Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: உலகின் பழமையான நடராஜர்-இந்தியாவின் பழமையான நடராஜர் ஒடிசாவின் அசன்பத் பொஆ 300 நடராஜர் கீழே 13 வரி


Guru

Status: Offline
Posts: 7337
Date:
உலகின் பழமையான நடராஜர்-இந்தியாவின் பழமையான நடராஜர் ஒடிசாவின் அசன்பத் பொஆ 300 நடராஜர் கீழே 13 வரி
Permalink  
 


உலகின் பழமையான நடராஜர்

 

 

இந்தியாவின் பழமையான நடராஜர் திருமேனி ஒடிசாவின் அசன்பத் பொஆ 300 நடராஜர் திருமேனிகீழே 13 வரி சமஸ்கிருத கல்வெட்டு

 

நடராஜர் திருமேனிகீழே  13 வரி  சமஸ்கிருத கல்வெட்டும் பொஆ 300 சார்ந்த  ஒடிசாவில்நாகர் அரசன் சத்ருபஞ்சா புகழைக் கூறும் (Satrubhanja பொஆ 261 முதல் 340 வரை)   

ஒடிசாவின் அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள சத்ருபஞ்சாவின் பதின்மூன்று வரி சமஸ்கிருதக் கல்வெட்டு https://en.wikipedia.org/wiki/Satrubhanja

 அசன்பத் கிராமத்தில் கிடைத்துள்ள நடராசரின் கல்வெட்டு சமசுகிருத மொழியில், பிந்தைய பிராமி அல்லது சத்ருபஞ்சாவின் ஆரம்பகால கலிங்க எழுத்துகளுடன், வெற்றியாளர் எனவும் ஆன்மீக மனிதராக இவர் செய்த சாதனைகள் பற்றியும் விரிவான விவரங்களை வழங்குகிறது. பதின்மூன்று வரிகளைக் கொண்ட கல்வெட்டு பகுதி வசனமாகவும், பகுதி உரைநடையாகவும் எழுதப்பட்டுள்ளது.  

இப்போது ஒடிசா மாநில அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அசன்பத் கல்வெட்டு, சத்ருபஞ்சாவை ஆட்சியாளர் எனவும் போர்வீரன் எனவும் விரிவான கண்ணோட்டத்தை அளிக்கிறது. இவர் நாக குலத்தில் அரசர்களிடையே சந்திரனைப் போலப் பிறந்தவர் என்றும், மகாபாரதத்தில் பீஷ்மருக்கு வழங்கப்பட்ட சிறப்புப் பெயரான இரனஸ்லாகின் (போரில் பெருமை கொண்டவர்) என்றும் விவரிக்கப்படுகிறார்.


ஒடிஷா மாநிலத்தின் அருங்காட்சியத்தில் மஹாராஜா சத்ருபாஞ்சாவின் கல்வெட்டு ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கற்பலகையின் மேற்பகுதியில் ஆடல்வல்லானின் சிற்பம் ஒன்று நேர்த்தியாக வடிக்கப்பட்டுள்ளது. இதனில் சிவபெருமான் ஆடும் தோற்றத்தில் நிமிர்க்குறி தெளிவுற அமைக்கப்பட்டு எட்டுக்கரங்களுடன் முன்னிரு கரங்களில் வீணை போன்ற இசைக்கருவியை மீட்டும் பாவனையில் வடிக்கப்பட்டுள்ளார். 
Heliodorus_pillar_(cropped).jpg

145829478_127623859226862_67528698575725

photo_2022-07-02_11-07-36.jpg


தலைக்கு மேலே உயர்த்திய இருகரங்கள் ஒரு நாகத்தினை பிடித்துள்ளன. இடது கரமொன்றில் முத்தலை சூலம் ஏந்தி மற்றொரு கரமோ இடபத்தை வருடியவண்ணம் காண்பிக்கப்பட்டுள்ளார். வலப்பக்கம் இரு கைகளில் ஒன்றில் டமருகமும் மற்றொன்றில் அக்கமாலையும் பிடித்துள்ளார். இவரது மெலிந்த தேகத்தில் முப்புரிநூல் தெளிவாக விளங்க சதுர தாண்டவ அமைப்பில் கால்கள் நடனமிட ஒரு பூதகணம் அவரை வணங்கும் பாவனையில் அவருக்கு வலப்புறத்தே அமர்ந்துள்ளது நோக்கத்தக்கது. 
சிரசின் மீது கொண்டை போல இறுக்கிக்கட்டிய ஜடாமகுடமும் அங்கு இலங்கும் பிறைச்சந்திரனும் அழகாக அதன் மேல் ஒரு ருத்ராஷ மாலையும் இவரது மேனிக்கு மேலும் அழகு சேர்க்கின்றது. 
இந்த சிற்பம் அசன்பேட் கல்வெட்டு என்று வெகு பிரபல்யமாக தொல்துறையினைச் சார்ந்தோரால் பிரஸ்தாபிக்கப்படுகிறது. பொ.யு.ஆறாம் நூற்றண்டை சேர்ந்த இந்த கல்வெட்டின் கிரந்தம் குப்தர்கள் கால பிராமியில் நாகர் அரச மரபினை சேர்ந்த சத்ருபாஞ்சதேவன் என்னும் அரசனின் கீர்த்தியையும் அவன் ஒரு சிவன் கோயில் எழுப்பியதைப்பற்றியும் பல மடங்களுக்கு பொற்காசுகள் வழங்கியதைப்பற்றியும் அவனது விழுமிய சைவத்தொண்டினையும் பலகோட்பாடுகளிலும் தத்வார்த்தங்களிலும் சாஸ்திரங்களிலும் தேர்ச்சிபெற்ற வல்லமையையும் கவிதையாகவும் உரைநடையிலும் விவரிக்கின்றது. சுமார் நான்காம் நூற்றாண்டு காலங்களில் இவன் க்யூஞ்சார் பகுதியில் ஆட்சி புரிந்தவன்.

RAVICHANDRAN KP THE ASANPAT INSCRIPTION AND DANCING SHIVA OF SIXTH CENTURY EXHIBITED IN ODISHA STATE MUSEUM.


The Asanpat inscription which is now kept in the Odisha state museum gives a detailed overview of Satrubhanja's life as ruler and warrior. He is described as born like moon among kings in the Naga clan and as the distinguished Ranaslaghin (warrior). He is also described as a divine child born to a family the fame of which would last till the end of the Kali yuga. Probably he belonged to a very high class Naga clan family and according to the inscription was expected to win battles with the enemies in the future. Satrubhanja is described as the ruler of Vindhyatabi (Keonjhar and adjoining modern Mayurbhanj - Singhbhum districts). He was the son of Maharaja Manabhanja and the queen Mahadevi Damayanti. He was a successful warrior who is defined by the statement that his heroism remains unchallenged even after hundreds of battles with the Murundas and Kushans. He is described as the Kalpavriksha who possessed the quality of good wealth on earth similar to the sun having mass splendor on earth.
The inscription describes Satrubhanja’s knowledge in the Puranas and Mahabharata. He is mentioned to have mastered the knowledge of Itihasa, Vyakarana, Samiksa, Nyaya, Mimamsa, Chandas, Vedas, Buddhist Scriptures and Samkhya and also described as the expert in all arts. Satrubhanja had built monasteries and residences for spiritual men from different religious communities in his empire. The religious communities patronized by him included Brahmacharis, Parivrajakas or Jains, Bhikshus and Nirgranthakas of Buddhist religion. Towards the end of the inscription it also notes down that he had built a large temple for the Hindu deity, Shiva.[5] Broken burnt bricks and rubble of an ancient structure are found in the Asanpat area believed by many scholars to be the remnants of this temple.
 


__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
நடராஜர்
Permalink  
 


Eliphanta caves

Mumbai Borivali Kanheri caves Mandapeshwar Caves  https://en.wikipedia.org/wiki/Kanheri_Caves https://en.wikipedia.org/wiki/Mandapeshwar_Caves

Nachna Panna caves  https://en.wikipedia.org/wiki/Nachna_Hindu_temples

Bairavakonna

Mogalarajapuram 

Badami

Pattatakkal

Aihole 

Seeyamangalam

Undavalli



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Nataraja
Permalink  
 


 

UDAYAGIRI & KHANDAGIRI CAVES | BHUBANESWAR

https://indroyc.com/2019/12/16/udaygiri-khandagiri-caves/

 

https://manishjaishree.com/rani-gumpha-ganesha-gumpha-udayagiri-khandagiri/

Three Phases Of Caves Architecture

1st Phase (2nd B.C. To 2nd Century A.D.)

  • In this phase the construction was exclusively related to Buddhism and Buddha was represented symbolically e.g. Lotus, Wheel etc.
  • The examples of this phase include AjantaKarlaBhajaKanheriNasikBedsa caves.
  • It can be concluded that an important connection existed between the religion and commerce, as Buddhist missionaries often built monasteries (caves) in closer proximity to the major trade routes. Some of the caves were also commissioned by wealthy traders resulting in the interiors of the caves being more elaborate.

2nd Phase (5th To 7th Century A.D.)

  • Buddha was personified and the plan of excavations-specially for chaitya remained the same as before but viharas underwent some changes like an image of Buddha was housed.
  • By the 5th century, rock-cut cave temples continued to be built in parallel along with free-standing structural temples.

3rd Phase (7th To 10th Century A.D.)

  • The Buddhist architectural traditions were also extended by Hindus and Jains along with some modifications which were suitable for their rituals.


__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

Rock Art (Part-2)

https://www.drishtiias.com/to-the-points/paper1/rock-art-part-2



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

நச்னகுதாராவிலுள்ளபொ.யு.ஐந்தாம்நூற்றாண்டு ஆடல்வல்லானின் சிற்பம். உடைந்த நிலையில் இருப்பினும் இங்கே டோல ஹஸ்தமாக வலக்கரத்தை இடப்புறத்தே வீசும் வண்ணம் வடிக்கப்பட்டுள்ளதை காணுங்கள். குப்தர்கள் காலத்திலேயே நடன கோலத்தில் எம்பெருமான் வடிக்கப்பட்டதற்கு முக்கியமான தரவு இச்சிற்பமே.

காதணியும் பிற்காலத்தை ஒட்டிய நடைமுறையின்றி வலக்காதில் பத்ரகுண்டலமும் இடது காது மடலினில் ஸ்படிக குண்டலமும் அணிவிக்கப்பட்டுள்ளது விந்தையிலும் விந்தை...
Siva Nataraja of Nachna Panna, MP, 400-499 CE, Purple Sandstone. Note Patrakundla in right ear and Sphatiga Kundala in left ear. The right normal arm is swung across his chest as seen from the position of his shoulders. One hand on right side shows Abhaya Mudra.
Image from VMIS Gallery

முதன்முதலாக சிற்பங்கள் வாயிலாக குப்தர்களின் காலங்களில் வடிக்கப்பட்ட சிவபெருமானின் நடனக்காட்சிகள் நமக்கு இன்றும் முழுமையாக காணக் கிடைக்கின்றன. அவர்களின் சிறப்பான மேலோங்கிய ஆலயங்களில் ஒன்றுதான்மத்தியப்பிரதேசமாநிலத்தில்அமைந்துள்ளபூமராசிவபெருமான்ஆலயம். முற்றிலும் இடிபாடுற்றுள்ள இந்த ஆலயத்தின் சிற்பப் பகுதிகளும் தொகுப்புகளும் பல இடங்களிலும் அங்கே பரவிக் கிடந்தன. அவற்றுள் சந்திரசாலாஎனஅழைக்கப்படும்சாளரக்கூடுஒன்றில்பத்துகரங்களுடன், ஜடாபாரம், கஜஹஸ்தம், குஞ்சிதபாதம், ஸ்திதபாதம்ஆகியவற்றுடன்தாண்டவேஸ்வரரின்கோலம்ஒன்றும்சிதைந்துகாணப்பட்டது. பொதுயுகம்ஐந்திற்கும்முற்பட்டஇக்காலத்தில் காணப்படும் ஜடாமகுடம் பிற்காலத்தில் காணக்கிடைக்கும்பாண்டியகாலஜடாபாரத்தினைஒத்திருப்பதுவியப்பிற்குரியவிஷயம். இந்த கோலம் தமிழகத்தின் சீயமங்கலம் பூஜங்கத்ராஸரின் காலத்திற்கு வெகு முந்தையது.

 

பூமராவிற்கு அருகில் உள்ள மற்றுமொரு பழங்கால குப்தர்களின் ஆலயம்நச்னகுதாரா. இங்குகண்டெடுக்கப்பட்டநான்குகரநடராசரின்சிற்பம் ( உடைந்தசிற்பமே ) வரலாற்றுஆய்வாளர்பியுபல்ஜெயகரின்பாதுகாப்பில்உள்ளதாம். வெகு நாட்கள் தேடியபின்னர் எதிர்பாராமல் நண்பர் John Anderson மூலமாக இந்த சிற்பத்தின் நிழல்படமும் எனக்கு கிடைத்தது. அந்த படத்தினை அடுத்த பகுதியில் பகிர்கிறேன். இதே ஆலயத்தில் குள்ள வடிவுடன் வலக்காலை உயர்த்தி நடனம் புரியும் வாமதேவசிவனின்சிற்பம் ஒன்றும் உள்ளது. அருகில் பூதகணங்களுடன் இடக்கையில் அபயம் காட்டி வலக்கைதனை கஜஹஸ்தமாக தொங்கவிட்டு நான்கு தோள்களுடன் புஜங்கத்ராஸ கரணத்தில் இவர் வடிக்கப்பட்டுள்ளார்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 நச்னா குதாராவின் நடேசமுர்த்தி குப்தர்கள் காலமான ஐந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகவும் இதுவே நமக்கு முதன்முதலாக சரித்திர பூர்வமாக காணக்கிடைக்கும் தாண்டவமூர்த்தி சிற்பம் அன்றும் குறிப்பிட்டேன் அல்லவா. இந்த சிற்பத்தின் நிழற்படம் திரு. C. சிவராமமூர்த்தி அவர்களின் “Nataraja In Art, Thought and Literature” என்ற புத்தகத்தில் இருந்து John Anderson அவர்களால் எனக்கு பகிரப்பட்டது. இணையத்தில் எங்கு தேடினும் இந்த சிற்பத்தின் படமோ வேறு தகவல்களோ கிடைக்கவில்லை. அதே ஆலயத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நான்கு கர நடராஜமூர்த்தியின் புகைப்படம் Virtual Museum of Images and Sounds (VMIS) இணையத்தின் வாயிலாக கிடைக்க அதனை இந்த பகிர்வினில் இணைத்துள்ளேன். இந்த சிற்பமானது மதுரை வெள்ளியம்பலத்தில் கால்மாறி ஆடின கோலத்துடன் ஒத்துப்போவதாக திரு. C. சிவராமமூர்த்தி அவர்கள் அதே புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட அநேக தாண்டவமூர்த்தி சிற்பங்களில் பெரும்பாலும் நான்கு கரங்களுக்கு மேல்தான் காண்பிக்கப்பட்டுள்ளன. கவி காளிதாசர் இதைப்பற்றி "புஜதாருவனம்" என்ற பதத்தினால் வர்ணிக்கிறார். புஜம் என்றால் தோள். தாருவனம் என்றால் மரங்கள் நிறைந்த காடு. என்ன ஒரு சொல்வளமிக்க கற்பனை !! நமது தென்னகக் கோயில்களில் கோபுர சிற்பங்களில் அநேக கரங்களுடன் மஹாஸதாசிவமூர்த்தி வடிக்கப்பட்டுள்ளதை இங்கே உணர்வில் கொள்ளலாமே.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 

அடுத்தாக சிர்பூர் என்ற தலத்திலுள்ள கண்டேஸ்வர மஹாதேவ் ஆலயத்தில் வழிபாட்டில் உள்ள குப்தர்கால ஆடல்வல்லானைப்பற்றி பார்ப்போம். சிர்பூர் தற்போதைய சட்டிஸ்கர் ( சத்தீஸ்கர் ) மாநிலத்தில் மகாநதிக்கரையினில் உள்ள ஒரு பண்மையான நகரம். குபேர நகரம் என்ற பொருளைத்தரும் 'ஷீ(ர்)பூர்' என்ற ஆதிப்பெயரால் இது அழைக்கப்பட்டிருக்கிறது. இங்கு கிடைத்திருக்கும் ஏராளமான தொல்லியல் சான்றுகள் மற்றும் இங்கு காணப்படும் தனித்தன்மையான கலாச்சார பாரம்பரிய அம்சங்கள் போன்றவை அதற்கான ஆதாரங்களாக விளங்குகின்றன. சத்தீஸ்கர் மாநிலத்தின் தலைநகரமான ராய்பூரிலிருந்து 80 கி.மீ தூரத்தில், மஹாநதியின் கரைப்பகுதியில் அமைந்து பல்வேறு மதங்களையும் அரவணைத்து ஆதரவளித்து ஆண்ட சோமவன்ஷி ஹிந்து மன்னர்களின் மஹோன்னத ராஜ்யமாக இது ஒரு காலத்தில் திகழ்ந்திருக்கிறது.

 

 

சிர்பூர் 5ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்டதாக கருதப்படுகிறது. ஆயினும் 6ம் நூற்றாண்டிலிருந்து 10ம் நூற்றாண்டு வரை ஒரு முக்கியமான பௌத்த யாத்திரை ஸ்தலமாகவும் இந்த இடம் விளங்கியிருக்கிறது. 12ம் நூற்றாண்டில் ஏற்பட்ட ஒரு நிலநடுக்கத்தின்போது இந்த ஒட்டுமொத்த நகரமும் புதையுண்டு போனது. அந்த பின்னணியில் நமக்கு கிடைக்கும் சான்றுகள்தான் இந்நகரத்தின் மஹோன்னத வரலாற்று பெருமைகளைக் கட்டியம் கூறுகின்றன.  

கண்டேஸ்வர மஹாதேவ் ஆலயம் அங்கே சிதறுண்ட கிடந்த பல்வேறு ஆலய எச்சங்களை வைத்து தற்போது நவீன கட்டுமானங்களோடு மீண்டும் உயிர் பெற்றுள்ளது. இங்கு ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து வழிபாட்டிலிருந்த பல கற்சிலைகளும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் ஒன்றுதான் எட்டுகரங்களோடு காணக்கிடைக்கும் ஆடல்வல்லானின் சிற்பம். தனது மேல் இரு கரங்களில் படமெடுக்கும் நாகத்தினை ( கார்க்கோடகன் என்று சொல்லுவர் ) தூக்கிப் பிடித்து சதுர தாண்டவ கோலத்தில் வலது பாதத்தின் விரல் நுனிகளை கீழே ஊன்றி வைத்து இடது முழங்காலையும் சற்றே வளைத்து அதற்கேற்றாற்போல் இடுப்பினையும் ஒயிலாக வளைத்து வலது முன்கரத்தினை டோலஹஸ்தமாக முன்னே இடப்பக்கமாக நீட்டி இடது முன்கரத்தினில் அபயமுத்திரை காட்டி இவர் ஆடும் கோலம் கவின்மிக்கது. தலைமீதுள்ள ஜடாபாரமோ குப்தர்கள் காலத்திய அழகிய உருண்டைக் கொண்டையாகவும் அணிகலன்களும் அதேபோல் எழில் சார்ந்து உடலெங்கும் விளங்க ஊர்த்வரேதஸுடன் வடிக்கப்பட்டுள்ளார் ( நிமிர்குறி என்பது தற்காலத்தில் பொதுவாக நம்மால் விளங்கக்கூடிய வகையில் உபயோகப்படுத்தப்படுகிற சொல்தான்; இந்த அடையாளக்குறிப்பைப்பற்றி சற்றே விரிவாக பின்னர் பார்க்கலாம் ). இவரது இரு வலக்கரங்களில் துடி – டமருகமும், முத்தலைசூலமும் காணப்படுகின்றன. இடது கரம் ஒன்றில் கபால பாத்திரம் உள்ளது. மற்றுமொரு கரத்தில் உள்ளது என்னவென்று சரியாக விளங்கவில்லை. புரிந்ததும் மீண்டும் பகிர்கிறேன். இவரைச் சுற்றி பல சிவகணங்களும் ஆடும் அல்லது மகிழ்ந்திடும் சூழலில் ஒரே புடைப்புச் சிற்பமாக இந்த மூர்த்தம் சீருடன் இலங்குகிறது. அம்பிகை இடப்புறத்தில் அமர்ந்த நிலையிலும் கணேசர் வலப்புறத்தில் ஆடும் கோலத்திலும் காட்டப்பட்டுள்ளனர். நடராஜரின் இரு கால்களுக்கு மத்தியில் உள்ளவர் பிருங்கியாக இருக்கலாம் என்பது எனது கருத்து. கீழே ஸ்வாமியின் காலடியில் ஒரு பூதகணம் மத்தளம் வாசிப்பது வெகு இயல்பு. அதே போல ஸ்திதபாதத்தின் கீழே நந்தியும் காணப்படுவதால் பிற்கால பாலா-சேனா அரசு படைப்புகளின் ரிஷபதாண்டவ மூர்த்தியும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே உருவாகிய இந்த சிற்பப் பாணியை பின் பற்றியிருக்கலாம் என்று நான் கருதுகிறேன். இடபமும் மேலே தலையைத் தூக்கி தனது பெருமானின் நாட்டியத்தை பார்த்தவாறு செதுக்கப்பட்டிருக்கிறது. சாளுக்கியரின் படைப்பான பாதாமியின் லலித நாட்டிய கோலத்திற்கும் இவருக்கும் வெகு வித்தியாசங்கள் இல்லைதான். காலம் பல நூற்றாண்டுகளைக் கடப்பினும் ஆடல்வல்லானின் சிற்பங்களின் அணிவகுப்பும் பாணியும் ஒரே சாயலில் காணப்படுவது நமக்கு இயல்பான வியப்பே.  

 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

கர்நாடக மாநிலம் பட்டாடக்கல்லிலுள்ள ஜம்புலிங்கேஸ்வரர் ஆலய சிகரத்தின் சுகநாசியில் ஸ்வாமி ரிஷபாந்திகராக உமையம்மை உடனாட நாகராஜாவும் நாகராணியும் இருபுறமும் வந்தனம் செய்ய வித்யாதரர்கள் ( ? கந்தர்வர்கள் ) இருபுறமும் துதி செய்ய நடனமிடும் காட்சியை நாம் காண்கிறோம். இடது கரம் கஜஹஸ்தமாகவும் வலது கரம் அபயமுத்திரை காட்ட சோழர்கள் கால சதுர தாண்டவமூர்த்தி போன்ற அமைப்புடன் இச்சிற்பம் படைக்கப்பட்டுள்ளது. வலது கரங்களில் மழுவும் துடியும் பிடித்து இடது கரங்களில் நாகத்தையும் அம்பிகையையும் அரவணைக்க ஆடல்வல்லான் அழகிய தோற்றத்தோடும் மேலே கீர்த்திமுகமும் இலங்க அருள் நடம் புரியும் காட்சி சிந்தையை கவர்கின்றது. இந்த நிழல்படங்கள் நண்பர் Ramakrishna Kongalla, Thomas Alexander ஆகியோரின் தொகுப்பிலிருந்து பகிரப்படுகின்றன. இந்த சாளுக்கியர் கால ஆலயம் பிற்கால ஏழாம் நூற்றாண்டு முதல் முற்கால எட்டாம் நூற்றாண்டுவரை உள்ள காலத்தைச் சார்ந்ததென தொல்பொருள் துறையினர் கருதுகின்றனர்.

பிற்காலங்களில் தாந்த்ரீக அடிப்படையிலான பைரவரின் வழிபாடுகளும் காபாலிக மதத்தின் கோட்பாடுகளும் மேற்கிலிருந்து கிழக்கு கடற்கரை வரையிலும் விழுமிய சைவத்தின் பல்வேறு கோட்பாடுகளைச் சார்ந்து வளர்ந்தபொழுது தாண்டவக்கோலத்தின் படைப்பும் மேலும் பரவி பைரவரையும் இதேபோல் தாண்டவேஸ்வரராக சித்தரிக்கும் பாணியையும் பிரபல்யமாக்கியது. எனவேதான் பத்தாம் நூற்றாண்டிற்குப் பிறகான காலம் வரையறுக்கப்பட்ட பல ஒடிசா மாநில ஆலயங்களிலும் பைரவரையும் ஆடல்வல்லானாகவே காட்சிப்படுத்தியுள்ளனர். இவற்றோடு திகம்பரராக காட்சி கொடுக்கும் பிக்ஷாடன மூர்த்தியையும் பல சிற்பத்தொகுதிகளில் நடனம் புரியும் பாவனையில் நாம் இன்றும் காண்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

மும்பைகரபுரியின்ஆடல்வல்லான் :-

மும்பையின் புறப்பகுதியில் கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கரபுரி தீவுகளில் உருவாக்கப்பட்ட எலிபெண்டா குகைக்கோயில்கள் உருவான காலம் பற்றி வேறுபட்ட தரவுகள் பல உள்ளன. அக்ரஹாரபுரி என்பதன் மருவலே கரபுரி. இங்கே உள்ள குஷானர்களின் ஆட்சிக்காலமான பொது யுகம் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த ஸ்தூபி வகையறாக்கள் பௌத்த சமயம் இங்கே மிகவும் புராதனமான காலம் முதலே பரவலாக இருந்ததற்கு சான்றுகள் அளிக்கின்றன. இரண்டு குன்றுகளாக இவற்றை பிரித்தால் அவற்றுள் கிழக்கு குன்றினில் பௌத்த ஸ்தூபிகளும் மேற்கு குன்றினில் சிவபெருமானின் குடைவரை ஆலயமும் உள்ளன. இங்கு உள்ள இந்து சமய குடைவரைகள் பாசுபத மதத்தினை வழுவியவரால் உண்டாக்கப்பட்டன.

பொதுயுகம் ஐந்தில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் நானூறு ஆண்டுகள் வரை இங்கு பல்வேறு குகைகள் உருவாக்கப்பட்டன. அவற்றுள் தலையாயது மஹேஸ்வர மூர்த்தியின் மூன்று முக புடைப்புச் சிற்பம் உள்ள பிரதான குகையே ஆகும். ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரும் வழிபாட்டுத் தலமாக விளங்கிய இந்த குடைவரைக் கோயில்களில் பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகீசியர் ஒரு படைத்தளம் அமைத்த பின்னர் அவர்களது போர்வீரர்களின் துப்பாக்கி மற்றும் பீரங்கி குண்டுவீச்சு பயிற்சிகளினால் கண்கவர் அழகு படைத்த மகத்தான இந்த குடைவரை சிற்பங்கள் பாழடைந்தன. ஆலயங்களும் சீர் குலைந்தன. குஜராத்தை ஆண்ட சுல்தான்களிடமிருந்து இந்த தீவு போர்த்துகீசியர் கைகளுக்கு மாறியதினால் ஏற்பட்டதே இந்த அவலநிலை.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

பொதுவான கருத்துப்படி ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டு வரையிலும் இராஷ்டிரகூட அரச காலம் வரையிலும் இந்த குடைவரைகள் நிர்மாணிக்கப்பட்டதென நாம் இணையங்களின் வாயிலாக அறிந்து கொள்ளுகிறோம்நண்பர்கள் இதற்கான சரியான தரவுகளை தந்துதவினால் மிகவும் சிறப்பேஎனினும் Fergusson போன்ற சில ஆராய்ச்சியாளர்கள் ராஷ்டிரகூட அரசர்களின் படைப்பே இந்த சிவாலயங்கள் என்றும் K V Soundara Rajan போன்றவர்கள் சாளுக்கியரின் படைப்பே இவை என்றும் Colin Smith போன்றவர்கள் காலாச்சூரி அரசர்களே இந்த குடை வரைகளை உருவாக்கினர் என்றும் விவாதிக்கின்றனர்கிழக்கு இந்திய பிரதேசத்தில் வாகாடகர்களின் ஆட்சி வீழ்ந்தபின்னர் சாதவாஹனர்களைத் தொடந்து விஷ்ணுகுண்டின அரசர்கள் எழுச்சி பெற்றது போல் காலாச்சூரி அரசர்கள் வாகாடகர்களுக்குப் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றினர்இவர்களுக்கும் வாகாடக அரசர்களுக்கும் இடையில் திருமணத்தின்மூலம் பந்தமும் இருந்ததுசாளுக்கியரின் சிறப்பான சிற்பக் கலையின் மகத்தான உதாரணங்கள் பாதாமிஐஹொளேபட்டாடக்கல் ஆகிய இடங்களில் அளவற்று காணப்படுகிறதுஅவர்களின் சிற்பப் படைப்புகளுக்கும் எலிபெண்ட்டா குடைவரையில் நாம் காணும் சிற்பங்களுக்கும் சிறிதளவு கூட ஒப்புவமை இல்லை என்பது காண்போர் அனைவருக்கும் எளிதில் புரியும்.

 எலிபெண்டா குடைவரை கோயிலில் முக்கியமானதும் அளவில் பெரியதுமான முதலாம் குகைப்பகுதி வடக்கு தெற்கு மார்க்கமாக மலையினை குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குடைவரையின் வடக்கு வாயிலின் இருபுறமும் குப்தர்கள் காலத்தியதாக கணிக்கப்படும் புடைப்புச் சிற்பங்களுள் மேற்கு நோக்கிய சுவற்றில் யோகீஸ்வரசிவ கோலமும் கிழக்கு நோக்கிய சுவற்றில் நடராஜரின் தாண்டவக் கோலமும் வடிக்கப்பட்டுள்ளன. குகையின் தெற்குச்சுவற்றில் மையமாக சதாசிவமூர்த்தியின் உருவமும் இருமருங்கிலும் அர்த்தநாரீஸ்வரக் கோலமும் கல்யாணசுந்தரரின் மணக்கோலமும் செவ்வனே செதுக்கப்பட்டுள்ளன. சதாசிவ சிற்பம் இருபதரை அடி வரையிலும் உயர்ந்து நம்மை மலைக்க வைக்கின்றது. அதே போன்று ஏனைய சிற்பங்களும் உயரத்தில் பதினாறு அடிகளுக்கு குறையாமல் பிரமாண்டமாக வடிக்கப்பட்டுள்ளன. 

 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 நடராஜரின் தாண்டவக்கோலம் பதின்மூன்று அடி அகலமும் பதினொன்று அடி உயரமும் உள்ள புடைப்புச் சிற்பமாக மேற்கு சுவற்றின் கீழ்ப்பகுதியில் அமைந்துள்ளது. நிருத்தமூர்த்தியாக கருதப்படும் இவர் பெரும்பாலும் சேதமுற்றவரே. இவரது எட்டு கரங்களில் பலவற்றைக் காணவில்லை. லலித கரணத்தில் நடனமிடும் இவரின் இடுப்பிற்கு கீழே உள்ள பெரும்பகுதிகளையும் காணவில்லை. வலக்கரம் ஒன்றில் தூக்கிப்பிடிக்கப்பட்ட பரசுவில் வளைந்து நெளிந்து தொங்கும் நாகம் நம்மை வியப்புற வைக்கிறது. இடது கரம் ஒன்றினில் தனது உத்தரீயத்தின் ஒரு பகுதியை தூக்கி பிடித்தவாறும் இந்த சிற்பத்தில் காண்பித்துள்ளனர் ( இத்தகு பாணி இன்னும் நிறைய சிற்பங்களில் நம்மால் காண முடிகிறது. ஒருவேளை இதுவே பின்னாளில் சோழஅரசர்களின் காலத்தில் செப்புப்படிமங்களில் இடது தோளின் மீது வடிக்கப்படும் உத்தரீயத்திற்கு முன்னோடியோ தெரியவில்லை. ஆயினும் எனக்கு அப்படியும் இருக்கலாம் என்று ஊகிக்கத்தோன்றுகிறது ). பிற கரங்களுள் வலது முன் கரம் டோலஹஸ்தமாக இடப்புறமாக வீசி ஆடும் வண்ணம் காணப்படுகிறது. இவரது வலது துடையின் மேலெழும்பிய பகுதி வலது முழங்காலை மடித்து லலித கரணமாகவே வைத்திருப்பதை நமக்கு உணர்த்துகின்றது. ஸ்தித பாதமாக இருக்கவேண்டிய இடது கால் முழுவதிலும் முற்றாக சேதமடைந்து இடுப்பு பகுதியிலிருந்தே இல்லாதது மிகவும் வருந்தத்தக்க ஒன்று. இவரைச்சுற்றி உள்ள மேற்பகுதிகளில் பிரம்மா, விஷ்ணு, இந்திரன், அரம்பையர் முதலானோர் இருக்க பிருங்கியும் கணேசரும் இந்திரனும் கார்த்திகேயனும் இவரது வலப்பக்கத்தில் காட்சி தருகிறார்கள். ஈசனின் இடப்பக்கம் அம்பிகையும் பரமனின் களி நடனத்தைக் காண, இருபுறமும் சேடியரும் பூதகணங்களும் பிற இருடியரும் சுரர்களும் படை சூழ, பிரபஞ்ச இயக்கத்தை, தனது தாள லய ஸ்ருதிகளுடன் பரமேஸ்வரன் நிருத்த மூர்த்தியாக தரிசனம் அளிக்கிறார். என்னே சிற்பிகளின் கற்பனை வளம். என்னே அவர்தம் சீரிய பணி. எத்துணை நேரம் நோக்கினும் சலிக்காத ஆனந்த காட்சியல்லவா இது. இதுவன்றோ நமது பிறவிப்பேறு. இதைக்காணத்தானே நாவுக்கரசர் கயிலையை நோக்கி மெய் தேய கடும் பயணம் செய்தார். ஈசனால் அம்மை என அழைக்கப்பட்ட காரைக்கால் கண்ட கனிஅமுதம் பரமனின் பேரானந்தத்தருளினால் ஆலங்காட்டிலேயே இக்காட்சியை தரிசனம் செய்ய நேர்ந்தது. இந்த காணுதற்கரிய காட்சியை காணவல்லோ புலிக்கால் முனிவரும் பதஞ்சலி மகரிஷியும் தில்லை வனக்காட்டில் கடுந்தவம் செய்து இறைவனடி ஏகினர்...



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

ஐந்தாம் நூற்றாண்டினை சார்ந்த வாகாடக அரசர்களின் வாமன சிவனின் சிற்பம். குப்தர்களின் சிற்பப்பாணிக்கு இது ஒரு தலைசிறந்த உதாரணம். மகாராஷ்டிரா மாநிலத்தின் மன்சார் பகுதியில் ( ராம்டெக் தாசில், நாக்பூர் மாவட்டம்; நாக்பூரிலிருந்து 45 கிமீ தொலைவு ) கண்டெடுக்கப்பட்டு தற்பொழுது புது டில்லியின் இந்திய தேசிய பொது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Shiva Vamana Sculpture from 5th Century CE, Vakataka Period, Mansar, Ramtek Tehsil, Nagpur District, Maharashtra, Exhibited in National Museum of New Delhi.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

சைவசமய மார்க்கம் பரந்த வட இந்திய பகுதிகளில் மட்டுமின்றி தக்காணத்தில் மகாராஷ்டிரம் முதல் ஒரிசா வரையிலும் தெற்கே பாண்டியர் மண்ணிலிருந்து கிழக்கே ஆந்திரா வரையிலும் மேற்கே கர்நாடகா வரையிலும் பல்கி அரச புரவலர்களால் ஆதரிக்கப்பெற்று பல சிறப்பான ஆலயங்களும் நிர்மாணிக்கப்பட்டன. இவற்றை தனித்தனியாக ஆய்ந்தால் மேலும் நமது புரிதல் நன்கு தெளிவாகும். 

ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவிற்கு ஐந்து கிலோமிட்டர் தொலைவில் உள்ள ஒரு பாரம்பர்ய சின்னம் மொகலராஜபுரம் குடைவரைகள். இந்த குடைவரைகள் ஐந்தாம் அல்லது ஆறாம் நூற்றாண்டினை சார்ந்ததாக பல தரவுகள் இருந்தாலும் இங்குள்ள குடைவரைகளில் இரண்டு பௌத்த குடைவரைகளாகவும் மூன்று இந்து சமய குடைவரைகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. கிருஷ்ணா மாவட்டத்தில் விஜயவாடாவின் கஸ்தூரிபாய்ப்பேட்டை என்னும் இடத்தில் உள்ள இந்த குடைவரைகள் 19 அடி உயரம் வரையிலும் சிறிய பாறை போன்ற குன்றுப்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளன. ஒரு மலைமுகட்டின் இருபகுதிகளில் தனித்தனியே இவை உருவாக்கப்பட்டவை. கருவறை, முகமண்டபம் ஆகியவைகளுடன் பாறையின் வெளிப்பகுதிகளில் இருந்து ஆரம்பித்து படிப்படியாக வெட்டி உருவாக்கப்பட்ட இந்த குடைவரைகளில் இனி முதலாம் குடைவரைக்கு வருவோம். இக்குடைவரையின் மற்றோரு பக்கத்தில் அமைந்துள்ளதே இரண்டாவது குடைவரை

முதலாம் குடைவரை கருவறை, முன்மண்டபம் ஆகியவை கொண்ட ஒரு சிறு ஆலயமாக வடிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் இரண்டு தூண்கள் கொண்ட முன்மண்டபத்தில் நடுவில் அமைந்துள்ள வாயிலுக்குள் பிரவேசிக்க மூன்று படிகளையும் காண்கிறோம். சதுர வடிவ ப்ரஹ்மகாந்த தூண்களில் நடுப்பகுதி விஷ்ணுகாந்தமாக எட்டுபட்டைகளுடன் அமைந்துள்ள. மேலே உள்ள கபோதம் மற்றும் தூண்களின் பொது அமைப்பு முற்கால குடவரைகளின் பாணியை ஒத்துள்ளது. இந்த வெட்டு போதிகைகளின் மேலே அமைந்த கபோதத்தின் நெற்றியில் நாசிக்கூடுகள் வெட்டப்பட்டுள்ளன. போதிகையின் கீழ்ப்பகுதியில் வரிவடிவங்கள் தொகுப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. மிகவும் முற்காலங்களில் இந்த போதிகை எந்தவித அழகு உறுப்புகளும் இல்லாமல் வெறுமனே வளைந்த வடிவுடனோ அல்லது நீள்சதுர வடிவுடனோதான் அமைக்கப்பட்டன. ஆனால் இங்கோ கீழ்ப்பகுதியில் படிப்படிகளாக அமைந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கின்றன. கபோதப்பகுதியின் முதல் நாசிக்கூட்டில் மூன்று முக உருவமும் ( ? பிரம்மா ), பிறவற்றில் தம்பதி சமேதராக மார்பளவு உள்ள தெய்வ உருவங்களும் வடிக்கப்பட்டுள்ளன. முதலாமவர் பிரம்மா என்று சிலர் கருதினாலும் எனக்கு இவர் சதாசிவ சொரூபமாகத்தான் தெரிகிறார். கபோதத்தின் நாசிக்கூடுகளில் உள்ள மற்றைய இரண்டு உருவங்களும் சிவனின் பிற ரூபபேதமே. பிரதான கருவறையில் அர்த்தநாரீஸ்வர கோலம் வடிக்கப்பட்டுள்ளதிலிருந்து இது ஒரு சிவாலயமாக உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் தெளிவாக அனுமானிக்கலாம்.

உள்ளே கருவறையில் ஒரு உடைந்த யோனிபீடம் ( ஆவுடையார் ) மட்டுமே எஞ்சியுள்ளது. அதனுள் இருக்க வேண்டிய பாணலிங்கத்தைக்காணோம். கருவறையின் வெளிப்பக்கம் துவாரபாலகர்கள் உருவம் மெல்லியதாக தென்படுகிறது. இவை முற்றிலும் அழிந்து விட்டனவா அல்லது முழுமையாக வடிக்கவில்லையா என்பதும் தெளிவாக தெரியவில்லை. குடைவரையின் முகமண்டபத்தின் முற்பகுதியில் இருபுறமும் கோஷ்டங்கள் வெட்டப்பட்டு அவற்றில் துவாரபாலகர்களும் கருவறையின் இருபுறமும் விநாயகரும் ஆடல்வல்லானும் புடைப்புச் சிற்பங்களாகவும் வடிக்கப்பட்டுள்ளனர்.

குப்தர்கள் காலமான நான்காம் நூற்றாண்டிலிருந்தே விநாயகரின் அமைப்பை நாம் பொதுவாக கற்சிலைகளில் காண்கிறோம். இங்கு உள்ள கணேசரின் புடைப்புச் சிற்ப வடிவம் சற்றே பரிணமித்து ஐந்தாம் நூற்றாண்டின் கால அமைப்பை ஒத்துள்ளதாக நான் கருதுகிறேன். ஆலயத்தின் முன்புறத்தில் அதிஷ்டானத்தில் அவற்றின் அங்க அமைப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டு செதுக்கப்பட்டுள்ளன. மொகலராஜபுரத்தில் உள்ள ஐந்து குடைவரைகளில் இது மட்டுமே சற்றே நல்ல நிலையில் உள்ளது. மீதமுள்ள குடவரைகள் பெரும்பாலும் பாழ்பட்டுத்தான் போயிருக்கின்றன. இங்கு உள்ள துவாரபாலகர்களும் தலையில் கொம்பு போன்ற அமைப்புடன் வடிக்கப்பட்டுள்ளதால் இவர்கள் நந்தியும் மஹாகாளரும் அல்லது மழுவுடையார் மற்றும் திரிசூலநாதர் என்று முடிவு செய்யலாம். இவர்களின் சிற்பப்பாணி சீயமங்கலம் குடைவரை துவாரபாலகர்களை போலவே வடித்துள்ளது நமக்கு சற்றே ஆச்சர்யத்தைத்தரக்கூடும்.

பாறையின் முக முகப்பில் கபோதத்தின் மீது வரிசையாக சிறிய வடிவில் யானைகளும் சிம்ஹங்களும் அணிவகுப்பது போல வடித்துள்ளனர். இதற்கு மேலே மிகவும் சிதைந்து போன ஒரு தெய்வம் கீழே ஒரு அசுரனின் மீது நடனம் ஆடும் நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இதனை கொற்றவையின் வடிவமாகத்தான் கணிக்கிறார்கள். இடது காலை நன்கு மேலே தூக்கி வீழ்ந்த அசுரனின் மீது வலது பாதத்தினை மட்டும் ஊன்றி ஒரு இடக்கரம் ? டோலஹஸ்தமாக வலப்புறம் நீட்டியுள்ளதைப்பார்க்கும்போது நமக்கும் இது நடராஜரா அல்லது துர்கையா என பெருத்த சந்தேகம் எழுகின்றது. எனினும் கைகள் அனைத்தும் சிதைந்த நிலையில் வலது ஒரு கரத்தினில் தூக்கிப் பிடித்துள்ளது வாளா அல்லது திரிசூலமா என்பதிலும், வேறொரு கரத்தில் கட்வாங்கம் போன்ற ஆயுதத்தைப் பிடித்திருப்பதிலும் நமக்கு மேலும் குழப்பம்தான் மிஞ்சியுள்ளது. மார்புப் பகுதியையையும் வீசுகரம் மறைத்துள்ளது. எனினும் எனக்கு புரிந்த வரையிலும் இந்த புடைப்புச் சிற்பம் துர்கையாகயில்லாமல் அந்தகனை வென்ற சிவபெருமானின் கோலமாக இருக்கும் என்று மனதிற்குள் தோன்றுகிறது. ஒருவேளை அந்த காலடி கீழுள்ள அசுரன் முயலகனாகக்கூட இருக்கலாம். நண்பர்களின் கருத்துக்களை இங்கே பகிர்ந்தால் நன்று. 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

விஷ்ணுகுண்டின் மஹாராஜாவினால் உருவாக்கப்பட்ட இந்த முதலாம் கருவறையின் ஆடல்வல்லானைப்பற்றி சற்றே பார்ப்போம்.

ஊர்த்வஜானு கரணத்தில் காணப்படும் இந்த நடராஜரும் அபஸ்மார பூதத்தின் மீதே நடனமாடுகிறார். இந்த சிற்பமும் சேதமுற்றதே.. ஆயினும் பல்லவ காலத்திற்கு முற்பட்டதாகையினால் இந்த குடைவரையைப்பற்றி இவ்வளவு விரிவாக நான் பகிர நேர்ந்தது. வடஇந்திய பாணியை ஒத்து பற்பல கரங்களுடன் தென்னகப்பாணியை ஒத்து திருவடிக்குக் கீழே முயலகனோடு வடிக்கப்பட்டுள்ளது ஆறாம் நூற்றாண்டு காலத்தில் அரிதல்லவா !!

எனினும் எங்கு தேடினும் இந்த குடைவரையினுள்ளே அமைக்கப்பட்டுள்ள நடராஜ மூர்த்தத்தின் நிழற்படம் எங்குமே கிடைக்கவில்லை. நண்பர்கள் இந்த பதிவினைப் படித்த பின்னர் ஏதேனும் கிட்டினால் தயை கூர்ந்து எனக்கு பகிருமாறு பணிவன்போடு கேட்டுக் கொள்கின்றேன். நண்பர் பாலாஜி கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்றபோதும் அவரால் குடைவரையின் உள்பக்கம் படம் பிடிக்க இயலவில்லை என்பதும் வருந்தத்தக்கதே. ஆயினும் இந்த தொடருக்காக பல்வேறு தரவுகளுடன் படங்களை சேகரித்து பகிர்வினை எழுத்தாக்கம் செய்திட்டபோது அவரது பதிவு எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது. நமக்கு அதிகம் தெரிந்திராத இடத்தைப்பற்றி இரு வேறு நபர்கள் ஒரே சமயத்தில் தகவல்களை திரட்டி பகிர்வு இடுவது என்பது அனைவரின் வியப்பை தூண்டும் என்பதில் ஐயமில்லை.

அதெல்லாம் சரி. எங்கோ உள்ள ஆந்திர மாநில பகுதியில் அதுவும் ஐந்தாம் நூற்றாண்டிலேயே, இல்லை இல்லை, அதற்கும் முன்னரே உருவாக்கப்பட்ட குடைவரைகளில் எப்படி பல்லவரின் பாணி போன்ற அமைப்புகள் வந்தன



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Nataraja பைரவகோணா குடைவரை கோயில்கள் :-
Permalink  
 


பைரவகோணா குடைவரை கோயில்கள் :-

 

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பிரகாசம் மாவட்டங்களுக்கு நடுவில், நல்லமலை வனப் பகுதியில் பைரவகோணாவின் எட்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. அம்பாவரம் கொத்தப்பள்ளி கிராமங்களுக்கு அருகாமையில் அமைந்த இந்த தலம் கடப்பாவிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ளது. இந்த குடைவரைகளில் காணப்படும் தெய்வ உருவங்கள் மாமல்லபுரத்தின் சாயலை ஒட்டி அமைந்துள்ளன. மலை முகத்தில் வெட்டப்பட்ட இந்த குடைவரைகள் முகப்பு மண்டபத்தோடு அமைக்கப்பட்டு கோஷ்ட புடைப்புச் சிற்பங்களுடன் அழகுடன் அமைந்துள்ளன. ஏழாம் நூற்றாண்டின் பிற்பகுதிகளில் பல்லவ அரசர்களால் இவை ஆரம்பிக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவான கருத்து. மேலும் ராஷ்டிரகூட, சாளுக்கிய சிற்ப பாணிகளும் இவற்றுள் காணப்படுகின்றன.

 

இரண்டு வகைகளாக இந்த குடைவரைகளைப் பிரித்தோமேயானால் சில ஆலயங்கள் முகமண்டபமின்றி வெறும் கருவறை மட்டுமே உள்ளவைகளாகவும் மற்றும் சில மண்டபங்களோடு கூடிய முழு குடைவரைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளவை என்பது புரியும். முதல்வகைகளில் இருபுற முகப்பில் துவாரபாலகர்களும் உள்ளே கருவறையில் சிவலிங்கம் மட்டுமே உள்ளவாறு அமைந்துள்ளன. இந்த சிவலிங்கத்தின் ஆவுடையார் மட்டுமே தாய்ப்பாறையில் வடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னே ஒரு நந்தியும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கே உள்ள முழுமையான குடைவரைகளின் முன்மண்டபத்தின் தூண் அலங்கார அமைப்பை கூர்ந்து கவனித்தால் சதுர வடிவ பிரம்மகாந்த தூண்களின் இடைப்பகுதி எட்டு பட்டைகளுடனும் மேல்பகுதி உருண்டும் அதற்கு மேலே கபோதத்தில் நாசிக்கூடுகளும் அமைக்கப்பட்டுள்ளவை புரியும். பிரஸ்தாரத்தில் சிம்மவரியும் உண்டு. இந்த தூண்களின் போதிகைகளின் அமைப்பு சற்றே முற்காலத்தவை எனக்கருதலாம். கருவறையும் முன்மண்டபமும் வெளியில் இருந்து வெட்டப்பட்டு பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளன.

 

 

பைரவகோணாவிலுள்ள ஒருசில குடைவரைகளின் வெளியே காணப்படும் முற்கால விநாயகரின் திருவுரு. தமிழகத்தின் பாண்டிய பல்லவ சாயலை இவர் சார்ந்திருப்பது கண்கூடு. பொதுவாக பல்லவர்களின் காலத்தைச் சேர்ந்த குடைவரைகளில் நாம் சண்டிகேஸ்வரரைக் காண்பதில்லை. ஆனால் பைரவகோணாவிலோ பல குடைவரைகளின் வெளிப்புறத்தில் சண்டிகேஸ்வரரும் உண்டு. இவற்றிலிருந்தே பல்லவர் இந்த குடைவரைகளை உருவாக்கி இருந்தாலும் அவர்களின் காலத்திற்கு முற்பட்டசாளுக்கிய ராஷ்டிரகூட அமைப்பின் மரபுகளை மாற்றவில்லை என்ற கருத்து நிலவுகிறது. மண்டபத்தின் மேல்பகுதி கபோதத்துடன் அழகுடன் பல்வேறு உறுப்புகளை செதுக்கி படைத்துள்ளமை கண்ணுக்கு விருந்து. தூண்களின் மேற் பகுதியில் போதிகையில் சிம்மங்களும், அதற்கு மேலே பூதவரியும், கபோதத்தின் நெற்றியில் முகங்களுடன் கூடிய நாசிக்கூடுகளும் அதற்கு மேலே சிம்மவரிகளும் ஒரு முழுமையான கற்றளியை நமக்கு நினைவுபடுத்துகின்றன. வெட்டுப்போதிகையின் ரு பக்கமும் வளைவு மட்டுமே அலங்கரிக்கின்றன. ஒரு சில குடைவரைகளின் தூண்களின் கீழ் அமர்ந்துள்ள சிம்மங்கள் பல்லவரின் தனிப்பாணி. அங்கே தொங்கும் முத்துமாலை வளைவுகள் மேலும் நமது வியப்பினைத் தூண்டுகின்றன. பக்கவாட்டுச் சுவற்றுப்பகுதியில் சண்டிகேஸ்வரரும் முன்மண்டபத்தில் துவாரபாலகர்களும் அமைக்கப்பட்டுள்ளனர். துவார பாலகர்களின் அமைப்பும் பெரும்பாலும் பல்லவரின் சிற்பப்பாணியையே ஒத்திருப்பது தெளிவு.

 

பைரவகோணாவைப் பொருத்தமட்டில் பெயரை வைத்தே இங்கே பைரவருக்கே வழிபாடு பிரதானம் என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம். நான் முன்னர் சொல்லியவாறு, தாந்த்ரீக கோட்பாடுகளும் பிற சைவ சமய ஒழுக்கங்களும் பிரபல்யம் ஆகும்போது அங்கே வழிபாடும் கலாச்சாரமும் அதைச் சார்ந்து அமைக்கப்படும் ஆலயங்களின் அமைப்பும் அங்கே உள்ள மூர்த்தங்களின் ஸ்வரூபங்களும் மாறுபட்ட இயல்பில் படைக்கப்படுவது நமக்கு புதிதல்ல. இங்கும் வடிக்கப்பட்டுள்ள சிலாரூபங்கள் பல்லவ சிற்பக்கலையை ஒத்திருந்தாலும் இங்கே சிவபெருமானின் ரௌத்ராம்சம் புலப்படும்வகையில் அவை படைக்கப்பட்டுள்ளன. எனவே இங்கு காணப்படும் சிவபெருமானின் ஆடல் கோலமும் கூட நாட்டிய தோரணையிலுள்ள பைரவராகவே வடித்துள்ளனர்.

 

அதுமட்டுமின்றி இங்கே வடிக்கப்பட்டுள்ள மூன்றுமுக சதாசிவ மூர்த்தியைக்கூட திரிமுக துர்காம்பிகை மஹாதேவியாக மாற்றி உள்ளனர் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இந்த மூர்த்திக்கு பிரதி மாதம் பௌர்ணமி அன்று சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடத்துகின்றனர். இந்த சிலாரூபம் எலிபெண்ட்டாவின் முதலாம் குடைவரையிலுள்ள மஹாஸதா சிவமூர்த்தியின் உருவமே. 

 

 நண்பர் உயர்திரு Thomas அலெக்சாண்டர் 2016ஆம் ஆண்டின்போது எடுத்த நிழல்படங்கள் இந்த பதிவினில் இணைக்கப்பட்டுள்ளன. முதலில் அஷ்டபுஜ சங்கரநாராயணரைப்பற்றி பார்ப்போம். சங்கரநாராயணரின் புடைப்புச் சிற்பம் அமைப்பில் பல்லவரின் காலத்தை ஒட்டியே காணப்படுகிறது. இடது கரங்களில் சங்கு, சக்ரம், வாள் பிடித்து பிறிதொரு கரம் கடிஊருஹஸ்தமாக இடையினில் வைத்தவாறு காணப்படுகிறது. வலது கரங்களில் அபய முத்திரை காட்டி, மழு, திரிசூலம், அக்ஷமாலை ஆகியவற்றை பிடித்துள்ளார். நெற்றிக்கண்ணும், உபவீதமும், காதுகளில் குண்டலமும் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது. சிரத்தின் மீது அமைப்பட்டுள்ள மகுடமும் வலப்பக்கம் ஜடாமகுடமாகவும் இடப்பக்கம் ரத்ன மகுடமாகவும் வடித்துள்ளனனர். மல்லையின் கல் ரத சிற்பங்களையே பெரும்பாலும் இவர் நினைவுபடுத்துகிறார். இவருக்கு அடுத்து பல்லவர் கால ஆடல்வல்லானை நாம் காண்கிறோம்.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Nataraja
Permalink  
 


உலகப்புகழ் பெற்ற கன்ஹேரி குடைவரைகளும் நாம் காணப்போகும் மண்டபேஷ்வர் குடைவரைகளும் இங்குதான் அமைந்துள்ளன.

முற்பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாயின்ஸுர் குன்றில் குடையப்பட்டு உருவாக்கப்பட்ட மண்டபேஷ்வர் குடைவரைகள் டஹிஸார் ஆற்றின் கரையில்தான் ஆதியில் இருந்ததாம். ஆற்றின் பாதை காலப்போக்கில் மாறவே குடைவரையின் இருப்பிடமும் மாறிவிட்டது. பாயின்ஸுர் என்கிற பெயரே மண்டபேஷ்வர் என்ற பண்டைய பெயரின் மருவல்தான். கிழக்கு போரிவலியிலுள்ள சஞ்சய்காந்தி தேசிய பூங்காவின் ஒரு பகுதியில் அமைந்துள்ள கன்ஹேரி குகைகளைப்போல் மண்டபேஷ்வர் குடைவரைகள் பிரசித்தமாகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். போர்த்துகீசியர் இங்கே ஆட்சி செலுத்தியபோது அவர்களால் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று இன்றும் இங்கே குடைவரைகளுக்கு மேலே அமைந்துள்ளது. சுவாமி விவேகானந்தர் சாலை குடைவரைகளின் முன்புறத்தில் இருக்க குகைப்பகுதிக்கு முன்னர் உள்ள திறந்தவெளியோ அருகே குடியிருக்கும் குடிசைவாழ் மக்களின் விளையாட்டு மைதானமாகவும் வாகனங்களை நிறுத்துமிடமாகவும் மாறியுள்ளது தற்காலத்தின் கோலம்.

சுமார் ஆறாம் நூற்றாண்டு மத்தியில் ( 520-550 பொயு ) மும்பையின் ஒரு பகுதியில் ஜோகேஷ்வரி குடைவரைகள் உருவாக்கப்பட்டன. இதே காலகட்டத்தில்தான் மண்டபேஷ்வர் குடைவரைக் கோயில்களும் உருவாகின. ஜேம்ஸ் பெர்குஸன் ( James Fergusson ) போன்ற தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த குடைவரை எட்டாம் நூற்றாண்டில்தான் உருவாக்கப்பட்டது என்று கருதுகின்றனர். இந்த குகைகள் முதலில் பௌத்தபிக்குகளின் இருப்பிடமாகத்தான் முதலில் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். இவற்றைச்சுற்றி பின்னர் அவர்களின் ஆலயங்களும் மடங்களும் ஸ்தூபிகளும் உருவாகியிருக்கலாம். பாரசீக நாட்டினை சேர்ந்தவர்களைக் கொண்டு இயற்கை வண்ணங்களால் உருவாக்கப்பட்ட ஓவியங்கள் அக்காலத்தில் இந்த குகைகளின் சுவர்களை அலங்கரித்ததாம்.

 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

மண்டபேஷ்வர் என்றாலே மண்டபத்தின் இறைவன் என்றுதானே அர்த்தம்எனினும் பிற்காலங்களில் இந்த சுவற்றோவியங்களும் சிறிது சிறிதாக அழிந்துவிட்டனபோர்த்துகீசியரும் இந்த குடைவரையை அவர்களின் தேவாலயமாக மாற்றியிருந்தனர்இரண்டாம் உலகப்போரின்போது ஆங்கிலேயரின் படைவீரர்களும் இங்கே தங்கி இருந்ததாகக்கூட சொல்லுவதுண்டு.

பதினாறாம் நூற்றாண்டில் அந்தோனியோ டி போர்டோ என்னும் போர்த்துகீசிய ரோமானிய கத்தோலிக்கரால் மண்டபேஷ்வர் குடைவரையின் ஒரு பகுதி அவர்களது பிரார்த்தனைக் கூடமாக முதலில் மாற்றப்பட்டதுதினசரி சுமார் ஐம்பது சாதுக்கள் வரையிலும் அன்னம் பாலிக்க ஆலயத்திற்கு இருந்த வருமானம் மொத்தமும் கத்தோலிக்க திருச்சபைக்கு மாற்றப் பட்டதாம்குடைவரையும் தேவாலயமாக மாற்றப்பட்டபின் அருகிலேயே கிறிஸ்துவ பாதிரிகள் தங்க மடமும் ( Seminary, Chapel ) கட்டப்பட்டது. ( Notre Dame de la Misericorde ) நாட்ரிடேம் டி லா மிஸரிகார்ட் என்று அதற்குப் பெயர் இடப்பட்டது.

1739ஆம் ஆண்டுகளில் மராத்தியரின் படையெடுப்புக்குப்பின் இந்த குடைவரைகள் முற்றிலும் பாழ்பட்டு போயினகுடைவரையின் வாழ்விடங்களையும் கிறித்துவ மடாலயங்களையும் தேவாலயங்களையும் அவர்கள் தீயிட்டு கொளுத்தியதாகக்கூட செவிவழிச்செய்திகள் சொல்லுகின்றனஆயினும் இதற்கேற்ற நம்பத்தகுந்த தரவுகள் எனக்குக் கிடைக்கவில்லை

.

மண்டபேஷ்வர குடைவரையின் வடக்குப் பகுதியிலுள்ள மற்றுமொரு குடைவரையிலுள்ள ஆடல்வல்லானின் சிற்பமும் அவரை சுற்றிலும் காட்டப்பெற்ற பல்வேறு தெய்வ உருவங்களும் நமக்கு எலிபெண்டா குடைவரையின் லலிதகரண நடராஜரைத்தான் நினைவுக்குள் நிறுத்துகிறது. ஆயினும் இங்கே நடேசமூர்த்தியைச் சுற்றிலும் காணப்படும் கணேசர், ஆறுமுகர், பிரம்மா, விஷ்ணு ஆகியோர் அளவில் பெரியதாய் நெருக்கமாக காட்டப்படாமல் தெளிவாகவும் இடைவெளி வைத்தும் செதுக்கப்பட்டுள்ளனர். அதுவே இந்த குடைவரையின் தனிச்சிறப்பு. மண்டபேஷ்வர் குடைவரைகளில் தலையாயது இந்த ஆடல்வல்லானின் சிற்பம்தான். இங்குள்ள அர்த்தநாரீஸ்வர சிற்பமும் மிகுந்த அழகு வாய்ந்ததே. குகைகளின் தெற்குப்பகுதியில் உள்ள மற்றொரு சுவற்றில் காணப்படும் கல்யாணசுந்தரமூர்த்தியின் புடைப்புச் சிற்பமும் கண்ணை கவர்ந்து சிந்தையில் கிளர்ச்சியூட்டும்.



-- Edited by admin on Monday 11th of July 2022 12:16:15 PM

__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

ஐஹொளேயின் ஆடல்வல்லான் :-

ஐஹொளேயிலும் பாதாமியிலும் சாளுக்கியரின் தலை சிறந்த படைப்புகளான இரு ஆடல்வல்லானின் புடைப்புச்சிற்பங்கள் உலகளவில் பிரசித்தமானவை. இவ்விருவரின் ஐஹோளேயின் நடேச மூர்த்தம் காலத்தால் முந்தையது. எனவே அதனைப்பற்றி முதலிலே காண்போம்.

ஐஹொளேயின் மிகப்பழமையான குடைவரை ஒன்றிற்கு இராவணப்பாடி குகை என்று பெயர். பொயு 550ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட இந்த குடைவரை நமது தேசத்தின் மிக பழமையான குடைவரைக்கோயில்களில் ஒன்று. சிவாலயமாக குடையப்பெற்ற இதன் உட்புறத்தில் முற்காலத்தில் இயற்கை வண்ணப்பூச்சுகளால் ஆன ஓவியங்கள் அலங்கரித்தனவாம். இப்பொழுது ஆங்காங்கே அதன் எச்சங்கள் மட்டுமே ஆலயத்தின் விதானத்தில் எஞ்சியுள்ளன.

இந்த மண்டபத்து மையத்தில் பத்து கரங்களுடன் ஆடல்வல்லானும் அவரது இடப்பக்கத்தில் ஸ்கந்தனும் கௌரியும் நிற்க வலப்புறத்தில் இருகரம் கொண்ட விநாயகரும் சப்தமாதர்களில் ஒருவரும் உள்ளனர். சப்தமாதர்களின் பிற வடிவங்கள் மற்றோரு பக்கவாட்டு சுவர்களில் காட்டப்பட்டுள்ளது. சப்தமாதர்களின் புடைப்புச்சிற்பம் காலத்தால் முந்தையது. எனவே இருகரங்களுடன் அழகான தேவப்பதுமைகளைப்போல பக்கவாட்டு மண்டபத்தின் இருபக்க சுவர்களிலும் ஆடல்வல்லானின் நர்த்தனக்கோலத்தை நோக்கிய வண்ணம் வடிக்கப்பட்டுள்ளனர். சப்தமாதர்களில் பிராஹ்மி, மஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி ஆகியோர் நடராஜரின் வலப்பக்கத்திலும் வாராஹி, ஐந்த்ராணி, சாமுண்டா ஆகியோர் அவருக்கு இடப்பக்கத்திலும் காட்டப்பட்டுள்ளனர். பெரும்பாலும் இவர்கள் ஏதாவது ஒரு நாட்டிய தோரணையில் காட்டப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். இந்த சிறிய மண்டபத்தின் இரண்டு பக்கவாட்டு சுவர்களில் தலா மூவரும் இருக்க வைஷ்ணவி மட்டும் நடேசமூர்த்திக்கும் விநாயகருக்கும் அருகிலும் உள்ளவாறு சித்தரித்துள்ளார்கள். இங்கேயே ஒரு மூலையில் எலும்பும் தோலுமாக பிருங்கியும் வேதாளம் போல நடம் புரிகிறார் பாருங்கள். இங்கே உள்ள அன்னையர் எழுவரும் பூட்டியுள்ள ஆபரணங்களிலிருந்து ஆடைஅலங்காரங்கள், மகுடம், முகபாவனை வரை வெகு வெகு சிறப்பான வகையில் வடிக்கப்பட்டுள்ளனர். ஒரு குடைவரையில் இவ்வளவு நுணுக்கங்களை கொண்டு வந்த இவர்களின் திறந்த வெளி ஆலய கட்டுமானங்களில் இன்னும் எத்தனை எத்தனை சிறப்புகளை நாம் பார்க்கமுடியும் என்று எண்ணிப் பாருங்கள் புரியும். நிற்க.



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard