Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பலி


Guru

Status: Offline
Posts: 7410
Date:
பலி
Permalink  
 


குற்ற நிவாரண பலி

 

தான் செய்த பாவங்களுக்காக ஒருவர் செலுத்தும் பலி. இது மற்ற பாவப் பரிகார பலிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. பாவம் செய்ததால் இழந்துவிட்ட சில ஒப்பந்த உரிமைகளை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காகவும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்காகவும், மனம் திருந்திய ஒருவர் செலுத்துகிற பலி.—லேவி 7:37; 19:21, 22; ஏசா 53:10.



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

தகன பலி

 

கடவுளுக்கு முழுமையான காணிக்கையாகப் பலிபீடத்தின்மீது எரிக்கப்பட்ட மிருக பலி. காளை, ஆடு, வெள்ளாடு, புறா, புறாக்குஞ்சு ஆகியவற்றைத் தகன பலியாகக் கொடுத்தவர் அவற்றின் எந்தப் பாகத்தையும் தனக்காக எடுத்துக்கொள்ளவில்லை.—யாத் 29:18; லேவி 6:9.



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

பாவ நிவர்த்தி: (Atonement)

 பாவ நிவர்த்தி: (Atonement)

'பாவ நிவர்த்தி' என்பது பாவத்துக்கு எதிரான தேவ கோபாக்கினைக்குத் தப்பிக் கொள்வதற்காகவோ அல்லது பாவத்திற்கான தண்டனையைத் தவிர்ப்பதற்காகவோ செய்யப்படும் ஒரு சிறப்பான செயலாகும். வேதத்தில் பொதுவாக இது 'பாவ நிவாரண பலி" என்று அழைக்கப்படும் ஏதாவது ஒரு இரத்தபலி செலுத்துவதாய் அமையும்.

எல்லா மனிதரும் பாவம் செய்தவர்கள். தேவனுடைய நியாயத் தீர்ப்புக்கும் தண்டனைக்கும் தகுதியானவர்கள். (எண்ணாகமம்: 14:18; சங்கீதம்: 7:11; ரோமர்: 1:18; 3:10). ஆனால், தேவன் தம் இரக்கத்திலே மனிதர்கள் அந்தத் தண்டனைக்குத் தப்பும்படியான வழிவகையையும் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்.

பழைய ஏற்பாட்டில், தேவ கோபாக்கினைக்குத் தப்பிப் பிழைக்கும்படியாக யூதர்கள் மிருகங்களைப் பலியிட்டனர். மனிதனுக்குப் பதிலாக அந்த மிருகம் தேவ கோபத்துக்குப் பலியானது. (லேவியராகமம்: 4:27-31; 16:20,22). இந்த விதமான பலிகளோடு கூட, தேவன் ஒவ்வோராண்டும் ஒரு நாளைக் குறித்து, அதை "பாவ நிவர்த்தி நாளாக" ஏற்படுத்தி வைத்தார். அன்றைய தினத்தில் யூத பிரதான ஆசாரியன் மக்கள் எல்லாருடைய பாவங்களுக்காகவும் பாவ நிவாரணம் செய்ய ஒரு விசேஷித்த பலியைச் செலுத்துவான். (லேவியராகமம்: 16:1-34).

ஆனால், இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்குள் வந்த பிறகு, பாவத்துக்காகச் செலுத்தப்பட்ட இந்த பழைய ஏற்பாட்டுப் பலிகள் எல்லாம் அவசியமற்றவையாகி விட்டன. ஏனெனில், தேவனுடைய சொந்தக் குமாரனாகிய இயேசு தாமே, நமது பாவங்களுக்காக பலியிடப்பட்டு விட்டார். அவரே நமது கிருபாதார பலி. அதாவது, "பாவ நிவாரண பலி" ஆவார். (ரோமர்: 3:23-25; 1யோவான்: 2:2; 4:10).

அவரது பலி ஒரேயொரு தரம், என்றென்றைக்குமாகச் செலுத்தப்பட்டது. நாம் இயேசுவிலும் அவரது பலியிலும் (அவரது சிலுவை மரணம்) , நமது விசுவாசத்தை வைக்கும் பொழுது பாவத்தக்காக வேறெந்த பலியும் செலுத்த அவசியமில்லை. (எபிரேயர்: 9:26, 28; 10:10,14). 

கிறிஸ்து நமது தண்டனையை ஏற்றுக் கொண்டதால், நமது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டாயிற்று. நமக்கு எதிரான தேவ கோபாக்கினையை நீக்கிப் போடும் நமது பாவ நிவாரண பலி அவரே.

தேவ கோபாக்கினையை நீக்கவும், பாவ மன்னிப்பை அடையவும் ஒரு ஜீவனுள்ள பலி அவசியம். இரத்தம் சிந்தப்பட வேண்டும்... "இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரேயர்: 9:22). அந்த ஜீவ பலி கிறிஸ்துவே. அவர் சிலுவையின் மீது தம் இரத்தத்தைச் சிந்தினார். அவரது கைகளிலும், கால்களிலும் ஆணிகள் கடாவப்பட்டன. அவரது விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டது. அதிலிருந்து குருதி புரண்டோடிற்று. (யோவான்: 19:34; 20:24-27).

"நாம் அவருடைய இரத்தத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம்" என்று பவுல் எழுதுகிறார். (ரோமர்: 5:9). அதாவது நாம் இயேசுவின் மரணத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டுள்ளோம். (ரோமர்: 5:10). நம்மை இரட்சிப்பது இயேசுவின் இரத்தம் மட்டுமல்ல, அவரின் மரணமும்தான். பாவத்தின் தண்டனை மரணம் (ரோமர்: 6:23).

நாம் பிழைப்பதற்காக இயேசு மரிக்க வேண்டியதாயிற்று.



__________________


Guru

Status: Offline
Posts: 7410
Date:
Permalink  
 

சமாதான பலி

 

யெகோவாவுடன் சமாதான உறவை விரும்பியவர்கள் செலுத்திய பலி. இந்தப் பலியைக் கொண்டுவந்தவரும் அவருடைய குடும்பத்தாரும், இந்தப் பலியைச் செலுத்திய குருவும், அந்தச் சமயத்தில் அங்கே சேவை செய்த மற்ற குருமார்களும் அதைச் சாப்பிட்டார்கள். எரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து வந்த வாசனையை யெகோவா ஏற்றுக்கொண்டார். உயிருக்கு அடையாளமாக இருக்கிற இரத்தமும் யெகோவாவுக்கே செலுத்தப்பட்டது. குருமார்களும் பலி செலுத்துபவர்களும் யெகோவாவோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதுபோல் இருந்தது. அவரோடு சமாதான உறவு இருப்பதை இது குறித்தது.—லேவி 7:29, 32; உபா 27:7.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard