிரெழுத்துக்களோடு நுண்ணிதாகக் கலந்தும், எல்லா மெய்யெழுத்துக்களையும் இயக்கியும், நிற்றல் போல்; இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராகியும் உயிரற்ற பொருள்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன் என்னும் உண்மை, இம்முதற்குறளால் உணர்த்தப் பெற்றது.

உலகம் பலவாதலின், உலகு என்பதைப் பால்பகா அஃறிணைப் பெயராகவும் முதற்று என்பதை வகுப்பொருமைக் குறிப்புவினை முற்றாகவுங் கொள்ளின், உவமத்தின் பன்மை பொருளிற்கும் ஏற்கும்.

[அருவிலிருந்து உருவாக ஆபவனே ஆதி என்னும் இறைவன்.அவனே ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் ஆதலினால் பகவன் எனப்படுவான்.அருவான இறைநிலையிலிருந்து உருவாகத் தானே ஆதலையுடையவன் ஆதி எனவும் அமையும் ஆதியானவனே பலவாகப் பகுபடும் நிலையில் பகவன் எனப்படுவான். எனவே, ஆதியும் பகவனுமான இறைவனிடத்திலிருந்து உலகங்கள் தோன்றுவன எனலே பொருத்தம்.(மொ.அ.துரை அரங்கனார்-'அன்பு நெறியே தமிழர் நெறி, பக்கம் 205,206)

மேற்கண்ட விளக்கம் பொருந்துவதே என்பர் பெரும்புலவர் பேராசிரியர் முனைவர் இரா.சாரங்கபாணி (திருக்குறள் உரைவேற்றுமை - பக்கம்5 - அண்ணாமலைப் பதிப்பு 1989).

'ஆதல்' என்ற தொழி்ற்பெயரடியாகப் பிறந்ததே ஆதி என்ற தமிழ்ச்சொல். செய்தல் -
செய்தி; உய்தல்-உய்தி. தோற்றுவிப்பாரின்றித் தானே தோன்றிய இறைவனைத் 'தான்
தோன்றி' (சுயம்பு) என்பர்.ஆதி-ஆதன்-ஆதப்பன் என்ற பெயர்கள் செட்டிநாட்டில் பெருவழக்கில் உள்ளன.

ஆதி என்பது முதல், மூலம், தொடக்கம், அடிப்படை, எனவும், முதல்வன், முதலி, முன்னவன், மூலவன் எனவும் பொருள்படும் தமிழ்ச் சொல்லே. இச்சொல் 543-ஆம்
குறளிலும் ஆளப்பட்டிருத்தல் காண்க.அகராதி (Dictionary) என்பதும் தமிழ்ச்சொல்லே.

பகவன் என்பதற்கு,மொ.அ.து.உரைத்தாங்கு ஆண் பெண் என்றற் றொடக்கத்துப் பலவாகப் பகவுபடுபவன் என்றோ, தொடக்கத்தில் ஒன்றாக நின்று, காலப்போக்கில் (பல் சமயமாகிப்) பல பெயரில் பகுபட்டவன் என்றோ கொள்ளலாம்: பதிப்பாசிரியர்.]



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 #திருக்குறள்_உணர்த்தும்_சிவபெருமான்:

பதிவர்- #சந்த்ரு_ராஜமூர்த்தி

ஸ்ருதியாகிய வேதம் மற்றும் ஸ்ம்ருதிகளின் சாரத்தையே திருக்குறளின் வடிவில் திருவள்ளுவதேவ நாயனார் நமக்கு அருளினார் என்ற பேருண்மையை இப் பதிவின் மூலம் காணலாம்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. அதுபோல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது.

‘அ’கரம் என்ற அக்ஷரம் சிவத்தை குறிக்கும் என்கிறது சிவ புராணத்தின் கைலாச சம்ஹிதை.
சிவபெருமானே, "யாமே ஆதியாகி விளங்கும் பகவான்" என்று சிவ கீதையில் கூறுகிறார் :

ஆர்யோঽஹம் ப⁴க³வாநீஶஸ்தேஜோঽஹம் சாதி³ரப்யஹம் - 6 . 16

நானே பகவான். நானே ஈஸ்வரன்; ஜ்யோதிவடிவானவன். நானே ஆதியானவன்.

ஸர்வபா⁴வாந்நிரீக்ஷேঽஹமாத்மஜ்ஞாநம் நிரீக்ஷயே ।
யோக³ம் ச க³மயே தஸ்மாத்³ப⁴க³வாந்மஹதோ மத: ॥

படைப்பு முதலான அனைத்தையும் நான் பார்த்துக்கொள்வதாலும், ஆத்மஞானத்தை அடையச் செய்வதாலும், யோகசித்தியை அடைய செய்வதாலும் மஹான்கள் என்னை “பகவான்” என்கிறார்கள்.

சிவபெருமான் சிவகீதையில் திருவாய்மலர்ந்தருளிய இந்த வாக்கியங்களை தான் திருவள்ளுவ நாயனார் நமக்கு “அகர முதல” என்று துவங்கும் குறட்பாவின் வடிவில் அருளினார்.

யஜுர் வேதமும் பரமசிவனையே பகவான் என்கிறது:

ஸர்வாநந ஶிரோக்³ரீவ: ஸர்வபூ⁴தகு³ஹாஶய: ।
ஸர்வவ்யாபீ ஸ ப⁴க³வாம்ஸ்தஸ்மாத் ஸர்வக³த: ஶிவ: ॥ 3. 11॥

- ஸ்வேதாஸ்வதரோபநிஷத்

ஸ்ரீமத் காமிகாகமம் #பரமேஸ்வரனை #பகவன்
என்கிறது:

பகவன் தேவதேவேஸ பஸுபாஸ விமோசக: |
ஸ்ருஷ்டி ஸ்திதி திரோபாவ லயானுக்ரஹ காரக ||

தேவர்களின் இறைவனும் உயிர்களைப் பாசத்திலிருந்து விடுவிப்பவரும்; படைத்தல் , காத்தல், மறைத்தல், அழித்தல் மற்றும் அருளால் என்ற ஐந்தொழிலை இயற்றும் #பகவன்

இம்முதற் குறளைக் கருத்தில் கொண்டே மெய்கண்ட தேவர் “அவன் அவள் அது..” எனத்
தொடங்கும் சிவஞானபோத முதல் நூற்பாவை
“அந்தம் ஆதி என்மனார் புலவர்,” என முடித்தார்.
தோன்றி, நின்று, ஒடுங்குவதாகிய உலகை முற்றாக ஒடுக்குபவன் யாரோ அவனே உலகைப் படைக்கும் ஆதியாகவும் இருப்பான் என்ற சித்தாந்தக் கருத்தின் ஊற்றுக்கால் இந்தக் குறளில் உள்ளது. உமாபதி சிவாச்சாரியாரும் திருவருட்பயனில் “அகர உயிர்போல் அறிவாகி..”
என்று இறை இலக்கணம் கூறும்போது வள்ளுவரின் உவமையை அப்படியே எடுத்தாள்கிறார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை இடைவிடாமல் நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வர்.

இந்த குறள் கீழ்கண்ட யஜுர்வேத ஸ்வேதாஸ்வதரோபநிஷத் வாக்கியங்களின் சாரத்தை நமக்கு தருகிறது:

ஸர்வாநந ஶிரோக்³ரீவ: ஸர்வபூ⁴தகு³ஹாஶய: ।
ஸர்வவ்யாபீ ஸ ப⁴க³வாம்ஸ்தஸ்மாத் ஸர்வக³த: ஶிவ: ॥ 3. 11॥

அனைத்து உயிர்களின் முகங்களிலும், சிரங்களிலும், கண்டங்களிலும் திகழ்பவரும்,அனைத்து உயிர்களின் ஹ்ருதயத்தில் வீற்றிருப்பவரும், சர்வ வ்யாபியும் பகவானுமாகிய சிவன்.

ஏஷ தே³வோ விஶ்வகர்மா மஹாத்மா
ஸதா³ ஜநாநாம் ஹ்ருʼத³யே ஸந்நிவிஷ்ட: ।
ஹ்ருʼதா³ மநீஷா மநஸாபி⁴க்ல்ருʼப்தோ ய ஏதத்³ விது³ரம்ருʼதாஸ்தே
ப⁴வந்தி ॥ 17॥

அனைத்தையும் படைப்பவனும், மஹாத்மாவும், உயிர்களின் இதயத்தில் விற்றிருப்பவனுமாகிய அந்த தேவனை அறிந்தவர்கள் அழிவற்று விளங்குவார்கள்.

⭐️ வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

ஒரு பொருளையும் விழைதலும் வெறுத்தலும் இல்லாதவன் அடியைச் சேர்ந்தார்க்கு; எக்காலத்தும் பிறவித் துன்பங்கள் உளவாகா.

பரமேஸ்வரன் கூறியது:

க்ருதக்ருதஸ்ய த்ருப்தஸ்ய மம கிம் க்ரியதே நரை: |
பஹிர்வாப்யன்தரே வா’ பி மயா பாவோ ஹி க்ருஹ்யதே ||

என்றுமே பூரண நிறைவுடையவனும் முழுமையடைந்த செயல்களுடையவனுமான எனக்கு மனிதர்களால் எதைத் தர முடியும்? இருப்பினும் அவர்கள் அகத்திலும் புறத்திலும் பக்தியோடு எதை அளித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்.

- சிவ மஹாபுராணம்

⭐️இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

“இருள்” என்ற சொல் ஆணவ மலத்தையும் “இருவினை” என்பது பாப-புண்யம் என்ற இருவிதமான கர்மபலன்களையும் குறிக்கும்.
உமா ஸஹாயரும் ,பிரபுவும், முக்கண்ணரும், நீலகண்டரும், சாந்தமானவரும்,சிருஷ்டியின் தோற்றஸ்தானமாக விளங்கும் பரமேஸ்வரனை த்யானிப்பவர்கள் இருளாகிய ஆணவத்தை கடப்பார்கள் என்கிறது ஸ்ருதி:

உமா-ஸஹாயம் பரமேச்வரம்
ப்ரபும் த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரசாந்தம் |
த்யாத்வா முனிர்- கச்சதி பூதயோனிம் ஸமஸ்த
ஸாக்ஷிம் தமஸ: பரஸ்தாத் ||

- 1.7 கைவல்யோபநிஷத்,க்ருஷ்ண யஜுர் வேதம

⭐️ பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

ஐம்பொறி வாயிலாகப் பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

எல்லாப்பொறிகளின் குணங்களை உடையவன் போன்ற தோற்றமளித்தாலும், உயிர்களின் பொறி இயக்கங்களை இயற்றுபவனாக விளங்கினாலும் சிவபெருமான் பொறிகள் அற்றவன் ( அவைகள் இல்லாமலேயே அனைத்தையும் நுகரும் ஆற்றல் உடையவன்) என்கின்றது வேதம் :

ஸர்வேந்த்³ரியகு³ணாபா⁴ஸம் ஸர்வேந்த்³ரியவிவர்ஜிதம் ।
ஸர்வஸ்ய ப்ரபு⁴மீஶாநம் ஸர்வஸ்ய ஶரணம் ஸுஹ்ருʼத் ॥ 3.17॥ ஸ்வேதாஸ்வதரோபநிஷத்

பொறிபுலன்களின் வாயிலாகத் தோன்றும் இச்சையை தூண்டக்கூடியதும், மன்மதனால் இறைவன் மேல் விடுக்கப்பட்டதுமான ஐந்து கணைகளை அவித்தவன் (அழித்தவன்) என்றும் “பொறிவாயில் ஐந்தவித்தான்” என்பதற்குப் பொருள்கொள்ளலாம். மன்மதனை வென்ற பரமேஸ்வரனையே இதில் வள்ளுவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

யஜுர் வேதம் சிவபெருமானை தனக்குவமை இல்லாதவன் என்று போற்றுகிறது - ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி ( 32 .3. சுக்ல யஜுர் வேதம்; 4.19 ஸ்வேதாஸ்வதரோபநிஷத் )
மேலும், அதே யஜுர் வேதத்தின்
ஸ்வேதாஸ்வதரோபநிஷத் இந்த குறளின் கருத்தை அப்படியே முன்வைக்கிறது:

யதா³ சர்மவதா³காஶம் வேஷ்டயிஷ்யந்தி மாநவா: ।
ததா³ சிவமவிஜ்ஞாய து:³க²ஸ்யாந்தோ ப⁴விஷ்யதி ॥ 20॥

எவ்வாறு மனிதனால் ஆகாசத்தை ஒரு பாய்போல சுருட்டுவது நடவாத காரியமோ, அவ்வாறே சிவத்தை அறியாது துக்கத்திற்கு முடிவு தோன்றாது.

இந்த ஸ்ருதிவாக்யத்தின் சாரத்தையே வள்ளுவப்பெருந்தகை மேற்கண்ட குறளில் தந்துள்ளார்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீந்தல் அரிது

ஸாம வேதம் சிவபெருமானை “அந்தணன்”என்று
போற்றுகிறது:
பகவதோ விருபாக்ஷோ’ ஸி தந்தாஞ்சி.......த்வம் தேவேஷு ப்ராஹ்மணோ’ ஸி
முக்கண்களுடைய பகவானே...தேவர்களில் தாமே அந்தணர் ஆவீர்.
ஆதலால் தான் காழிப்பிள்ளையார் ஈசனை அந்தணர் என்று திருக்கொடிமாடச்செங்குன்ரூர் பதிகத்தில் பாடுகிறார் - கொடிமாடச்செங்குன்ரூர் நின்ற அந்தணனை தொழுவாரவல மறுப்பரே- 1.107.1

அறக்கடவுளான தர்மதேவதை தவம் செய்து பரமசிவனுக்கு வ்ருஷப வாஹனமாக இருக்கும் பேற்றை பெற்றது என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அந்த அறவிடையை தனக்கு ஆழியுடைய (ஆழி - சக்கரம்) ஊர்தி போல சிவபெருமான் கொண்டதால் வள்ளுவப்பெருமான் அற ஆழி அந்தணன் என்று ஈசனைக் குறிப்பிடுகிறார். அல்லது அறக்கடலாக உள்ள ஈசன் என்றும் பொருள்படும்.

கோளில் பொறியிற் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை

கேட்காத செவி பார்க்காத கண் முதலியனபோல் எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

வைஷ்ணவரான பரிமேலழகர் இந்த குறளுக்கு செய்த உரையில், இதில் கூறப்படும் இறைவனின் எண்குணங்களை விபரிக்கும்போது சிவாகமத்தில் சொல்லப்பட்ட எண்குணங்களை மேற்கோள்காட்டியுள்ளார். பரமேஸ்வரனின் அந்த எட்டு குணங்கள் யாவை என்பதை ஸர்வஜ்ஞானோத்தர ஆகமம் பட்டியலிடுகிறது:

ஸர்வஜ்ஞதா த்ருப்திரநாதிபோத: ஸ்வதந்த்ரதா நித்யமலுப்த ஸக்தி:| அனந்த சக்திஸ்சநிராமயாத்மா விஸுத்ததேஹ: ஸ ஸிவத்வமேதி||

ஸர்வஜ்ஞதா ( முற்றறிவு ), த்ருப்தி ( வரம்பிலின்பமுடைமை), அநாதிபோதம் (இயல்பாகவே பாசங்களில் நீங்குதலாகிய அநாதிமுத்ததன்மை), ஸ்வதந்த்ரதா(தன்வயத்தன் ஆதல்), அலுப்தசக்தி (பேரருள் உடைமை), அனந்தசக்தி (முடிவு இல் ஆற்றல் உடைமை), நிராமயாத்மா( இயற்கை உணர்வினனாதல்), விஸுத்த தேஹ (தூய உடம்பினன் ஆதல்) என்பதே ஈசனின் அந்த எண் குணங்கள்.

இந்த எண்குணங்களை காமிகாகமம் வேறு விதமாகக் கூரும்:

ஸர்வஜ்ஞத்வம் விபுத்வம் ச ஜகத்கர்த்த்ருத்வம் ஏவ ச |
நிர்மலத்வம் ச நித்யத்வம் ஸர்வானுக்ரஹகம் ததா ||
ஐஸ்வர்யம் ச ப்ரபுத்வம் ச சிவத்வாஷ்டகுணாஸ் ததா |

முற்றறிவு, ஸர்வவ்யாபகத்வம், ஜகத்கர்த்தாவாக இருத்தல், இயல்பாகவே மலசம்பந்தம் இல்லாமல் இருத்தல், என்றும் நித்தியமாக இருத்தல், அனைவருக்கும் அருளும் தன்மை, ஐஸ்வர்யம் மற்றும் ப்ரபுத்வம் என்பவையே சிவனின் எண் குணங்கள்.

⭐️ பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்

இறைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும்; மற்றவர் கடக்க முடியாது.

யஜுர் வேதத்தின் ஸ்ரீ ருத்ரம் சிவனை “தார” என்று துதிக்கிறது-நமஸ்தாராய.சாயனர் இந்த நாமத்திற்கு பிரணவத்தின் கருப்பொருளாக ,ஸ்வரூபமாக விளங்குபவன் என்று பாஷ்யமிட்டுள்ளார்(ப்ரணவப்ரதிபாத்ய:).இதற்கு ஜீவன்களை சம்சாரக்கடலை கடக்க வைப்பவன் என்றும் பொருளுள்ளது.பரமேஸ்வரனே சம்சாரக்கடலை கடக்க வைக்கும் ப்ரணவ மந்த்ரத்தின் ஸ்வரூபம் என்பதே இந்த நாமத்தின் தாத்பர்யம். சிவனே ப்ரணவம்; ப்ரணவமே சிவன் இரண்டிற்கும் எந்த பேதமும் கிடையாது என்கிறது சிவமஹா புராணம்:

சிவோ வா ப்ரணவோ ஹ்யேஷ:ப்ரணவோ வா சிவ:ஸ்ம்ருத: - கைலாச சம்ஹிதை

மேலும்,ருத்ரம்,

நம ப்ரதரணாய சோத்தரணாய ச

பாபங்களிலிருந்து கறையேற்றும் மந்த்ர ஜபத்தின் வடிவினரும் ஸம்ஸாரத்திலிருந்து கரையேற்றும் தத்வஞானத்தின் ரூபத்தில் திகழ்பவருமான உமக்கு நமஸ்காரம் என்று ஈசனை பணிகிறது.
(ப்ரக்ருஷ்டேன மந்த்ர ஜபாதி ரூபேண பாபதரண சேது: ப்ரதரண:
தத்வஞான ரூபேண க்ருத்ஸ்ன ஸம்ஸாரோத்தரணஹேது:ருத்தரண:)

இதிலிருந்து திருவள்ளுவ நாயனார் இறைவனாக குறிப்பிட்டது சிவபெருமானையே என்பதும், வேதம் ,சிவாகமங்கள் மற்றும் ஸ்ம்ருதிகளின் சாரத்தையே திருக்குறளின் வடிவத்தில் அருளினார் என்பதும் தெள்ள தெளிவாகிறது......!

நன்றி Chandru Rajamoorthy



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 யதா³ சர்மவதா³காஶம் வேஷ்டயிஷ்யந்தி மாநவா: ।

ததா³ சிவமவிஜ்ஞாய து:³க²ஸ்யாந்தோ ப⁴விஷ்யதி ॥ 20॥

மேல 2 3 4 இருக்கே எதுக்கு 

 

 

 அது சமஸ்கிருதத்தில் மூன்றாவது வகை இரண்டாவது வகை என்று அர்த்தம்.

அதாவது முன்று விதமான த வருமாம்.


அதற்கு மேல் இருக்கிறதா என்பதை அறியேன்‌



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 https://www.facebook.com/vaidika.saivan/posts/163718361358164

வள்ளுவம் காட்டும் வைதீகம்
திருக்குறள் மற்றும் மனு ஸ்ம்ருதி வலியுறுத்தும் புலால் மறுப்பு!
-சந்த்ரு ராஜமூர்த்தி

“திருவள்ளுவர் புலால் உண்பதை கண்டித்து ஒரு தனி அதிகாரமே எழுதியுள்ளார்.ஆனால் உங்களுடைய வைதீக மதமோ விலங்குகளை
வதைத்து வேள்வி வளர்ப்பதை வலியுறுத்துகிறது! மேலும் வள்ளுவர்,

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

மந்திரம் சொல்லித் தேவர்களுக்கு இடும் உணவாகிய அவிகளைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள் செய்தலை விட ஒன்றன் உயிரைக்கொன்று உடம்பைத் தின்னாதிருத்தல் நல்லது

என்று வேள்வி புரிதலை கண்டித்திருப்பதால் அவர்
வைதீக மதத்தவர் அல்லர்! வேதத்திற்கும் வைதீகத்திற்கும் எதிரானவர்!” என்று சிலர் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு ஓர் அதிர்ச்சியூட்டும்

செய்தியை கூறப்போகின்றேன்.

வைதீக மதத்தின் மிக முக்கியமான ஸ்ம்ருதி / தர்மசாஸ்த்ர நூலாக விளங்கும் மனுஸ்ம்ருதி
வள்ளுவர் கூறிய அதே பாணியில் புலால் உண்பதை கண்டிக்கிறது!

வர்ஷே வர்ஷேঽஶ்வமேதே⁴ந யோ யஜேத ஶதம் ஸமா: ।
மாம்ஸாநி ச ந கா²தே³த்³ யஸ்தயோ: புண்யப²லம் ஸமம் ॥

ஒருவன் நூறாண்டுகாலத்திற்கு வருடத்திற்கு ஒரு அஸ்வமேத யாகம் புரிவதால் எந்த அளவு புண்ணியத்தை பெறுவானோ, அதே அளவு புண்ணியத்தை ஒருவன் புலால் உண்ணாமலிருப்பதால் பெறுகின்றான்.

- 5. 53. மனுஸ்ம்ருதி

அதாவது, மனு ஸ்ம்ருதி வேள்விகளை செய்வதை விட புலால் உண்ணாமலிருப்பது மேல் என்று கூறுகிறது. ஏனெனில் சிரமப்பட்டு, பெரும் பொருளை செலவழித்து, நியம நிஷ்டையோடு நூறாண்டுகாலம் நூறு அஸ்வமேதம் செய்யும் பலனை சுலபமாக புலால் மறுப்பதால் பெறலாம் என்கின்றதே. வைதீக சாஸ்த்ர நூலான மனு ஸ்ம்ருதி கூறும் இதே கருத்தை தானே வள்ளுவரும் மேற்கண்ட குறளில் எடுத்துரைக்கிறார்?அவ்வாறு இருப்ப, எவ்வாறு வள்ளுவர் வைதீக மார்க்கத்தை மறுத்தவர் ஆவார்?

அது மட்டும் அல்ல, புலால் மறுத்தல் பற்றி வள்ளுவர் கூறிய பல விஷயங்களுக்கும் மனுஸ்ம்ருதியில் கூறப்பட்ட பல விஷயங்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. அவற்றை பார்ப்போம்.

ஸ்வமாம்ஸம் பரமாம்ஸேந யோ வர்த⁴யிதுமிச்ச²தி ।
அநப்⁴யர்ச்ய பித்ரூʼந் தே³வாம்ஸ்ததோঽந்யோ நாஸ்த்யபுண்யக்ருʼத் ॥

பித்ரு மற்றும் தேவகார்யங்கள் தவிர்த்து, எவனொருவன் தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காக மற்றோர் உயிரின் உடம்பை புசிக்கிறானோ,
அவனை காட்டிலும் பெரிய பாபி இருக்க முடியாது.

- 5.52. மனுஸ்ம்ருதி

இதையே வள்ளுவர்,

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள். 251

தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருளை உடையவனாக இருக்க முடியும்?

என்றுரைக்கிறார்.

நாக்ருʼத்வா ப்ராணிநாம் ஹிம்ஸாம் மாம்ஸமுத்பத்³யதே க்வ சித் ।
ந ச ப்ராணிவத:⁴ ஸ்வர்க்³யஸ்தஸ்மாந் மாம்ஸம் விவர்ஜயேத் ॥

பிராணிகளை ஹிம்சிக்காமல் மாம்சத்தை பெறமுடியாது; பிராணிகளை இவ்வாறு வதைப்பதால் ஸ்வர்கத்திற்கும் போக முடியாது.ஆதலால், புலால் உண்பதை தவிர்க்கவும்.

- 5.50. மனுஸ்ம்ருதி

வள்ளுவ பெருமானோ,

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது

என்றுரைக்கிறார்.

ந ப⁴க்ஷயதி யோ மாம்ஸம் விதி⁴ம் ஹித்வா பிஶாசவத் ।
ந லோகே ப்ரியதாம் யாதி வ்யாதி⁴பி⁴ஶ்ச ந பீட்³யதே ॥

புலால் உண்ணும் பிசாசை போல வாழாமல் புலாலை தவிற்பவன் இந்த உலகத்தால் நேசிக்கப்படுவான்; அவனை வியாதிகளும் பீடிக்காது.

வள்ளுவர் வாக்கில்:

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். 260

ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.

 

https://www.facebook.com/vaidika.saivan/posts/163837171346283



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

மரணங்கள் பலவிதம் !

எச்சரிக்கை : முகநூலில் – “அசைவம் ஹிந்துக்களுக்கு விலக்கப்பட்ட உணவு ” என்ற விவாதத்தில் அறிஞர்கள் மற்றும் சம்ஸ்க்ருத மொழியின் சிங்கங்கள் மோதுகிறார்கள் . தூரத்தில் நின்று வேடிக்கைப் பார்த்த என் எண்ணத்தில் உதித்த சில கருத்துக்கள் .

சைவ சித்தாந்த சமயத்தின்படி , உயிர்களின் வினைகளுக்கு ஏற்ப , உயிர்கள் பிறந்து பின் இறக்கின்றன. இந்த இறப்பு மூன்று விதங்களில் வருகினறன . அவை ஆதியாத்மிகம் , ஆதிபௌதிகம் , ஆதிதைவீகம் என வழங்கப்படும் .

1.ஆதியாத்மிகம்

ஆதியாத்மிகம் – பிற உயிர்களால் ( ஆத்மாக்கள் – விலங்கு , புழு , பூச்சி , மனிதர்கள் , கண்ணுக்கு தெரியாத கிருமிகள் ) , கொலைகள் , தற்கொலைகள் ( தன்னுடைய உயிரே மரணத்துக்கு காரணம் ஆதல் ) உயிருக்கு வரும் மரணம் .

2 . ஆதிபௌதிகம்

ஆதிபௌதிகம் – புயல் , மழை , தீ முதலிய பஞ்ச பூதங்கள் , விபத்துக்கள் , எரிமலை , நிலநடுக்கம் , போன்ற இயற்கை பேரழிவுகளால் வரும் , உயிருக்கு வரும் மரணம் .

மேலே குறிப்டிப்படபட்டுள்ள இரண்டு விதமான மரணங்கள் , உயிர்கள் தங்களது ஆன்ம யாத்திரையில் இயல்பாக முன்னேறி மரணத்தை தழுவாமல் , தடை செய்யபட்ட மரணங்கள் . எனவே இவ்வகை மரணம் அடைந்த உயிர்கள் சிலகாலங்கள் அசுத்த ஆவியாக அலைப்புண்டு , தங்களின் இயற்கையான முடிவை அடைந்து , தங்கள் பெற்ற புண்ணிய , பாவங்களுக்கு ஏற்ப சொர்க்கம் , நரகம் சென்று பின்னர் அவை கழிந்து , மீண்டும் முக்தி அடையும் வரை பிறவிகள் எடுக்கும் . இந்த வகையில் தடைபட்ட மரணங்கள் “ அகால மரணம் ” என்று குறிப்பிடுவர் . எனவேதான் , “ அகால மரணம் ” அடைந்தவர்கள் உயிர்கள் நற்கதி பெற , இராமேஸ்வரம் போன்ற புண்ணிய சிவ பதிகளில் பலவிதமான பரிகாரங்களை , அகால மரணம் அடைந்தவ்ரக்ளின் உறவினர்கள் செய்வதைப் பார்க்கலாம் .

 அசைவ உணவா சைவ உணவா – எது அனுமதிக்கப்பட்டது ?

இந்த இடத்தில் வேறு ஒரு விஷயத்தைப் பார்போம் . இந்த நாட்டில் பல பேர் அசைவ உணவு உண்கிறார்கள் மேலும் சைவ உணவு உண்பவர்களை விட அசைவம் உண்பவர்களே அதிகம் பேர் உள்ளனர்.

ஓர் ஆடு என்பது ஓர் உயிர் , எனவே அதனைக் கொன்று அருந்துபவர்கள் , கொலைச் செயலைப் புரிகிறார்கள் . இதில் ஆடு வளர்ப்போர் , ஆட்டை அறுப்போர் , வெட்டிய ஆட்டை விற்பனை செய்வோர் , அதனை சமைத்து உண்போர் , ஆகிய அனைவரும் “ஆதியாத்மிகம்” என்ற நிலையில் அவரர் பாவங்களை செய்கிறார்கள் . ஓர் ஆட்டின் ஆன்ம முன்னேற்றத்தை தடை செய்து அதனை கொலை செய்து அந்த ஆட்டின் இயற்கையான மரணத்தை அடைய விடாமல் , அகால மரணத்தை ஏற்படுத்தி , சில காலம் அதன் ஆன்மா அசுத்த ஆவியாக அலைய விடுகிறார்கள் . இந்த ஆன்மாவின் யாத்திரையை பின்வரும் திருப்பாடல் அறிவுறுத்துகிறது .

திருச்சிற்றம்பலம்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

திருச்சிற்றம்பலம்

திருவாசகம் – சிவபுராணம்

பெரியபுராணத்தில் உள்ள சில நாயன்மார்களின் அருள் வரலாற்றினை வாசிக்கிறப் பொழுது அவர்கள் வாழ்வியல் சூழல் காரணமாக ( ஸ்ரீ சிறுத்தொண்ட நாயனார் , ஸ்ரீ அதிபத்தநாயனார் ) அசைவ உணவு உண்டு இருப்பார்கள் என்று எண்ண இடம் உள்ளது , மேலும் ஸ்ரீ கண்ணப்ப நாயனார் வரலாற்றில் இது தெளிவாக உள்ளது . இந்த உதாரணங்களை வைத்து நாம் அசைவம் உண்பதற்கு ஓர் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது , ஏன்னெனில் நாயன்மார்கள் “ பெருதற்க்கரிய பேறு பெற்று பெருதற்க்கரிய பிரானடி பேணியவர்கள் “ , இவர்களைப் போல நாம் நம் கண்களை அரிந்து கொடுக்க துணிய மாட்டோம் அல்லவா ?

 அசைவ உணவும் – சூழலியல் பிரச்சனைகளும்

இந்த இடத்தில் சூழலியல் செயல்பாட்டாளர்கள் சொல்லுவதைப் ( Environmental Activists ) பற்றி சில விஷயங்களைக் கவனிப்போம் .

சூழலியல் மாசு அடைவதைக் கணிக்கும் அலகுகள் GHG ( Green House Gases ) மற்றும் Carbon Footprint ஆகும் . Carbon Footprint பற்றித் தெரிந்துகொள்ள இந்த இடுகையை பார்க்கலாம் :https://www.slideshare.net/sagarb…/carbon-footprint-43638651

அசைவ உணவு உண்பதானால் சுற்று சூழல்அதிகம் மாசு அடைகிறது என ஆய்வு முடிவுகளைத் தெரிந்துகொள்ள இந்த இடுகையை பார்க்கலாம் : https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4372775/

இந்தக் கலியுகத்தில் அசைவ உணவு தவிர்க்கப்பட வேண்டும் என நம் இந்து சாஸ்திரங்கள் கூறுகின்றன .

எனவே தர்மத்தின் வழி நின்று பார்த்தாலும் , அறிவியல் – சூழலியல் நோக்கிலும் பார்த்தாலும் – அசைவ உணவு விலக்கக்பட்டது என்று அறிக . .

 மரக்கறி உணவும் – கொலையும்

அசைவ உணவு – உயிர்கொலை , அதனால் தவிர்க்கப்பட வேண்டும் , ஆனால் சைவ உணவும் – மரக்கறி உணவும் – தாவர வர்க்கங்களின் கொலைகள் தானே என்ற கேள்வி எழுகிறது

உணமைதான் !

தாவரங்கள் கொண்டு உணவு சமைத்தல் , தாவர உயிர்களின் கொலைகள்தான் ., ஆனால் இரண்டு விஷயங்கள் உள்ளன

ஒன்று – எதையும் உண்ணாமல் உயிர் வாழ முடியாது

இரண்டு – தாவரங்கள் உயிர் உள்ளவைதான் , ஆனால் நமது சமயங்களின் படி , அனைத்து உயிர்களும் ஒன்றல்ல . உயிர்களில் வேறுபாடு உண்டு . ஏன் ? மனித உயிர்கள் அனைத்தும் சமம் என்றாலும் , சில இடங்களில் வேறுபாட்டினை உணருவதை தவிர்க்க இயலாது .

ஓர் உதாரணம் :

ஒரு சாலை விபத்து . ஒருவர் உயிர் இழக்கிறார் . அவர் தெருவில் அனாதையாக சுற்றித் திரியும் ஒரு மனநலம் பாதிக்கபட்ட ஆசாமி . அனைவரும் சில மணித்துளிகள் இறந்தவரை எண்ணி வருத்தம் அடைகிறார்கள் . சில மணித்துளிகள் அவ்வளவே !

வேறோர் சாலை விபத்து . இறந்தவர் , அந்த பிரதேசத்தின் மிகப் பிரபலமான ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் ( Cardio Thoracic and Vascular Surgeon ) . இறந்தவர் குறித்து அந்த ஒட்டு மொத்த சமுகமே துயரில் ஆழ்கிறது . “ அந்த அறுவை சிகிச்சை நிபுணர் , எவ்வளவு நோயாளிகளின் உயிரைக் காப்பற்றி உள்ளார் , உயிரோடு இருந்து இருந்தால் , அவர் இன்னமும் எத்தனை பேரின் மரணத்தை தள்ளிப் போட்டு இருப்பார் ? இவ்வாறு அநியாயமாக உயிர் இழந்து விட்டாரே ” என அனைவரும் வருத்தப்படுகிறார்கள் .

ஆக மனித உயிரில் இவ்வளவு வேறுபாடு இருப்பின் , விலங்குகளின் உயிருக்கும் தாவரங்களின் உயிருக்கும் வேறுபாடு உண்டு அல்லவா ?

அந்த வேறுபாடே அந்த ( தாவர ) உயிர்களின் கொலைகளின் செய்பவர்களின் பாவங்களின் வேறுபாடு .

இந்தப் பாவங்களை நாம் இறை வழிபாட்டில் மன்றாடி நாம் குறைத்துக் கொள்ளுகிறோம் .

 வீரஸ்வர்க்கம்

போர்களத்தில் தம் தாய் நாட்டைக் காக்கும் முயற்சியில் ஒரு போர் வீர் மரிக்கிறார் . இந்த மரணம் “ அகால மரணம் ” என்ற வகையில் சேராது , இறந்த பின் அவர் உயிர் விண்ணுலகத்தில் உள்ள வீரஸ்வர்க்கம் – என்ற இடம் சேரும் என நம் ஆன்றோர் நூல்கள் கூறுகின்றன . “ தன்னைக் கொல்ல வந்த ஒரு பசு மாட்டையே ஒருவன் கொல்லலாம்” என நம் அறநூலகள் சொல்கின்றன . இவ்வாறு பிறர் உயிரைக் காக்கும் முயற்சியில் ஒரு இறப்பான் என்றால் , அவன் உயிர் அசுத்தக் ஆவியாக் கழியாமல் , உடனே அவவீரசெயல் – ஸ்வரங்களில் ஒன்றான வீரஸ்வர்க்கம் புகும் .

3. ஆதிதைவீகம்

 ஆதியாத்மிகம் , ஆதிபௌதிகம் முதலியன பார்த்தோம் . இனி
ஆதிதைவீகம் – நோயினாலும் , வயோதிகதினாலும் – இயற்கை மரணம் என்று சொல்லபடும் மரணம் உயிர்களுக்கு ஏற்படுவதே ஆதிதைவீகம் எனப்படும் .இவ்வகை மரணம் ஏற்படும் உயிர்கள் , தாங்கள் செய்துள்ள புண்ணிய , பாவங்களுக்கு ஏற்ப அந்த உயிர் முக்தி பெறும்வரை , பலவிதமான ஸ்வர்க்கம் , நரகம் சென்று அனுபவித்து மீண்டும் பிறவிகள் எடுக்கும்



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

ஆதிபகவன் என்று இறைமையைப் பொருள்பட உணர்த்தி வள்ளுவர் பாடும் கடவுள் வாழ்த்துப் பா.

 

பொழிப்பு

மொழிக்கு முதன்மை அகரம்; கடவுள் உலகுக்கு முதல்.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 கலைஞர் உரை:

அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு முதன்மை.

சாலமன் பாப்பையா உரை:
எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

Translation:
A, as its first of letters, every speech maintains; The "Primal Deity" is first through all the world's domains.

Explanation:
As all letters have the letter A for their first, so the world has the eternal
God for its first.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

5%2BKrl%2BKadavul%2B01.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

5%2BKrl%2BKadavul%2B02.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

5%2BKrl%2BKadavul%2BAkara%2B-%2B02.jpg

5%2BKrl%2BKadavul%2BAkara%2B-%2B03.jpg



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 

ஆதி பகவன் முதற்றே உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிப்பெருமாள்: அவ்வண்ணமே உலகம் ஆதியாகிய பகவனைத் தனக்கு முதலாக வுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: தோன்றுகின்ற எல்லாப் பொருட்கும் காரணமாகிய உலகமும் நீர் தீ வளி ஆகாயமாகி ஒன்றோடொன்றொவ்வாத பெற்றியதாயிருப்பினும் ஆதி பரமேஸ்வரனைத் தமக்கு முதலாக உடையதாகலால் அவனை வழிபடவேண்டும் என்றவாராயிற்று. அன்றியும் உலகம் என்பதனை உயர்ந்தோர் ஆக்கி எல்லாப் பொருளினும் உயர்வு உடைத்தாகிய உயிர்கள் ஆதி பரமேஸ்வரனைத் தமக்கு முதலாக உடைய என்றும் ஆம். அஃதேல், அவன் முதலாயின வழி யாங்ஙனம் முதலாயினனாகக் கூறினாரென்று பிறிதொன்று தோற்றுதற்கு அடியாய் நிற்பதூஉம் முதலாம். பசு எவையிற்றினும் சிறப்புடைத்தாய் முன்னால் எண்ணப்படுவதூஉம் முதல் ஆண்டு உவமையாகக் கூறிய அகரம் இருபகுதியும் உடைத்தாயினும் ஏனைய எழுத்துக்களுக்கு அடியாய் நிற்றல் எல்லாராலும் அறியப்பட்டமையான் தலைமைபற்றிக் கூறினார் என்று கொள்ளப்படும்.
பரிதியார்: ஆதியான பகவன் முதலாம் உலகத்துக்கு என்றவாறு.
காலிங்கர்: மூலகாரணனாகிய இறைவன்கண்ணே நுண்பூதமும், மற்று அவற்றின்வழி விரிந்த வான் வளி தீ நீர் நிலம் என்கிற ஐம்பெரும் பூதமும், அவற்றின்வழி விரிந்த நடப்பன நிற்பனவாகிய இருவகைப் பல்லுயிர்களும், மற்றும் இவ்வுயிர்கள் வாழ்கின்ற உலகங்களனைத்தும் என்றவாறு.
பரிமேலழகர்: உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: ஆதிபகவன் என்னும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. 'உலகு' என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின், 'ஆதிபகவன் முதற்றே' என உலகின் மேல் வைத்துக் கூறினார்; கூறினாரேனும், உலகிற்கு முதல் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க. ஏகாரம் - தேற்றத்தின்கண் வந்தது. இப்பாட்டான் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

பழைய ஆசிரியர்கள் அனைவரும் உலகம் இறைவனை முதலாக உடையது என்ற கருத்திலேயே உரை பகர்கின்றனர். ஆதிபகவன் என்ற சொற்றொடரை விளக்குவதில் அவர்கள் சிறிது வேறுபடுகின்றனர். ஆதிபகவன் என்றதற்கு ஆதியாகிய பகவன் என்று மணக்குடவரும் பரிதியும், ஆதி பரமேஸ்வரன் என்று பரிப்பெருமாளும், மூலகாரணனாகிய இறைவன் என்று காலிங்கரும் ஆதிபகவன் என்று பரிமேலழகரும் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆதிபகவன் உலகுக்கெல்லாம் முதலாவான்', 'அதுபோல உலகம் ஆதி பகவனை(இறைவனை) முதலாக உடைத்து', 'அதுபோல உலகம் ஆதியாகிய பகவனை முதலாக உடையது. (ஆதிபகவன் -முற்பட்டுள்ள கடவுள்)', 'உலகம் ஆதி பகவனாகிய இறைவனையே முதன்மையாகக் கொண்டது' என்றபடி பொருள் உரைத்தனர்.

உலகம் இறைவனை முதலாக உடைத்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எழுத்துக்கள் எல்லாம் 'அ' என்ற எழுத்தை முதலாக உடையன; உலகம் இறைவனை முதலாக உடைத்து என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறவரும் கருத்து என்ன?

கடவுள் இயல்பும் கடவுளுக்கு உலகோடுடைய தொடர்பும் கூறப்படுகிறது. நூலின் முதற்பாடல் என்பதால் பலராலும் இது மிக நுணுக்கமாக ஆராயப்பட்டுள்ளது.

அகர முதல எழுத்தெல்லாம்:
எழுத்துக்கள் 'அகர'த்தை முதலில் வைத்துத் தொடங்குகின்றன. 'அகரம்' நெடுங்கணக்கின் எழுத்துக்களுக்கு அடிப்படையானது, காரணமானது, முதற்பொருளானது, முதன்மையானது என்பர். எழுத்தெல்லாம் என்றது உலக மொழிகள் எல்லாவற்றினது எழுத்துக்களிலும் என்று பொருள்படும். உலக மொழிகளில் பெரும்பான்மை 'அ' என்ற ஒலியுடன் தொடங்குவதாக உள்ளன என்று மொழியியல் வல்லுநர்கள் கூறுவர். மாறுபட்ட பண்பாடுடைய பல்வேறு நாட்டு மக்கள் பேசும் வெவ்வேறு மொழிகள் அகர ஒலியை முதலாகக் கொண்டுள்ளன என்பது வியக்கத்தக்க உண்மை. இதை வள்ளுவர் உவமப் பொருளாக்கினார். எழுத்துக்கள் எல்லாம் எனக் கொள்ளாது எழுத்துக்களுக்கு எல்லாம் அகர முதல எனின், அகர ஒலி பலவாகாமையான், அகரம் என்ற ஒருமை எழுவாய், 'முதல' என்ற பன்மைப் பயனிலை கொண்ட வழு ஆகும். பலவேறு மொழிகளிலுள்ள பல எழுத்துக்களுக்கு எல்லாம் எனக்கொள்ளினும் ஒலிஅகரம் ஒன்றே ஆதலால் அதுவும் முற்கூறிய வழுவாகும். அதனாலேயே பரிமேலழகர் 'எழுத்துக்களுக்கு எல்லாம் அகரம் முதலாம் என்பது கருத்தாகக் கொள்க.' என்றார்.

ஆதிபகவன்:

இப்பாவில் கூறப்பட்டுள்ள ஆதிபகவன் யார்?
இக்குறளில் உள்ள 'ஆதிபகவன்' என்றது தத்தம் சமயம் சார்ந்த கடவுளைக் குறிப்பது என்று அனைத்துச் சமயத்தாரும் உரிமை கொண்டாடுகின்றனர். வள்ளுவர் எந்தச் சமயத்தையும் மனதில் கொண்டு குறளைப் படைக்கவில்லை என்பது தெள்ளத் தெளிவு. ஆகவே ஆதிபகவன் என்று சொல்லப்பட்டது இப்பூமியில் பிறந்து வாழ்ந்த எந்த ஒரு சமயத்தைச் சார்ந்த மனிதரையோ அல்லது அச்சமயத்தார் நம்பும் கடவுளரையோ குறித்தது அல்ல. ஆதிபகவன் என்றது 'மூலகாரணன்' என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது;
வள்ளுவர் தம் அன்னை ஆதியையும் தந்தை பகவனையும் மனத்தில் கருதியே ஆதிபகவன் முதற்றே உலகெனக் கூறினார் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. ஆதி, பகவன் என்பது வள்ளுவரது பெற்றோரின் பெயர்கள் என நிறுவுவதற்கு எந்தவகையான ஆதாரங்களும் இல்லை. உலகப் பொதுமறை கூறவந்த வள்ளுவர் அவருடைய தாய்தந்தையரை உலகுக்கு முதல் என்று தன் நூலில் கூறியிருப்பாரா என்று சொல்லி அறிஞர்களும் ஆய்வாளர்களும் அக்கருத்தை ஒதுக்கித் தள்ளினர்.
தனக்கோர் மூலம் இன்றி எல்லா உலகும் தோன்றி நின்று இயங்குவதற்குத் தானே மூலமாய் நிற்றலால் இறைவன் ஆதி எனப்படுகிறான். பகவன் என்னும் சொல்லிற்கு நேர் பொருள் கடவுள் என்பதாகும். இந்த உலகின் தொடக்கத்துக்குக் கடவுள் காரணம். அந்த முதன்மையைக் காட்டும் நோக்கில் அவன் பெயரைச் சொன்னாலே எளிதில் விளங்கும்படி ஆதிபகவன் என்ற சொல்லால் கடவுளைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

முதற்று:

'முதற்று' என்பதும் முதல் என்பதை அடியாகக் கொண்டுவந்த சொல்லாகும். இதற்கு 'அடிப்படையானது', 'முதலானது' எனப் பொருள் கொள்வர். இங்கு முதல் என்பதன் பொருள் என்ன? நாட்டிற்கு மன்னன் தலைவன் போல தலைமையா? அல்லது குடத்துக்கு மண்போல மூலகாரணமா? அன்றி குயவன் குடம் செய்தல் போலப் படைத்தலா?
இங்கு முதன்மை தனித்து நிற்கும் ஆற்றலையும் எல்லாமாகி நிற்பதனையும் யாவற்றையும் இயக்குவதையும் குறிக்கும். குடத்தை ஆக்கும் குயவனைப் போலக் கடவுள் உலகத்து வேறாக நிற்பவரல்லர் என்பதும் பெறப்படும். முதற்று என்ற சொல் தலைமை, மூலகாரணம், படைப்பின் தொடக்கம் என அனைத்தையும் குறிக்கும்.

உலகு:

உலகு என்னும் சொல்லுக்கு இடப்பொருளும் உயிர்கள் என்னும் பொருளும் உண்டு. சிலர் இப்பாடலில் கூறப்பட்டது உயிர்ப்பொருளே; அதுவே கடவுளை உணர்ந்து அறியத்தக்கது எனக் கூறுவர். இவ்விருவகை உலகும் கடவுள் உண்டாக்கியவை. எனவே இக்குறள் குறிப்பது உயிருள்ளதும், உயிரில்லாததுமான இருவகைப்பட்ட உலகையேயாகும்.
தொல்காப்பிய உரையாசிரியர் நச்சினார்க்கினியர் 'இறைவன் தனித்தும் இயங்குகிறான்; எல்லா உயிர்களின் உள்ளே நின்று அவற்றையும் இயக்குகிறான். அதனால் அவன் உயிர் எழுத்தான அகரத்தைப் போன்றவன். அகரம் எல்லா எழுத்துக்களிலும் கலந்து இயக்கியும் தானும் தனித்து இயங்குகிறது. ஆதிபகவனும் எல்லாப் பொருள்களிலும் இரண்டறக் கலந்து இயக்கியும் தனித்தும் இயங்குகிறான். அகரம் இயங்கவில்லையானால் அனைத்து எழுத்துக்களும் இயங்கமுடியாது. அகரத்தால் மெய்கள் ஒலித்து வருகின்றன. அகரத்தோடு பொருந்தியே மெய்கள் இயங்கும். 'அ'கரம் எழுத்துக்களிலெல்லாம் கலந்து இருப்பது போல் இறைவன் உலகில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளான்' என்று முதற்குறளில் சொல்லப்பட்ட கடவுளுக்கும் உலகத்துக்கும் உள்ள தொடர்பை விளக்குவார்.
"திருவள்ளுவர் என்னும் நினைவு தோன்றும்போதே உலகமும் உடன் தோன்றுகிறது" என்பார் திரு வி க. வள்ளுவர் உலகுக்கென்றே குறள் படைத்தார். உலகு என்ற சொல்லை வள்ளுவர் முதற் குறளில் பெய்துள்ளமை எண்ணி மகிழத்தக்கது.

இக்குறள் கூறவரும் கருத்து என்ன?

எடுத்துக்காட்டு உவமையணியில் அமைந்த பாடல் இது என்பர் இலக்கண ஆசிரியர்கள். எடுத்துக்காட்டு உவமையாவது உவமானத்தையும் உவமேயத்தையும் தனிவாக்கியங்களாக நிறுத்தி இது பொருள் இது உவமை என்பது தோன்ற இடையில் அதுபோல என்னும் உவமஉருபு கொடாமல் கூறுவது. அகர முதல எழுத்து எல்லாம் என்ற வாக்கியமும் ஆதி பகவன் முதற்றே உலகு என்ற வாக்கியமும் இக்குறளில் தனித்தனியாக நிற்கின்றன. இவற்றை இணைக்கும்படியான 'போன்ற', என்பது போன்ற உவம உருபு எதுவும் இல்லையாதலால் எடுத்துக்காட்டு உவமை ஆயிற்று..

‘அ’ என்று சொல்லக்கூடிய எழுத்து ஆரம்ப முதல் எழுத்து. ‘ஆதி பகவன்’ என்பது கடவுள். அகர என்பது எழுத்துக்களுக்கு முதல். ஆதி பகவன் என்பது உலகுக்கும் உயிர்களுக்கும் முதல். இதுதான் இங்கு கூறப்பட்டுள்ள உவமை. அகரம் தனித்தும் அகர ஒலியா யெழுந்தும் மெய் எழுத்துக்களை இயக்கி வருவது போல ஆதிபகவனும் தனித்தும் உலகெலாமாகியும் அவைகளை இயக்கியும் வருகிறான். இது இக்குறள் உவமைக்கான பொதுவான விளக்கவுரை.
இப்பாடலிலுள்ள உவமை பொருத்தமாக அமைந்துள்ளதா? மொழி-அகரம், உலகம்-கடவுள் என உவமை விளக்கப்பட்டாலும் அதன் பொருத்தம் துலங்கவில்லை என்று கூறி அது குறித்து சில ஐயவினாக்கள் எழுப்பப்படுகின்றன:
உவமை சொல்லப்பட்டதே முதலில் கேள்விக்கு உரியதாகிறது. இதே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வள்ளுவரே இறைப் பண்பாக 'கடவுள் தனக்குவமை இல்லாதவன்' என்று கூறியிருக்கிறார். தனக்கு உவமை இல்லாதவன் கடவுள் என்ற கருத்தைப் பின்னர் (குறள் 7) சொல்ல வருபவர் அப்படிப்பட்ட கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறளை எப்படி அமைத்தார்?
'அ' என்பது 'இ', 'உ' போன்ற மற்ற குற்றெழுத்துக்களைப் போன்றதுதானே? 'இ'யைவிட 'அ' முதலில் வருவது என்பது தவிர வேறு எந்தவிதத்தில் சிறப்பானது? வேறுபட்டது? மேலும் எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கோ ஒலிஅமைப்புக்கோ ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று. ‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்? ‘அ’ என்பதும் உயிர் எழுத்து; ‘உ’ என்பதும் உயிர் எழுத்து; இரண்டும் தனித்து நிற்கவல்லன; அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டும்தானே கலக்கும்? ஒவ்வொரு உயிரும் மெய்யெழுத்துடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வது எப்படிச் சரியாகும்? ‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை, கலந்திருப்பதை அறிய முடியவில்லையே. க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்? இவை ஆய்வாளர்கள் எழுப்பும் வினாக்களில் சில.
அகரத்தின் பண்புகள் வேறு, இறைவனின் பண்புகள்வேறு என்பது வெளிப்படை. முதற்குறளின் சொற்பொருள்கள் புரிந்து கொள்ளப்படுகின்றன. உவமையின் வாயிலாக எழுத்தின் பெருமையும் புலனாகிறது. ஆனால் அகரம், கடவுள் என்ற இரு கருத்துக்களையும் ஒப்புமை செய்வதை முழுதாக உணர இயலவில்லை. எங்கும் எல்லாப் பண்புகளிலும் நீக்கமற நிறைந்துள்ள இறைவனுக்கு உவமை சொல்ல, ஒலி போல் நிறைந்துள்ளான் என்று ஒரு பண்பு மட்டுமே கொண்டு சொன்ன மொழி-அகரம், உலகம்-கடவுள் என்பதை நிறைவான உவமை என்று சொல்ல முடியாது. எனினும் அளவையால் அளக்கப்படும் பொருள் அளக்கப்பட்ட அளவு அறியப்படும். இறைவனே மூல முதல்; அவனே எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பன மொழியியல் துணைகொண்டு அளக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் எல்லையில்லாச் செம்பொருளாக இறைவன் ஒருவன் உளன் என்பதும் நிறுவப்பட்டது.

இச்செய்யுள்ளில் கூறப்பட்டுள்ள உவமைக்கு என்ன அமைதி?
காலமெல்லாம் நிலைத்து நிற்கக்கூடிய நூலைப் படைக்க வேண்டும் என்ற பெருநோக்குடன் குறள் எழுதத் தொடங்கிய காலை வள்ளுவர் நினவிற்கு வந்தவர்கள் அவரது பெற்றோரும் தொல்காப்பியரும் ஆவர் என்பதாகத் தெரிகிறது. அடுத்து, உலகு என்ற நினவும் இயல்பாக அவர்க்குத் தோன்றியது. பெற்றோர், ஆசிரியர், உலகு- மூன்றையும் முதற் குறளில் ஒருசேரக் கூற முனைந்திருக்கலாம். ஆனாலும் வள்ளுவர் நேரடியாக பெற்றோர்- தொல்காப்பியர் பெயரை தம் நூலில் குறிப்பிட விரும்பமாட்டார். வித்தகக் கவிஞரான அவர் தன் கவிதை ஆற்றலைக் காட்டி மூன்றும் குறிப்பால் தோன்றும்படி முதற்குறளைப் படைக்கிறார்.
தொல்காப்பிய இலக்கண வரையறைகளைக் கொண்டே குறள் யாக்கப்பட்டது என்பர். தொல்காப்பியத்தின் நேரடியான தாக்கம் குறளில் இருப்பதை எளிதில் உணரலாம். தொல்காப்பியர் தமிழ் மொழிக்குச் செய்த வரலாற்றுச் சாதனை வள்ளுவரை மிகவும் கவர்ந்திருக்க வேண்டும். இவரையே வள்ளுவர் வழிகாட்டியாகக் கொண்டார் என்பதற்கும் சான்றுகள் பல உள்ளன. தொல்காப்பியரது முதல் வரியையே தன் நூலின் முதல்வரியாக அமைத்து 'அகர முதல எழுத்தெல்லாம்' என்று தன் நூலைத் தொடங்குகிறார்; 'கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே' எனத் தொல்காப்பியத்தில் கூறப்பட்ட கடவுள் வாழ்த்து என்னும் சொற்றொடர் திருக்குறளின் முதல் அதிகாரத்திற்குத் தலைப்பாகவும் அமைந்தது. எனவே நூல் தொடக்கத்தில் தொல்காப்பியர் நினைவு வந்திருந்தால் அது புரிந்துகொள்ளக்கூடியதே.
அடுத்துத் தாய்தந்தையர் பெயரையும் முதற்குறளில் இணைக்கிறார். இப்படிச் செய்ததால் வள்ளுவர் தன் வரலாறு கூறினார் என்றோ அவருடைய தாய் தந்தையரை உலகிற்கெல்லாம் முதன்மையானவரெனக் கூற வருகிறார் என்றோ பொருளில்லை. பெற்றொர்களின் நினைவின் எதிரொலியாக ஆதிபகவன் என்ற சொற்றொடர் அமையப் பெற்றது என்பதாகத்தான் கொள்ள வேண்டும். ஆதிபகவன் என்ற வடமொழித் தொகைச் சொல், சங்க கால இலக்கியங்களில் காணப்படாத, புது வழக்காகும். தீந்தமிழ் நூல் செய்த வள்ளுவர் முதற்பாவிலேயே வலிந்து ஆதிபகவன் என்ற ஒரு வட சொல்லை ஏன் திணித்தார்? இதற்கு விளக்கமாகச் சொல்லப்படும் 'ஆதி, பகவன் என்று அவரது தாய்-தந்தையரையே மறைபொருளாகக் குறிப்பிட்டார்' என்ற கருத்தை நம்பமுடியாத கற்பனை என்று தள்ளிவிட முடியாது. பெற்றோர் பெயர்களையும் சொல்லியாகிவிட்டது; அதே நேரத்தில் மூலகாரணன் ஆகிய இறைவன் என்று பொருள்பட உரைத்ததும் ஆயிற்று. ஆதிபகவன் என்ற சொற்றொடர் முதற்குறளில் இடம் பெற்றதற்கு இது அமைதி ஆகலாம்.
தொல்காப்பியம், தாய்தந்தையர், உலகமக்களுக்கான நூல் என்ற நினைவில் நூலைத் தொடங்குகிறார். அதன் பாதிப்பே அளவைக் குறைவுபட்ட முதற்குறளின் உவமை.

கடவுள் இந்த உலகத்தையும் உலக உயிர்களையும் இயக்குகிறார் என்பதை நாம் உணர முடிகிறது என்றாலும் அக்கடவுள் விளக்கப்பட இயலாதவர். கடவுள் உண்மையை உணர்த்துதற்குப் பல உவமைகள் காணப்பட்டாலும் அவை எவையுமே கடவுளை முழுமையாக அளக்க முடியாது.
காலிங்கர் உரையில் கண்டபடி 'உலகமும் உலகிலுள்ள பொருள்களும் இறைவன் கண்ணே விரிந்தன' என்பதே முதற்குறளில் வள்ளுவர் சொல்ல வந்த செய்தியாகும். இறைவனை முதலாகக் கொண்டே இவ்வுலகம் இயங்குகிறது என்றும் கூறுவதால், இப்பாடல் இறைவன் ஒருவன் உளன் என்பதைத் தெளிவாக்கும்; அந்த எல்லையில்லா மெய்ப்பொருளின் முதன்மையும் இச்செய்யுள்ளால் உணர்த்தப்படுகிறது. இவை முதற்குறள் கூறும் கருத்துக்கள்.

ஆதிபகவன் என்று இறைமையைப் பொருள்பட உணர்த்தி வள்ளுவர் பாடும் கடவுள் வாழ்த்துப் பா.

பொழிப்பு: மொழிக்கு முதன்மை அகரம்; கடவுள் உலகுக்கு முதல்.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard