Devapriyaji - True History Analaysed

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பண்டைத் தமிழர் வாழ்வியலும் திருக்குறளும் திருவள்ளுவமாலையும்


Guru

Status: Offline
Posts: 7337
Date:
பண்டைத் தமிழர் வாழ்வியலும் திருக்குறளும் திருவள்ளுவமாலையும்
Permalink  
 


பண்டைத் தமிழர் வாழ்வியலும் திருக்குறளும் திருவள்ளுவமாலையும்

திருக்குறள் ஒரு வாழ்வியல் வழிகாட்டி நூல். சங்க இலக்கியல் தனி மனித வாழ்வை -காதல்- இல்வாழ்க்கையை- அகம் என்றும், பொதுவாழ்வினை அரசன் வாழ்வை வீரம்,போர் என புறம் என்ற நிலையில் இயற்றப்பட்டன. சங்க கால சேர மன்னர்கள் வெளியிட்டுள்ள மன்னர் பெயர் தமிழ் பிராமியில் பொறித்தவை பொஆ.2- 4ம் நூற்றாண்டினது கிடைத்து உள்ளது. மூவேந்தர் மறைவிற்குப் பின்னர் சிற்றரசர் ஆண்ட காலம் முழுவதுமே சங்க இலக்கியக் காலம் ஆகும். 

தமிழின் மிக முக்கிய நூலாக, இயற்றப்பட்ட காலம் தொட்டு 1200 ஆண்டுகளாய் தொடர்கிறது. குறள் தமிழ் யாப்பு நன்கு வளர்ச்சி அடைந்த பின்னர், பல புதிய இலக்கண நெகிழ்ச்சி, புதிய சொற்களோடு இடக்காலத்தில் எழுந்த நூல் ஆகும்.

இலக்கிய ஆசிரியர்கள் தங்களுக்கும் முன்பு உள்ள நூலின் வரிகளை பயன்ப்டுத்துவது போலே வள்ளுவர் சங்க இலக்கிய வரிகள் பலவற்றை அப்படியே எடுத்து ஆண்டு உள்ளார்.  வள்ளுவத்திற்குப்  பின் இயற்றப்பட்ட நூல்கள் பலவற்றில் குறள் வரிகள் எடுத்து அதன் ஆசிரியரையும் குறிப்பிட்டு உள்ளனர். 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
RE: பண்டைத் தமிழர் வாழ்வியலும் திருக்குறளும் திருவள்ளுவமாலையும்
Permalink  
 


உலகைப் படைத்த கடவுளை வணங்க, மெய் அறிவோடு அணுகுபவர் - மனதை ஒருநிலைப் படுத்த இறைவனிற்கு திருமேனி தருவது ஞானமான முறை. இதை எளிதாக விளக்க  பாலைவனத்தில் தார் ரோடு மீது கிடக்கும் காகிதம் சூரிய ஒளியில் எரியாது, ஆனால் ஒரு லென்ஸ் வைத்து காட்டினால் எரியும். லென்ஸ் எந்த ஒளியோ, வெப்பத்தையோ உருவாக்கவே இல்லை. அனால் உள்ள சூரிய ஒளியை குவிக்க காகிதம் எரிகிறது. மெய்ஞானிகள் உருவ வழிபாட்டின் அருமை அறிந்தவர்கள்.

திருவள்ளுவர் தமிழர் வாழ்வியலில் நீரின் அவசியத்தைக் கூறும்போது- மழை பொய்த்து நீர் இல்லாவிடியில் தானமும் தவமும் குறையும், என்றும் இறைவன் திருமேனி பூஜைகள் மற்றும் பண்டிகை திருவிழாக்கள் இல்லாது மறையும் என்பார்.

 

திருவள்ளுவர் முதல் குறளிலேயே 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

அந்தணர் வாழ்க்கை
அந்தணர் , பார்ப்பார் , ஐயர் ஆகிய சொற்கள் இக்காலத்தில் பிராமண சமூகத்தினரைச் சுட்டும் சொற்கள் எனப் பொதுவாகக் கருதப்படுகின்றன . ஆனால், சங்க பிராமணர் என்னும் சொல் வழக்கில் இல்லை . அந்தணர் , பார்ப்பார், ஐயர் என்னும் சொற்களால் சுட்டப்பட்டோர் அக்காலத்தில் எவ்வாறு வாழ்ந்து வந்தனர் என்பது இப் பகுதியில் விளக்கப்படுகிறது . பண்டைத்தமிழ் மக்களுள் ஒழுக்கத்தாலும் பண்பாட்டாலும் சிறப்புற்று விளங்கியவரை அந்தணர் என்று அழைத்தனர் . அவர்கள் எத்தகையவர் என்பது திருக்குறளில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது . எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான நிலம்போல ஈர நெஞ்சம் ( அன்பு ) உடையவர்களாய்
வாழ்ந்த அந்தணரை அறவோர் என்கிறோம். 350 இன்மையே 351 அறம் ஆகும் . அது இல்வாழ்க்கை , 35 : துறவு என்னும் இருவகையான வாழ்க்கைப் பகுப்பைக் கொண்டது . இந்த நெறியில் வாழ்ந்தோர் அந்தணர் எனப் மனமாசு பட்டனர் . இவர்கள் ஐம்புலன்களை வகைதெரிந்து ஆள்பவர்கள் ; பண்புக் குன்றின்மேல் ஏறி நிற்பவர்கள் ; நிறைமொழி மாந்தர் என்போரும் இவர்களே .354 பூணல் 353
346
கலி .. 98 : 2-5 ; சிலப் . 14 : 126
347
69 : 12-13
348
நற். 170 : 2-4
349
குறள் . அதி . 92
B50
குறள் . 30
351
34
352
49
353
க்ஷ 23
354
குறள் . 27-29
நூல் , கரகம் , முக்கோல் , மணை ஆகியவை அந்தணர்களுக்கு உரியவை .355 ( அரசர்களுக்கும் இவை உரியனவாய் அமைதல் உண்டு . ) 356 புறத்திணைகளில் வரும் பாடாண்டிணைத் துறைகளில் இவர்கள் உரிமைப் பெயரால் குறிப்பிடப்படுதலோ, நெடுந்தகை, செம்மல் என்னும் சிறப்புகளைப் பெறுதலோ இல்லை .357 ஊரின் பெயர் , பொதுப்பெயர் , தொழிலாற்றும் கருவியின் பெயர் முதலானவற்றைச் சார்த்தியே இவர்களது பெயர் குறிப்பிடப்பெறும் .358 பண்புச் சொற்களாலும் இவர்கள் குறிப்பிடப் பெறுவர் .359 போர்ப்படையில் இவர்கள் இடம்பெறுதல் இல்லை . 360

மதுரை , 361 புகார் , 362 ஆமூர் 363 முதலான நகரங்களில் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர் . அவர்களுக்கு அரண்மனையின் கதவு எப்பொழுதும் திறந்திருந்தது . 364 வேள்வித் தூண் நட்டு இவர்கள் தங்களது கடமைகளைச் செய்தனர் .365 குன்றுகளைக் குடைந்தாற்போன்ற பெரிய வீடுகளில் இவர்களுள் சிலர் வாழ்ந்தனர் . மாலையில்ல் பொருள் விளங்கும்படியும் , காலையில் வண்டுகள் ஒலிப்பது போலவும் தங்களது மறை நூல்களை இவர்கள் ஓதினர் .366 பொழுது போன பின் வளமனையில் வாழ்ந்ததம் மனைவியர் விளக்கு ஏற்றி வைக்க , இவர்கள் தமது வீட்டில் இருந்து கொண்டே மாலைக்காலத்தில் வழிபாடு செய்தனர் .367
இமய மலைச்சாரலில் வாழ்ந்துவந்த அந்தணர் மாலைக்காலத்தில் முத்தீ வளர்த்து வழிபாடு செய்தனர் .368 வேள்வி செய்யும் அந்தணர்களுக்குப் பெறுதற்குரிய பொருளை , அவர்கள் ஏந்தும் கையில் நீர் ஊற்றும் சடங்கோடு கொடுப்பது உண்டு .369 சிலர் புலன் அழுக்கு அற்றவர்களாயும் , பரிசில் பெற்று வாழும் புலவர்களாயும் வாழ்ந்தனர் .370
355
தொல் . பொருள் . மரபு . 615
356
ஷை 617
357
618
358
க்ஷ 619
359
ஷை 620
360
ஷை 621
361
மதுரைக் . 468-474 ; 654-656
362
பட்டினப் .202 ( நான்மறை
363
சிறுபாண் . 188 யோர் )
364
ஷை 204-206
365
பெரும்பாண் . 315-316
366
மதுரைக் . 468-474 , 654-656 ;
சிலப் . 13 : 141 ( சிலப் . 13 : 142 அந்தணர் நான் மறையை நவின்றனர் . மாதவர் ஓதினர் . )
367
குறிஞ்சிப் . 223-225
368
புறம் . 367 : 13
369
361 : 4-5 , 362 : 12
370
ஷை 126 : 11 , 200 : 11-12 ,
201 : 7
உண்டு .373
ஓதல் , பிறரை ஓதும்படி செய்தல் , வேள்வி செய்தல் , பிறரை வேள்வி செய்யும்படி செய்தல் , பிறருக்கு ஈதல் , பிறரிடமிருந்து தாம் ஏற்றல் ஆகிய ஆறு வாழ்க்கை நெறிகளை உடையவர் களாய் அந்தணர்கள் வாழ்ந்து வந்தனர் . 371 மாலைக் காலத்து ஒளிக்கு ஏற்ப இவர்கள் செந்தீ மூட்டி வழிபட்டனர் .372 முக்கோலை வைத்திருக்கும் இவர்கள் இந்த வழி பாட்டில் தமது முதுமொழியை நினைத்த வண்ணம் அசையாமல் அமர்ந்திருப்பது இவர்கள் வேள்வி செய்யும்போது புகை மிகுதியாகத் தோன்றும் .374




__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 திருமணம் செய்து கொள்வதற்காகத் தான் விரும்பிய ஒருவனுடன் தன் தாய் , தந்தையர் அறியாமல் தனி வழிபில் செல்லும் ஒருத்தி , தான் இவ்வாறு செல்லுவதைத் தன் பெற்றோரிடம் தெரிவிக்குமாறு வழியில் நடந்து வரும் அந்தணர்களிடம் கேட்டுக்கொள்வதும் , 315 கேட்டுக்கொண்ட வண்ணம் இவர்கள் செய்தியைச் சொல்லுவதும் 378 உண்டு . இதுபோன்ற செய்தியைக் கூறும் அந்தணர்கள் நிழலுக்காகக் குடைபிடித்துச் செல்வதும் , உறியில் தொங்கும் கரகத்தையும் , உரைசான்ற முக்கோலையும் தோளில் சுமந்து செல்வதும் , உள்ளத்தில் ஒரே குறிப்போடு செல்வதும் 377 உண்டு . மறைபாடும் நாவினையுடைய இவர்களில் சிலர்திறமை மிக்க செயல்களைச் செய்யும் கோட்பாடு உடையவராக விளங்கினர் . 378


தமிழ்நாட்டில் கள் உண்பவர் , கள் உண்ணாதவர் என ருதிறப்பட்ட மக்கள் வாழ்ந்து வந்தனர் ; அந்த இருதிறத்தாரும் அவரவர்களுக்கு ஏற்றாற்போல் கடைப்பிடித்து வந்த இருவேறு வகை அறச்செயல்கள் இருந்தன . அந்த இரண்டு வகையான அறச்செயல்களையும் அவர்களுக்கு எடுத்துரைத்து வாழ்ந்தவர்கள் இருவேறு
அந்தணர் ஆவர் . இவர் களுக்கு உரிய நூல்களும் இருவேறு வழியை எடுத்துரைப்பனவாய் இருந்தன . இவர்கள் அவரவர்களது நூல் நெறியிலிருந்து வழுவாது வாழ்ந்து வந்தனர் ; இவர்கள் இவ்வாறு வாழ்ந்ததால் மழை பொழிந்தது என்றுகூட நம்பப்பட்டது. 379
வகை
பூணூல்மார்பும் , கணிச்சியும்மழுவும்ஏந்தியகையும் , புரிசடையும்உடையகடவுளானசிவபெருமான்ஓர்அந்தணன்
371 
பதிற் . 24 : 6-7
372 
கலி . 119 : 12-13
373 
க்ஷ 126 : 4
374 
 36:26
375 
ஐங்குறு . 384 : 1-2
316 
 387 : 4-5
377 
கலி . 9 : 1.4
378 
ஐங்குறு . 387 : 1-2
379 
கலி . 99 : 1.5
சோறு , 389
என்று குறிப்பிடப்படுகிறார் . 



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

380 அந்தணர்கள் வினவிய விடைகளுக்காக இந்தச் சிவபெருமான் மறைகளைச் சொன்னார் .381 இதனால் போலும் மறை ஓதும் அந்தணர்கள் இவரைப் பெருமையாகப் பேசினார்கள் . 38 பனைக் கொடிக் கடவுள் பலராமனும் அந்தணரது அருமறையில் போற்றப்படுகிறார் . திருமால், பிரமன் , முருகன் ஆகியோர் அந்தணர்களின் மறையில் தெய்வங்களாக விளங்குகின்றனர் .383 வியாழன் என்னும் மீன் , சிவபெருமான் , பிரமன் ஆகியோர் அந்தணர் என்னும் சொல்லாலேயே குறிப்பிடப்படுகின்றனர் .314 அந்தணர்கள் திருமாலுக்குச் சமமானவர்கள் .385 திருமாலின் வலப்பக்கமாக இருந்து கொண்டு அந்தணர்கள் அவனை வணங்கினர் ; 386 முருகக் கடவுள் விரும்பி ஏற்கும் அறத்தைச் செய்வார்கள் .387 நீராடும் மக்கள் உண்டு உகுத்த சாறு , 388

நெய் முதலானவையும் , சூடி எறிந்த பூக்களும் கலந்து ஆற்றில் வரக்கண்டு , அந்தணர்கள் அந்த நீரில் நீராடாது நிற்கும் அளவுக்குத் தூய்மை உடையவர் களாக விளங்கினர் . 390 அந்தணர்களில் ஒருபாலாரும் வாணிகர்களில் சிலரும் வடமொழியை அறிந்திருந்தனர் .391

வி தலைப்பருவம் எனப்படும் முன்பனிப் பருவத்தில் 392 பிற்குளம் என்னும் நாள்களோடு 393 தொடர்புடைய தாய்த் திருவாதிரை என்னும் நாள்மீனுக்கு உரிய நாள் வரும்போது விரி நூல் அந்தணர் விழாத் தொடங்கினர் . அந்த விழாவில் புரிநூல் அந்தணர் பொற்கலன்களை ( விரி நூல் அந்தணர் நல்க ) ஏற்றனர் .394 அந்தணர்ளில் ஒருவன் நாய்க்கறி தின்றதாகக் 395 குறிப்புக் காணப்படுகிறது .

அந்தணர் ஒன்றுபுரி கொள்கை உடையவர் ; இரு பிறப்பாளர் ; முத்தீ வளர்ப்பவர் ; நான்மறை அறிவு உடையவர் ;
ஐம்பெரும் வேள்வி செய்பவர் ; ஆறு தொழில் புரிபவர் .396
393 

380 
அகம் . கடவுள் வாழ்த்து 5-6
381 
கலி . கடவுள் வாழ்த்து 1.4
382 
புறம் . கடவுள் வாழ்த்து 6:20
383 
பரிபா . 1 : 11.13 , 2:57 , 3:11 ,
முருகு . 96 ; பரிபா . 5:22
384 
க்ஷ 11 : 7-8 , அகம் . கடவுள் வாழ்த்து , 15-16 , பரிபா . 5:22
385 
பரிபா . 4 : 65-68
386 
க்ஷ 1:52
387 
க்ஷ 14:28
388 
பழச்சாறு
389 
அல்வா வகை
390 
பரிபா . 6 : 40-45 ; ஷை தி . 2 : 60-61
391 
சிலப் . 15 : 55-71
392 
மார்கழி , தை உத்திராடம்
394 
பரிபா . 11 : 78-79 சேந்தன்
திவாகரம் - தெய்வப் பெயர்த்
தொகுதி கழகம் -1957 பக் .18 ,
சூடாமணிநிகண்டு – தேவப் பெயர்த் தொகுதி செய்யுள்76 .
அரும்பொருள் விளக்க நிகண்டுளகர - எதுகை - செய் .30
395 
மணிமே . 11 : 84-87
306 
சிலப் . 23 : 67-70
ஒருவர் . 397



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 

புறநானூற்றில் பார்ப்பன வாகை

 
புறநானூற்றில்-பார்ப்பன-வாகை

முன்னுரை

            சங்க கால மக்கள் தங்கள் வாழ்க்கை இயல்பினை இரு பகுதிகளாகப் பிரித்துப்பார்க்கின்றனர். ஒன்று அகம்; மற்றுது புறம் அகம் காதலையும் புறம் வீரத்தையும் குறிக்கும் எனப்பொதுவாகக் கூறப்படுகிறது. அகம், காதலைக் குறித்தாலும் புறம், வீரத்தை மட்டுமே குறிக்கவில்லை. வீரம் என்பது முதன்மையான ஒன்றாகக் கருதப்பட்டு பிற ஒழுகலாறுகள் குறித்த செய்திகளும் புறத்தில் அடங்குகின்றன. அகமும் புறமும் சில கூறுகளில் ஒப்பு நோக்கிக் கூறப்படுகின்றன. அகத்திணைகளான கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை ஆகியன வெட்சி, வஞ்சி, உழிஞை, தும்பை, வாகை, பாடாண், காஞ்சி ஆகியவற்றோடு ஒப்புமையாக்கப்பட்டு உணரப்படுகின்றன. ஏழாக உரைக்கப்பட்ட புறத்திணைகள் தொல்காப்பிய காலத்திற்குப் பிறகு பன்னிரண்டாக விரித்துரைக்கப்படுகின்றன. பாடாண், காஞ்சி தவிர புறத்தின் மற்ற திணைகள் போர் குறித்த செய்திகளை எடுத்துரைக்கின்றன போரில் வெற்றி பெற்ற நிகழ்வினை உரைக்கின்ற வாகைத்திணையில் அமைந்துள்ள பார்ப்பன வாகை குறித்த கருத்துக்களை முன்வைக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது. புறநானூற்றில் பார்ப்பன வாகை

சாதிப்பிரிவுகள்

            சங்ககாலம் பழமையானது மட்டுமில்லாமல் தமிழர்களின் உயர்வான வாழ்க்கை நெறிமுறைகளைப் பறைசாற்றும் காலம் எனலாம். சங்ககாலச் சமுதாயத்தில் பல்வேறு சாதிப்பிரிவினர் இடம்பெற்றிருக்கின்றனர். நால்வகை வருணம் பேசப்பபடுகின்றன. ஆனால் சாதி வெறி உணர்வு பேசப்படவில்லை, குறவர், வேட்டுவர், ஆயர், கானவர், உழவர், பரதவர், நுளையர், எயினர், மறவர் எனச் சுட்டப்பட்ட தமிழ்க்குடிகள் குறித்த செய்திகளை அறிய முடிகிறது” (தமிழ்நாட்டு வரலாறு – சங்க காலம் – வாழ்வியல் – ப.5) குடிகள் நில அடிப்படையில் தத்தம் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். இத்தகைய குடிகளில் பார்ப்பனர் இடம்பெறவில்லை. இருப்பினும் சங்கச் சமுதாயத்தில் பார்ப்பணர்கள் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கின்றனர். ஐம்பெருங்குழுவில் இடம்பெறும் புரோகிதர் பார்ப்பனராக இருக்கலாம். சங்ககாலத்தில் சாதிகள் இருந்தன. ஆனால் வேற்றுமைகள் பெரிதாகப் பாராட்டப்படவில்லை.

 

சங்க காலப் பார்ப்பனர்கள்

            பார்ப்பனர்கள், அந்தணர், ஐயர் என்று அழைக்கப்படுகின்றனர். நால்வகை வருணத்தில் பிராமணர் எனச் சுட்டப்படும் சொல் வழக்கு சங்க இலக்கிய நூல்களில் எங்கும் இடம்பெறவில்லை. அந்தணர் என்றும் பார்ப்பார் என்றும் சுட்டப்படுவதை சங்க இலக்கியங்களில் காணலாம். அந்தணர் என்ற சொல் பார்ப்பனரை மட்டும் குறிக்கவில்லை என்பதற்கு

                                    அந்தண ரென்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

 

                                    செந்தண்மை பூண்டொழுக லான்                         (குறள். 30)

என்ற வள்ளுரின் வாய்மொழி சான்றாக அமைகிறது. பார்ப்பனர் அல்லாதவர்ககளும் சிறப்பான குணநலன்களால் அந்தணர் என்று அழைக்கப்படலாம் என்ற கருத்திணை இக்குறட்பா எடுத்துரைக்கின்றது. ஐயர் என்ற சொல் தலைவர், உயர்ந்தோர், சான்றோர், என்பதைக் குறிக்கின்றன. பார்ப்பனர் என்ற சொல்லே பிராமணரைக் குறிப்பிடும் சொல்லாகும்.

 

பார்ப்பார்க்குரிய செயல்களும் இருப்பியல் நிலையும்

            முப்புரிநூல், கரகம், முக்கோல் மணை ஆகியவற்றை உடையவர்களாகப் பார்ப்பனர்கள் இருந்தமையை தொல்காப்பியம் பொருளதிகார நூற்பா மரபியல் : 71 எடுத்துரைக்கின்றது. சங்க கால அகவாழ்வில் கற்பின்கண் தலைவன், தலைவியரிடையே நிகழும் ஊடலில், அவ்வூடலைத் தணிக்கும் வாயில்களுள் ஒருவராகப் பார்ப்பார் குறிப்பிடப்படுகிறார். இதனைத் தொல்காப்பியக் கற்பியல் நூற்பா (191) சுட்டிக் காட்டுகின்றது.

            பார்ப்பார்க்குரிய செயல்கள் ஆறென மொழிவதை பதிற்றுப்பத்து, சிலப்பதிகாரம் மூலம் அறிய முடிகின்றது. தொல்காப்பிய நூற்பாவிற்கு எழுந்த உரையிலும் இதனைக் காணலாம். அவை ஓதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பனவாகும்

 

                                                ஒன்றுபுரி கொள்கை இருபிறப்பாளர்

                                                முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி

 

                                                ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும்

                                                அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க

 

என்ற சிலப்பதிகார அடிகளாலும் (கட்டுரை காதை 67-70) அந்தணர்க்குரிய அதாவது பார்ப்பார்க்குரிய செயல்களை அறியமுடிகிறது.

            பார்ப்பனருள் பெரியவரைக் கொண்டு வேள்விகள் நடத்தப்பெற்றிருக்கின்றன, வேள்வியின் இறுதியில் பார்ப்பனப்புலவன் தம் மனைவியுடன் துறக்கம் அடைந்ததாகவும் நம்பப்படுகிறது. இச்செய்தியை பதிற்றுப்பத்து உரைக்கின்றது. (பதிகம்-3) பார்ப்பனச் சிறுவர்கள் குடுமியுடன் இருந்ததை ஐங்குறுநூறு வழி (202:2-3) அறிய முடிகிறது. அரசனுக்காகப் பார்ப்பனர்கள் தூது சென்றிருக்கிறார்கள். இதனை அகநானூறு தெரிவிக்கின்றது. போரினைத் தடுக்கும் முறையிலும் செயல்பட்டிருக்கின்றார்கள். அரசர்களுக்கு நிலையாமையை எடுத்துரைத்து அறிவுரையும் வழங்கி இருக்கிறார்கள், கபிலர், பரணர், நக்கீரர், கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலான புலவர்களாகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றனர். அரசர்களால் மதிக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் பணிவுடையவர்களாகவும் இருந்திருக்கின்றனர். பார்ப்பனர்கள் அரசர்களால் பாதுகாக்கப் பட்டிருக்கின்றனர். போர் ஏற்படும் சூழலில் பாதுகாப்பான பகுதியில் சென்று தங்குமாறு எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு எந்த வகையிலும் தீங்கிழைத்தல் கொடிய பாவமாகக் கருதப்பட்டிருக்கின்றது.

 

                                                பார்ப்பார் தப்பிய கொடுமையோர்க்கும்

                                                வழுவாய் மருங்கிய கழுவாயும் உள

 

என்ற புறநானூற்றுப் பாடலடிகள் (34:3-4) மேற்கண்ட கருத்தினை அறிவிக்கின்றது. அரசர்களுடைய அரண்மனையில் எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் பார்ப்பனர்கள் சென்று வர உரிமை இருந்திருந்தது. எந்தவிதத் தடையும் விதிக்கப்படவில்லை. இதனை,

                                                “அருமறை நாவின் அந்தணர்க் காயினும்

 

                                                கடவுள் மால் வரை கண்விடுத் தன்ன

                                                அடையா வாயில்…..

 

            என்ற சிறுபாணாற்றுப்படையின் (204-206) பாடலடிகள் குறிப்பிடுகின்றன. தங்களுடைய கடமைகளைச் செய்யும் பொருட்டு தங்கள் இருப்பிடத்தில் வேள்வித் தூண் நடுதலை

                                                கேள்வி யந்தண ரருங்கட னிறுத்த

                                                வேள்வித் தூணத் தசைஇ

என்று பெரும்பாணாற்றுப்படை (315-316) குறிப்பிடுகின்றது.

            அரசரை விடவும் அந்தணர்கள் – பார்ப்பனர்கள் உயர்ந்தவராகப் கருதப் பட்டிருக்கின்றார்கள். இதனை,

                                                சிறந்த வேதம் விளங்கப் பாடி

                                                விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து

                                                நிலமமர் வையத் தொருதா மாகி

                                                உயர்நிலை யுலக மிவணின் றெய்தும்

                                                அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற்

                                                பெரியோர்……..

என்று மதுரைக்காஞ்சி (468-473) எடுத்துரைக்கின்றது. இத்தகைய தன்மையுடைய அந்தணரை – பார்ப்பனரை அரசன் துணையாகக் கொண்டு வாழ்ந்தால் பெரும்புகழ் அடையலாம் என்ற கருத்தினை,

                                                அறம்புரி யந்தணர் வழிமொழிந் தொழுகி

                                                ஞால நின்வழி யொழுகப் பாடல் சான்று

                                                நாடுடன் விளங்கு நாடா நல்லிசைத்

                                                திருந்திய வியன்மொழித் திருந்திழை கணவ

            என்ற பதிற்றுப்பந்து (மூன்றாம் பத்து 4: 8-1) பாடலடிகள் மூலம் அறியலாம். சங்க காலப் பார்ப்பனர்கள் உயர்ந்தவர்களாகவும் பாதுகாக்கப்பட வேண்டியவர்களாகவும் கருதப் பட்டிருக்கின்றனர். அவர்கள் வழியில் நடப்பவர்களுக்குப் புகழ் கிட்டும் என்ற கருத்தியல் தளத்தினடிப்படையிலும், பார்ப்பனர்கள் மேல் நிலையில் இருந்திருப்பதை அறிய முடிகிறது.



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

 

வாகைத்திணையும் பார்ப்பன வாகையும்

            சங்க காலத் தமிழரின் போர் நெறிமுறைகள் குறிப்பிடத்தக்க முறையில் அமைந்தனவாகும். போர் திடீரென ஏற்படாமல் ஒரு சில முன்னறிவிப்பு நடவடிக்கைகள் மூலம் ஏற்படுவது குறிப்பிடத்தக்கது. ஆநிரை கவர்தல் மூலம் போருக்கான சூழல் உருவாகத்தொடங்கி படிப்படியாக வளர்ச்சி பெற்று போர்ச்சூழல் உருவாக்கப்படுகிறது. இருதிறப் படைகளும் போரில் ஈடுபட, வாகை சூடுவது ஒருவர் மட்டுமே. அவரது இயல்பை எடுத்துரைக்கும் புறத்திணையாக வாகைத்திணை அமைகிறது.

வாகைத் திணையின் இலக்கணத்தை.,

                                                தாவில் கொள்கைத் தத்தம் கூற்றைப்

                                                பாகுபட மிகுதிப்படுத்தல் என்ப

என்று தொல்காப்பியம் (தொல்,பொருள் புறத்திணையியல்-15) வரையறுக்கின்றது. இந்நூற்பாவிற்கு உரை வகுத்த இளம்பூரணர். “அது கேடில்லாத கோட்பாட்டினை யுடைய தத்தமக்குள்ள இயல்பை வேறுபட மிகுதிப்படுத்தல்” என்று (தொல்.பொருள்.புறத்திணையியல் ப.27) கூறுகிறார். “வலியும் வருத்தமுமின்றி இயல்பாகிய ஒழுக்கத்தானே நான்கு வருணத்தாரும், அறிவரும், தாபதர் முதலியோருந் தம்முடைய கூறுபாடுகளை இருவகைப்பட மிகுதிப்படுத்தலென்று கூறுவர்” என்று நச்சினார்க்கினியர் உரை (தொல் பொருள். புறத்திணையியல் ப.347) கூறுகின்றார். இவற்றினின்று வாகை என்பதற்கு மற்றவர்களிடமிருந்து தன்னுடைய மேம்பட்ட தன்மையின் மிகுதிப்பாட்டைக் கூறுவதை இலக்கமணமாகக் கொள்ளலாம்.  தன்னுடைய மிகுதிப்பாட்டை மேம்படுத்திக் கூறுபவர்களாக பார்ப்பனர், அரசர், வணிகர், வேளாளர், அறிவர், தாபதர், பொருநர் என எழுவரை அடக்கியதே வாகைத்திணையாகும். இதனைத் தொல்காப்பியர் புறத்திணையியலில்,

                                                அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                                ஐவகை மரபின் அரசர் பக்கமும்

                                                இருமுன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                                மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                                நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்

                                                நாலிருவழக்கின் தாபதப் பக்கமும்

                                                பாலறி மரபின் பொருநர் கண்ணும்

                                                அனைநிலை வகையோடு ஆங்கெழு வகையின்

                                                தொகைநிலை பெற்றது என்மனார் புலவர்.

என்று (தொல்.பொருள்.புறத். 16) கூறுகிறார். எழுவரின் மிகுதித் தன்மையே வாகை எனப்படுகிறது. இந்நூற்பா வாகைத் திணையின் பாகுபாடாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம் என்பது ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற அறுதொழிலின் மிகுதியைக் குறிப்பதாக அமைகிறது. அறுவகைப்பட்ட பார்ப்பனக் பக்கம் என்று வாகையின் பாகுபாடாகத் தொல்காப்பியர் கூற, பிற்காலத்து எழுந்த புறப்பொருள் வெண்பாமாலை பார்ப்பன வாகை, பார்ப்பன முல்லை என்று இரு துறைகளை எடுத்துரைக்கின்றது. இவை இரண்டும் வாகைத் திணையின் துறைகளாக அமைகின்றன. ஒன்று வேள்வியினால் சிறப்புடையவனையும் மற்றொன்று போர் தடுக்கச்சென்றவனின் சிறப்பினையும் எடுத்துரைக்கின்றது.

            பார்ப்பன வாகையின் இலக்கணத்தினை புறப்பொருள் வெண்பாமாலை

கேள்வியாற் சிறப்பெய்தி யானை

வேள்வியான் விறன் மிகுத்தன்று

என்று (வாகைப்படலம்.9) வரையறுக்கின்றது. “கேட்கக் கடவன கேட்டுத் தலைமை பெற்றவனை யாகத்தான் வெற்றியைப் பெருக்கியது” என்று நூலாசிரியர் உரை (பு.வெ.மா.106) வகுக்கின்றார். யாகம் செய்த சிறப்பு வெற்றியாகிறது; வாகையாக அமைகிறது. பார்ப்பனன் செய்த யாகத்தின் சிறப்பு பார்ப்பன வாகையாகிறது. புறப்பொருள் வெண்பாமாலை உரையாசிரியார் யாகம் செய்தலின் சிறப்பைக் குறிக்கும் வகையில்

                                                ஓதங் கரைதவழ்நீர் வேலி யுலகினுள்

                                                வேதங் கரை கண்டான் வீற்றிருக்கும் – ஏதம்

                                                சுடுசுடர் தானாகிச் சொல்லவே வீழ்ந்த

                                                விடுசுடர் வேள்வி யகத்து

என்ற பாடலைச் சான்று காட்டி விளக்குகிறார். அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கத்தில் கூறப்பட்ட வேட்டல் (வேள்வி செய்தல்) என்பதற்கு புறநானூற்றில் அமைந்த ஆவூர் மூலங்கிழார் பாடலை (168) இளம்பூரணர் மேற்கோள்காட்டி விளக்கம் தருகிறார். புறநானூற்றில் இரண்டு பாடல்கள் மட்டுமே பார்ப்பன வாகைத் துறையில் அமைந்த பாடல்கள் (166-305) ஆகும். ஆவூர் மூலங்கிழார் சோணாட்டுப் பூஞ்சாற்றுப்பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயனைப் புகழ்ந்து பாடுகிறார். தன்மனைவியருடன் சிறப்பாகப் பெரு வேள்வி செய்த கௌணியன் விண்ணந்தாயனின் மிகுதிப்பாட்டை – வேள்வி செய்த திறத்தைப்பாராட்டி,

                                                                           நன்றாய்ந்த நீணிமிர்சடை

                                                                         முது முதல்வன் வாய்போகா

                                                                        தொன்றுபுரிந்த வீரிரண்டின்

                                                                        ஆறுணர்ந்த வொருமுதுநூல்

                                                                        இகல்கண்டோர் மிகல்சாய்மார்

மெய்யன்ன பொய்யுணர்ந்து

பொய்யோராது மெய்கொளீஇ

மூவேழ் துறையுமுட்டின்று போகிய

உரைசால் சிறப்பி னுரவோர் மருக

வினைக்கு வேண்டி நீபூண்ட

புலப்புல்வாய் கலைப்பச்சை

சுவற்பூண்ஞாண் மிசைப்பொலிய

மறங்கடிந்த வருங்கற்பின்

அறம் புகழ்ந்த வலை சூடிச்

சிறு நுதற்பே ரகலல் குற்

சில சொல்லிற் பல் கூந்தலின்

நலைக்கொத்த நின் றுணைத் துணைவியர்

தமக்கமைந்த தொழில் கேட்பக்

காடென்றா நாடென்றாங்

கீரேழி னீடமுட்டாது

நீர் நாண நெய்வழங்கியும்

எண்ணாணப் பலவேட்டும்

மண்ணாணப் புகழ்பரப்பியும்

அருங்கடிப் பெருங்காலை

விருந்துற்ற நின் றிருந்தேந்து நிலை

என்றுங் காண்கதில் லம்ம யாமே குடாஅது

பொன்படு நெடுவரைப் புயலேறு சிலைப்பிற்

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை யெம்மூ ராங்கண்

உண்டுந் தின்று மூர்ந்து மாடுகம்

செல்வ லத்தை யானே செல்லாது

மழைய ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவள ரிமயம் போல

நிலீ இய ரத்தை நீ நிலமிசை யானே

என்று நெடிய வாழ்த்துப்பா (புறம் 166) பாடுகிறார். அறம் ஒன்றை மேவி நான்கு கூறுகளை உடைய, ஆறு அங்கத்தை உடைய வேதத்திற்கு மாறுபட்ட நூல்களைக் கண்டோரை புறச்சமயத்தாருடைய மிகுதியைச் சாய்க்க இருபத்தொரு வேள்வித்துறையை எத்தவிதக்குறையும் இன்றி தம் ஏவல் கேட்டுச் செயல்படும் துணைவியருடன் நீரைப்போல நெய்யை ஊற்றி பல வேள்விகளைச் செய்து விருந்தினைப் போற்றிய உன்னுடைய மிகுதியான சிறப்பு மே;படுவதாகுக. இமயமலை போல் வாழ்க என்று ஆவூர் மூலங்கிழார், வேட்டலின் மிகுதியை – கௌணியன் விண்ணந்தாயனின் வேள்விச் சிறப்பை பார்ப்பன வாகைத் துறையில் பாடுகின்றார். பார்ப்பனனின் மேம்பட்ட வேள்விச் சிறப்பு அவனுடைய வெற்றியாக அமைகிறது.

பார்ப்பன வாகையும் பார்ப்பன முல்லையும்

            மதுரை வேளாசான் பாடிய புறநானூற்றுப்பாடல் (305) பார்ப்பன வாகைத்துறையில் அமைந்த மற்றொரு பாடலாகும். இப்பாடல் போர் எழுந்த சூழலில் போரைத் தவிர்க்கும் பொருட்டு தூதுச் சிறப்பை எடுத்துரைக்கின்றது. புறப்பொருள் வெண்பாமாலையில் உரைக்கப்பட்ட பார்ப்பன வாகைத்துறையின் இலக்கணம் இப்பாடலுக்குப் பொருந்தி வரவில்லை. வாகைத்திணையில் பார்ப்பன முல்லை என்பது,

                                    கான்மலியு நறுந்தெரியற் கழல் வேந்த ரிகலவிக்கும்

                                    நான்மறையோ னலம்பெருகு நடுவுநிலை யுரைத் தன்று

என்று புறப்பொருள் வெண்பாமாலை (வாகைத்திணை-18) இலக்கணம் உரைக்கின்றது. இரு அரசர்களிடையே எழுந்த மாறுபாட்டை வேதம் அறிந்த பார்ப்பனன் தன்சொல் முறையால் மாற்றுகிற தன்மையைச் சொல்லுவது என்பதே பார்ப்பன முல்லைத்துறையாகும்.

மதுரை வேளாசான் பாடிய,

வயலைக் கொடியின் வாடிய மருங்குல்

உயவ லூர்திப் பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே யதற்கே

ஏணியுஞ் சீப்பு மாற்றி

மாண்வினை யானையு மணிகளைந் தனவே

என்ற புறநானுற்றுப்பாடல் பார்ப்பனவாகைத் துறையில் அமைவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றுப்பாடலுக்கு உரை வகுத்த ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை அவர்கள் துறை விளக்கம் தருகையில்,

            இது பார்ப்பன வாகையெனத்துறை வகுக்கப்பட்டுள்ளது. பார்ப்பன வாகையாவது கேள்வியாற் சிறப்பெய்தி யானை வேள்வியான் விறன் மிகுத்தன்று (பு.வெ.மா.8-9) எனப்படுகிறது. இது பார்ப்பன முல்லை யென்றிருப்பின் சீரிதாம்…இதன்கண் பார்ப்பான் வந்து சொல்லிய சொல் சிலவென்றும் போரொழிந் ததென்றும் கூறுவது இது பார்ப்பன முல்லை யாதலை வற்புறுத்துகின்றது (புறம்.தொகுதி.பக் 209-210) என்று கூறுகிறார். பிள்ளை அவர்களின் விளக்கம் சரியானதுதான் என்றாலும் புறநானூற்றுப்பாடலில் கூறப்பட்ட துறை பார்ப்பன வாகையாக இருக்கின்றது. இப்பாடலில் பார்ப்பனனின் மிகுதி உரைக்கப் பட்டிருகின்றது. அதாவது சொல்வன்மை உயர்வாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

                                    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை

                                    இகல்வெல்லல் யாருக்கும் அரிது (குறள்.647)

என்பது வள்ளுவம். சொல்வன்மை படைத்தவரை யாராலும் வெல்லமுடியாது. யாராலும் வெல்ல முடியாத சொல்வன்மை படைத்த பார்ப்பனன் என்ன கூறினான் என்பது உரைக்கப்படவில்லை. அவன் பேசியது சில சொற்களே. அதனால் உடனடியாகப் போர் விலக்கப்பட்டிருக்கின்றது. எதிர் நாட்டரசன் தன் நாட்டிற்குள் வராது இருக்க ஆணிகள் நிறைந்த சீப்பு வடிவத்திலான கருவி கோட்டை வாசலில் வைக்கப்படும். எதிரியைத் தாக்குவதற்கு நூல் போன்ற கருவிகளை எடுத்துச்செல்வர். போர்க்கோலம் பூண்ட யானை முதலான படைகள் அணிவகுக்கும். இந்நிலையில் பார்ப்பனன் வந்து பேசிய சொற்கள் சில மட்டுமே. அதன் பின்னர் உடனடியாக ஏணியும் சீப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டன. போர்க்கோலம் பூண்ட யானைகளின் மணிகள் முதலானவை களையப்பட்டுவிட்டன. பார்ப்பானின் சொல்வன்மை பார்ப்பன வாகையா? பார்ப்பன முல்லையா? என்ற வினா எழுகிறது. பாடல் பார்ப்பன வாகைத்துறையில் அமைக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பன முல்லையின் இலக்கணம் தான் பொருந்துகிறதே தவிர பார்ப்பன வாகையின் இலக்கணம் பொருந்தவில்லை. வேள்வியின் சிறப்பு எதுவும் இப்பாடலில் கூறப்படவில்லை. சொல்வன்மையின் சிறப்பு உரைக்கப்பட்டிருக்கிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் தான் பார்ப்பனவாகை, பார்ப்பன முல்லை ஆகிய துறைகள் இடம்பெறுகின்றன. தொல்காப்பியம் ‘அறுவகைப்பட்ட பார்ப்பனப்பக்கம்’ என்பதோடு மட்டும் அமைகிறது. அறுவகையில் ஒன்றான வேள்விசெய்தல் பார்ப்பன வாகையாகிறது. ஆனால் பார்ப்பன முல்லையை ஆறுவகையில் ஓதுவித்தலுடன் தொடர்பு படுத்தலாம்.

ஓதலும் ஓதுவித்தலும் கல்வியறிவா? நான்மறை அறிவா? என்பது வினாவிற்கு உரியது. கல்வியறிவு என எடுத்துக்கொண்டாலும் தான் கற்ற கல்வி மூலமாக பிறருக்கு வாழ்வதற்கு ஏற்ற எந்தத் தீங்கும் இல்லாத அறிவுரையாகச் சொல்லத்தெரிந்த அறிவாக இருந்தால் அவ் அறிவு போற்றப்படவேண்டிய ஒன்று. வேத அறிவு என்பது வேதங்களைப் பற்றிய அறிவா? வேதங்கள் மூலம் தான் பெற்ற அறிவா? என்பது வினா. மதுரை வேளாசான் பாடல், புறப்பொருள் வெண்பா மாலையின் பார்ப்பன முல்லைத் துறைக்கும் பொருத்தமானது என்று கூறப்பட்டாலும் பார்ப்பனவாகை என்ற துறையில் பாடல் வகுக்கப்பட்டது ஏன்? புறப்பொருள் வெண்பா மாலையில் வகுக்கப்பட்ட துறை, சங்க இலக்கியப் புறநானூற்றுப் பாடல் தொகுக்கப்பட்ட காலத்தில் கவனத்தில் கொள்ளவில்லையா? என்ற வினாவையும் எழுப்புகிறது. இருப்பினும் பார்ப்பன வாகைத்துறை என வகுக்கப்பட்டிருப்பது சரியென்று கூறவும் இடம் இருக்கின்றது.

ஆளுமை என்பதற்கு சொல்லப்படும் விளக்கம், எந்த ஒரு சூழலையும் தன்னுடையதாக்கிக் கொள்வதே ஆளுமை என்றாகிறது. இத்தகைய ஆளுமைப்பண்பு உயரியதாகக் கொள்ளப்படுகிறது. ஆளுமைப்பண்பிற்காகக் கூறப்படும் வரையறைகளைத் தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளுகிற பண்பைப் பார்ப்பனர் பெற்றிருக்கலாம். எந்த சூழலையும் தன்னுடையதாக ஆக்கிக்கொள்கிற தனித்தன்மையுடைய பார்ப்பனன் சொல்லிய சொற்கள் சில. சொற்கள் சிலவாக இருந்தாலும் கேட்பவரை அதன்படி கேட்டு நடத்தக்கூடிய வகையில் இருப்பது வாகையாக அமைகிறது.

“குற்றமற்ற கொள்கையினால் தத்தமக்குரிய அறிவு ஆண்மை பெருமை முதலிய ஆற்றற் கூறுபாடுகளை ஏனையோரினின்றும் வேறுபடமிகுத்து மேம்படுதல் வாகைத் திணையின் ஒழுகலாறாம்”. என்ற (முனைவர் கோ.சிவகுருநாதன், வாகைத்திணை, ப.17) வாகைத்திணையின் இலக்கணத்திற்கு வெள்ளை வாரணனார் கூறுகிற உரைவிளக்கம் இங்குக் குறிப்பிடத்தக்கது. தத்தமக்குரிய அறிவு என்பதன் அடிப்படையில் கேட்டாரைப் பிணிக்கும் தகையவாய் பார்ப்பனன் சொல் அமைந்து பார்ப்பன வாகையான மதுரை வேளாசான் பாடல் அமைவதை ஏற்கலாம்.

தொகுப்புரை

            சங்க காலச் சமூகத்தில் சாதிகள் இருந்திருக்கினறன. ஆனால் சாதி வேற்றுமைகள் பாராட்டப்படவில்லை. அரசர்களுக்கு அடுத்த நிலையில் பார்ப்பனர்கள் இருந்திருக்கின்றனர். பார்ப்பார் அந்தணர் என்று குறிப்பிடப்பட்ட பிராமணர்கள் மேல்நிலையில் இருந்திருக்கின்றனர். அகவாழ்வில் வாயில்களாகவும் புறவாழ்வில் அறிவுரை கூறுபவர்களாகவும், வேள்வி செய்விப்பவர்களாகவும் விளங்கினர். புறத்திணைகளுள் ஒன்றான வாகைத்துறை வாகைத்திணையில் பார்ப்பன வாகைத்துறை, பார்ப்பன முல்லைத் துறை என இரு துறைகள் வகுக்கப்பட்டிருந்தாலும், புறநானூற்றில் இரண்டு பாடல்கள் பார்ப்பனவாகைத் துறையில் அமைந்திருக்கின்றன. புறப்பொருள் வெண்பா மாலை கூறுகிற பார்ப்பன வாகை இலக்கணத்தின்படி ஒரு பாடலும், பார்ப்பன முல்லைதுறை இலக்கணத்தின்படி ஒரு பாடலும் அமைந்திருக்கின்றன. ஆனால் பார்ப்பன முல்லை என துறை ஒன்றின் பெயர் இடம் பெறவில்லை. வள்ளுவர் கூறிய வாய்மொழியின் படியும் வெள்ளை வாரணனார் வாகைத் திணைக்கு உரைத்த உரையின் படியும் பார்ப்பன வாகைத்துறையிலேயே அப்பாடலை வகுத்துக்கூறலாம். பார்ப்பன வாகை எந்தச் சூழலையும் தனதாக்கிக் கொள்ளும் பார்ப்பனனின் வெற்றியாக அமைகிறது.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் வ.கிருஷ்ணன்

தமிழ் இணைப்பேராசிரியர்

தமிழாய்வுத்துறை

அரசு கலைக்கல்லூரி

உடுமலைப்பேட்டை



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

புறநானூற்றில் தூது

 

சங்க இலக்கியங்களில் ஒன்றாகிய புறநானூறு என்ற நூலில் தூது அமைப்பில் புலவர்கள் பாடல்களைப் பாடி உள்ளார்கள். அவை, இரு பெருமன்னர்களுக்கு இடையே நடக்க இருக்கும் போரினை நிறுத்தும் வகையில் உயர்திணை, அஃறிணை தூதுவிடுக்கும் பாடல்களைப் பாடியுள்ளனர்.

உயர்திணை, அஃறிணையையும் தூது செல்லுமாறு வேண்டும் வழக்கம் தலைவன் தலைவியரிடை உண்டு. அது பெரும்பாலும் பிரிவுத்துன்பம் மிகுந்த நிலையில் ஏற்படும். தலைவன் பிரிந்தவிடத்துப் பிரிவுத்துன்பம் அதிகமான நிலையில், தன் காதல் மிகுதியையும் ஆற்றாமையையும் அஃறிணைப் பொருள்களிடம் கூறித் தூது சென்றுவருமாறு தலைவி வேண்டுவாதாக அமைகின்றன.

 

உயர்திணைத் தூது

 

ஒரு தூதுவன் எவ்வாறு தன்னுடைய பணியை செய்ய வேண்டுமோ அவ்வாறே புலவர் ஔவையார் அவர்கள் செயல்பட்டுள்ளார். தன்னுடைய அரசனுக்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தொண்டைமானிடம் உன்னுடை படைக்கருவிகள் அனைத்தும் புத்தம் புதிதாக போற்றிப் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதியனின் படைக்கருவிகளோ ஓயாது போரில் ஈடுபட்டு நுனி மழுங்கியும், கூர் முறிந்தும் கிடக்கின்றன. செல்வம் உண்டாயின் இல்லாதவர்களுக்கு கொடுத்தும், தன் சுற்றத்தாருடன் கூடிவுண்ணும் தலைமையை உடையவன் எம் வேந்தனுடைய வேல். இங்கு வேல் என்பது கருவியை குறிக்காது வேந்தனுடைய சிறப்பை உணர்த்துகிறது. என்று கூறுவதன் மூலம் அதியனின் பேராற்றலை இகழ்வது போல புகழ்ந்து கூறியுள்ளார். அதாவது ‘சிதைந்து கொற்றுறைக் குற்றில’ என்பது பழிப்பது போல புகழ்வது எனும் அணியை பயன்படுத்தியிருப்பது ஔவையாரின் தூது திறத்திற்கு சான்றாக,

"இவ்வே பீலிஅணிந்து மாலை சூட்டி
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றி மாதோ என்றும்
உண்டாயின் பதங் கொடுத்து
இல்லாயின் உடன் உண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே" (புறம்: 95)


அதியமான் என்ற மன்னனுக்காக ஔவையார் என்ற புலவர்தொண்டைமான் என்ற அரசனிடம், போர் மேற்கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துவதற்காகத் தூது சென்றதாகப் கருதப்படுகிறது. ஔவையின் தூதை அரண் செய்யும் வகையில் வள்ளுவரின் கூற்று அமைகிறது.

"இறுதி பயப்பினு எஞ்சா இறைவற்கு
உறுதி பயப்பதாந் தூது” (குறள். 690)

இரு வேந்தர்களுக்குமிடையே மூள இருந்த போரை நல்லுரைக் கூறி வலிந்த இளமை கொண்ட பார்ப்பான் ஒருவன் தூதாக சென்று முற்பட்ட வேந்தனையடைந்து தக்கது கூறி அவனது போர் வேட்கையை மாற்றினான். பின்பு அவனுடைய மாற்றானாகிய வேந்தனை அடைவதற்குள் அந்நாட்டில் போர்ப் பறை முழங்கிற்று. தானை வீரரும் தொகுவாராயினர். பகைவர் மதில் கோடற்பொருட்டு ஏணிகளும் மதில் காத்தற்பொருட்டுச் சீப்புகளும் நன்மைந்திருந்தன. தூது போந்த பார்ப்பான் இரவில் வேந்தனைக் கண்டு போரைக் கைவிடுவற்கு வேண்டி பலவும் சுருங்கச் சொல்லி விளக்கினான். வேந்தன் உடன்பட்டான் தானை வீரரைத் தத்தம் மனையேகுமாறு வேந்தன் பணித்தான். இதன் மூலம் போரை நிறுத்தினான் என்பதனை இப்பாடல் உணர்த்துகிறது. அது கண்ட வேளாசானுக்கு அப்பார்ப்பான் தூதின்பால் வியப்பு மிகுந்தது.

பார்ப்பான் கூறி பின் ஏணியும் சீப்பும், போருக்குத் தயார் நிலையிலிருந்த யானைப்படை அவை அகற்றப்பட்ட செய்தியையும் இப்பாடல் உணர்த்துகிறது.

"வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலை பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் அணி களைந்தனவே" (புறம். 305)

"பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்" (குறள். 649)

மேலும்,

"தொகச்சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது" (குறள். 685)

வள்ளுவரின் கூற்றிற்கு ஏற்றார் போல் இத்தூதுப் பாடல் அமைந்துள்ளது.

உயர்ந்தோன் தூதாகலின் ‘விழுத்தூது’ என்றார். பொன்னரி மாலையின் வேறுபடுத்த ‘நூலரி மாலை’ எனப்பட்டது. இறந்த யானையின் உடம்பை ‘ஒருகை யிரும்பிணம்’ என்றார். வாள் திருத்தம் கண்ட மறவன் அஞ்சிப் புறங்கொடுத்தோடக் கண்ட மூதிலாளன், அவன் செயல் மறமுடையார்க்கு இழிவு தருவது பற்றி நாணமுற்று நகைத்தானாகளின், ‘நகும்’ என்றார். இசைப்ப சுடி, வந்த மூதிலாளன், திருத்தா, நகும் என செய்ல முடிகிறது. என்பதை கீழ்கண்ட பாடல் எடுத்துரைக்கிறது.

"வருகதில் வல்லே வருகதில் வல்லென
வேந்துவிடு விழுத்தூ தாங்காங் கிசைப்ப
நூலரி மாலை சூடிக் காலிற்
றமியன் வந்த மூதி லாளன்
... ... ... ... ... ... நகுமே" (புறம். 284)

பேகன் தன் மனையாளாகிய கண்ணகியை விட்டு முல்லையூரில் பரத்தை இல்லத்தில் பொழுதைக் கழித்தகாலை, பேகனைக் கண்ணகியோடு சேர்த்து வைக்கக் கபிலர், பரணர், அரிசில் கிழார், பெருங்குன்றூர் கிழார் ஆகியோர்கள் தாமாகவே தூது சென்ற செய்தியைப் புறப்பாடல்கள் கூறுகின்றன. பேகனைக்கான அவன் இல்லம் சென்ற புலவர்களுக்குக் கண்ணகியின் நிலை துயரைத்தர அவன் கூறாமசேயே அவள் துன்பம் கண்டு பொறாராய் தாமே தூது செல்லும் குறிப்பு (143- 146) ஆகிய பாடல்கள் மூலம் அறியமுடிகிறது.

அகத்திணையில் ஆற்றாமையே வாயிலாகக் கொண்டு தலைவன் தலைவியைச் சார்தல் போலப் புறத்திணையில் தலைவியின் துயர நிலைக் கண்டு புலவர்கள் தலைவனை நோக்கித் தூதராய்ச் செல்லும் தூதுக் குறிப்பினைக் காணமுடிகிறது.

பகைவர்மேல் போர் செய்ய எழும் வஞ்சித்திணையின் ஒருதுறை துணைவஞ்சி பகைவருடன் போரிடவந்தவனைத் தடுத்து அமைதிப்படுத்திப் போரைத் தவிரச் செய்தல் இருபெரு வேந்தர்க்கும் சந்து (தூது) செய்வித்தல் எனவும் கூறப்பெறும் இப்பாட்டில் ‘நெடுமதில் வரைப்பில் இனிதிருந்த வேந்தனொடு மலைத்தல் என்பது நாணத்தக்கது’ என்று கூறிப் போரைத் தடுத்தமையை,

“அடுநை ஆயினும் விடுநை
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
மலைத்தனை என்பது நாணுத தகவு உடைத்தே” (புறம்.36)


செறிந்த, பரல்களையுடைய சிலம்பும் நீண்ட கோல் தொழிலமைக்க சிறிய வலையல்களும் அணிந்த பெண்கள் (மகளிர்) குளிர்ந்த பொருனையாற்று மணல் மேட்டிலே பொன்னாலாகிய சுழற்சிக் காய்களைக் கொண்டு வீடு விளையாடுவர். அவர்கள் விளையாடும் வெண்மணற்பரப்பு, சிதையுமாறு வலிய கையையுடைய கொல்லனால் அடிப்பகுதி அகன்ற சுர்மை பெருந்தியதாகவும் நெடிய கைப்பிடியை உடைய கோடாரியைக் கொண்டு நின் வீரர்கள் காவல் மரங்களை வெட்டுவர், அதனால் மலர் மணமுடைய நெடிய கிளைகள் பூக்கள் உதிர்ந்து பொலிவழியும், இவ்வாறு சோலைகள் தோறும் காவல் மரங்களை வெட்டும் ஓசை தனது ஊரில் நெடிய மதில் எல்லையைக் கடந்து அரண்மனையின் இடத்து சென்றொலிக்கும். எனினும் மானமின்ற, இனிதாக அங்கே உரையும் வேந்தனுடன், இங்கு வானவில் போன்ற நிறமுடைய மாலையையுடைய முரசு முழங்க நீ போரிட்டார் என்பது நாணத்தக்கது.

நல்லிசைப் புலமையால் சிறப்புற்று விளங்கும் அரிசில் கிழார்க்குப் பெரும்பேகன் கண்ணகியாரைத் துறந்து புறத்தொழுகும் செயல் செவிப்புலனாயிற்று. அவர் அன்பால் அடைந்து அவன் நலம் பாராட்டினர். அவனும் இவர்க்குப் பெரும் பரிசில் நல்கினன், அவர் என்னை நயந்து பரிசில் நல்குவையாயின், யான் வேண்டும் பரிசில் ஈதன்று, நீ அருளாமையால் அருந்துயருழக்கும் அரிவை, நின் அருட்பேற்றல் தன் கூந்தலை முடித்துப் பூச்சூடுமாறு நின் தேடும் குதிரையும் பூட்டுற்று அவள் மனைக்குச் செல்லுதல் வேண்டும். இதுவே யான் வேண்டும் பரிசில்” என்ற கருத்தமைந்தது இப்பாடல்,

“அன்ன வாகரின் னருங்கல வெறுக்கை
அவைபெறல் வேண்டேம்; அடுபோர்ப் பேக!
சீறியாழ் செவ்வழி பண்ணி, நின் வன்புல
நன்னாடு பாட என்னை நயந்து
... ... ... ... ... ... ... ... ... ... ... ...
ஒலிமென் கூந்தல் கமழ்புகை கொளீஇத்,
தண்கமழ் கோதை புனைய
வண்புரி நெடுந்தேர் பூண்க, நின் மாவே” (புறம். 146)

இத்தூதுப்பாடல் அகம்சார்ந்த செய்தியைத் தாங்கியிருப்பினும் தொல்காப்பியர் விதிப்படி “சுட்டி ஒருவர் பெயர்க்கெனப் பெறர்” இப்பாடல் அகம் என்னும் நிலையிலிருந்து புறத்தைத் தழுவிய நிலையிலிருப்பதைக் காண முடிகிறது.


__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

பிராமணர்கள் கல்வி கற்றதாலும் அந்தக் காலத்தில் ஒழுக்க சீலர்களாக இருந்ததாலும் பழங் காலத்தில் தூதர் பணியையும் செய்து வந்தனர். இப்படிப்பட்ட இரண்டு பிராமணர் பற்றி அக நானூறும் புற நானூறும் பாடுகின்றன. பாலை நிலம் வழியாக ஓலைச் சுவடியைக் கையில் ஏந்திவந்த பார்ப்பனனை தங்கம் கொண்டு செல்லும் ஆள் என்று நினைத்து பாலை நில மாக்கள் கொன்று விடுகின்றனர். அவர் ஒரு ஒல்லியான வறிய பார்ப்பனன் என்று அறிந்தவுடன் வருத்தத்துடன் கையை நொடித்துச் சென்று விடுகின்றனர். இதோ அந்தப் பாடல்:

 

“ கண நிரை அன்ன , பல் கால், குறும்பொறை

தூது ஒய்ப் பார்ப்பான் மடி வெள் ஓலைப்

படையுடைக் கையர் வரு தொடர் நோக்கி

உண்ணா மருங்கும் இன்னோன் கையது

பொன் ஆகுதலும் உண்டு என கொன்னே

தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர்

திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கி

செங்கால் அம்பினர் கைந்நொடியாப் பெயர

கொடிவிடு குருதித் தூங்கு குடர் கறீஇ”

——

(அகம் 337, பாலை பாடிய பெருங் கடுங்கோ)

 

புறநானூறு வேறு ஒரு சித்திரத்தைக் காட்டுகிறது. ஒரு பிராமணர் நள்ளிரவு என்று கூடப் பார்க்காமல் அரண்மனைக்குள் ஓலைச் சுவடியுடன் அவசரம் அவசரமாக நுழைகிறார். அடுத்த நிமிடம் அந்த மன்னன் பயந்து போய் தனது போர்க் கால நடவடிக்கைகளைக் கைவிட்டு பணிந்து விடுகிறார். அந்த பார்ப்பனன் பேசிய சொற்களோ வெகு சில என்று வியக்கிறார் புலவர். இதோ அந்தப் பாடல்:

“ வயலைக் கொடியின் வாடிய மருங்கின்

உயவல் ஊர்திப், பயலைப் பார்ப்பான்

எல்லி வந்து நில்லாது புக்குச்

சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே

ஏணியும் சீப்பும் மாற்றி

மாண்வினன யானையும் மணிகளைந்தனவே”

(புறம் 305, புலவர் மதுரை வேளாசான்)



__________________


Guru

Status: Offline
Posts: 7337
Date:
Permalink  
 

ஒருவர் அசைவம் உண்கிறார் என்பதாலோ அதில் குறிப்பாக மாட்டுக்கறி உண்கிறார் என்பதாலோ அவர்களை அந்நியர்கள் என்றோ, தமிழர்கள் இல்லை என்றோ கருதுவது மிகவும் தவறாகும். இதுபோன்ற மனநிலையுடையோரை முகநூலில் ஆங்காங்கே காண முடிகிறது. வரலாற்றின் அடிப்படையில் நாம் அசைவம் உண்டுள்ளோம். ஆனால் உயிர்களை கொல்வது தவறு என்பதுபோன்ற, திருவள்ளுவர், வள்ளலார் போன்றோரின் நற்கருத்துகளை ஏற்றுதான் இன்று அசைவம் உண்பதை தவிர்த்தும், அதிலுள்ள நிறை குறைகளை பேசியும் வருகிறோம்...!
எங்கள் ஊரைப்பொறுத்தவரை மாடு, ஆடு, கோழி, காடை என்று அசைவ உணவுகளின் பிறப்பிடமே குமரி எனலாம். நானும் சிறு வயதில் இவற்றை உண்டுதான் வளர்ந்தேன். அசைவம் உண்பவர்களை அந்நியர்களாக பார்ப்பது என்பது அடிப்படை புரிதலற்றதாகும். ஏனெனில் இன்று நமது தமிழகத்தை எடுத்துக்கொண்டால் அசைவம் உண்பவர்களை கழித்தால் மிக சொற்பமானவர்களே மிஞ்சுவர்...!
சங்க இலக்கியங்களை எடுத்துக்கொண்டால் ஆட்டுப்பிரியாணி முதற்கொண்டு, கோழி, காடை, முயல், நண்டு, ஆமை, பன்றி, மாடு என்று சங்கத்தமிழன் உண்ணாத அசைவ உணவுகளே இல்லை. உடனே ஆச்சரியமாக சங்க இலக்கியங்களில் மாட்டுக்கறி உண்டார்களா? என்ற கேள்வியை வைக்காதீர்கள். ஏனெனில் சங்க இலக்கியங்களில் மாட்டுக்கறி உண்ட தகவலும் உண்டு. ஆனால் மாட்டுக்காக உயிர் தியாகம் மற்றும் சொந்த மகனையே பலி கொடுத்த இந்த ஆன்மீக பூமியில் மாட்டுக்கறி உண்டனர் எனில் அதை சற்று ஆழமாக சிந்தித்து நோக்கத்தான் வேண்டும். அதாவது சங்க இலக்கியங்களில் மாட்டுக்கறி உண்டதாக கிடைக்கும் அனைத்து தரவுகளும் பாலை நிலத்தை சேர்ந்தது. பாலை நிலத்தை சேர்ந்த மழவர்கள் தான் மாட்டை திருடி அதை பலியிட்டும் உண்டுள்ளனர்...!
பாலை நிலத்தவர்களின் தொழில் என்னவென்று பார்த்தால் வழிப்பறி செய்தல், சூறையாடல், ஆறலைத்தல் தான் என்பதை நாம் சிறுவயது முதலே படித்து வருகிறோம். அதாவது மழவர்கள் மாட்டை திருடி, அதன் உரிமையாளர்களோடு போரிட்டு வென்று அவற்றை படையலிட்டு உண்டுள்ளனர் என்பது சங்க இலக்கியங்கள் மூலமாக நமக்கு கிடைக்கும் செய்தி. ஒருவேளை மாட்டுக்கறி உண்பவன் மட்டும்தான் தமிழன் என்ற ரீதியில் இதை எடுத்துச்சென்றால் வழிப்பறி செய்து திருட்டை தொழிலாக கொண்டவனே தமிழனாக இருக்க வேண்டியதும் அவசியம் 😉....!
சரி அசைவம் உண்ணலாமா? அடுத்த உயிர்களை கொன்று நமக்கு உணவாக்கிக்கொள்ளலாமா??? இதுபற்றி திருவள்ளுவர் என்ன சொல்கிறார்???
அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
- திருக்குறள்.
பொருள் : தீயின்கண் நெய் முதலியவற்றை அவியாகச் சொரிந்து ஆயிரம் வேள்வி செய்வதிலும் சிறந்தது, ஒன்றின் உயிரைப் போக்கி அதன் ஊனை உண்ணாமை. அதாவது வேள்வி செய்வதை விட அடுத்த உயிரைக் கொல்லாமல் இருப்பதே சிறந்ததாம்.
தெய்வப்புலவர் திருவள்ளுவர் இப்படி சொல்லும்போது கைபர் கணவாய் வழியாக வந்த ஆரியர்களின் நூலாக தீயிலிட்டு எரிக்க வேண்டும் என்று சில தமிழ் ஆர்வலர்கள் தூக்கி சுமக்கும் நூலான மனுஸ்மிருதி என்ன சொல்லுதுனு பார்க்கலாமா???😴
"வர்ஷே வர்ஷேঽஶ்வமேதே⁴ந யோ யஜேத ஶதம் ஸமா: ।
மாம்ஸாநி ச ந கா²தே³த்³ யஸ்தயோ: புண்யப²லம் ஸமம் ॥
ஒருவன் நூறாண்டுகாலத்திற்கு வருடத்திற்கு ஒரு அஸ்வமேத யாகம் புரிவதால் எந்த அளவு புண்ணியத்தை பெறுவானோ, அதே அளவு புண்ணியத்தை ஒருவன் புலால் உண்ணாமலிருப்பதால் பெறுகின்றான்.
அதாவது, மனு ஸ்ம்ருதி வேள்விகளை செய்வதை விட புலால் உண்ணாமலிருப்பது மேல் என்று கூறுகிறது. ஏனெனில் சிரமப்பட்டு, பெரும் பொருளை செலவழித்து, நியம நிஷ்டையோடு நூறாண்டுகாலம் நூறு அஸ்வமேதம் செய்யும் பலனை சுலபமாக புலால் மறுப்பதால் பெறலாம் என்கின்றது....!
இது மட்டுமா? தொடர்ந்து படித்தால் திருவள்ளுவரையும் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரிய வந்தேறி என்று கூறவும் வாய்ப்புள்ளது🤷
"ஸ்வமாம்ஸம் பரமாம்ஸேந யோ வர்த⁴யிதுமிச்ச²தி ।
அநப்⁴யர்ச்ய பித்ரூʼந் தே³வாம்ஸ்ததோঽந்யோ நாஸ்த்யபுண்யக்ருʼத் ॥
பித்ரு மற்றும் தேவகார்யங்கள் தவிர்த்து, எவனொருவன் தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காக மற்றோர் உயிரின் உடம்பை புசிக்கிறானோ,
அவனை காட்டிலும் பெரிய பாபி இருக்க முடியாது.
- 5.52. மனுஸ்ம்ருதி
இதையே திருவள்ளுவரின் திருக்குறள் வழியே கண்டால்,
"தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்"
பொருள் : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பை உண்பவன் பிற உயிர்களிடத்தில் எவ்வாறு அருளை உடையவனாக இருக்க முடியும்?
நாக்ருʼத்வா ப்ராணிநாம் ஹிம்ஸாம் மாம்ஸமுத்பத்³யதே க்வ சித் ।
ந ச ப்ராணிவத:⁴ ஸ்வர்க்³யஸ்தஸ்மாந் மாம்ஸம் விவர்ஜயேத் ॥
பிராணிகளை ஹிம்சிக்காமல் மாம்சத்தை பெறமுடியாது; பிராணிகளை இவ்வாறு வதைப்பதால் ஸ்வர்கத்திற்கும் போக முடியாது.ஆதலால், புலால் உண்பதை தவிர்க்கவும்.
- 5.50. மனுஸ்ம்ருதி
இதை திருவள்ளுவர் கூறுகையில்
"உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு"
இறைச்சியைத் தின்னாது இருத்தல் என்னும் அறத்தின்மேல் பல உயிர்கள் கொல்லப்படாமல் வாழ்கின்றன. இதை மீறித் தின்னும் உயிர்களை நரகம் விழுங்கும்; வெளியே விடவும் செய்யாது.
ந ப⁴க்ஷயதி யோ மாம்ஸம் விதி⁴ம் ஹித்வா பிஶாசவத் ।
ந லோகே ப்ரியதாம் யாதி வ்யாதி⁴பி⁴ஶ்ச ந பீட்³யதே ॥
புலால் உண்ணும் பிசாசை போல வாழாமல் புலாலை தவிற்பவன் இந்த உலகத்தால் நேசிக்கப்படுவான்; அவனை வியாதிகளும் பீடிக்காது.
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும்"
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
(Source : மனுஸ்மிருதி - சந்த்ரு ராமூர்த்தி)
இப்படியாக மனுவும், திருவள்ளுவரும் தத்தமது கருத்துகளை எடுத்து வைக்கும்போது திருவள்ளுவர் தந்த வேதத்தின் அடிப்படையில் வாழும் நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதை தமிழர்களாகிய நாமே முடிவு செய்ய வேண்டும். ஒருவேளை நீங்கள் விருப்பப்பட்டால் கைபர் கணவாய் வழியாக வந்த ஆரிய வந்தேறிகள் சொல்லிட்டாங்கனு திருவள்ளுவர் சொல்வதை கேட்காமல் கூட இருக்கலாம். இதெல்லாம் உங்கள் தலையெழுத்தை பொறுத்தது...!
ஏனெனில் உணவுக்கும் ஆன்மீகத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அசைவ உணவு உண்டால் கடவுளோ, திருவள்ளுவரோ கோபம் கொள்வார்கள் என்பதற்க்கு யாதொரு முகாந்திரமும் இல்லை.
அசைவ உணவு உண்டு விரதமில்லாமல் ஆலயம் சென்றாலும் கடவுள் தண்டனை தருவார் என்பதற்கும் முகாந்திரமில்லை...!
ஆனால் உணவுக்கும் உடலுக்கும்
சம்மந்தம் உண்டு. உணவுக்கும் நமது கர்ம வினைகளுக்கும் சம்பந்தம் உண்டு. நாம் உண்ணும் உணவிற்கும் நமது நடை உடை பாவனைகளுக்கும் சம்பந்தம் உண்டு. உணவிற்கும் நமது ஆயுளுக்கும் சம்பந்தம் உண்டு. இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரினமும் தத்தமது பாவ புண்ணியங்களின் அடிப்படையிலே பிறவிகளை மேற்கொள்கின்றன. அதாவது நாம் நன்மைகளை மட்டுமே அதாவது அடுத்த உயிர்களுக்கு யாதொரு தீங்கும் செய்யாமல் வாழ்வை நகர்த்தினால் நாம் செய்த நற்செயல்களின் வினையானது ஏழு பிறவிகளுக்கும் நம்மை பின்தொடரும் என்கிறார் திருவள்ளுவர்.
"எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்"
பொருள் : பழி இல்லாத நல்ல பண்புகளையுடைய மக்களைப் பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் வந்தடையாது.
ஆகவே பழி இல்லாத நற்பண்புகளை நமதாக்கி அடுத்தடுத்த பிறவிகளுக்கும் நமது அடுத்த தலைமுறையினருக்கும் அடுத்த உயிர்களுக்கு துன்பம் இழைக்காமல் மனிதாபிமானத்தோடு வாழ முயற்சிப்போம்...!
- பா இந்துவன்
16.07.2021.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard