Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருக்குறளும் ! திரு அருட்பாவும் !


Guru

Status: Offline
Posts: 7474
Date:
திருக்குறளும் ! திரு அருட்பாவும் !
Permalink  
 


திருக்குறளும் ! திரு அருட்பாவும் !

 

 
   '' திருக்குறள் எழுதிய திருவள்ளுவரும் ! திரு அருட்பா
     எழுதிய திரு அருட்பிரகாச வள்ளலாரும்!உலகத்தின்
     இரு  கண்களாகும் .''


       திருவள்ளுவர் !


    திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் .அறம்,பொருள் ,
இன்பம் ,என்ற முப்பால்களை கொண்டதாக  உள்ளன .
அதாவது 1 ,இம்மை இன்பவாழ்வு,2 , மறுமை இன்பவாழ்வு,
3 ,பேரின்ப வாழ்வு என்பதாகும்.உலக உயிர்கள் எப்படி
வாழ வேண்டும் என்பதை அறிவுறுத்தி எழுதப்பட்ட
நூலாகும்.ஆதலால் உலகப் பொதுமறை எனறு பெயர்
வழங்கப் பட்டன .


திருக்குறளுக்கு சரியான விளக்கம் இதுவரை எவராவது 
தந்து இருக்கிறார்களா ?என்றால் இல்லை என்றுதான் 
சொல்ல வேண்டும் .!
  
      கடவுள் கொள்கை  உடையவர்கள் ,இல்லாதவர்கள் ,
இருதரப்பினரும்,திருக்குறளுக்கு விளக்கவுரை எழுதி
இருக்கிறார்கள் .கடவுள் கொள்கை உள்ளவர்கள் ,உண்மையான
கடவுளை அறியாதவர்கள் ,தெரியாதவர்கள். பழைய குப்பைகளான
வேதம் ,ஆகமம் .புராணம் ,இதிகாசங்களை படித்துவிட்டு
பொய்யான தத்துவங்களை ,கடவுளாக பாவித்து வணங்கி ,
வழிபாடு செய்து ,அறிவில்லாமல் ஒன்றுகிடக்க ஒன்றை
உளறிக்கொண்டு இருப்பவர்கள் .அவர்களால் திருக்குறளுக்கு
 சரியான விளக்கம் தர இயலாது .


     அடுத்து கடவுள கொள்கை மறுப்பவர்கள் ,பகுத்தறிவு எனறு
சொல்லிக்கொண்டு இருப்பவர்கள் .அவர்களும் கற்களான,
சித்திர சிலைகள்,பொம்மைகள்,   ,நிழல் படங்கள் போன்ற
 பொய்யான பொருள்களை  வைத்து வணங்குகிறார்கள் .
கேட்டால் தலைவர்கள் ,வழிகாட்டியவர்கள் ,பெரியவர்கள்
எனறு சொல்லி சமாளித்து விடுகிறார்கள் .அவர்களும்
 உண்மையான கடவுள் யார் ?என்பது  தெரியாதவர்கள்.
அவர்களும் மூட நம்பிக்கை உடையவர்களே !  


    மேலே உள்ள இரு தரப்பினரும் திருக்குறளுக்கு ,உண்மையான
விளக்கம் எப்படி?தரமுடியும் ,திருக்குறள்படி வாழ்ந்தார்களா ?
வாழ்வதற்குத்தான் முயற்ச்சி செய்தார்களா ?என்றால் இல்லை
என்றுதான ,விளங்ககுகிறது ,


திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்படி வாழ்ந்து வழி காட்டியவர்
திரு அருட்பிரகாச வள்ளலார் .என்பவராகும் .


திருவள்ளுவர் திருக்குறள் எழுதினார் ,திருஅருட்பிரகாச வள்ளலார்
திருஅருட்பா எழுதினார் .


திருக்குறள் வாழ்வதற்கு வழிகாட்டியது .
திருஅருட்பா வாழ்ந்து காட்டியது .


     திருக்குறள் ;--


திருக்குறள் ஆயிரத்து மூன்று நூற்று முப்பது குறளுடையது
முதல் குறளிலே, அனைத்து குறளும் அடங்கி இருக்கிறது .
அதே போல் ஒவ்வொரு குறளிலும் அனைத்தும் அடங்கி
இருக்கிறது .ஒருகுறள் படித்தாலே அனைத்தையும்
தெரிந்து கொள்ளலாம் ..புரியாதவர்கள் அனைத்தையும்
படித்தாலும் புரிந்து கொள்ள முடியாது .உயிர்கள் மேல்
கடவுள்மேல், உண்மை அன்பு, .உண்மை இரக்கம்
இருந்தால் தான்.திருக்குறளின் உண்மையான கருத்துக்களை
தெரிந்து ,அறிந்து விளக்க முடியும்..
வடலூரில்;-
   வள்ளலார் இடம் பல அன்பர்கள் திருக்குறளுக்கு
விளக்கம் அறிந்துகொள்ள வேண்டினர் .வள்ளலார் அவர்கள்
வடலூரில் சன்மார்க்க பாடசாலை வைக்க எண்ணி
படித்தவர்களைக் கூடடித் தன்னுடைய முதன்மை
அன்பரான, பன்மொழிப்புலவர் திரு, வேலாயுதம் அவர்களை
உபாத்தியாயராக அமைத்துத்  திருக்குறள் பாடம் நடத்துவிக்கக்
கட்டளையிட்டனர் ,மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரம்
நடவாமையால் ,வாசிப்போர்கள் வள்ளலாரிடம் குறைகூற
வள்ளலார் ''மூடம் முண்ட வித்வானைக் கூப்பிடும்''
எனறு கூற,வேலாயுதம் அவர்கள் வந்து வாய் புதைத்துப்
பின் புறத்தே கைகட்டித் தூசுஒதுக்கி நிற்க ,வள்ளலார்
''பிச்சு'' மூன்று மாதமாகியும் மூன்று அதிகாரந்தானும்
நடக்கவில்லையாம் ,எனறு கோவம் கொண்டு ,
பாடசாலை வேண்டாம்! .வித்வான்களே !உங்களுக்குத்
தானாகவே கல்விவரும் .அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல்
திருக்குறளின் விளக்கம் தெரியும் ,எனறு கூறிப் பாடசாலையை
நிறுத்திவிட்டனர் .
      
   இதிலிருந்து என்ன விளங்குகின்றன எவ்வளவு பெரிய
படிப்பு படித்திருந்தாலும் ,அருள் ,அறிவு தெளிவுயில்லாமல்
மெய்ப்பொருளான திருக்குறளுக்கு விளக்கம் தர இயலாது .
என்பது தெளிவாகின்றன ,


    ஆதலால் திருக்குறளுக்கு சரியான விளக்கம் வேண்டுவோர்
திருஅருட்பாவை படித்தால் அறிந்து கொள்ளலாம் .


    வள்ளலார் வழியில் இருப்பவர்களும் ,வள்ளலார்
எழுதியுள்ள திருஅருட்பா நூலின் உண்மைகளை
இன்னும் அறிந்துகொள்ளவில்லை ,


    சாதி,சமய ,மத ,இன ,நாடு ,என்ற பற்று இல்லாமல் ,
உலகம் அனைத்தும் ஒரு குடையின் கீழ்,
செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது ,என்பதை
அறிவு தெளிவோடு,புரிந்து கொண்டு ,ஆன்மநேய
ஒருமைப்பாடு  வந்தால்தான் ,திருக்குறளையும் ,
திருஅருட்பாவையும்,அறிந்துகொள்ளமுடியும் .


    ''திருக்குறள்'' முதல் குறளாகிய கடவுள் வாழ்த்து ,


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ,


    அகரம் ,உகரம், உடம்பு, உயிர் இவை இரண்டையும்
அறிந்துகொள்ள எழுத்தும் என்னும் தேவைப்படுகிறது.
எழுத்தும் என்னும் ,ஆதியிலுள்ள பகவானாகிய ,
அருட்பெரும்ஜோதியாகிய ஒளியால் இந்த உலகம்
முதலாவதாக கொண்டுள்ளன.அந்த அருட்பெரும்ஜோதியாகிய
ஆண்டவரால் ,''அ'' என்ற எழுத்து முதல் அனைத்து
எழுத்துக்களும் உருவாக்கப்பட்டதாகும் .அவை
தமிழ் எழுத்துக் களாகும் .


     ஓர் அறிவு முதல்,ஆறு அறிவுள்ள மனிதர்கள் வரை .
உள்ள உயிர்கள் ஒரே தன்மையுள்ளது .உடம்பு வேறாக
இருந்தாலும் உயிர்களில் மாற்றமில்லை,


    பலகோடி பிறவிகளுக்குப் பிறகு மனிதபிறவி கிடைத்து
உள்ளது .மனித பிறவி கிடைத்ததின் முக்கிய நோக்கம்
ஆதி பகவனாகிய அருபெரும்ஜோதி ஒளியிடம் சென்று
அடையவேண்டியதாகும்.அதைத்தான் திருவள்ளுவர் ,
திருக்குறளிலே ம்தன்மையாக தெரியப்படுத்தியுள்ளார் .


               ''பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்''  


என்பதின் நோக்கம் எல்லா உயிர்களும் இன்பமுடன்
வாழ்வதற்கு ,வழிகாட்டியாக இருப்பவர் ,ஆதியிலே
உள்ள ஆதி பகவனாகிய அருட்பெருஞ்ஜோதியாகிய
ஒளிதான் காரண காரியமாக இருந்துகொண்டு இருக்கின்றன .
என்பதை முதல் குறளிலேயே தெரியப்படுத்தியுள்ளார் .
திருவள்ளுவர் .


    மனிதனாக பிறந்தவர்கள் மெய்ப்பொருளாகிய
ஆதிபகவனை அடைவதற்கு ஒழுக்கம் மிக முக்கியமானதாகும் .
என்பதை  திருவள்ளுவர் அவர்கள் ஒழுக்கமுடைமை
என்ற தலைப்பில் பத்து குறள்கள் பதிவு செய்துள்ளார் .
அதிலொன்று;-- .
            ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
            உயிரினும் ஓம்பப் படும்.


   அந்த ஒழுக்கம் என்ன என்பதை வள்ளலார் அவர்கள்
திரு அருட்பாவில் தெளிவு படுத்துகிறார் . அவற்றைப்
பார்ப்போம் .
அக ஒழுக்கம் ,புற ஒழுக்கம் ,என இரண்டுவகைப்படும்.
புற ஒழுக்கம் ஒழுக்கம் அல்ல ,அக ஒழுக்கம் மிக,மிக
முக்கியமானதாகும்.அவை யாது என்பதைப் பார்ப்போம் .


   


__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

 '' திருஅருட்பா ''


    ஒழுக்கம் நான்கு வகைப்படும் ;--


1,இந்திரிய ஒழுக்கம் ;-----  புறப்புறம் .
2,கரண ஒழுக்கம் ----------- புறம்.
3 ,ஜீவ ஒழுக்கம் .------------ அகப்புறம்
4 ,ஆன்ம ஒழுக்கம் .--------அகம்


மனித உடம்பில் நான்கு பிரிவுகளாக உள்ளது .
அவை;-- ,அகம் ,அகப்புறம் ,புறம் ,புறப்புறம் என்பவையாகும் .
அவைகளை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதுதான் ,
ஒழுக்கமாகும் .அவைகளை முழுவதுமாக கடைபிடித்தவர்
வள்ளலார் ஒருவர்தான் .அவருக்கு முன்னாடி யாரும்
கடைப்பிடித்ததாக தெரியவில்லை .திருக்குறளை எழுதிய
திருவள்ளுவரும் கடைபிடிக்கவில்லை .அக அனுபவங்களை
தெரிந்து கொண்டார் ,உலக ரகசியங்களை தெரிந்து கொண்டார் .
உலக ம்க்கள் அறிந்து கொள்வற்கு திருக்குறள்,எழுதிவைத்துள்ளார்.அவருக்கு அதற்குள் மரணம் வந்துவிட்டது .


     மரணத்தை வெல்லும் வழிமுறைகள் யாவும் திருக்குறளில்
உள்ளது .திருவள்ளுவர் ,மறுபடியும் வள்ளலாராக பிறவி
எடுத்து இருப்பாரோ என்ற சந்தேகம் தோன்றுகிறது .அந்த
அளவிற்க்கு திருக்குறளுக்கும் ,திரு அருட்பாவிற்க்கும்
நெருங்கிய தொடர்பு இருக்கிறது ,


    ஒழுக்கம் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ளது ;--


1 ,இந்திரியம் என்பது ;--கண் ,காது,மூக்கு,வாய் ,மெய் [உடம்பு ]


2 ,கரணம் என்பது ;------மனம் ,புத்தி ,சித்தம் ,அகங்காரம் ,ஆச்சர்யம் .


3 ,ஜீவன் என்பது ;--------உயிர் காற்று


4 ,ஆன்மா என்பது ;-----ஆன்ம ஒளி [உயிர் ஒளி ]


  [ ஒழுக்கம் என்ன என்பதை கண்டுபிடித்து தெரிந்து அதன்படி
காக்க வேண்டும் அவைதான் வாழ்க்கைக்குச சிறந்த
துணையாகும் என்கிறார் திருவள்ளுவர் ;
திருக்குறள் ;--


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை .]


திருக்குறள் சொல்லியபடி வள்ளலார் ,ஒழுக்கம் என்ன
என்பதை தெரிந்து ஆராய்ந்து அதன்படி வாழ்க்கையை
வாழ்ந்துகாட்டினார் ,மேலும் ஒழுக்கத்தைப் பற்றி
விரிவாக தெளிவுபடுத்தியுள்ளார் ,
புறப்புறம் ;--புறப்புறம் ஒழுக்கம் '==
    இந்த நான்கு ஒழுக்கங்களில் புறப் புறமாகிய கண் ,காது,
மூக்கு ,வாய் ,மெய் இவை ஐம்புலன்களாகும் .கண்களுக்கு
தெரிந்து ,பார்த்து செயல்படுகின்றன .


  புறம்;--  மாகிய ;-- கரண ஒழுக்கம் மனம் ,புத்தி ,சித்தம் ,
அகங்காரம் ,ஆச்சர்யம் இவை கண்களுக்கு தெரியாது
உருவம் கிடையாது ,ஆனால் செயல்பட்டுக் கொண்டு
இருக்கின்றன ,


  அகப்புறம் ;--ஜீவ ஒழுக்கம் ,உயிர்க் காற்று, கண்களுக்கு
தெரியாது ,உருவம் கிடையாது ஆனால் செயல்பட்டுக்
கொண்டு இருக்கின்றன .


அகம் ;--ஆன்மா ,உயிரொளி கண்களுக்கு தெரியாது ஆனால்
செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது .


     மேலே கண்ட நான்கு செயல்பாடுகளும் ,மனித தேகம்
எடுத்த அனைவருக்கும் பொதுவாகவே இருக்கின்றன .
ஆனால் செயல்பாடுகள் வித்தியாசமாகவே இருக்கின்றன .
இந்த வித்தியாசம் ஏற்படுவதற்க்கு என்ன காரணம் .


    ஒவ்வொரு பிறப்பிலும் அவர் அவர் செய்யும் செயல்களுக்கு
தகுந்தாற்போல் அணுச்சேர்க்கை ஆன்மாவை [உயிர் ஒளியை ]
சுற்றி பற்றிக்கொள்கிறது ,அதனால் உயிரொளி ஒன்றுபோல்
இருந்தாலும் உருவம் வேறு வேறுவாகக் காணப் படுகின்றன .


   ஐந்து பூதங்கள்;---


    இந்த உலகம் என்னும் அண்டப் பரப்பில்,நீர் ,நிலம் ,நெருப்பு ,
காற்று, ஆகாயம் என்னும் ஐந்துவிதமான  பஞ்ச பூத அணுக்கள்,
ஒன்றுடன் ஒன்று கலந்து செயல்ப் பட்டுக் கொண்டு இருக்கின்றன ,
இவைகள் யாவும் உயிர் ஒளியான ஆன்மாக்கள் வாழ்க்கைக் காக
படைக்கப் பட்டவைகளாகும் .இவைகள் ஆன்மாக்களுக்கு
துணையாக இருக்குமே அல்லாது, விரோதமானதல்ல ,
ஆன்மாக்களின் விருப்பத்திற்கு ஏற்ப உடம்பு எடுத்துக்
கொள்கின்றன .பஞ்ச பூதங்கள்,ஆன்மாக்களின்  விருப்பத்திற்கு
தகுந்தாற்ப் போல் அணுக்களை சேர்த்து கொள்கின்றன ,


    இதைத்தான் வள்ளுவர்
''பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'' சிறப்பொவ்வா
செய் தொழில் வேற்றுமை யான ..


   எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரே மாதிரியாக .
இருந்தாலும்,உயிர்களின் உடம்பும்,  செய்கின்ற
தொழில்களிலும் ,உயர்வு தாழ்வு ,சிறப்பு மாறுபடுகின்றது.   
     
   உயிர் தோற்றங்களில் உயர்ந்த தோற்றமுடையது,
மனித தோற்றமாகும் ,மனித தோற்றம் கிடைத்ததின்
நோக்கம்,மெய்ப் பொருளான ஆதிபகவன் என்னும்
அருட்பெருஞ்ஜோதியை சேர்ந்து அடைவதுதான் என்பதை
திரு வள்ளுவர்;--


   மலர்மிசை ஏகினான் மாணடிசேர்ந்தார்
  நிலமிசை நீடுவாழ் வார் .


    என்கிறார் வள்ளுவர் .உயிர்களின் உயிர் ஒளியாக
இயங்கிக் கொண்டு இருக்கும் இறைவனுடைய  திருவடிகளை
பற்றி அதனுடன் சேர்ந்து வாழ்பவர்களால் தான் ,உலகிலுள்ள
உயிர்களுக்கு உபகாரங்கள் செய்யமுடியும் .அவர்கள் இந்த
உலகில் என்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்
என்பது திருக்குறளின் தெளிவாகும் .


    வள்ளலார் அவர்கள் திரு அருட்பாவில் அதே கருத்தை
வலியுறுத்தி பதிவுசெய்துள்ளார் ;--


                     திருஅருட்பா ;---


உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை அறியீர்
உடல் பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்றறியீர்
இடம் பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ் சார்வீரே .


   எனறு தான் அனுபவித்து வாழ்ந்த அனுபவங்களை
மனித சமுதாயத்திற்கு பறை சாற்றுகின்றார் வள்ளலார் .
உடம்பையும் ,உயிரையும் தெரிந்து கொள்ள வேண்டுமானால்
புற ,அக, ஒழுக்கம் மூலமாகத்தான் அறிந்து கொள்ள கூடுமே
அல்லாது, வேறுவகையால் அறிந்துகொள்ள கூடாது எனறு
திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார் திருஅருட்பாவில் .


                



__________________


Guru

Status: Offline
Posts: 7474
Date:
Permalink  
 

  திருஅருட்பா ;--


மெய் மொழியும் ஒழுக்கமும் ;--


     உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய
மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும்
அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் உஆதேனில் ;--


     இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவரென்றும்,
இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றார் என்றும் ,
இரண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும் ,எல்லா அண்டங்களையும் ,
எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும் ,எல்லா
சத்திகளையும்,எல்லா சத்தர்களையும், எல்லா கலைகளையும் ,
எல்லாப் பொருள்களையும் ,எல்லா தத்துவங்களையும் ,
எல்லா தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும் ,எல்லா
செயல்களையும்,எல்லா இச்சைகளையும் ,எல்லாஞானங்களையும்,
எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை
எல்லாவற்றையும் .


     தமது திருவருட் சத்தியால் ;--
1 ,தோற்றுவித்தல்
2 ,வாழ்வித்தல்
3 ,குற்றம் நீக்குவித்தல்
4 ,பக்குவம் வருவித்தல்
5 ,விளக்கம் செய்வித்தல்
      என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத்
தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும் ,எல்லாம்
வல்லவர் என்றும் ,ஒன்றும் அல்லாதவர் என்றும் ,
சர்வ காருனயர் என்றும்,சர்வவல்லபர் என்றும் ,எல்லாம்
உடையராய்த்தமக்கு ஒருவாற்றானும் ,ஒப்பு உயர்வு இல்லாத
தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர்என்றும் .


   சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே
,அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த
சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில்,
அறிவாரறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .


    அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை ,
இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்புசெய்து ,
அருளை யடைந்து ,அழிவில்லாத சத்திய சுகபூரணப்
பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு மார்க்கங்களிலும்
பல்வேறு லஷியங்களைக் கொண்டு ,நெடுங்காலம் பிறந்து
பிறந்து ,அவத்தை வசத்தர்களாகிச சிற்றறிவு மின்றி ,
விரைந்து ,விரைந்து பல்வேறு ஆபத்துக் களினால்
துன்பத்திலழுந்தி,இறந்து,இறந்து வீண்போயினோம்,
வீண்போகின்றோம்.


     ஆதலால் ,இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து ,
விரைந்து ,இறந்து ,இறந்து வீண்போகாமல் ,உண்மை அறிவு ,
அண்மைய அன்பு ,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப்
பெற்று ,நற்செய்கை உடையவர்களாய் ,எல்லா சமயங்களுக்கும் ,
எல்லா மதங்களுக்கும் ,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப்
பொது நெறியாகி விளங்கும் ,சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்
பேரினப் சித்திப் பெருவாழ்வு வாழ்வதே மனிதப் பிறவியின்
செய்கையாகும் ,


    அதற்கு மேலே கூரியஒழுக்கம் நான்கும் மிக முக்கியமாகும் .
திருவள்ளுவர் கூரிய ஒழுக்கம் என்ன என்பதுப் பற்றி
வள்ளலார் விளக்கம் தருகிறார் ;--


     1 ,  இந்திரிய ஒழுக்கம் ;--


1,கொடிய சொல் செவி புகாது நாதம் முதலிய தோத்திரங்களைக்
கேட்டல் ;2 ,அசுத்த பரிசமில்லாது தயாவண்ணமாகப்
பரிசித்தல் ,3 ,குறுரமாகப் பாராதிருத்தல் 4 ,ருசி விரும்பாதிருத்தல்
5 ,சுகந்தம் விரும்பாதிருத்தல் ,6 ,இன்சொல்லாடல் ,
7 ,பொய்சொல்லாதிருத்தல்,8 ,ஜீவ இம்சை நேரிடும் காலத்தில்
எவ்வித த்ந்திரத்திலாவது தடை செய்தல் 9 , பெரியோர்கள்
எழுந்தருளி இருக்கும் இடங்களுக்குச செல்லுதல்,
10 ஜீவ உபகாரம் நிமித்தமாய் ,சாதுக்கள் வாசம் செய்யும்
இடங்களுக்கு சென்று உபகாரம் செய்தல் ,11 ,நன்முயற்சியில்
கொடுத்தல் எடுத்தலாதி செய்தல் 12 ,மல ஜ்லோ பாதிகளைக்
கிராமமாய் ஒழித்தல் ,15 ,கால பேதத்தாலும் உஷ்ண
ஆபாசாத்தாலும்,தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்
பவுதிக மூலங்களாலும்,தடை தவிர்த்துக் கொள்ளல் ,௧௬
16 ,சுக்கிலத்தை அக்கிரம மாதிக்கிரமத்தில் விடாது நிற்றல் .
17 ,எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல் ,
18 ,இடைவிடாது கோஷத்தைக் கவசத்தால் மறைத்தல் ,
19 ,இது போல் உச்சி ,மார்பு முதலிய அங்கங்களையும்
மறைத்தல் ,20 ,சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல் .
21 அழுக்காடை யுடுத்தா திருத்தல் முதலியன
இந்திரிய ஒழுக்கமாகும் ,


       2    கரண ஒழுக்கம் ;-
1 ,மனதைச சிற்சபையின் கண்ணே நிறுத்தல் .;--அதாவது 
முதலில் ,புருவமத்தியில் நிற்கச செய்தல் ;2 ,துர்விஷயத்தை 
பற்றாதிருக்கச் செயதல்;3 ,ஜீவதோஷம் விசாரியாதிருத்தல் ,
4 ,தன்னை மதியாதிருத்தல் ;5 ,செயற்கைக் குணங்களால் 
ஏற்ப்படும் கெடுதிகளை [இராகாதி ] நீக்கி இயற்கையாகிய 
சத்துவ மயமாதல் ;6 ,பிறர் மீது கொபியாதிருத்தல் ;
7 ,தனது சத்துருக்களாகிய தத்துவங்களை அக்கிரமத்திற் 
செல்லாது கண்டித்தல் முதலியன;-- கரண ஒழுக்கமாகும் .


     3 ,ஜீவ ஒழுக்கம் ;--


ஜீவ ஒழுக்கமாவது;--ஆண்மக்கள் ,பெண்மக்கள் முதலிய 
யாவர்களிடத்தும் ,ஜாதி ,சமயம் ,மதம் ,ஆசிரமம் ,சூத்திரம்,
கோத்திரம் ,குலம் ,சாஸ்த்திர சம்பந்தம் ,தேசமார்க்கம் ,
உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,--என்னும் பேதம் நீங்கி எல்லவரும்
தம்மவர்களாய்ச சமத்திற் கொள்ளுதல் ;--ஜீவ் ஒழுக்கமாகும் .


     4 ,ஆன்ம ஒழுக்கம் [உயிர் ஒளி ஒழுக்கம் ]


ஆன்ம ஒழுக்கமாவது ;--யானை முதல் எறும்பு ஈறாகத் 
தோன்றிய சரீரங்களிலும்,ஜீவான்மாவே திருச்சபை யாகவும் 
அதனுள் பரமான் மாவே [அருளொளி ] பதியாகவும் கொண்டு 
யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதமற்று எல்லாம் தானாக நிற்றல்
ஆன்ம ஒழுக்கமாகும் .


    இத்துடன் ,இடம் தனித்திருத்தல் ,இச்சை இன்றி நுகர்தல் 
ஜெபம் தபம் செய்தல்,தெய்வம் பராவல் .பிற உயிர்க்கு இரங்கல் 
பெருங்குணம் பற்றல் ,பாடிப் பணிதல் ,பத்தி செய்திருத்தல் ,
முதலிய நற் செய்கைகளில் பல கால் முயன்று முயன்று 
பழகிப் பழகி நிற்றல் வேண்டும் .


 திருக்குறள் ;--

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறி நின்றார் நீடு வாழ வார் .

    கண் ,காது ,மூக்கு, வாய்,உடம்பு ,என்ற ஐம்பொறிகளின்
வழியாக உண்டாகும் கெடுதிகளை அகற்றி ,வள்ளலார்
கடைபிடித்து காட்டிய ஒழுக்கத்தை பின் பற்றினால் ,
உண்மையான நிலையான நல்ல வாழ்க்கை வாழலாம்.


   மேலே சொன்ன ஒழுக்கங்களை யார் பின் பற்றுகிறார்களோ
அவர்கள் தான் உலக உண்மையை காணமுடியும் ,ஆதி பகவனை
காணமுடியும் ,திருக்குறளுக்கு சரியான விளக்கம் தரமுடியும் ,
ஏட்டுப்படிப்பு ,வேலைக்கு உதவாது .இப்போதுள்ள தமிழ் புலவர்கள்
தமிழ் சான்றோர்கள் ,தமிழ் ஆராச்சி யாளர்கள் ,தமிழ் பல்கலைக்
கழகங்கள் அனைத்தும் ஒன்றுகிடக்க ஒன்று உளறிக் கொண்டு
இருக்கிறார்கள் ,

   திருக்குறளுக்கு சரியான விளக்கம் திரு அருட்பாவில் தான்
இருக்கிறது .திருக்குறள் சொன்ன ஒழுக்கத்தின் படி வாழ்ந்தவர்
திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்களாவார் !

   ஆதலால் திருக்குறளும், திரு அருட்பாவும் உலகத்திற்கு
கிடைத்த மாபெரும் பொக்கிஷங்களாகும் ,அவைகளை ப்
படித்து ,பின்பற்றி வாழ்ந்தால் மனிதகுலம் மேண்மையடையும்
உலகம் ஒற்றுமையுடன் ஓங்கும் ,எல்லா உயிர்களும்
இன்பமுற்று வாழும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை .

    திருக்குறளும் ,திரு அருட்பாவையும் பற்றி அடுத்த
    வலைப்பூவில் பார்ப்போம் .

அன்புடன் ;-கதிர்வேலு ,

மிண்டும் பூக்கும்..



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard